உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Tuesday, April 7, 2015

ஆந்திர போலீஸார் சுட்டதில் என்ன தவறு?ஆந்திர போலீஸார் சுட்டதில் என்ன தவறு?


செய்தி :திருப்பதி அருகே சேஷாசலம் காட்டில், செம்மரம் வெட்டச் சென்ற, தமிழக கூலித் தொழிலாளர்கள் மீது, ஆந்திர அதிரடிப்படை போலீசார் நடத்திய கொடூர துப்பாக்கிச் சூட்டில், 20 பேர் கொல்லப்பட்டனர்

இது இன்றைய செய்திதாளில் தினமலரில் வந்த செய்தியின் முதல் பகுதி: இந்த செய்தியை மீண்டும் ஒரு முறை படிக்கவும். படித்துவீட்டீர்களா? இப்போது இந்த செய்தியை படிக்கவும்


ஆந்திர மாநில முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவி ஏற்ற பின், செம்மரம் கடத்தலை தடுக்க கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டார். 'செம்மரம் கடத்த காட்டிற்குள் செல்பவர்கள், சுட்டுக் கொல்லப்படுவர்; ஒரு முறை பிடிபட்டாலும், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவர்' என, ஆந்திர போலீஸ் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்தது.இதை கடிதம் மூலமாக, தமிழக -- ஆந்திர மாநில எல்லையில் உள்ள வேலுார், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவள்ளூர் மாவட்ட போலீசாருக்கு தெரிவித்தனர்.

இதையும் நன்றாக படித்துவீட்டீர்களாதானே?

இப்ப சொல்லுங்க சூடுபட்டு செத்த இவர்களை எப்படி நாம் தமிழக கூலித் தொழிலாளர்கள் என்று கூற முடியும். அவர்கள் தமிழக கூலித் திருடர்கள் என்றுதானே சொல்ல முடியும். அப்படிபட்டவர்கள் தமிழர்கள் என்பதால் நாம் வக்கலாத்து வாங்குவது கேவலம் இல்லையா என்ன?

இது தப்பு என்றால் பீகாரைச் சேர்ந்த 5 திருடர்கள் சென்னையில் திருடி, துப்பாக்கிச் சூட்டில் இறந்த போது, அதை நியாயப்படுத்தினீர்களே? அப்போது அந்த பிழைக்க வழி தெரியாமல் வந்த பீகார் மக்களும் இப்படிதானே நினைத்து இருப்பார்கள். அப்போது உங்கள் நியாயங்கள் எங்கே சென்றது.  இதற்கு மொழி, இனச் சாயம் பூசாதீர்கள் தமிழர்களே..... எல்லோருக்கும் விரைவில் நிறைய சம்பாதிக்கவேண்டும் என்ற ஆசை இருக்கதான் செய்யும் 500 ரூபாய்க்கு பதில் 5000  அதிகமாக சம்பாதிப்பது என்றால் அதற்குரிய ஆபத்து இருக்கதானே செய்யும் ? இப்படி தெரிந்தே செய்யும் தப்புக்கு தண்டனை உண்டு தானே .தப்பு செய்தவர்களை மொழி, இனம்  சாதி என்று பிரித்து பார்க்காமல் தப்பு செய்தார்கள் என்று பாருங்கள்..


துப்பாக்கி சூடு நடத்திய போலீஸார் மீது தப்பு சொல்லாதிர்கள் அவர்களுக்கு தரப்பட்ட உத்தரவுகளைதான் அவர்கள் செய்து உள்ளார்கள். அப்படி குற்றம் சொல்ல வேண்டுமென்றால் அந்த துப்பாக்கி சூடு நடத்த அதிகாரம் கொடுக்கும் அதிகார வர்க்கத்திற்கு எதிராக குரல் கொடுங்கள் அல்லது அதிக சம்பளம் தருவதாக ஆசைக் காட்டி அழைத்து செல்லும் கயவர்களை குறை சொல்லுங்கள் அல்லது இதற்கு எல்லாம் மூலமாக செயல்படும் மிக பெரிய கடத்தல்காரகளை இதே போல சூட்டுக் கொல்ல வேண்டும் என்று குரல் கொடுங்கள்.


அடுத்தாக நீங்கள் சொல்லப் போவது கோடிக்கணக்கில் கொள்ளை அடித்த தலைவர்கள் சந்தோஷமாக உலா வருகிறார்களே அவர்களை சுட இந்த போலீஸுக்கு அருகதை இல்லையா என்றுதானே கேட்க போகிறீர்கள். நீங்கள் கேட்பது நியாம்தான். அவர்களையும் சுட இந்த போலீஸார் தயாராகத்தான் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு உத்தரவு தரும் அதிகார வர்க்கம் அதை அவர்களுக்கு தரவில்லையே.. அதிகாரம் கொடுத்தால் உயர்ந்த தலைவர்களையும் இழுத்து தண்டனை தர போலீஸார்கள் ரெடியாகத்தான் இருக்கிறார்கள் உதாரணத்திற்கு அய்யோ என்னை கொல்லுறாங்களே என்று கலைஞர் கதற கதற இழுத்தவர்கள்தானே இந்த போலீஸார்.

போலீஸாருக்கு அதிகாரம் கொடுக்காமலே தப்பு செய்த பெரிய தலைவர்களுக்கும் இந்த போலீஸார் தண்டனை தர சொல்லுகிறீர்களே..... கொஞ்சம் சிந்தியுங்கள். தப்பு செய்த தலைவர்களுக்கு தண்டனை கொடுக்கும் அதிகாரத்தை அரசாங்கம் உங்கள் கையில் வோட்டு என்ற சக்தி மூலம் தந்து இருக்கிறது. அதை நீங்கள் ஒழுங்காக பயன்படுத்தி இருக்கிறீர்களா என்ன? அதை பயன்படுத்தி தண்டனை தராமல் தப்பு செய்தவன் உங்கள் தலைவனாக இருக்கும் பட்சத்தில் தேன்பாட்டிலுக்குள் கையை விட்டவன் நக்காமலா இருப்பான் என்று வியாக்கானம் பேசுகிற நீங்களா இந்த போலீஸாரை பார்த்து குரைப்பது. குஜராத்தில் இஸ்லாமியர்களை கொன்று குவிக்க உடந்தையாக இருந்தவரைதானே நாட்டின் தலைவராக தேர்ந்தெடுத்து இருக்கிறீர்கள் அங்கே இறந்தவர்கள் என்ன தீவிரவாதியா என்ன? மதத்தால் வேறுபட்டு இருந்தாலும் அவர்களும் இந்தியர்கள்தானே. தப்பு செய்தவருக்கு தண்டனை என்பது தலைவர் பதவியா? நல்லா இருக்கப்பா உங்கள் நியாங்கள் சட்ட திட்டங்கள்...


மேலும் இப்படி 20 பேர் செத்ததற்கு கூப்பாடு போடுபவர்கள் டாஸ்மாக்கால் ஆயிரக்கணகான கூலி தொழிலாளிகள் தினம் தினம் செத்து மடிகிறார்களே அதற்காக நீங்கள் ஏன் அந்த டாஸ்மாக்கை நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சொல்லி குரல் கொடுக்கவில்லை .டாஸ்மாக்கால் குடித்துவிட்டு இறப்பதும் தமிழர்கள்தானே ? (In Tamil Nadu about 6,850 Tasmac outlets earn about Rs30,000 crore per year. In 2013 drunken driving caused 20,290 accidents, killing 6,463 people and injuring 20,091. In Tamil Nadu 2,764 accidents occurred due to alcohol, causing 718 deaths. These are man made and avoidable,” said Justice N. Kirubakaran.)

செத்தவன் தமிழன் என்பதால் திருட்டை நியாயப்படுத்த வேண்டாம். மரத்தை வெட்டிய கூலிகளை கொன்று குவித்தாகி விட்டது ஆனால் வெட்டப்பட்ட மரங்களால் கோடிகோடிகளாக குவித்த முக்கிய பிரமுகர்களை யார் சுட்டு கொல்வது...? இப்படி கூலித் தொழிலாளர்களை கொன்றது போலவே இதற்கு உடந்தையாக இருக்கும் அரசாங்க அதிகாரிகளை தலைவர்களை கடத்தல்காரகளையும் விசாரணை செய்து சுட்டு கொல்ல வேண்டும் என்று குரல் கொடுங்கள் .அதைவிட்டு தமிழன் ஆந்திராக்காரன் என்று இனம் பிரித்து வேற்றுமையை வளர்க்காதீர்கள் அது எந்த காலத்திற்கும் நல்லது அல்ல.


இந்த பதிவை எழுதி முடித்த பின் என் கண்ணில் பட்ட வீடியோ.....2013ல் இப்படி மரம் வெட்டியவர்களுக்கு அங்குள்ள போலிஸார் கொடுக்கும் தண்டணை. இது என் கண்ணில் கண்ணிரை வரவழைத்தது..என்னால்முழுவதையும் பார்க்கவே முடியவில்லை.இப்படி அடிபட்டு வாழ்வதைவிட குண்டு அடிபட்டு சாவது எவ்வளவோ மேல்தானே.. இப்படி பல நிகழ்வுகள் நிகழ்ந்தும் தமக்கு இப்படியும் நேரலாம் என்று தெரிந்துதானே பணத்திற்கு ஆசைப்பட்டு இந்த கூலி திருடர்களாக இயறகையை கற்பழிக்க சென்றனர். இயற்கையை அழிக்க நினைத்தவர்கள் அழிந்துதான் போனார்கள்


The deadly tussle between smugglers and forest rangers continue in Andhra Pradesh. Roughly a week after two forest rangers were lynched in a deadly ambush by smugglers, a new footage has emerged that shows the cops taking their revenge.

திருட்டை தடுக்க வரும் வனக்காவலர்களை இந்த மாதிரி வரும் கூலி திருடர்கள் கொல்வார்களாம் ஆனால் பதிலுக்கு அவர்களை சுட்டுக் கொன்றால் அதற்கு சட்டதில் இடம் இல்லையாம். நல்ல இருக்குப்பா இந்தியர்களின் சட்டம்

அன்புடன்
மதுரைத்தமிழன்

52 comments :

 1. எந்த தவறான செயலும் தண்டிக்கப் படவேண்டியது. இதில் முதளாளி என்ன தொழிலாளி என்ன. இதில் ஏன் தமிழர்கள் ஆந்திர போலீஸ் என்ற தலையங்கள் வருகிறது. இப்படி பிரித்து மேய்வதே வாடிக்கையாக கொண்டிருக்கிறது மீடியாக்கள்.

  ReplyDelete
  Replies
  1. எந்த தவறு என்றாலும் தண்டிக்கப்பட வேண்டியதுதான் மிக சரியாக சொன்னீர்கள் விக்னேஷ் உங்கள் கருத்துகளுக்கு நன்றி

   Delete
 2. அண்ணே இதே தான் கச்சதீவு பகுதியிலும் நடக்குதுது!

  ReplyDelete
  Replies
  1. உண்மைதாங்க இப்படி அடுத்தவர்களின் வளத்தை திருட கூலிகளை அனுப்பி கொழுத்துக் கொண்டிருக்கிறார்கள் பண முதலைகள்

   Delete
 3. அண்ணனுக்கு ஒரு "தமிழ் இனத்துரோகி" பட்டம் பார்சல்

  ReplyDelete
  Replies
  1. சிம்புள்,
   மீன் சாப்பிடுவதில்ல என்று உள்ளதை சொல்லி தமிழ் இன துரோகிபட்டம் வாங்கியவன் நான். பக்கத்து இலங்கைக்கு எல்லை தாண்டி சென்று அவங்க மீன்களை பிடித்து வருவது அதாவது களவாடி வருவத வீர தமிழனுக்கு பெருமை சேர்பது என்ற அளவில் தமிழக அரசியல்வாதிங்க பலர் லாபநோக்கோடு ஊக்குவித்து செயல்படுறாங்க. அதை பலர் ஆதரிக்கிறார்கள். மதுரை தழிழனின் தமிழகத்தை நோக்கி கேட்கபடும் கேள்விகள் பல நியாயங்கள் மறுக்க முடியாதவை, உண்மைகள்.
   இது தப்பு என்றால் பீகாரைச் சேர்ந்த 5 திருடர்கள் சென்னையில் திருடி துப்பாக்கிச் சூட்டில் இறந்த போது அதை நியாயப்படுத்தினீர்களே? அப்போது அந்த பிழைக்க வழி தெரியாமல் வந்த பீகார் மக்களும் இப்படிதானே நினைத்து இருப்பார்கள்.

   இது மதுரை தமிழனின் மிகவும் நியாயமான கேள்வி கொலை வெறியை கொலை கூட்டத்தை, சட்ட விரோதங்களை அதரிக்கும் தமிழகத்தை சேர்ந்த கூட்டத்தை நோக்கி கேட்கபடும் கேள்வியாகவே நினைக்கிறேன்.தமிழன் என்றால் கொள்ளையும் அடிக்கலாம் குண்டும் வைக்கலாம் என்ற அபாயகரமானதொரு மனநிலை.

   சொந்த நாட்டில் சட்டவிரோதமாக மரம் வெட்டுபவர்களை அரசு சுட்டு கொல்வது அனுமதிக்க முடியாது.

   Delete
  2. பட்டம் கொடுப்பவர்களிடம் பட்டத்தோட சிறிய பண முடிப்பையும் பார்சலாக அனுப்பி வைக்க சொல்லுங்கள்

   Delete
  3. வேகநரி நான் இட்ட பதிவை நன் கு படித்து புரிந்து பதில் அளித்தற்கு நன்றி

   Delete
 4. Replies
  1. தங்களின் கருத்திற்கு நன்றி Karthick amma

   Delete
 5. மரம் வெட்டினால் அதற்கு தண்டனை துப்பாக்கி சூடு என்பது மிக மிக தவறு. கைது செய்து சட்டதின் முன் நிறுத்த வேண்டும். இப்படி உயிர் கொலை கூடாது. இந்திய அரசியல் சட்டம் எதற்கு உள்ளது? தமிழர் பலவாக பிரிந்து இருப்பது மிக பலவீனமாக உள்ளது. இலங்கை முதல் எங்கும் தமிழரை மிதிகின்றனர். மரம் வெட்டுவது ஒன்றும் தீவிர வாத செயல் அல்ல, உடனே என்கவுண்டர் நடத்தி விட. நடந்தது மிக அவலம். உயிரை பறிக்க ஆந்திர போலீஸ்க்கு யார் உரிமை கொடுத்தது?

  ReplyDelete
  Replies
  1. நண்பரே மீண்டும் உங்களை பதிவின் மூன்றாம் பத்தியை படிக்க வேண்டுகிறேன்

   Delete
 6. நீங்க சொன்னது சரியாகவே இருக்கட்டும் , அப்ப எதுக்கு சுட்டு கொன்று விட்டு பக்கத்தில் ஒரு கயிற்றையும் கோடாலியையும் போட்டு விட்டு.. அப்பாவி ஒருத்தனை மரம் வெட்ட வந்தார்கள் சுட்டுக்கொன்றோம் என்று எதுக்கு கேஸ் ஜோடிக்கணும் ,. உணமைய சொல்லவேண்டியதுதானே ..

  ReplyDelete
  Replies
  1. இந்த செய்தியை எங்கே படித்தீர்கள்

   Delete
 7. ஆழ்ந்த சிந்தனை ...
  கூறிய அறிவு ...
  திடமான கருத்து ...
  உயர்ந்த எண்ணம் ...

  மொத்ததுல நீ ஒரு சுடர் மிகு அறிவாளன் ....

  ஆமா ...
  உன் resume ல எல்லாம் உண்மையா நீ செஞ்ச ப்ரொஜெக்டா தான் போட்டு இருக்கியா ராசா ?
  அடுத்தவன் ப்ராஜெக்ட்ட போட்டதுக்கு ... மொதலாளி சுட்டுற போறான் ... பாத்து ...

  ReplyDelete
  Replies
  1. அண்ணே உங்களின் பாராட்டிற்கு மிகவும் நன்றி அண்ணே....அப்புறம் நான் பொய் ரெஸ்யூம் கொடுத்து ஐடி துறையில் வேலை பார்க்கவில்லை அண்ணே..... என் வாய் பேச்சை வைத்துதான் எனக்கு வேலை கொடுத்து இருக்கிறார்கள்

   Delete
 8. Kindly go this link also....http://www.bbc.co.uk/tamil/india/2015/04/150408_apkillingsupdate?hc_location=ufi%3FSThisFB&fb_ref=Default

  There may be a chance...

  Then why Court!!!!!!

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் கொடுத்த லிங்கை பார்த்தேன் அது உண்மையாக இருக்கும் பட்சத்த்தில் அந்த போலீஸார் மேல் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

   Delete
 9. நான் உங்கள் கூற்றை முழுமையாக ஆதரிக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. நான் சொன்ன விஷயத்தையும் கேட்ட கேள்வியையும் புரிந்து கொண்டவர்கள் ஆதரிக்கதான் செய்வார்கள் என்பது என் கருத்து என் பதிவை புரிந்து ஆதரித்தற்கு மிகவும் நன்றி சார்

   Delete
 10. உங்க நடுநிலைப் பார்வைக்கு வாழ்த்துக்கள். இப்படி 20 நபர்கள் கொல்லப்பட்டதில் உடன்பாடு இல்லாவிட்டாலும், சும்மா எதுக்கெடுத்தாலும் தமிழன் தமிழன்னு குதிப்பது எரிச்சலாகவே இருக்கிறது. சிங்களப் ராணுவத்திலிருந்து ஆந்திர போலீஸ் வரைக்கும் குறை சொல்லுபவர்கள், தமிழ்நாடு போலிஸ் வீரப்பன் வேட்டை, வான்சாத்தி போன்ற சம்பவங்களில் பாலியல் வன்முறை, கொலை இவற்றினால் ஈடுபட்டதை கண்டித்தது உண்டா? இந்த தமிழக போலிசார் ஏன் தண்டனைக்கு உள்ளாக்கப்படவில்லை. தமிழ்நாடு போலீஸ் தமிழரை கொன்றால், கற்பழித்தால் சரியா? இவர்களை தண்டிக்கும் உரிமை இருந்தும் ஏன் ஒரு நடவடிக்கையும் இல்லை? அடுத்தவனை நோக்கி கத்த நமக்கு ஏது தார்மீக உரிமை?

  நேற்று பேஸ்புக்கில் படித்த இச்சம்பவம் தொடர்பான ஒரு பதிவு;http://tinyurl.com/qxl4vbh

  ReplyDelete
  Replies
  1. நாலு நாளிதழ்களில் மற்றும் சமுக தளங்களில் வரும் செய்திகளை படித்து அதன்பின் என் மனதில் எழும் எண்ணங்களை இங்கே பதிவாக பதிகிறேன் . சில சமயங்களில் அது சரியாகவும் சில சமயங்களில் தவறாகவும் இருக்கலாம் அவ்வளவுதாங்க நான் எல்லாம் பெரிய அறிவு ஜீவி இல்லைங்க....

   Delete
 11. நானும் உங்கள் கருத்துடன் ஒத்துப் போகிறேன். இங்கு எல்லா தவறுகளையும் செய்து விட்டு இனம் என்ற போர்வைக்குள் ஒளிந்து கொள்கிறார்கள். இது ஒரு தவறான போக்கு. தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அது தமிழன் என்பதால் நியாயமாகிவிடாது. நல்ல விளக்கம் தந்து எழுதியிருக்கிறீர்கள்.
  பாராட்ட வேண்டிய பதிவு.

  ReplyDelete
  Replies
  1. மிக சரியாக சொல்லி இருக்கீங்க கருத்திற்கு நன்றி நண்பரே....

   Delete
 12. அவர்கள் சொல்வதும் உண்மையாய் தெரிகிறது.
  அவர்கள் சார்பில் நீங்கள் சொல்வதும் உண்மைபோல் தெரிகிறது.
  உண்மைக்கும் உண்மைபோல் சொல்லப்படுவதற்கும் நூலிழை வித்தியாசம்தான்
  ஆனால் 'அவர்கள் உண்மைகள்' சொல்வது அபத்தமாகத்தான் தெரிகிறது
  உண்மையை (பின்) பற்றி அறிந்த பின் பேசுவதுதானே அவர்(உங்)களின் நியாயமான உண்மையாக இருக்க முடியும். எனவே தயவு செய்து உண்மைகளை (பின்)பற்றி சொல்லவும்

  ReplyDelete
  Replies
  1. நான் வெளிநாட்டில் வசிப்பதால் நான் நாளிதழ்களில் படித்த தகவலை கொண்டு இதை எழுதி இருக்கிறேன். அந்த நாளிதழ்கள் தரும் செய்திகள் தவறாக இருந்தால் இதுவும் தவறாக இருக்க வாய்ப்பு உண்டு அதற்காக நான் இன்வெஸ்டிகேட் டீம் அப்பாயிண்மெண்ட் பண்ணி அவர்கள் தரும் தகவலை வைத்து பதிவிட முடியாதுங்க.முடிஞ்சா நீங்க செய்திகளை ஆய்வு செய்து பதிவாக போட்டு அதற்கு லிங்க் தந்தால் சந்தோஷப்படுவேன்

   Delete
 13. தகவலுக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. மிகவும் நன்றி சார்

   Delete
 14. இந்தப் படுகொலைக்கு யார் காரணம்?

  வறுமையில் வாடும் தொழிலாளர்களை ஆசை வார்த்தை காட்டி அழைத்து செல்லும் கடத்தல்காரர்கள் தான் முதல் குற்றவாளிகள்.

  சென்ற முறை ஐந்து தொழிலாளர்கள் இதைப் போலவே சுட்டு கொல்லப்பட்டு ஆந்திர காவல் துரையிடமிருந்து எச்சரிக்கை கடிதங்கள் வந்திருந்தும் தொழிலாளர்கள் அங்கு செல்வதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்காத தமிழக அரசும் அதிகாரிகளும் இரண்டாவது குற்றவாளிகள்.

  மரம் வெட்டுபவர்களை சுற்றி வளைத்து கைது செய்ய துப்பில்லாமல் கோழைகள் போல அவர்களை சுட்டு கொன்ற ஆந்திர மாநில இரக்கமில்லாத கவல் துறையினர் மூன்றாவது குற்றவாளிகள்.

  ReplyDelete
  Replies
  1. குற்றவாளிகளில் இவர் முதல் இரண்டாம் முன்றாம் என் பாகுபடுத்தி பார்க்க முடியாது அதனால் குற்றம் செய்பவர்கள் யாராக இருந்தாலும் கண்டிப்பாக தண்டனை பெற வேண்டும்

   Delete
 15. Excellent post.
  Very good questions to Tamil racists.
  These Tamil idiots defended cruel criminals like murugan santhan, sandal veerappan, r.raja, etc.

  They will also criticize central government without any logic

  Taru

  ReplyDelete
  Replies
  1. என் பதிவை புரிந்து ஆதரித்தற்கு மிகவும் நன்றி சார்

   Delete
 16. அன்பே சிவம்:

  தங்கள் பின்னூட்டங்கள் எல்லாம் அபத்தமாகத்தான் இருக்கிறது. எதையாவது மனதில் வைத்துக்கொண்டு எதையாவது உளறுவது! ஆமா, ஊருக்கு உபதேசம் செய்யும் நீர் உண்மையை பின்ப் பற்றி ஓடாமல் இங்கே என்னத்தை வந்து பின்னூட்டமிட்டுக் கிழிக்கிறீர்?? உண்மையைப் பின்பற்றி திரும்பிப்பார்க்காமல் ஓடும்!!

  வந்துட்டானுக, அன்பே சிவம் ஆட்டுக்குட்டி சிவம்னு உண்மை மண்ணாங்கட்டினு வியாக்யாணம் பேசிக்கிட்டு!

  ReplyDelete
 17. இதைக் கேளுங்க!

  ஐயா சீமான், அப்பாவித் தமிழ்ர்களுகாக கொதித்தெழுகிறார்!

  /// சீமான்: (நாம் தமிழர் கட்சி)

  ''மரம் வெட்டும் கூலித் தொழிலாளர்களாக அழைத்துச் செல்லப்பட்ட அப்பாவி தமிழர்களைச் சிட்டுக் குருவிகளைப் தமிழனுக்குச் செல்லும் இடமெல்லாம் அடி என்கிற நாதியற்ற நிலைமை நாளுக்கு நாள் தொடருவதை இனியும் சகித்துக் கொண்டிருக்க முடியாது.

  12 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட கொடூரத்தை வெறும் மரக்கடத்தல் பிரச்னையாக மட்டும் பார்க்க முடியாது. இந்திய இறையாண்மையை கூறுபோடத்தக்க கொடூரத்தை சர்வசாதாரணமாக நிகழ்த்தி இருக்கிறார்கள் ஆந்திர அதிகாரிகள். அப்பாவித் தொழிலாளர்களைக் காட்டுமிராண்டிகளாகச் சுட்டுக் கொன்ற ஆந்திர மாநில அதிகாரிகள் அத்தனை பேர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

  துப்பாக்கிச் சூட்டில் என்ன நடந்தது என்பதை நியாயமான மனித உரிமைக் குழுக்களை வைத்து விசாரிக்க வேண்டும். நியாயமான விசாரணைக்கு தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். சுட்டுக்கொல்லப்பட்ட அப்பாவித் தொழிலாளர்களின் குடும்பங்களைக் காப்பாற்ற உடனடியாக உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும். தமிழர்கள் மீதான இத்தகைய தாக்குதல்கள் இனியும் தொடர்ந்தால் நாம் தமிழர் கட்சி மிகக் கடுமையான போராட்டங்களைக் கையிலெடுக்கும்'' என்று சீமான் கூறியுள்ளார். ///

  ----------------------

  I am really surprised, they shot them "just like that" for this kind of "petty theft"! It is unfortunate, they did not know that "the wood" would cost them their precious life!! :-(

  ReplyDelete
  Replies
  1. வருண், எனக்கும் இதே ஆச்சர்யம்தான் இருந்தது. நான் கொடுத்த பேஸ்புக் இணைப்பினையும் பார்க்கவும். பேஸ்புக்கில் மக்கள் வெளியிட்ட தகவல்களில் இருந்து "அப்பாவி ஏழை தமிழர் & தொழிலாளிகள்" இதுவரை சுமார் 4 ஆந்திர அதிகாரிகளை அடித்தே கொன்று இருக்கிறார்களாம். இதனால் காண்டு ஆன ஆந்திர அரசு, போன மாதமே என்கவுன்டர் எச்சரிக்கை விடுத்தும் அடங்காதால் இன்று முடித்து விட்டார்களாம். தமிழக போலீஸில் ஒருவரை கொன்றால் என்ன செய்வார்கள் என்பது நாம் அறிந்ததுதானே, அதையே ஆந்திர போலீசும் செய்திருக்கிறார்கள்.

   Delete
  2. திருடர்கள் தப்பு செய்தார்கள் தண்டனை பெற்றார்கள் பெற்ற தண்டனை வேடுமானால் மிக அதிகம்தான் என்று சொல்லாமே தவிர அவர்களை அப்பாவிகள் என்று அழைக்கிறார்களே அதுதான் மிகவும் தவறு. இவர்களை அப்பாவிகள் என்றால் நம் நாட்டில் கோடிக்கணக்கான ஊழல்களில் ஈடுபட்ட தலைவர்களும் மிக மிக அப்பாவிகள்தானே? இப்படி சொன்னால் நம்மை கிறுக்கன் என்று பார்க்கிறார்கள் ஹீஹீ

   Delete
 18. They robbed. Ok. But robbers are not shot dead in democracies. In Chennai affairs, the robbers holed up in an apartment, refusing to surrender; and exchanged fire. In the exchange, they were dead. If they had surrendered, things would have been different. The whole episode was staged in full public view; and none can say Police was lying.

  But in the present tragic episode, what has happened in the forests, none but the people there know. Police will always say, it is encounter. Because, in 2012, the Supreme Court said, if an encounter is proved to be fake, the police men involved will be hanged by court. Hence, Police will always have to say encounter to justify the killings.

  You say, the robbers have been at the job for a long time. AP government warned them, and kept the TN govt in the loop. If so, why have the CM TN objected to the killing by writing a sharp letter to his AP counterpart? AP govt knows quite well for a long time what was going on the forests of Tirupati i.e. the loggers come only from a few dists of TN. The AP govt could have taken the TN govt into confidence and devised a joint strategy to curb the menace. If there had been a joint strategy, or AP strategy with keeping the TN in the loop, still, that strategy would not have recommenced summary shooting. TN CM must have pointed out to AP they have transgressed their rights. In other words, Human rights violations.

  This is not a terrorist gang against the country. They are just loggers who were sent to do the job for wages. Just like the lorry drivers of the sand mafia. What use shooting the lorry drivers dead ?

  The TN and AP government could have zeroed in on the red tree smuggling mafia. Instead, they shot the loggers who were sent by the mafia. You are writing w/o being aware of all these.

  he task of curbing the menace was treated as a routine one by AP; hence the common police shot dead. Or, got full freedom to run amuk. Special circumstances require special steps. The steps would have been taken along with TN government or in consultation with TN.

  I am surprised at your cavalier way of treating an important democratic deviant behaviour by the state. You live in democracy ! Tragic irony :-[

  ReplyDelete
  Replies
  1. I guess you didn’t read the third para on my post…AP Govt. made very clear policy. If we don’t follow then we are not suppose to complain about that. Any way Thanks for your point of view……….

   Delete
  2. Hello nanthavanathaan
   Where did you get 4000 AP officers massacre
   Information ????

   Delete
 19. Well, I am not going to blindly support them because the people who are dead now are Tamils. If you read the BBC article carefully, it seems like it is a one-sided shooting. It was not like a "war" between the "loggers" and "police". The "loggers" did not seem to have had fire-arms!

  Do they have to kill them?! I would say the same even if all the people who are dead are non-tamil speaking Indians. They dont have to kill them, imho!

  The good news is, there are some still alive and injured. So there will be a chance to hear the "real story" from the "loggers"!

  ReplyDelete
 20. ஹல்லோ திருடர்களை எல்லாம் சுட்டுக்கொல்லலாம் என்று யார் சொன்னது? இது ஒன்றும் சவுதி இல்லையே? பேகாரில் இருந்து திருட வந்தவர்கள் துப்பாக்கி கொன்டு தாக்கினார்கள், இவர்கள் எதைக்கொன்டுதாக்கினார்களாம்?

  வேறு எந்த மாநிலத்தவராவது இப்படி 20பேர் அநியாயமாக சுட்டுக்கொல்லப்பட்டால் சும்ம விட்டு விடுவார்களா?

  ReplyDelete
  Replies
  1. எப்பா சாமி இந்தியாவில நடக்கும் விஷயத்திற்கு ஏனப்பா தேவையில்லாமல் சவுதியை இழுக்கிறீங்க இது ஒன்றும் மத சம்பந்தமான பதிவு இல்லையே

   Delete
 21. நண்பர்களே கருத்து சொன்ன எல்லோருக்கும் நன்றி எல்லோருக்கும் தனியாக பதில் சொல்ல நேரம் இல்லாததால் இங்கே மீண்டும் பொதுவாக என் கருத்தை சொல்லுகிறேன்.

  மரம் வெட்டி திருடியதற்கு உயிர்பலி தண்டனை என்பதில் எனக்கும் உடன்பாடில்லைதான். ஆனால் இந்த பதிவில் நான் சொல்லிய இந்த வரிகளை /////ஆந்திர மாநில முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவி ஏற்ற பின், செம்மரம் கடத்தலை தடுக்க கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டார். 'செம்மரம் கடத்த காட்டிற்குள் செல்பவர்கள், சுட்டுக் கொல்லப்படுவர்; ஒரு முறை பிடிபட்டாலும், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவர்' என, ஆந்திர போலீஸ் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்தது.இதை கடிதம் மூலமாக, தமிழக -- ஆந்திர மாநில எல்லையில் உள்ள வேலுார், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவள்ளூர் மாவட்ட போலீசாருக்கு தெரிவித்தனர்.////////பலர் படித்தனாரா என்பதில் எனக்கு சந்தேகம்தான் வருகிறது.

  அவர்கள் மிக தெளிவாக சட்டம் இயற்றி அதை தமிழக அரசுக்கும் மாவட்ட போலீஸ் அதிகாரிகளுக்கும் தகவல் அனுப்பி இருக்கிறார்கள். அதையும் அலட்சியம் செய்துவிட்டு தப்பு செய்தால் அதற்கான தண்டனைகளை ஏற்றுக் கொள்ளதானே வேண்டும். ஆந்திர அரசு ஒன்றும் சுற்றாலா சென்ற தமிழர்களை சுட்டு கொல்லவில்லையே. அப்படி செய்து இருந்தால் நாம் ஆவேசப்படுவதில் தவறு ஒன்றும் இல்லை.

  மீண்டும் சொல்லுகிறேன் இந்த மரம் வெட்டிகளை அதிக ஆசைக்காட்டி கூட்டிஸ் சென்ற புரோக்கர்கள் இந்த கடத்தலுக்கு உடந்தையாக இருக்கும் அரசு அதிகாரிகள் மற்றும் பண முதலைகள் அனைவரையும் கண்டுபிடித்து இவர்களை சுட்ட மாதிரியே சுட்டு தள்ள வேண்டும் அதில் எனக்கு மாற்று கருத்து இல்லை.

  அதுமட்டுமல்லாமல் தமிழ் நாட்டில் டாஸ்மாக்கை திறந்து வைத்து கூலிதொழிலாளிகளின் சாவுக்கு காரணமாக இருப்பவர்கள் மீதும் தக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் அதற்காக தமிழக மக்கள்தான் ஒன்று கூடி குரல் எழுப்ப வேண்டும் இப்படி குடித்துவிட்டு இறப்பவர்களும் தமிழ்ர்கள்தானே?

  அது போல சட்டதிட்டங்களுக்கு உட்படாமல் கொள்ளை அடிக்கும் தலைவர்களுக்கும் இது போல தண்டனைகள் தர வேண்டும்........ 50 காசாக இருந்தாலும் சரி 500 கோடியாக இருந்தாலும் சரி திருட்டு திருட்டுதான்... அதனால் சின்ன திருட்டு என்று அதற்காக வக்காலத்து வாங்க வேண்டாம்.......டாட்

  ReplyDelete
 22. எனக்கு யு எஸ் ல "டேவான் மார்ட்டின்" மற்றும் "மைக்கேல் ப்ரவ்ன்' இருவரும் கொல்லப்பட்டதே சரி என்று தோனவில்லை.இந்தியாவில் எல்லாம் இப்படி நடக்காதுனு நான் பேசியதுண்டு. ஆனல் இது அதைவிட மோசமாகத் தெரிகிறது. கையில் துப்பாக்கியில்லாதவர்களை (திருடர்களை) போலிஸ் சுட்டுக் கொல்ல வேண்டியதில்லை என்பதே என் நிலைப்பாடு.

  நந்தவனத்தான் சொல்வதுபோல் இதெல்லாம் ஏதோ போலீஸ் தரப்பு "பழிக்குப்பழி" வாங்கியது போலத்தான் தோனுது.

  தமிழர்களை எங்க போனாலும் கொல்றானுகனா, எப்படி நம்ம எல்லாம் உயிரோட இருக்கோம்? ஒழுங்கா சட்ட திட்டங்களுக்கு பயந்து இருக்கணும். நான் பெரிய வீரன், தீரன்னு இப்படிப் போனா நம்மளும் போய் சேர வேண்டியதுதான். என்ன சந்தனமரமோ என்ன எழவோ போங்க!

  We all are going to die later today or tomorrow or sometime later. Should one die like this?! That's sad! :-(

  ReplyDelete
  Replies
  1. இந்தியாவை பொருத்தவரையில் சட்டம் என்பது ஏழைகளுக்கு மட்டுமே வசதியானவர்களுக்கு இல்லை. அதனால் ஏழைகள் சட்டத்தை மதித்து செயல்பட்டுதான் ஆக வேண்டும் அதை மீறீனால் இது போன்ற தண்டனைகளுக்கு ஆளாக் நேரிடும்.

   இவர்கள் செத்தது எனக்கு சிறிதளவே மனம் வருத்தம் கொடுத்தது ஆனால் என் பதிவின் இறுதியில் நான் கொடுத்த வீடியோ லிங்ககை பார்த்ததும் என் கண்களில் இருந்து உண்மையாகவே கண்ணிர் கொட்டியது அவர்கள் வாங்கும் ஒவ்வொரு அடியையும் நான் வாங்கியது போலவே இருந்தது இரவில் எனக்கு தூக்கம் கூட வரவில்லை என்பதுதான் உண்மை அப்படி அடி வாங்குவதற்கு பதில் இப்படி செய்துவிட்டு போய்விடலாம் என்றுதான் நினைத்தேன் வருண்

   Delete
 23. அடிகிறவனுகதான் போலிஸா?? That's really disturbing!! நான் இதைப் பார்க்காமல் இருந்தேன்.என்னையும் பார்க்க வந்துட்டீங்க. I dont know what kind of rights one have to beat up a human being like this.

  ReplyDelete
  Replies
  1. அடித்தவர்கள் வனத்துறை காவலர்கள் பாஸ் எவ்வளவு கொடுரமாக இருக்கிறது பாஸ்

   Delete
  2. அதனாலைதான், அந்த கொலைகார வனக்காவலர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை வேண்டுமென போராடுபவர்களை பார்த்து , அவர்கள் கூலித்தொழ்லாளர்களை சுட்டதில் என்ன தவறு ? கொன்றதில் என்ன பிழை ? எனக்கேட் கிறீர்களா ?

   Delete
 24. மதுரைதமிழன், இந்தியாவில் மட்டுமல்ல அமெரிக்காவிலும் ஏழைக்களுக்கு நீதி எட்டாகனிதான். வசதியானவர்கள் எஸ்கேப்பாகிவிடுவதுதான் வழக்கம். நல்ல வக்கீல் வைத்து வாதாட முடியாத பல அப்பாவிகள் அமெரிக்க சிறைகளில் பலவருடம் கம்பி எண்ணுகிறார்கள். உதாரணமாக சில நாட்களுக்கு முன்பு 30 வருடம் சிறையில் கழித்த கறுப்பர் நிராபாரதி என விடுதலை ஆனார். அவரு 2 கொலை செய்து அந்த துப்பாக்கியை வீட்டில் வைத்திருந்தார் என கைது ஆனவர். 30 வருடமாக சுட பயன்படுத்தியது தனது துப்பாக்கி அல்ல - அதற்கு டெஸ்ட் பண்ணுங்க என கெஞ்சியபடியே கழித்திருக்கிறார்- அவருக்கு விதிக்கபட்டது மரணதண்டனை. எத்தனை தூக்கமில்லாத இரவுகளோ! துப்பாக்கி டெஸ்ட் பண்ண $1000 இல்லாத காரணத்தால் 30 வருடம் போனது. அரசு செலவில் டெஸ்ட் பண்ண மறுத்த அதிகாரிகள் கடைசியில் ஒரு நீதிபதி உத்தரவினால் டெஸ்ட் பண்ணினால் கொலை செய்ய உபயோகப்படுத்தியது வேறு துப்பாக்கி!!! அவர் மரணதண்டனைக்குள்ளாகி செத்திருந்தால்???ஏழைக்கு எந்த நாட்டிலும் கேடுதான்!!!

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் சொல்வதும் உண்மைதான் நந்தவனத்தான். உங்கள் கருத்துகளுக்கு நன்றி

   Delete
 25. இது போலி மோதல் படுகொலை தான். திட்டமிட்டு இந்தப் படுகொலை நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது என்பதற்கு ஏராளமான சாட்சியங்களும் தடயங்களும் உள்ளன.

  சுட்டுக் கொல்லப்பட்ட அனைவரது மார்பிலும் குண்டு துளைக்கப்பட்டுள்ளது.
  இறந்த உடல்கள் அனைத்தும் மல்லாந்த நிலையில் உள்ளன.
  சம்பவ இடத்தில் பல கிலோ மீட்டர் தொலைவிற்கு செம்மரங்கள் இல்லை.
  இறந்த உடல்கள் ஒவ்வொன்றின் அருகேயும் காய்ந்த செம்மரக் கட்டைகள் எங்கிருந்தோ கொண்டுவந்து போடப்பட்டுள்ளன.
  கொல்லப்பட்டவர்களின் காலணிகள் அருகிலேயே கிடக்கின்றன. தப்பி ஓடிய 80-க்கும் மேற்பட்டவர்களின் செருப்புகள் எங்கே?
  ஆந்திர செம்மரக் கடத்தல் தடுப்பு சிறப்புபடையினர் 1500 அடி வரை சுடக் கூடிய எஸ்.எல்.ஆர். ரைபிள் பயன்படுத்தி உள்ளனர். கல் எறிபவர்களால் அவ்வளவு தூரம் வீச முடியாது.
  சுட்டுக் கொல்லப்பட்ட அனைவரும் 06-04-2015 திங்கள்கிழமை மதியமே ஆந்திர போலிசாரால் கைது செய்யப்பட்டவர்கள் என்று தப்பி வந்த சேகர் என்ற தொழிலாளி கூறியுள்ளார்.

  ReplyDelete
 26. அய்யாமாருன்களா!உங்கள் வாத விவாதங்களை எல்லாம் பார்க்கும் போது எங்களை விட்டு நீங்கள் எல்லாம் எவ்வளவு தூரம் விலகி இருக்கிறீர்கள் என்று மட்டும் தெளிவாக தெரிகிறது ஒருவன் நம் ஊரில் பிறந்த தாலோ நம் மொழி பேசுவதலோ நம்மவன் இல்லை நம் அன்றாட பிரச்னை களை புரிந்தவன் தான் நம்மவன் ஊருலே விவசாயம் இல்ல விளைய வச்சாலும் விலை இல்ல வேற வேலை வாய்ப்பும் இல்ல எங்க ஊருல நாங்க மணல் அல்ல போறோம் எங்க ஆத்துல நாங்க மாட்டு வண்டியிலே மணல் அள்ளுனா அது மணல் திருட்டாம் ஆனால் டிப்பர் லாரியிலே அள்ளினா அது மணல் குவரியாம் இப்போ நாங்களும் திருடங்கல்யிடோம் எங்களையும் சுட போலிசை அனுப்புங்க

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog