Wednesday, April 15, 2015



பள்ளியில் படிக்கும் சிறுவர்களுக்கு மற்றும் இளைஞர்களுக்கு கவுன்சிலிங்க் அவசியமா?

பள்ளியில் படிக்கும் சிறுவர்களுக்கு கவுன்சிலிங்க் அவசியமா என்று கேட்டால் இல்லை என்றுதான் நான் சொல்லுவேன். ஒரு குழந்தைக்கு நல்ல ஆசிரியரும், பெற்றோர்களும் இருந்துவிட்டால் ஸ்டுடெண்ட் கவுன்சிலிங்குக்கு அவசியம் இல்லை.

ஆனால் இப்ப நடப்பதோ, பரிட்சையை நினைக்கும் போதே ஸ்டுடென்ஸ் டென்ஷன் ஆகி மனக் குழப்பத்திற்கு ஆளாகிறார்கள். அதனால் கவுன்சிலிங்க் அவசியம் என்று இப்போ பலபேர் சொல்லி கிளம்பிவிட்டார்கள். அதுமட்டுமல்ல இப்போது மனக் குழப்பத்திற்கு ஆளாவது ஸ்டுடெண்ட் மட்டும் இல்லை. பெற்றோர்களும் ஆசிரியர்களும்தான். இதற்கு காரணம் இந்த மூவரும் இந்த காலத்தில் முழு அறிவு பெறாமல் இருப்பதுதான். அதிலும் முக்கியமாக பெற்றோர்களையும் ஆசிரியர்களையும்தான் நான் முக்கியமாக குறை சொல்லுவேன்.




முதலாவதாக பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் திறமையை அறிந்து அவனை ஊக்கப்படுத்த வேண்டும் எந்த காரணத்தை கொண்டும் மற்ற குழந்தைகளோடு ஒப்பிட்டு நோக்க கூடாது காரணம் எல்லாக் குழந்தைகளின் திறமையும் ஒன்று போல இருக்காது. நாம் செய்ய வேண்டியது எல்லாம் படிப்பு மற்றும் அது சம்பந்தபட்ட நிகழ்வுகளில் மட்டும் குழந்தைகளை அதிக கவனம் செலுத்தி கற்க செய்ய வேண்டும் மற்ற காரியங்களில் அதிகமாக  கவனத்தை சிதறவிடக் கூடாது. அதற்கான பயிற்சியை தரவேண்டும் படிப்பதற்கான வேண்டிய உதவிகளை அவர்களுக்கு செய்து தரவேண்டும். அவ்வளவுதான் அப்படி செய்வதால் அவர்களின் முழு திறமையையும் பாசிடிவ் வழிகளில் செயல்படுத்த முடியும் .அதன் மூலம் கிடைக்கும் ரிசல்டை பாராட்டி என்கரேஜ் செய்யவேண்டும்.

அது போலதான் ஆசிரியர்களும் மாணவர்களின் சந்தேகங்களை நீக்கி அவர்களை ஊக்க படுத்த வேண்டும் நாம் நல்ல ரிசல்ட் காட்ட வேண்டும் என்று நினைத்து எந்த மாணவனையும்  நீ எல்லாம் என்ன படிச்சு எங்க உருப்பட போற என்று எந்த நேரத்திலும் சொல்லி அவனை கல்விக் கூடத்தில் இருந்து வெளியேற்ற ஒரு காரணமாக இருக்க  கூடாது.  நன்றாக  படிக்க முடியாத பையன்களாக இருந்தாலும் அவர்களை பூஸ்ட் செய்து வெற்றி பெற செய்யவேண்டும் அப்படி பட்ட மாணவன் நூற்றுக்கு நூறு எடுக்க வேண்டும்  எறு நினைத்து அவனை போர்ஸ் பண்ணக் கூடாது அதற்கு பதிலாக தம்பி நீ நூற்றுக்கு நூறு எடுத்தால்தான் வாழ்க்கையில் பெறலாம் என்று நினைக்காதே சராசரி மார்க் எடுத்து பாஸ் செய்தவர் பலரும் வாழ்க்கையில் மிக வெற்றி பெற்று இருக்கிறார்கள் என்று சொல்லி ஊக்கப்படுத்த வேண்டும்.

இப்படி இதை பெற்றோர்களும் ஆசிரியர்களும் செய்து வந்தால் அதன் பின் எந்த மாணவனும் டென்ஷன் அடைய மாட்டான் அதன்பின் அவர்களுக்கு எந்த வித கவுன்சிலின்ங்கும் தேவையே இருக்காது.நாங்கள் படிக்கும் போதெல்லாம் நல்லபடிப்பா என்று மட்டும்தான் பெற்றோர்கள் சொல்வார்களே ஒழிய நீ வகுப்பில் நம்பர் ஒன்றாக வர வேண்டும் என்று அநேகமாக எந்த பெற்றோரும் எங்களை வற்புறுத்துவதில்லை

அடுத்தாக நான் சொல்லப் போவது பெற்றோர்கள் மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது.

உங்கள் பிள்ளை பளஸ்டூ படித்தவுடன் மேலே என்ன படிப்பது என்று கல்லூரிகளுக்கு சென்று கவுன்சிலிங்க் கேட்பதோ அல்லது கல்லூரிகளை நடத்துபவர்கள்  நடத்தும் டீவி மூலம் அட்வைஸ் கேட்பதோ  அல்லடு பெரிய அறிஞர்களை கொண்டு பெரிய ஹால்களில் எங்கே என்ன படிப்பது என்று நடக்கும் கவுன்சிலிங்க் விழாக்களில் கலந்து கொள்ளாதீர்கள். இந்த அறிஞர்கள் பல கல்லூரிகளில் இருந்து பெருத்த தொகையை வாங்கி கொண்டு அந்த கல்லூரிக்குகேற்றவாறு இந்த இந்த துறைகளில் படித்தால் எதிர்காலத்ஹில் நீங்கள் இப்படி சிறப்பாக விளங்க முடியும் என்று உங்கள் மனதில் ஒரு கனவு கோட்டையை உருவாக்குவார்கள் அந்த கோட்டை கல்லூரிப்படிப்பை முடித்ததும் கலைந்துவிடும். அதன் பின் நீங்கள் அவர்களிடம் சென்று இப்படி சொன்னீர்களே என்று கேட்டு கொண்டிருக்க முடியாது.


இது உண்மையா என்று கேட்டால் இது மிக மிக உண்மை என்று நான் அடித்து சொல்வேன். நான் இப்படி உறுதியாக சொல்லக் காரணம் நானு ஒரு காலத்தில் சென்னையில் மிகப் பெரிய கம்பியூட்டர் மற்றும் மேனேஜ்மெண்ட் பிரைவேட் இன்ஸ்ட்டிடீயூட்டில் ஸ்டுடெண்ட் கவுன்சிலராக இருந்து வந்தேன் 1980 - 1990 ல் இந்தியாவின் பெரிய நகரங்களில் பல கிளைகளை கொண்ட பிரைவேட் இன்ஸ்ட்டிடீயூட் அது. அங்கு நாங்கள் செய்தது எல்லாம் மாணவர்களுக்கு ஏற்று எந்த கோர்ஸ்படித்தால் நல்லது என்று சொல்லவ்தற்கு பதிலாக எந்த கோர்ஸில் மாணவர்கள் குறைவாக சேர்வார்களோ அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அதில் சேரவைப்பதுதான் நாங்கள் செய்யும் கவுன்சிலிங்க் அது போலத்தான் இன்றும் பல பெரிய கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து செயல்படுகின்றன. இப்போது பல பெரிய கல்வி நிறுவனங்கள் இப்படிதான் மாணவர்களுக்கு உதவுவதாக சொல்லி தங்களுக்கு தாங்களாகவே உதவிக் கொள்கின்றனர்.

மாணவர்களே பெற்றோர்களே உங்களுக்கு என்ன வேண்டும்  எதைப்படிப்பது என்பதை நீங்கள் சுற்றுபுறத்தில் என்ன நடக்கிறது என்பதை  உணர்ந்து அதற்கு ஏற்ப படிப்பை மேற் கொள்ளுங்கள்


அன்புடன்
மதுரைத்தமிழன்








6 comments:

  1. அடப்பாவீ.. அவனா நீயி (Sorry.. அவர்களா நீங்கள்ள்ள்ள்). பிரில்லியண்ட்டாக் குறிப்பிடறமாதிரி இருக்கு.
    என்னைக் கேட்டால், பையன்/பெண் புரிந்து, தான் இதைப் படிக்க விரும்புகிறேன் என்று சொன்னால், அதில் சேர்த்துவிடுவது புத்திசாலித்தனம் (provided, we know the job opportunity or his aptitude and market for the course). Whoever advises, will do either based on his experience or his benefit. சில நாட்களுக்கு முன்னால் மக்கள் தொலைக்காட்சியில், ஸ்பான்சர்டு நிகழ்சியில்,வெளினாட்டில் மருத்துவம் போன்றவை படிக்க மிகவும் குறைவாகத்தான் ஆகிறது என்றெல்லாம் சொன்னார்கள். அவர்கள் சொன்ன வேகத்தில் நானே இப்போது மருத்துவம் சேர்ந்துவிடலாம் என்று தோன்றியது. I am sure they may be fraud.

    ReplyDelete
  2. மிகவும் உண்மை! நானும் இது போன்ற ஏமாற்றுபவர்களிடம் ஏமாந்து இருக்கிறேன்!

    ReplyDelete
  3. உண்மை தான் சகோ ஒவ்வொருவர்க்கும் ஒவ்வொரு திறமை இருக்கும் அதை வளர்த்தால் நிச்சயம் நன்கு வருவார்கள் இல்லையா. நல்லதோர் பதிவு அனைவரும் அறியவேண்டிய விடயம் நிச்சயம் சிந்திக்க வைக்கும். தொடர வாழ்த்துக்கள் ...!
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தங்கள் அனைவருக்கும் ...!

    ReplyDelete
  4. நல்ல பதிவு தோழர் ..
    தம +

    ReplyDelete
  5. சபாஷ் மிக அருமையான பதிவு! உண்மையை மிகவும் நன்றாகவே விளம்பி உள்ளீர்கள். பெற்றோர்களும், ஆசிரியர்களும் ஒழுங்காக மாணவர்களை கைட் செய்தாலே போதும், கவுன்சலிங்க் அவசியம் இல்லை. மாணவர்களின் விருப்பத்தை, திறமையை முதலில் மாணவர்களும், அவர்களின் பெற்றோரும் அறியாததையா ஒரு மூன்றாவது மனிதர் அறிந்து விட முடியும்? அதற்கு தேர்வு கூட வைக்கின்றார்கள். ஆச்சரியமாகத்தான் இருக்கின்றது...நல்ல வியாபாரம்.!!

    நல்ல பதிவு. இதை பெற்றோர்கள் உணர்ந்தால் சரிதான்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.