உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Monday, May 25, 2015

சின்ன சின்ன ஸ்டேடஸ் : மணமகன் மணமகள் தேவைசின்ன சின்ன ஸ்டேடஸ் : மணமகன் மணமகள் தேவை

மாணவர்கள் செய்யும் தவறுக்கு  ஆசிரியர்களை  எதற்கெடுத்தாலும் குறை கூறும் உலகம்(ஊடகங்கள்) அந்த மாணவர்கள் அதிக மார்க் எடுத்து பாஸ் செய்யும் போது மட்டும் அதற்கான முயற்சி செய்த ஆசிரியர்களை பெருமை படுத்த தவறியது ஏன்?


முதலமைச்சாரக பதவி ஏற்க்கும் எவருக்கும் ரஜினியின் ஆதரவு உண்டாம்......


Thursday, May 21, 2015

மோடியை சொல்லி குற்றமில்லை.. Plus சின்ன சின்ன தகவல்கள்
மோடியை சொல்லி குற்றமில்லை.. Plus சின்ன சின்ன தகவல்கள்

இந்தியாவில் ஊர் ஊராக சுற்றிக் கொண்டிருந்தவரை பிரதமராக தேர்ந்தெடுத்தது மக்கள் தப்பு, இப்ப பாருங்க அவர் நாடு நாடாக சுற்றிக் கொண்டு இருக்கிறார்.


மோடி வெளிநாடு செல்வது மூதலீட்டை இந்தியாவிற்கு கொண்டு வரவாம். இது வரை போய்வந்த நாடுகளில் இருந்து தான் திரட்டிய முதலீட்டை அவரது நண்பர்களிடமும் குஜராத்திலும் மட்டும் போடாமல் இருந்தாலே 5 ஆண்டு இறுதிக்குள் இந்தியா வளமிக்க நாடாகிவிடும் அப்படி செய்யாவிட்டால் அவர்கள் நண்பர்கள் மிக உலகிலே மிக அதிக பணக்காரர்கள் லிஸ்டில் வந்துவிடுவார்கள்

Monday, May 18, 2015

அழகிரி மட்டும் இந்நேரம் ஒரு கட்சி ஆரம்பித்து நடத்தி இருந்தால்?அழகிரி மட்டும் இந்நேரம் ஒரு கட்சி ஆரம்பித்து நடத்தி இருந்தால்?


அழகிரி மட்டும் இந்நேரம் ஒரு கட்சி ஆரம்பித்து நடத்தி இருந்தால் இந்நேரம் ஸ்டாலின் கல்யாண அழைப்பிதழை எடுத்து கொண்டு போயிருப்பார்....

அழைப்பிதழ் கொடுத்துவிட்டு அழகிரி எனது பால்ய மூத்த சகோதர் என்று பத்திரிக்கையளார்களுக்கு பேட்டி கொடுத்து இருப்பார். .#என்ன நான் சொல்லுறது சரிதானே?


சரி இப்ப ஒரு கேள்வி


கலைஞர் ஆட்சியில் செய்ததை அவர் ஆட்சியில் இல்லாத போது தொடரும் விஜய் டிவிகலைஞர் ஆட்சியில் செய்ததை  அவர் ஆட்சியில் இல்லாத போது தொடரும் விஜய் டிவி

கலைஞர் ஆட்சியில் இருந்திருந்தால் அடிக்கடி திரைப்பட துறையினறை அழைத்து விழா நடத்தி தானும் மகிழ்ந்து மக்களையும் மகிழ்வித்து கொண்டிருப்பார். ஆனால் ஜெயலலிதா அவர்கள் அப்படி செய்வதில்லை. ஆனால் அந்த குறையை விஜய் டிவியினர் நிவர்த்தி செய்து வருகின்றனர். இவர்கள் மட்டும் இப்படி செய்வில்லை என்றால் தமிழக மக்கள் இந்திய விவசாயிகள் போல தற்கொலை செய்து கொண்டிருப்பார்கள்.அதனால் மக்களை காப்பாற்றி வரும் விஜய்டிவிக்கு நாம் நன்றி சொல்வோம்

சின்ன சின்ன ஸ்டேடஸ்  :

Friday, May 15, 2015

முதலமைச்சர் பதவியின் கவுரவத்தை காப்பாற்ற ஜெயலலிதா முயற்சி செய்வாரா?முதலமைச்சர் பதவியின் கவுரவத்தை காப்பாற்ற ஜெயலலிதா முயற்சி செய்வாரா?


முதலமைச்சர் பதவி என்பது மிக கவுரவமான பதவி. இதை முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அவர்களுக்கு மிக நன்றாக தெரியும். அதனால் அந்த பதவியின் கவுரவத்தை காப்பாற்ற அவர் முயற்சி செய்ய வேண்டும் .

அதற்காக அவர் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். இனிமேல்  முதல்வர் பன்னீர் செல்வம் அவரை சந்திக்கும் போது குனிந்து வணங்க கூடாது, தன் காலில் விழுந்து வணங்க கூடாது என்று பன்னீர் செல்வத்திற்கு கட்டளை இட வேண்டும் அது மட்டுமல்லாமல் எதிர்காலங்களில் அவர் ஜெயலலிததா கலந்து கொள்ளும் கூட்டங்களுக்கு வந்தால் ஜெயலலிதாவிற்கு அருகில் சீட் போட்டு அமரச் செய்ய உத்தரவும் போட வேண்டும், இதை தான் வகிக்கும் முதலமைச்சர் பதவியின் கவரவத்தை காப்பாற்ற கண்டிப்பாக ஜெயலலிதா அவர்கள் செய்ய வேண்டும்.

தமிழ்மீது உள்ள காதலால் ஹாலிவுட்டிலிருந்து வேலுருக்கு வரும் பிரபலம்
 

எனக்கு தமிழின் மேல் ஒரு தலை காதல். அம்புடுதேன்! என்று சொல்லி தமிழகத்தில் பிறந்து, இந்தியாவில் வளர்ந்து உலகை சுற்றி வலம் வந்து, தற்போது ” ஹாலிவுட்” அருகே வாழ்ந்து கொண்டு இருக்கும் ஒருவருக்கு. சிறு வயதில் இருந்தே தமிழின் மேல் ஒரு தலை காதல். என்று சொல்லிப்  எழுதி-பேசி-பாடி கொண்டே ஒரு அன்பான  அருமையான ஈழத்து பெண்ணை மனைவி ஸ்தானத்தில் தன் இருதயத்தில் பூட்டி வைத்துள்ள பத்தரை மாற்று தங்கம்தான் இந்த விசுawesome.“ இந்திய-இலங்கை கூட்டு தயாரிப்பில் இவருக்கு இரண்டு ராசாத்திக்கள் .  தொழில் ரீதியாக பார்த்தால் ஹாலிவுட்டில் இவர் ஒரு தணிக்கையாளர்..

Monday, May 11, 2015

ஜெயலலிதா விடுதலையும் : நீதி துறையை நோக்கி கலைஞர் விடுவித்த வேண்டு கோளும் ஜெயலலிதா விடுதலையும் : நீதி துறையை நோக்கி கலைஞர் விடுவித்த வேண்டு கோளும்


நீதிபதி குன்ஹா மீது மானநஷ்ட ஈடு வழக்கு தொடுக்கப்படுமா?நீதிபதி குன்ஹா மீது மானநஷ்ட ஈடு வழக்கு தொடுக்கப்படுமா?


18 வருடகாலம் வழக்கை இழுத்து அடித்து நான் தவறு செய்யவில்லை செய்யவில்லை என்று சொன்னதை கவனத்தில் கொள்ளாமல் மேலும் தமிழகமக்களின் அம்மாவகவும் முதலமைச்சராகவும் இருக்கும் ஒருவரை  எந்தவித சாட்சியங்கள் இல்லாமல் இருந்த போதிலும் இந்த குன்ஹா  யாரோ ஒருவரின் சொல் பேச்சு கேட்டு வேண்டுமென்றே பழிவாங்கும் உணர்ச்சியால் 5 ஆண்டுகால சிறைத்தண்டணையும் 100 கோடி அபராதமும் போட்டதுமட்டுமல்லாமல்  ஜாமின் தராமல் உடனடியாக சிறையிலும் அடைக்க உத்தரவு போட்டு இருக்கிறார்.
இதனால் தமிழக முதல்வர் தனது பதவியை இழந்து மிகவும் மன உழைச்சலுக்கு ஆளானர். அப்படிபட்ட அம்மா அவர்கள் இன்று குற்றமற்றவர் என்று சொல்லி அனைத்து தண்டனைகளிலும் இருந்து விடுவிக்கப்பட்டார்.

Thursday, May 7, 2015

அந்தகாலத்து ஆசிரியர்கள் ரொம்ப மோசமானவங்க? பரிட்சையில் பெயிலானவர்கள் படிக்கஅந்தகாலத்து ஆசிரியர்கள் ரொம்ப மோசமானவங்க? பரிட்சையில் பெயிலானவர்கள் படிக்க  

இந்த காலத்து ஆசிரியர்கள் ரொம்ப நல்லவங்க (கஸ்தூரி(மது),மைதிலி, முத்துநிலவன்,முரளிதரன்) அதனாலதான் இந்த காலத்தில் மாணவர்கள் ரொம்ப அதிக மார்க் எடுக்குறாங்க... ஆனா நான் படிச்ச காலத்தில் உள்ள ஆசிரியர்கள் மிக மோசமானவங்க மார்க்கே போடமாட்டாங்க 100 க்கு 35 மார்க்கு மட்டும் போடுவாங்க. என்னமோ அதிக மார்க் போட்டுட்டா அவங்க சொத்தே குறைஞ்சு போயிரும் என்று நினைப்பு போல இருக்கு

சரி அதைவிடுங்க அந்த காலத்திலேயே நான் ரொம்ப நல்ல படிப்பேனுங்க எந்த வகுப்பிலும் நான் பெயிலாகம படிச்சு வந்தேனுங்க.. அதுதாங்க 100 க்கு 35 மார்க் வாங்கி பாஸாகி வந்தேனுங்க.. இப்படி நான் பாஸாகி வந்ததை பார்த்து யாரு கண்ணுபட்டதோ தெரியலைங்க 10 ஆம் வகுப்பு பொது தேர்வில் 100 க்கு 33 மார்க்கு வாங்கி பெயிலாகிட்டேனுங்க.

படிக்க ரசிக்க சிந்திக்க சின்ன சின்ன ஸ்டேடஸ்படிக்க ரசிக்க  சிந்திக்க சின்ன சின்ன ஸ்டேடஸ்

தலைவர்கள் மற்றும் நடிகர்கள் மீது போடும் வழக்குகளை சூப்ரீம் கோர்ட்டிலே நேரடியாக விசாரித்து தீர்ப்பு வழங்கவேண்டும் அப்பதான் ஜாமின் கேட்டு வெளியே வந்து காலங்களை வீணாக்க முடியாது

நெட் கனெக்ஷனுக்காக பயன்படும் டேட்டா ப்ளான் அதிகரிக்கிறது என்று கவலைப்படும் தமிழன். தங்கள் எதிர்கால வாழ்வை தீர்மானிக்கும் கல்விக்கான கட்டணம் அதிகரிப்பதை பற்றி கவலைக் கொள்ளாமல் இருக்கிறான்

Wednesday, May 6, 2015

ஸ்டாலின் மற்றும் அன்பு மணிக்கு மதுரைத்தமிழன் எழுதிய திறந்த கடிதம்letter arasiyal
ஸ்டாலின் மற்றும் அன்பு மணிக்கு மதுரைத்தமிழன் எழுதிய திறந்த கடிதம்

தளபதி ஸ்டாலின் அவர்களே, நீங்கள் தமிழக மக்களின் நலனிற்காக பன்னீர் செல்வத்திற்கு கடிதம் எழுதி இருக்கிறீர்கள் அது போல மருத்துவர் அன்புமணி அவர்களே நீங்களும் தமிழக மக்கள் நலனிற்காக் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி இருக்கிறீர்கள். அப்படி எழுதுவது தப்பில்லை. ஆனால் இரண்டு நாளாக நெட்டிற்கு நான் வராததால் நீங்கள்  என்ன எழுதினீர்கள் என்று தெரியவில்லை. அதனால் உங்கள் இரண்டு பேருக்கும் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இனிமேல் நீங்கள் கடிதம் எழுதினால் CC போட்டு எனக்கும் ஒன்று அனுப்பிவிடுங்கள். அப்படி அனுப்பினால்தான் அதைப் படித்துவிட்டு என்னால் கலாய்க்க முடியும். இப்ப பாருங்கள் நான் கலாயத்து எழுதாதால் இணையமே மிக சோகமாக இருக்கிறதாம். உங்களுக்கு எப்படி தமிழக மக்கள் முக்கியமோ அது போல எனக்கும் இணைய தள மக்கள் முக்கியம்.

Monday, May 4, 2015

பெண்ணின் மனதை புரிந்து கொள்வது கடினமோ?woman, mind
பெண்ணின் மனதை புரிந்து கொள்வது கடினமோ?

நேற்று என் மனைவி குழந்தையை அழைத்து கொண்டு தெரிந்தவர்களின் வீட்டில் நடக்கும் பிறந்த நாள் விழாவிற்கு சென்றிருந்தார்.  வீட்டில் இருந்த எனக்கு போரடித்ததால் 'பார்' க்கு சென்று வரலாம் என்று தோணியதால் அங்கு சென்றேன்..


பாருக்கு சென்று வழக்கமாக அடிக்கும் சரக்கை ஆர்டர் பண்ணி மெதுவாக அடிக்க தொடங்கினேன். சில நிமிடம் கழித்து ஒரு பெண் வந்து அருகில் அமர்ந்து அவளும் அவளுக்கு வேண்டியதை ஆர்டர் பண்ணி குடிக்க தொடங்கினாள். அதன் பின் அந்த பெண்ணும் ஹாய் சொல்லிவிட்டு பேச தொடங்கினாள். அவள் அவளை பற்றி சொல்லத் தொடங்கினாள்.. அவள் சொன்னதில் இருந்து அவள் 2 முறை கல்யாணம் ஆகி டைவர்ஸ் பண்ணியவள் என்று தெரிந்தது. இப்போது அவள் சிங்கிளாக இருப்பதாக அறிந்து கொள்ள முடிந்து.

Friday, May 1, 2015

மோடிக்கு எதிராக சதுரங்கம் ஆட்டத்தில் களம் இறங்கிய அமெரிக்கா உளவுத்துறை சிஐஏமோடிக்கு எதிராக சதுரங்கம் ஆட்டத்தில் களம் இறங்கிய அமெரிக்கா உளவுத்துறை சிஐஏ

இந்தியாவின் மிகப் பெரிய கட்சியின் தலைவர்களில் ஒருவராக இருக்க கூடிய ராகுல் காந்தி ஒரு மாததிற்கும் மேலாக இந்திய அரசாங்கத்தின் கண்ணில் இருந்து மறைந்துவிட்டார். அப்படி அவர் காணமல் போனது பற்றி பல வதந்திகள் உலாவி வந்தன. மிகவும் திறமையான அரசு என தகவலை பரப்பி வரும் மோடி அரசின் உளவுத்துறையால் கூட ராகுல் எங்கே சென்றார் என்பதை கூட கண்டுபிடிக்க முடியவில்லை. மலேசிய விமானம் மறைந்தது போலவே ராகுலும் மறைந்து போனார் ஆனால் மறைந்து போன அவர் சில வாரங்களுக்கு முன்பு எல்லோர் முன்னால் தோன்றியது மட்டுமல்லாமல்  வழக்கத்தை விட மிக சுறு சுறுப்பாக இயங்க ஆரம்பித்து  விவசாயிகளின் பிரச்சனைகளை கையில் எடுத்து மிக தீவிரமாக போராடஆரம்பித்து இருக்கிறார். இந்த போராட்டத்தால் மோடி அரசாங்கத்திற்கு கடும் எதிர்ப்பு தோன்றி வருகிறது.இப்படி போராட ஆரம்பித்தற்கு காரணம் தெரியாமல் மோடி அரசாங்கம் முழிக்கலாம் ஆனால் அதற்கு காரணம் அமெரிக்காவின் உளவுத்துறையான சி ஐ ஏதான் என்பதை கூட அறியாமல் இருக்கிறது என்பதுதான் ஆச்சிரியம்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog