Wednesday, April 8, 2015



 

தலைவர்கள் சொல்லாமல் சொல்லுவது இதுதானோ


செய்தி :எல்லா மதங்களையும் சமமாகப் பார்க்க வேண்டும் என்பது தான் தி.மு.க வினுடைய கருத்து என்று திமுக., தலைவர் கருணாநிதி டுவிட்டரில் கூறியுள்ளார்.

ஆனால் கிறிஸ்துவ இஸ்லாமிய மதப்பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து சொல்ல வேண்டும் அதுதான் என் கருத்து என்று கலைஞர் சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கிறார்

செய்தி :நீங்கள் கடவுள்': நேர்மையான முறையில் தீர்ப்பு வழங்க வேண்டும்: நீதிபதிகள் மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தல்

ஆனால் நான் உங்களின் கடவுள் நான் சொல்வதுபடிதான் நீங்கள் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று மோடி சொல்லாமல் சொல்லுகிறார்


செய்தி :  அமெரிக்காவில், புனித வௌ்ளிக்கு விடுமுறை இல்லை: வெங்கையா
அட விளங்காத ஐயா இந்தியா ஒன்றும் அமெரிக்கா இல்லை  அது கூட உங்களுக்கு தெரியாதா?

மோடி ஏன் அடிக்கடி வெளிநாடு பயணம் மேற்கொள்கிறார்?
அது ஒன்றுமில்லங்க யாரோ அவரிடம் எல்லா நாட்டுக்கும் போய் அந்த மக்களின் ஆதரவை திரட்டினால் அடுத்தாக வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டி போட்டு அமெரிக்க அதிபராக வர வாய்ப்புகள் அதிகம் என்று அவருக்கு யாரோ சொல்லி இருக்காங்களாம் அதனாலதான் அவட் அடிக்கடி வெளிநாடு பயணம் மேற்கொள்கிறார்

நாட்டுல ஏன் நிறைய பேர் தலைவராக ஆசைபடுகிறார்கள் தெரியுமா? அப்பதான் நிறைய அறிவுரை சொல்லாம் ஆனால் அதை செய்யனும் என்று அவசியமில்லை என்பதால்தான்


காந்தி போதித்த அகிம்சை வழியில் நடப்பவர்கள் வாழ்வில் காந்தி படம் போட்ட ரூபாய்க்கள் இருப்பதில்லை அது போல காந்தி படம் போட்ட நோட்டுகளை அதிகம் வைத்திருப்பவர்களிடம் காந்தி போதித்த அகிம்சைகள் சுத்தமாக கிடையாது


தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் நான்கு நாட்கள் மட்டும்தானா? கலைஞர்
கையெழுத்து மட்டும் போட்டு வரும் உங்களுக்கு இது அதிகமாக தோன்றுகிறதா

திமுகவின் புதிய கொள்கை : சட்டமன்றம் சென்றால் வெளிநடப்பு செய்ய வேண்டும்

பேசாம அத்வானி அதிமுகவில சேர்ந்து இருந்தாலாவது முதலமைச்சாராவது ஆகி இருப்பார்..

பிஜேபி கட்சிக்காரங்க ராகுலை தேடுறாங்க... ஆனா காங்கிரஸ் கட்சிகாரங்களோ அத்வானி எங்கே போயிட்டுட்டாருன்னு தேடுறாங்க என்ன டிசைண்டா இது


அன்புடன்
மதுரைத்தமிழன்

1 comments:

  1. இவ்வகையான நிகழ்வுகள் இருப்பதால்தான் அது அரசியல்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.