Monday, April 6, 2015



 believe in your god never give up
இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்வதில்லை

அந்த சிறு ஊரில் உள்ள சர்ச்சில்  சண்டே கூட்டத்திற்கு வரும் மக்கள் அதிகரிக்க தொடங்கினர். அதனால் அந்த சர்ச்சை மிகப் பெரியதாக கட்டி, அங்கு வரும் மக்களுக்கு அதிக பார்க்கிங்க வசதி செய்து தர ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்று, அந்த சர்சை கவனித்து வரும் ஃபாதர் நினைத்தார். அந்த சிறிய சர்ச்சுக்கு சொந்தமான அந்த சர்ச்சை சுற்றியுள்ள இடங்கள் சிறிய சிறிய மலை குன்றுகளால் சூழப்பட்டு இருந்தது. அதுமட்டுமல்லாமல் அந்த சர்ச்சுக்கு வேறு எந்தவித வருமானமும் கிடையாது.



இந்த சூழ்நிலையில்தான் அந்த ஃபாதர் அந்த சர்ச்சை விரிவுபடுத்த நினைத்தார். அந்த அவரின் திட்டத்தை ஒரு ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனை கூட்டத்தில் தெரிவித்து  இந்த சர்ச்சிற்கு வருமானம் அதிகம் இல்லை என்பதால் இதை நம்மால் கட்ட முடியாது. இதற்காக நாம் நன் கொடைகள் வசூலித்தாலும்  புதிய சர்ச் கட்டுவதற்கான பணத்தை நம்மால் திரட்ட முடியாது காரணம் இந்த ஊரில் வசிப்பவர்களிடமும் அதிக பணம் வசதி இல்லை. அதனால் இதற்கு  மாற்று ஏற்பாட்டை நான் செய்துள்ளேன் என்று கூறினார்

அதன்படி இதனை நான் கடவுளிடமே விட்டு ,அதற்கான பிரார்த்தனை கூட்டத்தை வருகிற  வெள்ளிகிழமை அன்று ஸ்பெஷல் கூட்டமாக நடத்துகிறேன். அதில் நீங்கள் கண்டிப்பாக கலந்து பிரார்த்தனை செய்யுங்கள் என்று சொன்னார்.

அதனை கேட்ட பலரும் இது நடக்கிற காரியாமா என்ன? இந்த ஃபாதருக்கு என்ன ஆச்சு? இப்படி பிரார்த்தனை செய்வதால் புதிய சர்ச் கட்டிவிடமுடியுமா என்று கேலியாக அவரை பார்க்கலானர்கள். சிலர் கேட்கவும் தொடங்கினர்

அதற்கு அந்த ஃபாதர் நிச்சயம் நாம் நல்லது செய்ய நினைத்து பிரார்தனை செய்தால் நிச்சயம் நடக்கும். இதை நம்புபவர்கள் கண்டிப்பாக வெள்ளிக் கிழமை கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று சொல்லி சென்றார்.

அது போல வெள்ளிக்கிழமை பிரார்த்தனை கூட்டம் நடக்க தொடங்கியது வழக்கத்தைவிட சிறிய அளிவில்தான் கூட்டம் வந்து இருந்தது. அதற்கு வந்த அனைவரும் ஒருமித்த கருத்தோடு மனம் உருகி பிரார்த்தனை செய்தனர்.


பிரார்த்தனை கூட்டம் முடிந்ததும் அந்த ஃபாதர் தனது அலுவலக அறையை சென்று அடைந்த போது அவரது உதவியாளர் ஒருவர்  வந்து ஃபாதர் உங்களை சந்திக்க ஒரு பெரியவர் காத்து இருப்பதாக சொன்னார். சரி அவரை உள்ளே அனுப்பு என்று சொல்லி அந்த ஃபாதர் காத்து இருந்தார்

அந்த பெரியவர் வந்து ஃபாதரை வணங்கி ஃபாதர் நான் அருகில் இருக்கும் நகரத்தில் இருந்து வருகிறேன். நாம் அங்கு மிகப் பெரிய கட்டிடங்களை கட்டும் பில்டராக இருந்து வருகிறேன். இப்போது அந்த நகரத்தில் மிகப் பெரிய கட்டிடம் கட்டுகிறோம் அதற்காக எங்களுக்கு நிறைய கருங்கல்கள் தேவைப்படுகின்றது. அவ்வளவு கற்களுக்கு எங்கே போவது என்று நாங்கள் ஆலோசிக்கும் போது என் உதவியாளர்  இங்கே இந்த சர்ச்சிற்க் அருகில் சிறு சிறு மலை குன்றுகள் இருப்பதாக சொன்னார். அதனால் நான் உங்களை பார்க்க இங்கே வந்து இருக்கிறேன். இந்த குன்றுகளை நாங்கள் பயன்படுத்தி கொள்ள நீங்கள் அனுமதித்தால் நீங்கள் கேட்பதை நான் செய்து தருகிறேன் என்றார்.

அதற்கு அந்த ஃபாதர் இன்று நடந்த பிரார்த்தனை கூட்டதிற்கான காரணத்தை சொன்னார். அதை கேட்ட அந்த பில்டர் இவ்வளவுதானா நீங்கள் கவலைப்படாதிர்கள். நீங்கள் இந்த குன்றுகளை அகற்ற அனுமதி அளித்தால் அந்த இடத்தில் உங்களுக்கு வேண்டியவாறு நான் சர்ச்சை கட்டி தருகிறேன் என்று சொன்னார்.

அந்த ஃபாதார் அருகில் இருந்த ஜீஸஸின் படத்தை பார்த்தார் அந்த ஜீஸஸ் அவரை பார்த்து புன்னகை பூர்த்து கொண்டிருந்தார்


இப்படிதான் நம்பிக்கையோடு பிரார்த்தனை செய்தால் நினைத்தது நிறைவேறும்

From the Obama family to yours, Happy Easter!

டிஸ்கி: முன்பு நான் படித்த புத்தகத்தில் அமெரிக்காவில் உள்ள ஏதோ ஒரு மாநிலத்தில் உள்ள சிறு ஊரில் இப்படி நடந்ததாக படித்து இருந்தேன். அது எந்த புத்தகம் எந்த ஊர் என்று ஞாபகம் வரவில்லை . அந்த செய்தி மட்டும் ஞாபகம் வந்தததால் அதை பதிவாக வெளியிடுகிறேன். ஈஸ்டர் தின பதிவாக இதை வெளியிட நினைத்து இருந்தேன் நேரம் கிடைக்காததால் இப்போது வெளியிடுகிறேன்



5 comments:

  1. மதுரை தமிழன் வழக்கபோல ஏதோ நகைச்சுவை சொல்கிறார் என்று வந்தால் உண்மையா மத பதிவு!

    ReplyDelete
  2. நம்பிக்கையோடு கூடிய பிரார்த்தனை என்றும் நிறைவேறும். இவ்வாறான நேர்மறைக் கருத்துக்கள் மனதுக்கும் வாழ்வுக்கும் வளம் தரும். நன்றி.

    களப்பணியில் நாட்டாணி சென்ற அனுபவத்தைக் காண அழைக்கிறேன்.வருக. http://ponnibuddha.blogspot.com/2015/04/blog-post.html

    ReplyDelete
  3. அருமையான பதிவு தமிழா! ஹை! போட வைத்ததென்னவோ உண்மை!

    ReplyDelete
  4. யானைக்குத் தும்பிக்கை. மனிதனுக்கு நம்பிக்கை!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.