உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Sunday, April 26, 2015

இக்பால் செல்வனின் பதிவிற்கு நான் இட்ட பதில்
///நவீன முகப்புத்தக தருமி ஒருவர் 20 கேள்விகளை முன்வைத்தாராம், அதை பச்சைத் தமிழர் ஒருவர் ஆகா நியாயமாக இருக்கின்றதே என ஈயடித்து அதில் கேட்டவரை விட ஒரு படி மேலே போய் அக் கேள்வியை எல்லா பகுத்தறிவாளர்களுக்கும் முன் வைத்தார்///

விரமணிக்கு 20 கேள்விகள் என்று கேள்வி கேட்டவர்தான் எல்லா பகுத்தறிவாளர்களுக்கும் கேள்வி கேட்டார். அவர் கேட்டதை படித்த நான் அந்த கேள்விகள் எனக்கு நியாமாக பட்டதால் அதில் ஒரு வரியும் மாற்றாமல் அப்படீயே கொடுத்து நான் சொன்னது இதுதான்.


///பலதரப்பட்ட செய்திகள் மற்றும் அதன் கோணங்களை எனது தள வாசகர்கள் அறிந்து கொள்ளும் பொருட்டே இது இங்கு அது எழுதியவரின் அனுமதியுடன்  இங்கு பதியப்படுகிறது, இதனை படிக்கும் நண்பர்கள் கண்ணியமான முறையில் கருத்து தெரிவித்தால் மட்டுமே இங்கு வெளியிடப்படும்....அப்படி முடியவில்லை என்றால் இதை படித்துவிட்டு அப்படியே நகரவும்.///

இதை நன்றாக படித்து சொல்லுங்கள் இதில் ""நான் எங்கே எல்லா பகுத்தறிவாளர்களுக்கும் "என்று சொல்லி இருக்கிறேன்


என் பதிவுகளை படித்த நீங்கள் என் பதிவின் இறுதியில்  கமெண்ட் பாக்ஸுக்கு மேல் நான் தந்திருக்கும் செய்தியை எப்போவாவது பார்த்தது உண்டா இல்லை படித்துதான் இருக்கிறீர்களா என்று எனக்கு தெரியவில்லை. அந்த செய்தி நான் பதிவு எழுத ஆரம்பத்தில் இருந்து இன்று வரை மாறாமல் அப்படியே இருக்கிறது

அதை இங்கே மீண்டும் பதிகிறேன் அதைப் படித்துவிட்டு மேலே தொடரவும்

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

இதை விட வேறு எப்படி தெளிவாக என்னைப்பற்றி சொல்லமுடியும்.

அடுத்தாக நான் பெரியாரின் பகுத்தறிவு என்று சொல்லப்படும் பெரியார் இஸத்தை நான் முழுமையாக படித்தவன் அல்ல இங்கொன்றும் அங்கொன்றுமாக படித்து அறிந்ததுதான் ஆனால் நான் ஒன்றை தவறாக புரிந்து கொண்டேன் பெரியாருக்கு பின் அவரின் இயக்கத்தை வழி நடத்துபவர்கள் எல்லாம் உண்மையான பகுத்தறிவு வாதிகள் என்றுதான் அது தப்பானது என்று தமிழச்சி என்ற பிரான்ஸில் வசிக்கும் ஒருவர் சொன்ன ஒரு செய்தியை (வால்பையன் தளத்தில்) நேற்றுதான் படித்தேன். அதில் அவர் சொல்லி இருப்பது

//
 பெரியாரை புனிதப்பிம்பம் கட்டிக் கொண்டு வர உண்மையான பெரியாரிஸ்டுகள் விரும்புவதில்லை. போலி கம்யூனிஸ்ட், போலி மார்க்ஸியம் போல் போலி பெரியாரிஸ்டுகளின் கொள்கை திரிப்பு வாதங்களை வைத்துக் கொண்டு நீங்கள் உண்மை பெரியாரிஸ்ட்டுக்களை அளக்கத் தேவையில்லை என்று நினைக்கிறேன். மேலும் அவர் கூறியிருப்பது //போலிகளை இனம் காணுங்கள் அம்பலப்படுத்துங்கள். தி.க. தலைவர் வீரமணியாகவோ அல்லது பெ.தி.க. தலைவர் கொளத்தூர் மணியாகவோ இருக்கட்டும். அவர்களில் யாரிடம் போலித்தனம் இருக்கின்றதோ கேளுங்கள் கேள்வியைக் கேளுங்கள. அதைவிட்டுவிட்டு ஏனோதானோ என்றிருக்கின்றது உங்களுடைய பதிவும் உங்களுடைய பின்னூட்டத்தில் இருக்கும் பதிலும்.

000

கருணாநீதியின் முதுகில் நடந்த அறுவை சிகிச்சையில் விரைவில் குணமடைய வேண்டி திருக்கோவிலூரைச் சேர்ந்த தி.மு.கவினர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் சிறப்பு யாகம் நடத்தி இருக்கின்றனர். அனுக்கை, விக்னேஷ்வர பூஜை, கடஸ்தாபனம் போன்ற யாக பூஜைகளையும், நீண்ட ஆயுள் இருப்பதற்காக ஏகாதசை ருத்ராஜபம் என்ற பூஜையும் நடத்தப்பட்டிருக்கிறது.

ஏற்கனவே மஞ்சள் தூண்டுக்கு மாறிவிட்ட "நாதஸ்வரம்" (கருணாநீதியை பெரியார் நாதஸ்வரம் என்றே குறிப்பிடுவார். இடத்திற்கு தகுந்தபடி ஆட்டம் போடும் குணம் கருணாநீதிக்கு) இன்னமும் பெரியாரின் கொள்கைகளோடு தன்னை அடையாளப்படுத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இந்த "யாக பூஜை" குறித்து விமர்சிக்கும் நேர்மையும் கீ.வீரமணியிடம் இருக்காது. இப்படி போலிகளை வெளியில் தேட வேண்டியதில்லை. எல்லாம் பெரியாரியத்திற்குள்ளே இருக்கிறது. அதை எதிர்ப்பது தானே நம் கடமை. ///

படிக்க படிக்கதான் மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள முடிகிறது..

இன்னும் நிறைய என் மனதில் பட்டதை சொல்ல விரும்புகிறேன். மீண்டும் வருகிறேன். நான் என் பதிவை இட்டுவிட்டு அதற்கு வந்த சில கருத்துகளுக்கு பதில் சொல்லிவிட்டு அதில் வந்த உங்களின் கருத்துக்கும் பதில் சொல்லிவிட்டுதான் சென்றேன் நான் செய்யும் தொழில் சேல்ஸ் என்பதால் அதுவும் வார இறுதிநாட்களில்தான் அதிக வியாபாரம் செய்யமுடியும் என்பதால் தான் உடனே பதில் சொல்ல வரமுடியவில்லை

எனது பதிவிற்கு பதில் பதிவு போட்டு அதில்  "உங்கள் வாதங்களை பண்பாடனா முறையில் எடுத்து வைத்தற்கு மிகவும் நன்றி'

நான் இந்த பதிவை இடாமல் இருந்து இருந்தால் இந்த பதிவு ஒரு குறிப்பிட்ட கம்யூனிட்டிகிட்டே மட்டும் சுற்றி வந்து இருக்கும் அதை  நான் இட்டதால் உங்களை போல உள்ளவர்களிடம் இருந்து பல வாதங்கள் வெளி வந்து பலரையும் சிந்திக்க வைத்திருக்குமே. ஏன் நம்ம தருமி சாரே உங்கள் பதிவை படித்து விட்டு அதை அவரின் தளத்தில் அனுமதியிட கேட்டு இருக்கிறரே அது இன்னும் பலரை சென்று அடைய வாய்ப்புக்கள் இருக்கிறேது அது நல்லதுதானே...

எனது அடுத்த பதிவு போலி பகுத்தறிவு வாதிகளை கிண்டல் செய்வதாக இருக்கும் அதை எதிர்பதிவாக எடுத்து கொள்ள வேண்டாம்


இன்னும் நிறைய என் மனதில் பட்டதை சொல்ல விரும்புகிறேன். மீண்டும் வருகிறேன் ஆ ஒன்று சொல்ல மறந்துவிட்டேன் நான் அம்மாவின் முந்தானையையோ அல்லது மனைவியின் முந்தானையை பிடித்து சுற்றும் அப்பாவி அல்ல

என்றும் அன்புடன் மட்டுமல்ல பண்புடன்
மதுரைத்தமிழன்

பிற் சேர்க்கை :

எனது முந்தையை பதிவை படித்துவிட்டும் இந்த பதிலை படித்துவிட்டும் மிக பொறுமையாக பதில் அளித்த இக்பால் செல்வன் அவர்களுக்கு மிக நன்றி. நான் போடும் பதிவுகளுக்கு ஆதரவு கருத்தை மட்டும் எதிர்பார்க்கவில்லை எதிர் கருத்துக்களையும்தான் எதிர்பார்த்தேன். நான் கேட்டு கொண்டது எல்லாம் ஆத்திரப்படாமல் கண்ணியமான முறையில் பதில் தாருங்கள் என்றுதான் அதனை புரிந்து கொண்டு பதில் பதிவு மற்றும் கருத்துகள் சொன்ன இக்பால் செல்வனுக்கும் பதிவர் மைதிலி அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.  அதுமட்டுமல்ல ஆத்திரம் புத்திக்கு கேடு என்று சொல்லவும் தயக்கமில்லை.

இன்று பதிவர் ஜாக்கிசேகரனின் பதிவை பார்த்தேன் அதில் அவர் இப்படி ஒரு தகவலை கொடுத்து இருந்தார் அதில் நான் ரகுவீரன் கேட்ட கேள்விகள் என்று பதிந்த அதே கேள்விகளை  ஐயப்ப பாடல்கள் புகழ் வீரமணி…. திக தலைவர் வீரமணிக்கு தனது முகநூல் பக்கத்தில்  சில கேள்விகளை முன் வைக்கின்றார்….அவைகள்  கீழே..வீரமணிக்கு 20 கேள்விகள் - வீரமணிக்கு மட்டுமல்ல எல்லா பகுத்தறிவுக்கும்தான். என்று இருக்கிறது. எனது சந்தேகம் வீரமணி எழுதியதை ரகுவீரன் என்பவர் காப்பி அடித்து இருக்கிறாரா அல்லது ரகுவீரன் பேஸ்புக்கில் பதிந்ததை வீரமணி ஷேர் செய்து இருக்கிறாரா என்பதுதான். ரகுவீரன் பதிவு மிக அதிகளவுகளில் ஷேர் செய்யப்பட்டு இருக்கிறது அதுமட்டுமல்ல அவர் பதிவு இட்ட அடுத்த நாட்களில் 30 ஆயிரட்டிற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்த்து இருக்கிறார்கள். அதனால் இது ரகுவீரன் எழுதியதாக இருக்குமோ என்றுதான் நான் நினைக்கிறேன் இது ஒரு தகவலுக்காக மட்டும் இங்கே பகிருகிறேன்

 

டிஸ்கி : கருத்து சொல்கிறேன் என்ற பெயரில் யாரும் அவர்கள் நண்பர்களாக இருந்தாலும் ஆத்திரத்தில் வாந்தி எடுக்க வேண்டாம்

No comments :

Post a Comment

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog