உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Friday, May 1, 2015

மோடிக்கு எதிராக சதுரங்கம் ஆட்டத்தில் களம் இறங்கிய அமெரிக்கா உளவுத்துறை சிஐஏமோடிக்கு எதிராக சதுரங்கம் ஆட்டத்தில் களம் இறங்கிய அமெரிக்கா உளவுத்துறை சிஐஏ

இந்தியாவின் மிகப் பெரிய கட்சியின் தலைவர்களில் ஒருவராக இருக்க கூடிய ராகுல் காந்தி ஒரு மாததிற்கும் மேலாக இந்திய அரசாங்கத்தின் கண்ணில் இருந்து மறைந்துவிட்டார். அப்படி அவர் காணமல் போனது பற்றி பல வதந்திகள் உலாவி வந்தன. மிகவும் திறமையான அரசு என தகவலை பரப்பி வரும் மோடி அரசின் உளவுத்துறையால் கூட ராகுல் எங்கே சென்றார் என்பதை கூட கண்டுபிடிக்க முடியவில்லை. மலேசிய விமானம் மறைந்தது போலவே ராகுலும் மறைந்து போனார் ஆனால் மறைந்து போன அவர் சில வாரங்களுக்கு முன்பு எல்லோர் முன்னால் தோன்றியது மட்டுமல்லாமல்  வழக்கத்தை விட மிக சுறு சுறுப்பாக இயங்க ஆரம்பித்து  விவசாயிகளின் பிரச்சனைகளை கையில் எடுத்து மிக தீவிரமாக போராடஆரம்பித்து இருக்கிறார். இந்த போராட்டத்தால் மோடி அரசாங்கத்திற்கு கடும் எதிர்ப்பு தோன்றி வருகிறது.இப்படி போராட ஆரம்பித்தற்கு காரணம் தெரியாமல் மோடி அரசாங்கம் முழிக்கலாம் ஆனால் அதற்கு காரணம் அமெரிக்காவின் உளவுத்துறையான சி ஐ ஏதான் என்பதை கூட அறியாமல் இருக்கிறது என்பதுதான் ஆச்சிரியம்.அமெரிக்காவின் உளவுத்துறையான சிஐஏ அமெரிக்காவின் வளர்ச்சிக்காக நலனுக்காக உலகெங்கிலும் ஊடுருவி பல நாடுகளில் குழப்பங்களை உருவாக்கி அல்லது தமக்கு சாதகமான சூழ்நிலைகளை உருவாக்கி செயல்படுகிறது என்பது சின்ன பிள்ளைகள் கூட அறிந்த விஷயம். அப்படிபட்ட சிஐஏ வினர்தான் ராகுல் காந்தியை அழைத்து டிரெய்னிங் கொடுத்து இருக்கலாம் என்று பேசப்படுகிறது. அப்படி அது செயல்படுவதற்கு கிழ்கண்ட காரணங்கள் வைக்கப்படுகின்றன..

இந்தியாவின் பொருளாதார சந்தையின் மீதுதான் உலகின் பல நாடுகளின் கண்கள் இருக்கின்றன. அதை பயன்படுத்தி தங்கள் நாட்டின் வளர்ச்சியை மேலும் பெருக்கவே பல வல்லரசு நாடுகள் முயன்று

கொண்டிருக்கின்றன. அதற்கு முந்தைய காங்கிரஸ் அரசாங்கம் மிகவும் ஒத்துழைப்பு கொடுத்து வந்தது.

இந்த நேரத்தில் மதவாதியான மோடி வளர்ச்சி அடைவதை அமெரிக்க அரசாங்கம் விரும்பவில்லை காரணம் மோடியால் முஸ்லிம்கள் மட்டுமல்லாமல் கிறிஸ்துவர்களும் மிகவும் மறைமுகமாக பாதிக்கப்பட்டனர் & தாக்கப்பட்டனர் இதை அமெரிக்கா கொஞ்சமும் விரும்பவில்லை என்பதுதான் உண்மை.


இந்த காரணங்களில்தான் மோடி அமெரிக்கா வர தடைவிதித்து வந்தது. ஆனால் அமெரிக்காவின் விருப்பத்திற்கு எதிராக மோடி அமோகவெற்றி அடைந்து தலைமை பதவியை அடைந்த போது அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை என்றாலும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலமைதான் வந்தது.அதனால் மனதிற்குள் வஞ்சம் இருந்தாலும் சந்தோஷமாக வாழ்த்தி வரவேற்றார்கள்.

மோடியும் ஆட்சிக்கு வந்த பின் மதவாதிகளின் ஆதிக்கம் மிக அதிகமாகி கிறிஸ்துவ ஆலயங்கள் தாக்கப்பட்டன் இதை அமெரிக்கா மட்டுமல்ல மற்றைய மேலைநாடுகளும் விரும்பவில்லை என்பது உண்மையே அதுமட்டுமல்ல மற்றைய மதங்களிடையே ஒரு பதட்டநிலையை ஏற்படுத்தியும் இருக்கிறது

 இந்த நிலைமையை அமெரிக்க போன்ற மேலை நாடுகள் விரும்ப வில்லை இதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று இதனால் கிறிஸ்துவம் மதம் பாதிக்கப்படுகிறது அதுமட்டுமல்லாமல் இப்படி மதப் பிரச்சனைகள் இந்தியாவில் வளருவதால் மற்றும் பிரச்சனைகள் ஏற்படுவதால் இந்தியாவில் அந்நிய முதலீட்டை குவித்து இந்தியாவை தாங்களால் சுரண்ட முடிவதில்லை என்பதும் காரணம் ஆகும்.

இதனால்தான் மோடி அமெரிக்கா வந்து வெளிநாட்டு முதலாளிகளுக்கு வலைவிரித்தாலும் பெரிய மீன்கள் இன்னும் சிக்கவில்லை என்பதுதான் உண்மை. இந்த நிலைமையில் மோடி அமெரிக்க அதிபருக்கு ரெட்கார்பெட்டை விரித்து வரைவேற்று டீ கொடுத்து உபசரித்தும் பலனில்லை.

ஆனால் இந்த சூழ்நிலை இப்படியே மேலும் தொடர்நு நீடிக்க விரும்பாதாதாலும் இந்த நிலமை தொடர்ந்து நீடித்தால் அமெரிக்காவிற்கு நல்லது இல்லை என்பதால்தான் ராகுல் காந்தியை அழைத்து அவருக்கு   சி ஜ ஏ டிரெய்னிங்க் கொடுத்து கொம்பு சீவி அனுப்பி இருக்கிறது இது ஒரு நீண்டகால ப்ளானாக அமெரிக்க திட்டம் தீட்டி செயல்படுவதாக செய்திகள் சொல்லுகின்றன. நடப்பதை நாம் இனிமேல் பொருத்து இருந்துதான் பார்க்க வேண்டும்

மேலும் மோடிக்கு அதிக அழுத்தம் கொடுத்து தாங்கள் இஷ்டத்திற்கு வளைக்க வேண்டும் என்ப து. தான் இன்று
இந்தியாவில் மத சகிப்பு தன்மை குறைந்து விட்டது என அமெரி்க்க அரசின் சர்வதேச மத சுதந்திர ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது.

இந்தியாவில் மோடி அரசு பதவியேற்ற பி்ன்னர் பா.ஜ., தலைவர்கள் சமய அமைப்புகளை பற்றி பேசுவது அதிகரித்துள்ளது என அமெரிக்க அரசின் சர்வதேச மத சுதந்திர ஆணையம் குற்றம் சுமத்தியுள்ளது.

இப்படி குற்றம் சாட்டுவதன் மூலம் மற்றைய  மேலை நாடுகள் இந்தியாவில் முதலீட்டை குவிக்க தயக்கம்காட்டும் இது  மோடி அரசாங்கத்திற்கு நல்லது அல்ல அதுமட்டுமல்ல மோடி ஆட்சிக்கு வந்து ஒர் ஆண்டுகாலமாக ஆகப் போகிற நேரத்தில் அவர் செய்தது என்ன  என்று பார்த்தோமானல் அவ்ர் போட்ட திட்டங்கள் வெறும் வாய் அளவில்தான் இருக்கிறது

டிஸ்கி : மோடிக்கு அமோக ஆதரவு கொடுத்து தூக்கிவிட்ட பொதுமக்களுக்கும் மோடியின் இப்போதையை செயல்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை அதுமட்டுமல்ல அவர் கட்சியினரின் ஒரு பகுதியினருக்கும் அவரின் செயலில் திருப்தி இல்லை. ஆனால் அவரை சுற்றி உள்ள நண்பர்களும் மற்றும் குஜராத்து பிஸினஸ் நபர்களுக்க்கு மட்டும் மோடியின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கின்றன...இந்த நிலை நீடித்தால் ஐந்தாண்டு இறுதியில் அவர் செல்வாக்கு இழப்பார் .ஆட்சி அதிகாரத்தை ருசி கண்ட மோடி அதை எளிதில் இழக்க விரும்பமாட்டார் என்பதால், ஜந்தாண்டு கால இறுதியில் இந்துக்களின் ஆதரவை மீண்டும் பெற ராமர் கோயிலை கட்ட முயற்சியை மட்டும் ஆரம்பிப்பார் அதனால் கலவரம் கண்டிப்பாக மூளும் அதில் குளிர் காய்ந்து அதை வைத்து வரும் தேர்தலில் முயற்சிப்பார்.  அதன் மூலம் அவர்  ஜெயிக்கப் போகிறாரோ இல்லையோ தெரியாது ஆனால் மிக அதிக அளவில் மத வன்முறைகள் பெருகும் என்பது உறுதி.


அன்புடன்
மதுரைத்தமிழன்


6 comments :

 1. அட! ராகுல்ஜி காணாம போனதுல இவ்ளோ விஷயம் இருக்குதா? பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 2. Absolutely ridiculous.

  Modiji was just now praised by Obama himself as a very impressive leader, and chief reformist of the nation.
  Several countries are waiting in line for Modi to visit them anc listening to his address in their assemblies.
  Proud to have him as India leader.

  Taru

  ReplyDelete
  Replies
  1. தலை"தரு" அப்படியே அருண்ஷோரிக்கும் உங்களுடைய கண்டனத்தை தெரியப்படுத்தங்கள். ஏனென்றால் இப்போது அவரும் மோடியை வாரிக்கொண்டிருக்கிறார்.

   Delete
 3. சாத்தியம் தான்.. என்ன தான் மோடி கார்போரேட்களுக்கு சாதகமான ஆட்சி நடத்தினாலும் நீங்கள் குறிப்பிட்ட விஷயங்களில் அவர் உகந்தவர் இல்லை. வெளியில் பாராட்டுவது.. டைம் பத்திரிக்கையில் மோடி பற்றி ஒபாமா எழுதுவது எல்லாம் வெளி வேஷமாக இருக்கக் கூடும். இது போல பல முறை பல நாட்டு அதிபர்களுக்கு நடந்திருக்கிறது!

  ReplyDelete
 4. ராகுல் காந்திக்கு டிரைனிங்க் கொடுக்கற அளவில்ல் அவர் அத்தனை புத்திசாலியாகத் தெரியவில்லை. மத வெறி ஊட்டுவதை இந்தியர்கள் பெரும்பாலும் விரும்புவதில்லை. நமக்கு நம்முடைய நல்ல வாழ்க்கைதான் முதலில். அப்புறம்தான் மற்றது. இதனால்தான், ஈழத் தமிழர் போன்ற விஷயங்கள் தேர்தலுக்கு உதவுவதில்லை. உங்கள் மாறுபட்ட சிந்தனையை வரவேற்கிறேன்.

  கண்ணைமூடிக்கொண்டு மோடியை ஆதரிப்பவர்கள், கண்ணை மூடிக்கொண்டு மோடியை எதிர்ப்பவர்கள் கருத்துக்கள் அரசியல் நீரோட்டத்தில் காணாமல் போய் விடும்.

  ReplyDelete
 5. ஜியோ பாலிடிக்ஸ் என்றொரு சமாச்சாரம் உள்ளது. எந்த நாட்டை யார் ஆள வேண்டும் என்று தீர்மானிப்பவர்கள். முடிந்தால் படித்துப் பாருங்க.

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog