உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Sunday, March 8, 2015

மகளிர் தினம் இப்படிதான் கொண்டாடப்படுகிறதோ?மகளிர் தினம் இப்படிதான் கொண்டாடப்படுகிறதோ?


ஏய் செல்லக்குட்டி எங்கடி இருக்கே?
என்னங்க நான் கிச்சன்லதான் இருக்கேன்.
ஹேய் செல்லம் கொஞ்சம் கண்ணை மூடேன்.
என்னங்க குழந்தை இல்லாத வீட்டில் கிழவன் துள்ளிக் குதிக்கிறது போல இந்த காலையில் என்ன ஆச்சு உங்களுக்கு?
ஹேய் கண்ணை மூடுன்னு சொன்னா கண்ணை மூடேன்.
சரிங்க நான் கண்னை மூடிட்டேன்
சில நொடிகளுக்கு பிறகு ஹேப்பி மகளிர்தினம்டி இந்தா உனக்காக நான்  வாங்கிய பூங்கொத்து ..
என்னங்க் உங்களுக்கு என்ன ஆச்சு இன்று என்று இல்லாத வழக்கமாக?
இல்லேடி நான் பேஸ்புக்கம் பக்கம் போயிருந்தேன் ஆளுக்கு ஆள் மகளிர்தினம் மகளிர்தினம் என்று சொல்லி வாழ்த்து தெரிவித்து பதிவுகள் போட்ட்டு இருந்தாங்க அதை படிச்ச பாதிப்புதானடி
சரி சரி வழ வழன்னு பேசாம சூப்பரா ஒரு காப்பி போடு...அது வரை இன்று என்ன நீயூஸ் என்று பார்த்துவிடுகிறேன்சில நிமிஷங்களுக்கு பிறகு இந்தாங்க  என்று மனைவி தந்த காப்பியை வாங்கி அருந்தி கொண்டே ஏய் அப்படியே சும்மா நிக்கமா சூப்பரா காலை டிபன் பண்ணுடி இன்றைக்கு மகளிர்தினம்டி அதனால கொஞ்சம் டிபன் நல்லா இருக்கட்டுமடி

நீ டிபன் பண்னுறதுக்குள்ள நான் குளிச்சுட்டு வந்துடுறேன்.

அரைமணிநேரம் கழித்து கிச்சனுக்கு வந்து என்னடிம்மா இன்று மகளிர் தினம் அதனால கொஞ்சம் ஸ்பெஷலா பண்ணு என்றால் இட்லி பண்ணி தேங்காய் சட்னி மட்டும் பண்ணி இருக்கிறே நான் கொஞ்சம் வெயிட் பண்ணுறேன் அதுக்குள்ள கொஞ்சம் தக்காளி சட்னியும் கொத்தமல்லி சட்டினியும் பண்ணிடு


பத்து நிமிடம் கழித்து சாப்பிட்டவாரே என்னம்மா நம்ம நண்பர் ப்ளாக் ஸ்பாட்ல ஏதோ ப்ராப்ளமாம் நான் போய் ஒரு நடை பாத்துட்டு வந்துடுறேன் அதுக்குள்ள நீ என்ன பண்ணுற வீட்டை எல்லாம் நல்லா சுத்தம் பண்ணி வைச்சுடு இன்று ஈவினிங்க நம்ம நண்பர்களை எல்லாம் கூப்பிட்டு மகளிர்தினத்தை சிறப்பாக கொண்டாடலாம் சரியா? அப்புறம் சொல்ல மறந்துட்டேன் வீட்டை சுத்தம் பண்ணிட்டு அப்படியே என் துணியை எல்லாம் வாஷிங்க் மிஷினில் போட்டு துவைத்து வைச்சிட்டு மத்தியானம் நல்ல உப்பு உறைப்பா நல்லா சமைச்சு வைச்சுடு


மதியம் ஒரு மணி அளவில் வீட்டிற்கு வந்து சாப்பாடை சாப்பிட்டவாரே என்னம்மா எனக்கு கொஞ்சம் டையர்டா இருக்கு அதுனால நீ என்ன பண்ணுற நான் ரெஸ்ட் எடுக்கிற டைத்துல கடைக்கு போய் இரவு விருந்திற்காக சமைப்பதற்கு தேவையானதை வாங்கிட்டு வந்து விடு.. ஒகே வா....


நாலு மணியளவில் தூங்கி எழுந்திரிச்சு வந்து என்னம்மா கொஞ்சம் தலை வலிக்கிற மாதிரி இருக்கு அதனால் நல்லா இஞ்சி போட்டு ஒரு டீ சூடா கொடும்மா

டீயை குடித்தாவரே என்னம்ம நாம் இந்த வருஷம் மகளிர் தினத்தை மிக சிறப்பாக கொண்டாடனும் அதனால ஒரு நாலு  வகை நல்ல உணவை சீக்கிரம் பண்ணிடும்மா அதன் பின் குளிச்சுட்டு ரெடியா இரு 6 அல்லது ஏழு மணிக்கு எல்லாம் நண்பர்கள் எல்லோரும் குடும்பத்தோட வந்துடுவார்கள்

நீ இதையெல்லாம் பண்ணி முடிப்பதற்குள் நான் கடைக்கு போய் நண்பர்களுக்கு வேண்டிய சரக்கை எல்லாம் வாங்கிட்டு அப்படியே  குழந்தைகள் குடிப்பத்ற்கு சோடா மற்றும் ஜுஸ் வாங்கிட்டு வந்துடுறேன்

ஆறு அரை மணிக்கு வீட்டுக்குள் நுழைந்தவாரே என்னம்ம எல்லாம் ரெடி பண்ணிட்டியா.. என்ன பண்ணிகிட்டு இருக்கியா இன்னும்மா என்னம்மா உனக்கு சுறு சுறுப்பே பாத்தாது அப்படியே நீ உங்கம்மாவை உரிச்சு வைச்சுருக்கிற.... சரி சரி நீ சிக்கிறமா பண்ணு அதுக்குள்ள ஒரு குட்டி குளியல் போட்டு வந்துடுறேன் அதன் பிறகு உனக்கு என்ன உதவி வேண்டுமானால் தயங்காமல் கேளு நான் கண்டிப்பாக செய்யுறேன்.


குளித்துவிட்டு டிரெஸ் பண்ணி வரும் போது நண்பர்கள் அவர்களின் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வரத் தொடங்கினார்கள் அவர்களை வரவேற்று விட்டு நண்பர்களின் மனைவிகளை கிச்சனுக்கு அனுப்பிவிட்டு நண்பர்களுக்கு சரக்கை ஊற்றி கொடுத்துவிட்டு எங்கள் அரட்டையை ஆரம்பித்தோம்

அந்த அரட்டை இரவு 12 மணி வரை தொடர்ந்து இறுதியில் உணவை சாப்பிட்டுவிட்டு நண்பர்கள் போகத் தொடங்கினார்கள். அவர்கள் அனைவரும் போன பிறகு மனைவியிடம் என்னம்ம உனக்கு சந்தோஷம்தான் மகளிர்தினத்தை இவ்வளவு சிறப்பாக கொண்டாடியதற்கு என்று சொல்லியாவாறே மேலும் உன் சந்தோஷம்தான் என் சந்தோஷம் என்று சொல்லிவிட்டு..... என்னம்மா நண்பர்களுடன் சரக்கு அடித்ததால் கொஞ்சம் டையர்டா இருக்கு அதனால நான் தூங்க போறேன் நீ கிச்சனை எல்லாம் சுத்தம் பண்ணிட்டு நிம்மதியா தூங்கும்மா ஒகேவா... என்றவாறே ஹேப்பி மகளிர்தினம் என்று சொல்லியாவாறே தூங்க சென்றேன்....


அன்புடன்
மதுரைத்தமிழன்

டேய் பெண்கள்!!!???...வாழ்த்துக்கள் http://avargal-unmaigal.blogspot.com/2014/03/womens-day-2014.html

அது என்ன டேய் பெண்கள்...வாழ்த்துக்கள். என்று கேட்கீறீங்களா? அது ஒன்றுமில்லைங்க.. எதையும் சற்று மாற்றி யோசிக்கும் வழக்கமுள்ள மதுரைத்தமிழன் Woman's Day வாழ்த்தை இந்த கால தமிழ் மொழிப் பெயர்ப்பு இலக்கணப்படி மொழி பெயர்த்துள்ளான் அவ்வளவுதான்

ஏன்டா கீழ்பாக்கத்தில் உள்ளவனுக்கு எல்லாம் கூகுலில் இலவச வலைத்தள இடம் கிடைத்ததால் எது வேணும் ஆனாலும் எழுதலாம் & கிறுக்கலாம் என்று நினைத்து இந்த மதுரைத்தமிழன் கிறுக்குகிறான் என்று உங்கள் மைண்ட் வாய்ஸ் சொல்லுமே...

இப்படி நான் எழுதவதற்கு காரணம் நீங்களும் என் மனைவியும்தான் காரணம்..
என்ன ஒன்றும் புரியவில்லையா?

அது ஒன்றுமில்லைங்க. நேற்று நான் நெட்டிற்கு வந்த உடன் நம் சகபதிவர்கள் வரிந்து கட்டி மகளிர்தின பதிவுகளை சும்மா சுனாமி வந்தது போல சும்மா  எழுதி தள்ளியிருந்தாங்க...

அதை படித்து சிரியோ சிரி என்று சிரித்தேன்.

அதில் என்ன சிரிப்பு என்னவென்றால் "பொண்டாட்டிகிட்ட பூரிக்கட்டையால் அடி வாங்காதவன் எல்லாம் மகளிர் தின பதிவு & வாழ்த்துக்கள் போட்டு இருந்தாங்க"

அதையெல்லாம் படித்துட்டு இன்று காலையில்  என் மனைவி தூங்கி எழுந்தவுடன் கையில் காபியை கொடுத்துவிட்டு  அவளுக்கு Women's Day வாழ்த்து என்றுதான் சொன்னேன். உடனே குடிக்கும் காப்பியை அப்படியே வைத்துவிட்டு வேகமாக எழுந்து வந்தாள் நானும் அப்பாவியாக ஆஹா அவள் நம்மை அணைத்து முத்தம் தரப் போகிறாள் என்று அப்பாவியாக நினைத்தேன். அந்த நினைப்பு கூட அரைநொடிதான் நீடித்தது காரணம் அவள் கையில் எப்போதும் ஒழித்து வைத்திருப்பாள் ஆனால் அவள் வைத்து இருக்கிறாளா இல்லையா என்பது மட்டும் என் கண்ணுக்கு தெரியவே தெரியாது என்ன  மேஜிக் பண்ணி மறைட்து வைத்திருக்கிறால் என்பது அந்த ஆண்டவனுக்கு கூட தெரியாதுங்க் )வைத்திருந்த பூரிக்கட்டையால் மொத்து மொத்து என்று அடி கிடைத்த பின் வேறு எதை நாம் நினைக்க முடியுமுங்க...

நான் அடிக்கு பயந்து கட்டிலுக்கு அடியில்  ஒதுங்கிய நான் அங்கிருந்து தைரியமாக அவளை நோக்கி கேட்டேன் அப்படி என்ன நான் தப்பா சொல்லிட்டேன் எதுக்கு என்னை இப்படி அடிக்குறாய் என்று  அழுதவாரே கேட்டேன்

அதற்கு அவள்  இந்த நாள் மட்டுமல்ல எல்லா நாளும் வூமன்ஸ் (Women's Day) டேய்தான் நம்மவிட்டுல...அப்படி இருக்கும் போது அதை மறந்து நீ என்னமோ இன்று மட்டுதான் Women's Day என்கிற மாதிரி வாழ்த்து சொல்லுற என்று கேட்கிறாள்..


இப்ப பாத்தீங்களா நான் ஏன் கீழ்பாக்க கேஸா மாறிட்டேன் என்று?

எல்லாம் உங்கள் பதிவுகளை படித்ததால் வந்த வினை.... ஹும்ம்ம்ம்

சரி இதுவரை நீங்கள் படித்தது என் நிலமை... என் பக்கத்துவீட்டுகாரர் நிலமை அதைவிட மோசம்..

அந்த கதையை கேளுங்க..

 என் வீட்டு கதவு தட்டும் சத்தம் கேட்டு இந்த இரவு நேரத்தில் யார் கதைவை தட்டுக்கிறார் என்று பார்த்தால் அது என் பக்கத்துவீட்டுக்காரர் . கதவை திறந்ததும் அவர் சோகமான முகத்தை பார்த்து என்னங்க என்னாச்சு என்ரு கேட்ட்டேன்.

அதற்கு அவர் முதலில் ஒரு க்ளாஸ் சரக்கு தாங்க அதை குடித்துவிட்டுதான் என் சோக கதையை சொல்லுகிறேன் என்றார்.

நானும் சரி என்று சொல்லி அவருக்கு சரக்கை ஊற்றி கொடுத்துவிட்டு என்னாச்சு என்று கேட்டேன்

அதற்கு அவர் இன்று Women's Day அல்லவா அதனால் வேலை முடிந்து வீட்டுக்கு வரும் போது மனைவிக்கு பூங்கொத்து ஒன்றை வாங்கி வந்து  என் வீட்டு கதவை தட்டிடேன். என் மனைவி வந்து கதவை திறந்தாள். அவளுக்கு Women's Day வாழ்த்தை சொல்லி அந்த பூங்கொத்தை கொடுத்து அவளை அப்படியே தூக்கி படுக்கை அறைக்குள் தூக்கி சென்று படுக்கையில் அவளை படுக்க போட்டு அவளிடம் சொன்னனேன். இன்று Women's Day என்பதால் உன்னை மகிழ்ச்சியில் கடலில் ஆழ்த்த போகிறேன் என்று சொன்னேன்.

அதை கேட்ட அவளும் மகிழ்சியாக துள்ளி குதித்து என் அருகே வந்து என் கழுத்தை பிடித்து இழுத்து வீட்டிற்கு வெளியே தள்ளிவிட்டு காலையில் வாங்க இதுதான் என்னை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தும் என்று சொல்லி கதவை தாளிட்டுவிட்டாள் என்று சொல்லி அவர் கண்ணிர் விட்டு அழுதார். அப்போது என் மைண்ட் வாய்ஸ் சொல்லியது இதுதான் நம்ம நிலையும் இதுதான் ஆனால் அவர் வெளியே சொல்லிவிட்டார் நாம சொல்லவில்லை என்று நினைத்து சிரித்தாவாறு இதுக்கெல்லாமா வருத்தப்படுவது சரிவிடுங்க நீங்க இங்கேயே தங்கிக்குங்க என்று சொல்லி நானும் ஒரு க்ளாஸ் சரக்கை அடித்துவிட்டு அடுத்த க்ளாஸுக்கு போவதற்கு முன்னாள் ஒரு நிமிஷம் இருங்க நான் ஒரு பதிவை போட்டுவிட்டு வந்துவிடுகிறேன் என்று சொல்லி இந்த பதிவை வெளியிடுகிறேன்

உலகெங்கும் மகளிர்தினத்தில் இதே நிலமைதான் எல்லோருக்கும் நிகழ்கிறது போல....ஹீ.ஹீ என்ன நாம இப்படி சொல்லுறோம் மற்றவங்க சொல்லாம வேஷம் போடுறாங்க அவ்வளவுதான்


அன்புடன்
மதுரைத்தமிழன்
பெண்களுக்கென தனியே ஒரு நாள் ஏன் !
பெண்களை பார்த்து அசந்து போகும் ஆண்கள்( மகளிர்தினம் ) http://avargal-unmaigal.blogspot.com/2012/03/blog-post_08.html

பெண் குழந்தையை எதிர்பார்த்த எனக்கு ,புதிதாய்ப் பிறந்த எனது குழந்தையை நர்ஸ் கொடுத்தபோது,  ஆண் குழந்தையா ஆண் குழந்தையா" என்று கத்தியபடி. நான் சோகத்தில் அழ ஆரம்பித்தேன். உடனே  நர்ஸ் அதட்டினார்: "முட்டாளே! அது பெண் குழந்தை. முதலில் என் விரலை விடு"

அப்புறம்தான் நான் புரிந்து கொண்டேன் என் குழந்தை பெண் குழந்தை என்பது. அதில் இருந்து இன்று வரை என் சந்தோஷத்திற்கு அளவே இல்லை.. ஒகே எனது புராணத்தை பாடியது போதும் என்று இன்று மகளிர் தினம் என்பதால் அதை பற்றி சிறிது பார்ப்போம்.உலகிலுள்ள அனைத்து  தாய்மார்கள். சகோதரிகள் தோழியர்கள்.ஆசிரியைகள், உடன் வேலை பார்க்கும் பெண் ஊழியர்கள் அனைவருக்கும் என் அன்பார்ந்தஉலக மகளிர்தின நல்வாழ்த்துக்கள்என்ன மனைவியை மறந்து விட்டேனே என்று நினக்கிறிர்களா? அதுதான் இல்லை.மனைவியை மறக்கவில்லை ஆனால் "மனைவிகள்" என்று சொல்ல முடியாதே அதனால்தான் மேலே கூறவில்லை

மனைவி என்பவள் மிக ஸ்பெஷ்லானவள் (டேய் யாராது மனைவியை பிசாசு என்பவன் உஷ்ஷ்ஷ்....) என் மனைவி ஒரு செல்ல பிசாசு....(ஆகா..ஆகா...ஆகா இப்படி ஒரு செல்லம் என்கிற வார்தையை யூஸ் பண்ணி தப்பிக்கிறானா என்று சத்தம் போடாதீர்கள் மக்கா அவள் காதில் விழுந்தால் என் கன்னத்தில் அவள் ஆட்டோகிராப் போட்டுவிடுவாள். ஆட்டோகிராப் போடுவதில்மட்டும் அவள் கைநாட்டு) ஹீ..ஹீ
பிறந்த போது தாயின் உதவியோடும்,வளரும் போது சகோதரியின் உதவியோடும்,படிக்கும் போது ஆசிரியையின் உதவியோடும்
வாழும் போது மனைவியின் உதவியோடும்,மனகஷ்டப்படும் போது மகளின் உதவியோடும்,முதியவனாக ஆகும் போது பேத்தியின் உதவியோடும் இப்படி ஒவ்வோரு நாளும் அவர்களின் உதவியோடு வாழுகிறோம் ஆண்களாகிய நாம் . இப்படி எங்கும் எதிலும் எல்லாமே, எல்லா நாளுமே என்று எல்லாமே அவளாகிவிட்ட  பிறகு ஏன் இந்தநாள்? அவளுக்கென தனியே ஒரு நாள் என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம்!


அவர்களைப் பற்றி ஒரு நாளாவது நாம் நினைக்கிறோமோ இல்லையோ அட்லீஸ்ட் இந்த நாளிளாவது அவர்களை மனதார நினைத்து அவர்களுக்கு நன்றி செலுத்துவோம் .அதுமட்டுமல்லாமல்  அவர்களின் நலனுக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த மகளிர் தினத்தில் சிந்தித்து அதற்கான செயல்பாடுகளில் ஈடுபடத்தான் இந்த மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது என்பதை நினைவில் கொள்வோம்.

எனது முந்தைய பதிவான  இந்த கிழ்கண்ட பதிவை பெண்கள்  மட்டும் கண்டிப்பாக படிக்க வேண்டுகிறேன். ஆண்கள் மட்டும்  இந்த பதிவை வந்து படிக்க வேண்டுகிறேன் http://avargal-unmaigal.blogspot.com/2010/10/blog-post.html
The beauty of a woman
Is not in the clothes she wears,
The figure that she carries,
Or the way she combs her hair.

The beauty of a woman must be seen from in her eyes,
Because that is the doorway to her heart,
The place where love resides.
The beauty of a woman is not in a facial mole
But true beauty in a woman is reflected in her soul.

It is the caring that she lovingly gives,
The passion that she shows,
And the beauty of a woman
With passing years only grows!

 written by Teresa Mahieu

மகளிர்மட்டும்.........மகளிர்தினம் http://avargal-unmaigal.blogspot.com/2013/03/to-all-wonderful-women.html
 “To all the wonderful women”.

இன்று மகளிர் தினமாம்.. அடி ஆத்தி மகளிர் பற்றி பதிவு போடாட்டி பதிவுலகம் என்னை ஏற்றுக் கொள்ளாது என்பதாலும் மற்றும் ஆத்தா வந்து கண்ணை குத்தும் அதனால நான் ஒழுங்கா மகளிர் தின பதிவு ஒன்றை போடுவதுதான் நல்லது. அதன் விளைவே இந்த பதிவு


அனைத்து பெண்களுக்கும் எனது மகளிர் தின வாழ்த்துக்கள்! “To all the wonderful women”.

அன்புடன்,
மதுரைத்தமிழன்


12 comments :

 1. மிக்க நன்றி தமிழா! வாழ்த்துக்களுக்கு! பதிவு சூப்பர்! பெண்ணைப் பற்றிய வார்த்தைகள் அருமை!

  உங்கள் மனைவி சொன்னது சரிதான் தமிழா...பூரிக்கட்டை அடியைப் பற்றி அல்ல! எல்லா தினமுமே பெண்கள் தினம்தான்.

  ஏன்? எல்லாம் சரிதான்....இன்றும் இந்த உலகின் ஏதோ ஒரு மூலையில், ஏன் மூலைக்குப் போக வேண்டும்? இந்தியாவிலேயே அதுவும் தமிழ் நாட்டிலேயே ஏதேனும் ஒரு பெண் கற்பழிக்கப்படாமல் இருக்கிறாளா? மனைவியாக இருந்தாலும் சரி! வயதான மூதாட்டிகள் முதியோர் இல்லத்தில் சேர்க்கப்படாமல் இருந்தால் சரி! வீட்டிலேயே அம்மாவையும், மாமியாரையும், மருமகளையும், மனைவியையும், மகளையும் கீழ்தரமாக நடத்தாமல் இருந்தால் சரி! பெண்ணிற்கு பெண்ணே எதிரியாகாமல், பொறாமை கொள்ளாமல், வஞ்சனை செய்யாமல் இருந்தால் சரி!

  பெண்கள் தின வாழ்த்துக்கள்!?
  கீதா.

  ReplyDelete
 2. இன்று பிறந்த/பிறக்கும் பெண் குழந்தைகளை இனிதாய் வரவேற்க முடியவில்லை! எத்தனைக் குழந்தைகள் குப்பைத் தொட்டிக்கும், தெருவிற்கும், பிச்சை எடுக்கவும் , சிவப்பு விளக்குப் பகுதிக்கும், பாலியல் கொடுமைக்கும் வர இருக்கின்றதோ....

  கீதா

  ReplyDelete
  Replies
  1. சரியாகச் சொன்னீர்கள்.

   Delete
 3. மகளிர் தின சிறப்பு பதிவு வழக்கத்துக்கு மாறாக கொஞ்சம் பெருசா இருந்தாலும் சூப்பரோ சூப்பர்.
  வித்தியாசமான பதிவமைப்பு . சிரிக்க ரசிக்க சிந்திக்கவும் வைத்த மதுரைத் தமிழனுக்கு பாராட்டுக்கள்.
  நான் இது பற்றிபதிவு எழுதவில்லை என்றாலும் மகளிற்கு வாழ்த்து சொல்லிவிடுகிறேன்

  ReplyDelete
 4. சிந்திக்க வேண்டிய நாளில்
  சிந்திக்க வைக்கும் பதிவுகள்

  ReplyDelete
 5. செம நக்கல்..
  இதயத்தின் வாசல் அருமை... தோழர்..
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. வெறும் வாழ்த்துக்களினால் மட்டும் என்ன வந்துவிடப்போகிறது. பெண்களுக்கு ?
  முடிந்தால் தென்றல் பக்கமும் வந்து போங்க.

  ReplyDelete
 7. சரி,சரி இப்படியெல்லாம் போட்டு மனசைத் தேத்திக்குங்க...
  ஆமா அன்னைக்கு எப்பவும் வாங்குற அடியைக் காட்டிலும் ஸ்பெஷலா வாங்குனீங்களாம்...

  ReplyDelete
 8. சமூக பிரச்சினைகளை தைரியமாக அலசும் அநீதிக்கெதிரா போராடும் அனைத்து பெண்களுக்கும் எல்லா நாளும் மகளிர்தினமே ..எங்க வீட்ல தினமும் மகளிர் தினம்தான் :) உங்க வீட்லயும்தானே :)

  ReplyDelete
 9. இந்த குழந்தை விஷயத்தில் நிறைய பெண்களே பெண் குழந்தைகளுக்கு எதிரி .அந்நிலை மாறணும்

  ReplyDelete
 10. என்னாதூஉ மகளிர் தினமெனில் மனைவிக்கு றெஸ்ட் கொடுத்து , நீங்க வேலை செய்திருக்கோணும் கர்ர்ர்ர், நாள் முழுக்க இப்பூடி வேலை வாங்கிட்டீங்களே இது ஞாயமா??... இந்த மகளிர் தினம் எதுக்காக கொண்டாடுறோம் என டவுட்டாவே இருக்கெனக்கு...
  என்னதான் தலை கீழா நிண்டாலும்,,, அனைத்து வீடுகளிலும் மதுரை மீனாட்சி தான் ஆட்சி:).

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog