உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Thursday, April 16, 2015

கசக்கும் உண்மைகள்avargal unmaigal maduraitamilguy மதுரைத்தமிழன்
கசக்கும் உண்மைகள்


இந்த பேஸ்புக்கில் சில விஷயங்களை நீங்கள் தொடர்ந்து கவனித்து இருக்கலாம்....

அதில் ஒன்றுதான் கோவில் படங்களைப் போட்டு..... கோபுரத்தின் கீழோ... படிக்கட்டில் அமர்ந்தோ ஈ என்று இளித்தவாறு போட்டோ எடுத்து போடுவது.....

அதுவரை அது பரவாயில்லை.....

அவ்விதம் போட்டோ போடுகிறவர்கள் தம்மை தொல்லியல்துறை வல்லுநராகக் காண்பித்துக் கொண்டு (சில அறநிலைய புத்தகங்கள், தொல்லியல் புத்தகங்களைப் படித்துவிட்டு...!!) தாம் சென்ற கோவிலைப் பற்றிய அவதூறுகளைப் பரப்புவது!!.....

அவதூறு பரப்பினாலும் பரவாயில்லை. யாரும் நம்பமாட்டார்கள்.... இவர்களிடம் உள்ள முக்கிய பிரச்சனைக்கு வருகிறேன்....


1. எங்காவது பஸ் நுழைய முடியாத இடத்தில் இருக்கிற கோவிலுக்கு கொழுத்துப் போய் தன் நண்பர்களுடன் செல்வார்கள்....

2. போட்டோவை வளைத்து வளைத்து எடுப்பார்கள். (கேமராவை வெளிநாட்டில் உள்ள உறவினர் வாங்கித்தந்ததாக இருக்கும். இல்லையேல் தான் வாங்குகிற அதிக சம்பளத்தை என்ன செய்வது என்று தெரியாமல் வாங்கினதாக இருக்கும்!! அல்லது இருக்கவே இருக்கிறது... கேமரா செல்!!)

3. அந்த ஊரில் உள்ள சிறு ஓட்டலில் சாப்பிடுவார்கள். தாம் பட்டினத்தில் இருந்து வருவதைக் காண்பித்துக் கொள்ள பில் தொகையைவிட அதிகமாய் தந்து ஓட்டல் முதலாளிகளுடன் அலவளாவுவார்கள்....

4.கோவிலை தரிசிக்க செல்லுவார்கள்.

5. மூடி இருக்கும் கோவிலை திறக்கச் சொல்ல குருக்கள் வீட்டிற்குப் போவார்கள். அங்கு அவரது மனைவி இருந்தால் அவள் வந்து திறப்பாள். அர்ச்சனையும் செய்வாள்.... மகள் இருந்தாலும் அஃதே!! மகன் இருந்தால், "அப்பா அந்த கோவிலுக்கு போயிருக்கார்... இனிம சாயந்திரம்தான் திறப்பார்.... இதான் எங்கப்பா நெம்பர்.... அடுத்த தடவ போன் பண்ணிட்டு வாங்க!!" என்பான்!!

6. குருக்கள் இல்லை!! என்றதும், இவர்களுக்கு அந்த கோவிலின் அழகும், நித்யபூஜை நடக்கவில்லையே!!? என்ற ஏக்கமும் பெரிய அளவில் தாக்கி.... பேஸ் புக்கில் பதிவிடுகிற போது.... குருக்களுக்கு உள்ளூரில் வீடு, அரிசி, புண்ணாக்கு என சகல வசதி செய்துகொடுத்தும் அவர் கோவிலில் இருப்பதில்லை.... என்னே ஒரு கேவலம்.... ஆண்டவனை இப்படி தண்டிக்கலாமா!!? என்று வெம்புவார்கள்....

7. வெம்புவதோடு நிறுத்தாமல் அந்த கோவிலின் பெருமையை கூட்டிச் சொல்லி... மிக அருமையான ஆலயம்.... கவனிப்பார் அற்று பாழ்பட்டு கிடக்கிறது.... அங்குள்ள துர்க்கையின் சிலை வெகு அற்புதமாய் இருக்கும்.... கோவிலின் பின்புறம் கவனிப்பாரற்று இரண்டு சிலைகள் (ஒன்று சண்டிகேசராய் இருக்கலாம்!! இன்னொன்று அதிபத்த நாயனாராக இருக்கலாம்!!) இருக்கின்றன..... என்று மொஹஞ்சதாரோ ஹரப்பா மற்றும் எகிப்து சென்று மண்ணை நோண்டியவர்கள் மாதிரி எழுதுவார்கள்....

8. 4-5 பேராய் ஊர் சுற்றிய மேற்படி நபர்கள்.... இந்த பேஸ்புக்கில் அழிந்து வரும் ஆலயங்கள்.... என்றோ.... கோவில் தரும் ஆன்ம சிந்தனை!! என்றோ..... இந்து ஆலயங்களைப் பேணுவோம் என்றோ க்ரூப் ஏற்படுத்தி.... தாம் எடுத்த அத்தனை புகைப்படங்களையும் பதிந்து... தம் இஷ்டத்திற்கு எதையாவது எழுதி..... அதில் நம்மையும் இணையச்சொல்லி வற்புறுத்தி, நம் ஒப்புதல் இல்லாமலே அதில் நம்மை இணைப்பார்கள்.!!

இம்மாதிரியும், இதைவிட கூடுதலாகவும் செயல்படுகிறவர்களுக்கு என் கேள்வி இதுதான்....

1. சொந்த ஊரை விட்டு நீங்கள் உங்கள் தகப்பனார் அல்லது தாத்தா காலத்தில் பட்டினத்திற்கு பிழைக்கப் போய்விட்டு.... சொந்த ஊர் பாசத்தில் கோவில் மீது பழியைப் போட்டு ஊர் சுற்றி.... இப்படி நடந்துகொள்வது நியாயமா!!?

2. சொந்த ஊரில் பெரிய வீட்டில் இருந்து உங்கள் முன்னோர் ஏதோ ஒரு பிழைப்புக்காக (சர்வைவல்!!?) ஒரு ரூம் அட்டாச்டு டாய்லட்... என்று பட்டணம் போன நீங்கள்.... பட்டணத்தில் உள்ள கோவில் பக்கம் போகாமலும், அது குறித்த அகழ்வாராய்ச்சியையும் வெளியிடாததன் மர்மம் என்ன!!?

3. என்ன குறை இருந்தது என்று கும்பகோணம், மாயவரம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி முதலிய ஊர்களை விட்டு பட்டணம் போய் சீரழிந்தீர்கள்!!? அந்த பட்டண வாழ்வில் உங்கள் முன்னோர் கண்ட பலன் என்ன!!?

4. அருமையான ஊரையும் விசாலமான வீட்டையும் விட்டு விட்டு (விற்று!?) பட்டனத்தில் ஒண்டுக்குடித்தன வாழ்வை விரும்பி, மஹா கேவலமான வாழ்வை பட்டினத்தில் வாழ்ந்த உங்கள் தாத்தா/ தகப்பன் களது செயலைப் பற்றி அகழ்வாராய்ச்சி செய்ய துப்பு உண்டா!!?

5. பிராம்மணர்கள் தமது சொந்த ஊரை, வீட்டை விட்டு போனதும், "ஐயோ.... எங்க ஊர்ல அக்ரஹாரம் எவ்ளோ பெருசு தெரியுமா.... கிட்டு சாஸ்திரிகள் எங்காத்துக்கு பக்கத்தாம்தான்!!.... விஸ்வநாதன் வக்கீல் எங்காத்துக்கு எதிர்த்தாம்தான்.... ஏன்..... ஜட்ஜு வரதாராஜ ஐயர் எங்க தாத்தாவோட ஷட்டகர்!!.... எங்க வீடு எவ்ளோ பெருசு தெரியுமா.... ஒரு தெரு நீட்டுக்கு இருக்கும்.... அத தவிர தோட்டம் வேற.!!?... இப்ப என்னடான்னா.... அத்தன எடத்துலயும் துலுக்கனுங்க வந்துட்டாங்க....தேவருங்க வந்துட்டானுங்க...." என்று கூவுகிறீர்களே... அவர்களுக்கு வீட்டை விற்றது நாங்களா... நீங்களா!!?

6. சொந்த ஊர் பாசத்தில் உள்ளூர் கோவிலைப் புறக்கணித்து கிராமம் கிராமமாக பூர்வீகம் என்று சுற்றுகின்றீர்களே.... அங்கு உங்கள் தாத்தாவைப் போல பிழைப்புக்காக (சர்வைவல்!!?) அந்த ஊர் குருக்கள் போனால் மட்டும் உங்களுக்கு அடிவயிற்றில் ஆசிட் ஊற்றியது போல வருந்துகின்றீர்களே.... ஏன்!!?

7. பட்டினம் போனது பிழைப்புக்காக. ஒழுங்கு மரியாதையாக உங்கள் குடும்பத்தினரை பட்டினத்தை விட்டு எங்கும் அனுப்பாதீர்கள். கிராம வாழ்க்கை கசக்கிறது என்று போனபிறகு.... அதே கிராம வாழ்க்கை இனிக்கிறது.... இப்படி இருக்கனும்.... அரசாங்கம் இப்படி நடத்தனும்... உள்ளூர் மக்கள் அப்படி வாழனும்....என்று திட்டமிட உங்களுக்கு என்ன யோக்யதை இருக்கிறது!!? ஒழுங்கு மரியாதையாய் பட்டின எல்லையை தாண்டாதீர்கள்.!!

இன்னமும் கேட்பேன். சிந்தித்து தற்கொலைக்கு முயற்சி செய்துவிட்டால்!!?

அந்த பயம்தான். இத்தோடு நிறுத்துகிறேன்.!!இந்த பதிவை பேஸ்புக்கில் எழுதியவர் லலிதா நாராயணன். இவர் மனதில் பட்டதை பட்டென்று சொல்லிச் சென்றுவிடுவார். மிக எளிமையானவர். ஆனால் இவர் எழுத்தில் ஆத்திரம் கனலாக சுழன்று வரும். அவரின் அனுமதியோடு இந்த பதிவை வெளியிடுகிறேன்

அன்புடன்
மதுரைத்தமிழன்

25 comments :

 1. Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

   Delete
 2. த ம +
  எங்கே பிடிச்சீங்க...
  சிரித்துகொண்டே படித்தேன்...

  ReplyDelete
  Replies
  1. இதை எழுதிய லலிதா நாராயணன் உங்ளைப் போல பேஸ்புக்கில் நான் கண்டு எடுத்த நண்பர்

   Delete
 3. Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

   Delete
 4. நியாயமான கேள்விகள்!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

   Delete
 5. இது வெளிநாடு போனவர்களுக்கும் பொருந்துமா? வெளிநாட்டில் இருந்து அது சரி இது பிழை என கூறுபவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

  ReplyDelete
 6. drogba.....இது எல்லோருக்கும் பொருந்தும். சர்வைவல் என்ற காரணத்தைக் காட்டி கீழான பிழைப்பு பிழைக்கும் நகரவாசிகள் எல்லோருக்கும் பொருந்தும். எல்லா ஜாதியினருக்கும் பொருந்தும்.

  ReplyDelete
  Replies
  1. மோடி சரியில்லை என கருத்துக்கூற இந்தியாவை விட்டு வெளியேறி அமெரிக்காவில் வசிப்போருக்கு சற்றும் அருகதையல்லதானே?

   Delete
  2. இந்த பதிவை எழுதியவர் யார் அவர் என்ன சொல்ல வ்ருகிறார் என்று புரிந்து கொண்டு பதில் அளியுங்கள் நண்பரே....

   Delete
  3. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

   Delete
  4. நண்பரே பட்டிணத்திற்கு சென்றவருக்கு வருவது இரத்தம். அமெரிக்காவிற்கு தக்காளி சட்ணியா?

   Delete
  5. நான் அவரின் கருத்தை உங்கள் பக்கத்தில் படித்தால் கேட்டேன்

   Delete
  6. //இது வெளிநாடு போனவர்களுக்கும் பொருந்துமா? வெளிநாட்டில் இருந்து அது சரி இது பிழை என கூறுபவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?//
   திரு.Drogba நியாயமான கேள்வி சிந்திக்க வைத்தது.நன்றி.
   சுஹாசினி சொன்னது கருத்து சுதந்திரத்துக்கான மறுப்பென்றால், லலிதா நாராயணன் சொன்னது கருத்து சுதந்திரத்துக்கு எதிரான மிரட்டல்.

   Delete
 7. நல்ல கேள்விகள். கிராம வாழ்க்கை அற்புதம் நகர வாழ்க்கை நரகம் என்று சொல்வோம் ஆனால் சொந்த ஊர் போனால் அடுத்த நாளே திரும்பி வ்ந்துவிடுவோம்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

   Delete
 8. அறச்சீற்றம்தான்.. மாற்றம் என்பது மானுடத் தத்துவம். எனக்கும் கிராமத்தை விட்டு வந்தது ரொம்பக் கஷ்டமாகத்தான் (மனதுக்கு) இருக்கிறது. நமக்கு ஒரு நியாயம் மற்றவர்களுக்கு இன்னொன்றா? இன்றைய நிலையில் படித்தவர்கள் ஊரை விட்டுக் கிளம்பிவிடுகிறோம். அப்பறம் ஊரை யார் பார்த்துக்கொள்வார்கள் (பழைய நடைமுறைகளை.. கோயில் முதற்கொண்டு).. இதற்குத்தான், 'சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்' என்று நம் முன்னோர் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.

  ReplyDelete
 9. லலிதா நாராயணன் பட்டணம் போறவர்களை கேலி செய்கிறார். அவர் பார்வையில் சீமைக்கு போனவங்க பட்டணம் போனவங்களைவிட பல மடங்கு குற்றவாளிகள். உங்களைச் சொல்லவில்லை ம தமிழன். என்னைத்தான் சொல்றேன். I cant argue against that. I would plead guilty there.

  Now, let us look at drogba's perspective..

  பட்டணத்தில் குப்பை கொட்டும் ட்ருக்பா லஞ்சம் ஊழல் என்னும் சகதியில் தினந்தோரும் உருண்டு எழுபவர். கிராம வாழ்க்கையைவிட 100 மடங்கு. சீமைக்குப் போன நான் என்னுடைய ஒவ்வொரு நாள் வாழ்க்கையில் 0% லஞ்சம் ஊழல் இல்லாமல் வாழ்கிறேன். That's the difference between drogba's and my life . Other than that who is better? I would say NOBODY. Everyone is a hypocrite including DROGBA and Lalitha Narayanan! They always look at other's ass as they could not see their own!

  ReplyDelete
  Replies
  1. Varun, How can you say that i am corrupted? Do u kno where i live at the moment and where was i before? I was in UK more than 6 years and now I'm in Singapore (Which is one of the less corrupted countries in the world). Y r u saying i am hypocrite? Do u kno me personally or did i do something to u.

   I am here to share my thoughts. I m here to argue regarding the subject. I am not here to guess others personal life and make nonsense comments.

   If you have any positive or negative thoughts regarding my comment I am ready to argue. I can be wrong too.

   To Madurai Thamilan,
   Don't you feel that he is personally attacking me and going out of subject. How can he say that i am hypocrite and corrupted? He says I look others ass!! What an offensive.

   Delete
 10. First of all you are only attacking people who live in America. You think they should never open their mouth ever! At least, you should have made it clear that you too have left India and now living in a foreign country for "comfort" and "money" just like another trash like this Varun. You explain your end only when I accused of you as "corrupt" and a "hypocrite". The way you have been defending Modi when he was cleaning the trash by himself, looked as if you are a good Indian citizen and that you are living in India all your life. But, you are no different than another trash like me. Singapore trash is as bad as american trash. You never made it clear that you are also living a filthy life just like I am. That's why you are a hypocrite.

  If you do not show your whereabouts in your profile where you are living, and why you ran away from GREAT INDIA and living in a muslim country -where if someone possess ganja who will be hanged-, how would I know that you are as bad as I am???
  The way you talk and kissing Modi's bottom suggests that you will never leave India or Money or Comfort. But what do you do? Why are you always criticizing american trash, not a singapore trash like you are? WHY???

  That makes you a hypocrite.

  After all I am pleading guilty. What are you doing??? You just finger at "American trash" like me or MT and hiding yourself in Singapore trash. Just because you are defending Modi, you would never become a better citizen than anybody who lives in America.

  ReplyDelete
 11. Varun, as I said earlier I DO NOT need to explain my personal life here. It is unwanted to others that y I am in Singapore. I am coming to this blog to express my opinion.

  BTW i am not criticizing America.

  look at the point 7.

  //
  7. பட்டினம் போனது பிழைப்புக்காக. ஒழுங்கு மரியாதையாக உங்கள் குடும்பத்தினரை பட்டினத்தை விட்டு எங்கும் அனுப்பாதீர்கள். கிராம வாழ்க்கை கசக்கிறது என்று போனபிறகு.... அதே கிராம வாழ்க்கை இனிக்கிறது.... இப்படி இருக்கனும்.... அரசாங்கம் இப்படி நடத்தனும்... உள்ளூர் மக்கள் அப்படி வாழனும்....என்று திட்டமிட உங்களுக்கு என்ன யோக்யதை இருக்கிறது!!? ஒழுங்கு மரியாதையாய் பட்டின எல்லையை தாண்டாதீர்கள்.!!
  //
  drogbaApril 17, 2015 at 10:37 PM
  இது வெளிநாடு போனவர்களுக்கும் பொருந்துமா? வெளிநாட்டில் இருந்து அது சரி இது பிழை என கூறுபவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
  drogbaApril 18, 2015 at 10:43 PM
  மோடி சரியில்லை என கருத்துக்கூற இந்தியாவை விட்டு வெளியேறி அமெரிக்காவில் வசிப்போருக்கு சற்றும் அருகதையல்லதானே?

  Avargal UnmaigalApril 18, 2015 at 11:04 PM
  இந்த பதிவை எழுதியவர் யார் அவர் என்ன சொல்ல வ்ருகிறார் என்று புரிந்து கொண்டு பதில் அளியுங்கள் நண்பரே....

  drogbaApril 18, 2015 at 11:11 PM
  நண்பரே பட்டிணத்திற்கு சென்றவருக்கு வருவது இரத்தம். அமெரிக்காவிற்கு தக்காளி சட்ணியா?

  அமெரிக்காவை பற்றி நான் கேட்டது மதுரை தமிழனிடம்! நான் வெளிநாட்டினர் என எனது முதல் commentல் கூறியிருந்தேன். எனக்கு அமெரிக்கர்களை விமர்சிக்கும் எந்த நோக்கமும் இல்லை. அது உங்களை பாதித்திருந்தால் மன்னித்து கொள்ளுங்கள். யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் நான் கருத்து கூற இல்லை.

  நான் சிங்கப்பூரில் மறைந்து வாழவும் இல்லை. நீங்கள் கூறுவது போல் நான் நயவன்சகனும் அல்ல.
  நான் BLOG எழுதுபவனும் அல்ல. comment மட்டுமே எழுதுபவன். அதனால் எனது profileஐ update ஆக வைத்திருக்கவில்லை. தயவுசெய்து என்னை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதை நிறுத்தும்படி கேட்டுக்கொள்கிறேன்.

  To Madurai Thamilan,
  உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே.
  hope u will follow it

  ReplyDelete
 12. Drogba: You are such a sensitive guy!!!! I think everyone in the world is hypocrite. You want to be an exception?? You need to learn to take thing easy!

  ReplyDelete
 13. Just doing business by spreading hatred on one community. Aren't you and lslitha ashamed?

  Taru

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

லேபிள்கள்

நகைச்சுவை ( 403 ) அரசியல் ( 263 ) தமிழ்நாடு ( 136 ) இந்தியா ( 113 ) சிந்திக்க ( 91 ) பெண்கள் ( 91 ) அமெரிக்கா ( 84 ) ஜெயலலிதா ( 74 ) நக்கல் ( 56 ) தமிழன் ( 54 ) வெட்கக்கேடு ( 53 ) கலைஞர் ( 52 ) மனைவி ( 52 ) தலைவர்கள் ( 46 ) மோடி ( 46 ) நையாண்டி ( 44 ) தேர்தல் ( 41 ) கணவன் ( 39 ) தமிழர்கள் ( 38 ) தமிழ் ( 38 ) போட்டோடூன் ( 32 ) வீடியோ ( 31 ) திமுக ( 30 ) வாழ்க்கை ( 30 ) அனுபவம் ( 28 ) சமுகம் ( 25 ) சமூக பிரச்சனை ( 25 ) செய்திகள் ( 25 ) ஆண்கள் ( 24 ) இந்தியன் ( 23 ) உபயோகமான தகவல்கள் ( 23 ) சட்டம் ( 22 ) எண்ணங்கள் ( 21 ) காதல் ( 20 ) பயனுள்ள தகவல்கள் ( 20 ) குடும்பம் ( 19 ) கேள்விகள் ( 19 ) தமிழகம் ( 19 ) யோசிங்க ( 19 ) விகடன் ( 19 ) உணர்வுகள் ( 18 ) குழந்தை ( 18 ) மொக்கைகள் ( 18 ) புது தகவல்கள் ( 17 ) ஹெல்த் டிப்ஸ் ( 16 ) எஜுகேஷன் ( 15 ) ஸ்டாலின் ( 15 ) கேள்வி பதில் ( 14 ) சினிமா ( 14 ) அம்மா ( 13 ) சமுக சீரழிவு ( 13 ) ஜோக்ஸ் ( 13 ) தலைவன் ( 13 ) இழப்பு ( 12 ) எதிர்பார்ப்பு ( 12 ) எலக்சன் 2011 ( 12 ) காங்கிரஸ் ( 12 ) சமையல் குறிப்பு ( 12 ) சுயநலவாதிகள் ( 12 ) பெண் ( 12 ) பேஸ்புக் ( 12 ) மகளிர் ( 12 ) மருத்துவம் ( 12 ) வாழ்க்கை அனுபவம் ( 12 ) விஜய் டிவி ( 12 ) வெட்ககேடு ( 12 ) வேதனை ( 12 ) ஹெல்த் ( 12 ) இளைஞர்கள் ( 11 ) எதிர்கால உலகம் ( 11 ) கல்வி ( 11 ) சந்தோஷம் ( 11 ) நல்ல சிந்தனை ( 11 ) மது ( 11 ) மரணம் ( 11 ) உடல் நலம் ( 10 ) குற்றம் ( 10 ) குழந்தை வளர்ப்பு ( 10 ) கொடுரம் ( 10 ) தகவல்கள் ( 10 ) நம்பிக்கை ( 10 ) படித்ததில் பிடித்தது ( 10 ) பதிவாளர்கள் ( 10 ) மொக்கை ( 10 ) விஜயகாந்த் ( 10 ) வெற்றி ( 10 ) ஆண் ( 9 ) உன்னால் முடியும்.... ( 9 ) காதலி ( 9 ) கிறுக்கல்கள் ( 9 ) குழந்தைகள் ( 9 ) சோகம் ( 9 ) டெக்னாலாஜி ( 9 ) தீபாவளி ( 9 ) நகைச்சுவைகள் ( 9 ) நக்கல்கள் ( 9 ) நட்பு ( 9 ) மாணவன் ( 9 ) ரஜினி ( 9 ) vijay tv ( 8 ) அதிமுக ( 8 ) அரசாங்கம் ( 8 ) அரசியல் களம் ( 8 ) இறப்பு ( 8 ) உணவு ( 8 ) எச்சரிக்கை ( 8 ) காமெடி ( 8 ) சாரு நிவேதிதா ( 8 ) ட்ரிங்ஸ் ( 8 ) பிஜேபி ( 8 ) பெற்றோர்கள் ( 8 ) வாழ்த்துக்கள் ( 8 ) Blogger ( 7 ) Drinks ( 7 ) அறிவியல் ( 7 ) இலங்கை ( 7 ) உங்களுக்கு தெரியுமா ( 7 ) உறவுகள் ( 7 ) என்றும் படிக்க புது புது தகவல்கள் ( 7 ) கட்சி ( 7 ) கார்டூன் ( 7 ) சக்தி வாய்ந்த நாடு ( 7 ) சாதனை ( 7 ) சிரிக்க ( 7 ) டிப்ஸ் ( 7 ) தமிழக அரசியல் ( 7 ) நடிகர்கள் ( 7 ) பாஸிடிவ் எண்ணம் ( 7 ) மனம் ( 7 ) வியக்கதக்க தகவல்கள் ( 7 ) 2014 ( 6 ) அன்பு ( 6 ) அழகு ( 6 ) இல்லறம் ( 6 ) இளஞிகள் ( 6 ) உலகம் ( 6 ) கருணாநிதி ( 6 ) கருத்துக்கள் ( 6 ) கலைஞர் கடிதம் ( 6 ) கலைஞர் பாணி கேள்வி பதில்கள் ( 6 ) கூட்டணி ( 6 ) கேள்வி பதில்கள் ( 6 ) செக்ஸ் ( 6 ) தத்துவம் ( 6 ) துணிச்சல் ( 6 ) தொழில் நுட்பம் ( 6 ) நீதி கதை ( 6 ) பெண்ணுரிமை ( 6 ) போலீஸ் ( 6 ) மாணவர்கள் ( 6 ) யூகச் செய்தி ( 6 ) விஞ்ஞானம் ( 6 ) Award ( 5 ) face book ( 5 ) அறியாமை ( 5 ) அழகிரி ( 5 ) கடவுள் ( 5 ) கல்லூரி ( 5 ) கவிதை ( 5 ) கோயில்கள் ( 5 ) சினிமா உலகம் ( 5 ) சோஷியல் ( 5 ) தந்தையர் தினம் ( 5 ) தமிழ் சமுகம் ( 5 ) நண்பர்கள் ( 5 ) நிருபர் ( 5 ) பயணம் ( 5 ) பாதுகாப்பு ( 5 ) பாராட்டுகள் ( 5 ) மருத்துவ குறிப்பு ( 5 ) மெயில் பேக் ( 5 ) ரகசியம் ( 5 ) #modi ( 4 ) #modi #india #political #satire ( 4 ) 2012 ( 4 ) 2015 ( 4 ) Anna Hazare ( 4 ) Educational ( 4 ) tamil joke ( 4 ) அப்துல் கலாம் ( 4 ) அப்பா ( 4 ) அழுகை ( 4 ) இறைவன் ( 4 ) இல்லறம் என்றும் இன்பமாக இருக்க? ( 4 ) உறவு ( 4 ) ஊழல் ( 4 ) ஓ.....அமெரிக்கா ( 4 ) கதை ( 4 ) கற்பழிப்பு ( 4 ) கலாச்சாரம் ( 4 ) கலாய்ப்பு ( 4 ) சமூகச் சீரழிவுகள் ( 4 ) சிந்தனை ( 4 ) சிறுகதை ( 4 ) சிறுவன் ( 4 ) டாக்டர் ( 4 ) டாஸ்மாக் ( 4 ) டிராவல் ( 4 ) தரமான பதிவுகள் ( 4 ) தினமலர் ( 4 ) தொழில்நுட்பம் ( 4 ) நீதி ( 4 ) பதிவர் கூட்டம் ( 4 ) பதிவாளர் ( 4 ) பிரபலம் ( 4 ) பிறந்தநாள் ( 4 ) புதிய கண்டுபிடிப்பு ( 4 ) பொதுநலம் ( 4 ) மகளிர் மட்டும் ( 4 ) மகளிர்தினம் ( 4 ) ரெசிப்பி ( 4 ) விஜய்டிவி ( 4 ) விமர்சனம் ( 4 ) #jayalalithaa ( 3 ) 2016 ( 3 ) NRI ( 3 ) Rio Olympics ( 3 ) THE WHOLE TRUTH ( 3 ) Tamil tweets ( 3 ) best school ( 3 ) hurricane sandy ( 3 ) narendra modi ( 3 ) super singer ( 3 ) vikatan ( 3 ) அட்டாக் ( 3 ) அரசியல் கலாட்டா ( 3 ) அரிய புகைப்படங்கள் ( 3 ) ஆச்சிரியம் ( 3 ) ஆனந்தம் ( 3 ) இந்திய ராணுவம் ( 3 ) இந்தியர் ( 3 ) இல்லறம் இனிக்க உண்மையான அனுபவ ரகசியங்கள் ( 3 ) இளமை ( 3 ) உணர்வு ( 3 ) உண்மைகள் ( 3 ) எக்கானாமி ( 3 ) கோபிநாத் ( 3 ) சிந்தனைகள் ( 3 ) சீனா ( 3 ) சுதந்திரம் ( 3 ) சென்னை ( 3 ) சேல்ஸ் ( 3 ) தமிழக அரசு ( 3 ) தீபாவளி வாழ்த்து ( 3 ) தேர்தல் 2014 ( 3 ) நன்றி ( 3 ) நல்ல வலைத்தளங்கள் ( 3 ) நாட்டு நடப்பு ( 3 ) நீயா நானா ( 3 ) படிக்க ( 3 ) பாசம் ( 3 ) பாதுகாப்பான உறவு ( 3 ) பெண்ணின் சாதனை ( 3 ) பொது மக்கள் ( 3 ) பொருளாதாரம் ( 3 ) போட்டோ ( 3 ) மஞ்சள் பத்திரிக்கை ( 3 ) மனவளம். ஆனந்தம் ( 3 ) மலர் ( 3 ) முயற்சி ( 3 ) ரிசல்ட் ( 3 ) ரெசிபி ( 3 ) வரலாறு ( 3 ) விஜய் ( 3 ) விருதுகள் ( 3 ) விற்பனை ( 3 ) வெள்ளம் ( 3 ) வேலைவாய்ப்பு ( 3 ) ஸ்கூல் ( 3 ) 2 G Scam ( 2 ) 2013 ( 2 ) 2014 தேர்தல் ( 2 ) 2016 தேர்தல் ( 2 ) 5 Star blogger award ( 2 ) Child Sexual Abuse ( 2 ) Dark Secret ( 2 ) New year ( 2 ) Social networking danger ( 2 ) U.A.E ( 2 ) Warning ( 2 ) apps ( 2 ) best tamil tweets ( 2 ) facebook ( 2 ) modi ( 2 ) political satire ( 2 ) sexual harassment ( 2 ) tamil ( 2 ) twitter ( 2 ) wife ( 2 ) அ.தி. மு.க ( 2 ) அனுபவம். இழப்பு ( 2 ) அன்னை ( 2 ) அன்புமணி ( 2 ) அமெரிக்கன் ( 2 ) அரசியல். நகைச்சுவை ( 2 ) அரசியல்.நையாண்டி ( 2 ) அரசியல்.பிரச்சனை ( 2 ) ஆசிரியர்கள் ( 2 ) ஆணுறை ( 2 ) ஆப்பிள் நிறுவனம் ( 2 ) ஆல்கஹால் ( 2 ) இணையம் ( 2 ) இறப்பு செய்தி ( 2 ) இஸ்லாம் ( 2 ) உண்மை ( 2 ) உதவி ( 2 ) உளறல்கள் ( 2 ) எதிர்காலம் ( 2 ) எலக்சன் 2014 ( 2 ) ஒபாமா ( 2 ) ஓ...அமெரிக்கா ( 2 ) கடிதம் ( 2 ) கட்சிகள் ( 2 ) கனிமொழி ( 2 ) கார்டூன் அரசியல் ( 2 ) குடியரசு தினம் ( 2 ) குடும்ப நலம் ( 2 ) குற்றவாளி ( 2 ) கொலு ( 2 ) கோபம் ( 2 ) க்ரின்கார்டு ( 2 ) சமுக பிரச்சனை ( 2 ) சமுகப் பிரச்சனை ( 2 ) சரக்கு ( 2 ) சுடும் உண்மைகள் ( 2 ) சூப்பர் சிங்கர் ( 2 ) ஜல்லிகட்டு ( 2 ) டில்லி ( 2 ) டிவிட்ஸ் ( 2 ) டுவிட்ஸ் ( 2 ) தமிழக தேர்தல் ( 2 ) தமிழக பயண அனுபவம் ( 2 ) தமிழிசை ( 2 ) தரம் ( 2 ) தலைப்பு செய்திகள் ( 2 ) திடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி ( 2 ) தின தமிழ் செய்தி தாள் ( 2 ) தேமுதிக ( 2 ) தேவதை ( 2 ) தோல்வி ( 2 ) நல்ல செய்தி ( 2 ) நவராத்திரி ( 2 ) நெட்வொர்க் ( 2 ) நெல்லை ( 2 ) நையாண்டி.போட்டோடூன் ( 2 ) பகுத்தறிவு ( 2 ) பயனுள்ள இணைய தளங்கள் ( 2 ) பயனுள்ள தகவல் ( 2 ) பரிசுநல்ல சிந்தனை ( 2 ) பலாத்காரம் ( 2 ) பாஜக ( 2 ) பாமக ( 2 ) பிரதமர் ( 2 ) பிரார்த்தனை ( 2 ) புத்தகம் ( 2 ) பொங்கல் ( 2 ) மக்கள் ( 2 ) மதன் ( 2 ) மதுரை ( 2 ) மனித உரிமைகழகம் ( 2 ) மலையாளி ( 2 ) மழை ( 2 ) முல்லை பெரியாறு ( 2 ) ரஜினிகாந்த் ( 2 ) லேகியம் ( 2 ) வருத்தம் ( 2 ) வாழ்த்து ( 2 ) விசா ( 2 ) விஜய்காந்த் ( 2 ) வைகோ ( 2 ) ஸ்ரீலங்கா ( 2 ) ஹிந்து ( 2 ) #Cauvery ( 1 ) #ChennaiFloods ( 1 ) #I-T ACT SECTION 66 A ( 1 ) #JusticeforJallikattu #RSS #BJP தமிழகம் ( 1 ) #Rohini Bhajibhakare ( 1 ) #dmk fail ( 1 ) #fishermen ( 1 ) #ilayaraja # vadivelu #spb ( 1 ) #india #political #satire ( 1 ) #neet #modi #india #political ( 1 ) #olympic ( 1 ) #rohini ( 1 ) #மோடி #politics ( 1 ) 100 ( 1 ) 1000 ( 1 ) 2 million hits ( 1 ) 2011 Best Tamil Blog ( 1 ) 2014 லோக்சபா ( 1 ) 2014 லோக்சபா தேர்தல் ( 1 ) 2030 ( 1 ) Abortion ( 1 ) Ayurvedic Anti-Diabetic Medicine ( 1 ) Best jokes of the year 2013 ( 1 ) Cell ( 1 ) GK ( 1 ) Good news to be proud ( 1 ) Google ( 1 ) Hindu ( 1 ) Hindu Ritual ( 1 ) IAS ( 1 ) IIT ( 1 ) IPad ( 1 ) IPhone ( 1 ) ITouch ( 1 ) July 9th ( 1 ) Know Your English ( 1 ) Mangalyaan ( 1 ) Medical Information ( 1 ) Modern Mahatma ( 1 ) Modi .top American business leaders ( 1 ) NASA ( 1 ) NIPFA ( 1 ) New year Eve's spacial ( 1 ) One million ( 1 ) Perfect Mobile Plan ( 1 ) Telegram| ( 1 ) The Affair ( 1 ) admk ( 1 ) alcohol ( 1 ) beep song ( 1 ) big ben london ( 1 ) big boss ( 1 ) black friday ( 1 ) blog post ( 1 ) book fair ( 1 ) chennai ( 1 ) clinton ( 1 ) comedians ( 1 ) dinamalar ( 1 ) dirty politics ( 1 ) diwali ( 1 ) dog ( 1 ) face book status ( 1 ) facebook theorem ( 1 ) fake news ( 1 ) famous facebook- ( 1 ) five star blogger award ( 1 ) flight ( 1 ) flood ( 1 ) friendship ( 1 ) funny advice ( 1 ) funny family ( 1 ) gopinath ( 1 ) greatest ( 1 ) heart touching ( 1 ) heart toucing ( 1 ) hits ( 1 ) humanity ( 1 ) humour ( 1 ) hygiene ( 1 ) ilayaraja ( 1 ) india ( 1 ) indian ( 1 ) inhumane ( 1 ) ipod ( 1 ) jallikattu ( 1 ) joke ( 1 ) joker ( 1 ) little girl ( 1 ) love ( 1 ) messaging app . mobile message | app l social messaging |டெக்னாலஜி|Technology ( 1 ) mobile phone ( 1 ) music ( 1 ) neeyaa naanaa ( 1 ) network ( 1 ) obama ( 1 ) oh..america ( 1 ) opinion ( 1 ) photos ( 1 ) poem ( 1 ) power cut ( 1 ) price ( 1 ) rape ( 1 ) recipe ( 1 ) sachin tendulkar ( 1 ) sandwiches ( 1 ) satire ( 1 ) social ( 1 ) tamil bloggers meet ( 1 ) tamil blogspot ( 1 ) tamil eelam ( 1 ) telegram ( 1 ) tips ( 1 ) vijay ( 1 ) walmart ( 1 ) whatsapp . telegram app ( 1 ) wonderful ( 1 ) worlds heaviest man ( 1 ) அசோக் சக்ரா ( 1 ) அதிகாரி ( 1 ) அநாகரிகம் ( 1 ) அந்தரங்க அட்வைஸ் ( 1 ) அந்தரங்கம் ( 1 ) அனிமல் ( 1 ) அன்னையர் தினம் ( 1 ) அப்பாடக்கர் ( 1 ) அமலா பால் ( 1 ) அமெரிக்க போலீஸ் ( 1 ) அரசியல் கொத்துபுரோட்டா ( 1 ) அரசியல். சென்னை ( 1 ) அரசியல். தேர்தல் 2014 ( 1 ) அரசியல். நக்கல்கள் ( 1 ) அரசியல்களம் ( 1 ) அரசியல்வாதிகள் ( 1 ) அரசு ( 1 ) அரசு திட்டம் ( 1 ) அரபுநாடு ( 1 ) அறிமுகம் ( 1 ) அறிவிப்பு ( 1 ) அறிவு ஜீவிகள் ( 1 ) அறிவுரைகள் ( 1 ) அலை ( 1 ) அழைப்பிதழ் ( 1 ) அவார்டு ( 1 ) ஆகமவிதிகள் ( 1 ) ஆணையம் ( 1 ) ஆண்களை வசிகரிக்க ( 1 ) ஆன்மிகம் ( 1 ) ஆபத்து ( 1 ) ஆபிஸ் ( 1 ) ஆம் ஆத்மி ( 1 ) ஆயுத பூஜை ( 1 ) ஆராய்ச்சி ( 1 ) ஆல்ஹகால் ( 1 ) இணைய அறிவு ( 1 ) இத்தாலி ( 1 ) இந்திய கலாச்சாரம் ( 1 ) இந்திய கல்வி ( 1 ) இந்திய தூதரக விவகாரம் ( 1 ) இந்திய தூதர் ( 1 ) இராணுவம் ( 1 ) இலங்கை தமிழர் ( 1 ) இளைய சமுதாயம் ( 1 ) இஸ்லாமிய மக்கள் ( 1 ) ஈரோடு ( 1 ) உன்னால் முடியும் ( 1 ) ஊடகத்துறை ( 1 ) ஊடகம் ( 1 ) எக்ஸாம் ( 1 ) எம்.ஜி.ஆர் ( 1 ) எழுத்தாளர் ( 1 ) ஐபோன் ( 1 ) ஒலிம்பிக் 2012 ( 1 ) ஒலிம்பிக் 2016 ( 1 ) ஓட்டு ( 1 ) கசக்கும் உண்மை ( 1 ) கடல் ( 1 ) கணக்கு ( 1 ) கணவரை உங்கள் சொல்படி கேட்க வைப்பது எப்படி ( 1 ) கணினி ( 1 ) கண்டணம் ( 1 ) கண்ணீர் ( 1 ) கமல் ( 1 ) கரடி ( 1 ) கருத்து ( 1 ) கற்பனை ( 1 ) கற்பனை பதிவு ( 1 ) கலாய்த்தல் ( 1 ) கலைஞர் ஜோக்ஸ் ( 1 ) கல்யாணம் ( 1 ) கழுகார் ( 1 ) கவலை ( 1 ) கவிதைகள் ( 1 ) கார்ட்டூன் ( 1 ) கிச்சன் ( 1 ) கிறிஸ்துவ பாடல்கள் ( 1 ) குடி ( 1 ) குடியரசு தினம் ( 1 ) குடியரசுதினம் ( 1 ) குடும்ப அரசியல் ( 1 ) குட்டுகள் ( 1 ) குமாரசாமி ( 1 ) குமுதம் ( 1 ) குமுதம் ரிப்போர்ட்டர் ( 1 ) குறும்பு ( 1 ) குஷ்பு ( 1 ) குஷ்பூ ( 1 ) கூடங்குளம் ( 1 ) கேடுகெட்ட சிந்தனைகள் ( 1 ) கேரளா ( 1 ) கேலி ( 1 ) கேள்விபதில் ( 1 ) கேவலமான தலைவர்கள் ( 1 ) கைது ( 1 ) கொடுமை ( 1 ) கோயில் ( 1 ) கோலம் ( 1 ) சக்கேடா ( 1 ) சசிகலா ( 1 ) சமுக அவலம் ( 1 ) சமுக சிரழிவு ( 1 ) சமுக வலைத்தளம் ( 1 ) சமுக விழிப்புணர்வு ( 1 ) சமையல் ( 1 ) சமையல் அறை ( 1 ) சமையல் குறிப்பு. ரெசிப்பி ( 1 ) சிக்கல் ( 1 ) சிதம்பரம் ( 1 ) சிரழிவு ( 1 ) சிரிபு ( 1 ) சிரிப்பு ( 1 ) சிறுநீரில் கல்லா? ( 1 ) சிறை கோர்ட் ( 1 ) சு.சாமி ( 1 ) சுகம் ( 1 ) சுதந்திர தினம் ( 1 ) செக் ( 1 ) சென்னை பதிவர் கூட்டம் ( 1 ) சென்னை வெள்ளம் ( 1 ) செய்திகள். செக்ஸ் ( 1 ) செல்போன் ( 1 ) சேலை ( 1 ) சைனிஷ் ( 1 ) சொத்துகுவிப்பு ( 1 ) சோனியா ( 1 ) ஜப்பான் ( 1 ) ஜல்லிக்கட்டு ( 1 ) ஜி-மெயில் ( 1 ) ஜுனியர் விகடன் ( 1 ) ஜெயலலிதா! ( 1 ) ஜெயலலிதா. பா.ஜ.க ( 1 ) ஜெயலிதா ( 1 ) ஜெயாலலிதா ( 1 ) ஜெயில் ( 1 ) ஜெர்மன் ( 1 ) ஜோக்கர் ( 1 ) ஞாநி ( 1 ) ஞானாலயா ( 1 ) டான்ஸ் ( 1 ) டிராமா ( 1 ) டிவிட்டர் ( 1 ) டிவிட்டுகள் ( 1 ) டீவிட்டர் ( 1 ) ட்விட்டர் ( 1 ) ட்விட்டர்கள் ( 1 ) தங்கமான தமிழ் சங்கங்கள் ( 1 ) தடை ( 1 ) தண்டனை ( 1 ) தந்தை ( 1 ) தந்தையர்தினம் ( 1 ) தமிழக அரசியல் தலைவர்கள் ( 1 ) தமிழக கல்வி துறை ( 1 ) தமிழக் சட்டசபை ( 1 ) தமிழ் சினிமா ( 1 ) தமிழ்சமுகம் ( 1 ) தமிழ்தத்துவங்கள் ( 1 ) தமிழ்மணம் ( 1 ) தலைவர்கள் நக்கல் ( 1 ) தாஜ் மஹால் ( 1 ) தாய்ப்பால் ( 1 ) தாலி.பெண்கள் ( 1 ) தி.மு.க ( 1 ) திட்டுகள் ( 1 ) திருமணநாள் ( 1 ) திருமணம் ( 1 ) திரைத்துறை ( 1 ) திறமை ( 1 ) தீபாவளி மலர் ( 1 ) துக்ளக் ( 1 ) துண்டு பேப்பர் ( 1 ) துளிகள் ( 1 ) தேசபக்தி ( 1 ) தேர்தல் 2016 ( 1 ) தேர்தல் கமிஷன் ( 1 ) தேர்தல்களம் ( 1 ) தேவயானி கைது ( 1 ) தொடர்பதிவு ( 1 ) தொண்டன் ( 1 ) தொண்டர்கள் ( 1 ) தொழில்நுட்ப திருட்டு ( 1 ) நகராட்சி ( 1 ) நகைச்சுவை. போட்டோடூன் ( 1 ) நகைச்சுவை.கணவன் ( 1 ) நடிப்பு ( 1 ) நட்புக்கள் ( 1 ) நண்பன் ( 1 ) நண்பர் ( 1 ) நன்கொடை ( 1 ) நலஸ் செய்தி ( 1 ) நாடகம் ( 1 ) நாட்டு நடப்புகள் ( 1 ) நிகழ்ச்சிகள் ( 1 ) நிரிழிவு நோய் ( 1 ) நேசம் ( 1 ) நையாண்டி கார்டூன் ( 1 ) பகடி ( 1 ) பசி கொடுமை ( 1 ) பஞ்சாங்கங்ம் ( 1 ) பஞ்ச் டயலாக் ( 1 ) பட விமர்சனம் ( 1 ) பணம் ( 1 ) பதன்கோட் ( 1 ) பதில்கள் ( 1 ) பதிவர் ( 1 ) பதிவர் திருவிழா ( 1 ) பத்திரிக்கை ( 1 ) பத்ரி ( 1 ) பன்னீர் செல்வம் ( 1 ) பரிசு ( 1 ) பலாத்காரம். சூப்பர் சிங்கர் ( 1 ) பவர் ஸ்டார் ( 1 ) பா.ஜா.க ( 1 ) பா.ம.க ( 1 ) பாசிடிவ் செய்தி ( 1 ) பாசிடிவ் தகவல்கள் ( 1 ) பாசிடிவ் நீயூஸ் ( 1 ) பாடல் ( 1 ) பாராட்டுக்கள் ( 1 ) பாலியல் ( 1 ) பிரச்சனை ( 1 ) பிராமணன் ( 1 ) பிராமின் ( 1 ) பிரிவு ( 1 ) பீஹார் ( 1 ) புதிய கடவுள் ( 1 ) புது புது தகவல்கள் ( 1 ) புத்தக கண்காட்சி ( 1 ) புத்தாண்டு ( 1 ) பெண் பதிவர் ( 1 ) பெண் பார்க்கும் படலம் ( 1 ) பெற்றோர் ( 1 ) பேச்சு ( 1 ) பேட்டி ( 1 ) பேஸ்புக் ஸ்டேடஸ் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பொறாமை ( 1 ) போராட்டம் ( 1 ) போஸ்டர் ( 1 ) ப்ளாக்கர்ஸ் ( 1 ) ப்ளாக்கர்ஸ் டிப்ஸ் ( 1 ) மகாத்மா காந்தி ( 1 ) மதநல்லிணக்கம் ( 1 ) மதம் ( 1 ) மதுபானம் ( 1 ) மதுரைத்தமிழன் ( 1 ) மதுவிலக்கு ( 1 ) மனதை தொடும் தகவல்கள் ( 1 ) மனதை நெகிழ வைக்கும் ( 1 ) மனநிலை ( 1 ) மனவேதனை ( 1 ) மனிதன் ( 1 ) மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி? ( 1 ) மனைவியை மயக்க ( 1 ) மறைவு ( 1 ) மாப்பிள்ளை ( 1 ) மாற்றம் ( 1 ) மாற்று சிந்தனை ( 1 ) மீடியா ( 1 ) முதலாளிகள் ( 1 ) முதலைமைச்சர் ( 1 ) முத்தம் ( 1 ) முனிசிபால்டி ( 1 ) முரண்பாடு ( 1 ) மூளைக்கு வேலை ( 1 ) மூஸ்லிம் ( 1 ) மெக்ஸிகோ ( 1 ) மெட்ரோ ( 1 ) மெனோபாஸ் ( 1 ) மெளனம் ( 1 ) மேஜர் முகுந்த் ( 1 ) மேயர் ( 1 ) மைசூர் பாகு ( 1 ) மோசம் ( 1 ) மோடி ஸ்பெஷல் ( 1 ) மோடி. ( 1 ) மோடி. அரசியல் ( 1 ) யோகா ( 1 ) ரசிக்க ( 1 ) ரஜினி வடிவேலு ( 1 ) ரம்ஜான் ( 1 ) ராக்கெட் ( 1 ) ராஜா ( 1 ) ராமதாஸ் ( 1 ) லலித்மோடி ( 1 ) லொள்ளு ( 1 ) லோக்சபா தேர்தல் ( 1 ) வடை ( 1 ) வரதட்சணை ( 1 ) வலி ( 1 ) வலைத்தளம் ( 1 ) வழக்கு ( 1 ) வாழ்க்கை அனுபவங்கள் ( 1 ) வாழ்த்துக்கள். ( 1 ) வாழ்வு ( 1 ) விஜயகாந்த ( 1 ) விண்வெளி ( 1 ) விநாயக சதுர்த்தி ( 1 ) விபரிதம் ( 1 ) விபரீதங்கள் ( 1 ) விருது ( 1 ) விஸ்வரூபம் 2 ( 1 ) வீரமணி ( 1 ) வெடி ( 1 ) வெர்ஜினியா பீச் ( 1 ) வேட்டி ( 1 ) வேட்டையாடு ( 1 ) வேட்பாளர் ( 1 ) ஸ்டாக் மார்க்கெட் ( 1 ) ஸ்டாலின் கார்னர் ( 1 ) ஸ்டாலின். திருமணம் ( 1 ) ஸ்டேடஸ் ( 1 ) ஸ்பானிஷ் ( 1 ) ஸ்ரீரங்கம் ( 1 ) ஸ்வீட் ( 1 ) ஹாக்கிங் ( 1 ) ஹாலிவுட் ( 1 ) ஹிட் ( 1 ) ஹூயூமர் ( 1 ) ஹோமம் ( 1 ) ையாண்டி ( 1 )

Gadgets By Spice Up Your Blog