Monday, March 9, 2015




இன்றைய உலகம்.....இப்படிதான் உதவிக் கொண்டிருக்கிறது

சுதந்திரமானவனாக இரு. எவரிடமிருந்தும் எதையும் எதிர்பார்க்காதே. நான் உறுதியாகச் சொல்வேன். உனது கடந்து கால வாழ்க்கையை நீ பின்னோக்கித் திரும்பிப் பார்ப்பாயானால், நீ வீணாக எப்போதும் மற்றவர்களிடமிருந்து உதவியைப்பெற முயற்சி செய்த்தையும் அப்படி எதுவும் வராமற் போனதையும்தான் காண்பாய். வந்த உதவிகள் எல்லாம் உனக்குள்ளிருந்தவையாகத்தான் இருக்கும்.

- விவேகானந்தர் -

இன்றைய உலகம்.....இப்படிதான் உதவிக் கொண்டிருக்கிறது





ஆபத்தில் சிக்கி இருப்பவனை காப்பாற்ற முயல்வதைவிட அவன் ஆபத்தில் இருக்கிறான் என்று படம் பிடித்து அதை சமுக தளங்களில் வெளியிட்டு அவனுக்கு உதவுங்கள் என்று சொல்லி சமுக கடமை ஆற்றுவதே இன்றைய மக்கள் செய்யும் உதவி .அந்த செய்தியை பார்த்தவனும் தானும் அந்த சமுகப் பிரச்சனைகளில், தன் கடமையை செய்வதாக நினைத்து அதை ரீஷேர் செய்துவிட்டு தன் வேலையை பார்க்க சென்றுவிடுகிறான்.


தாகம் எடுப்பவனுக்கு சமுக வலைத்தளத்தில் ஒரு பாட்டில் படத்தை போட்டு அதை எடுத்து குடித்துக்கோ என்று கூறுவது போலதான் இருக்கிறது சமுக வலைதளம் மூலம் செய்யும் உதவிகள் ( சில பேர் இதற்கு விதிவிலக்கு.. )

கோடி கோடியாய் மனிதர்கள்  பெருகி கொண்டே போனாலும் அதற்கு ஏற்ப  மனிதாபிமானம் கூடுவது இல்லாமல் போய்விட்டது. இணைய உறவுகள் பெருகி கொண்டே போகலாம் ஆனால் இதயங்களால் ஏற்படும் நட்புக்கள் அறிதாகி ஒரு உதவும் மனப்பான்மை இல்லாமல் சூய நலம்தான் அதிகமாகி கொண்டிருக்கிறது

சமுக தளங்களில் கருத்துக்களை பதிவதன் மூலம் சமுகத்தை மாற்ற முடியாது. பள்ளிகூடத்திலும் வீட்டிலும் குழந்தைகளுக்கு நல்ல கருத்து என்ற விதைகளை நீதி போதனை மூலம் விதைத்தால் மட்டும் இனி வருங்காலங்களில் மாற்றம் ஏற்படுத்த முடியம்.


அன்புடன்
மதுரைத்தமிழன்



9 comments:

  1. தங்களின் கருத்துக்களுக்கு நான் உடன்படுகிறேன். இளையசமுதாயத்திடம் முயல்கிறேன், மனிதாபிமான சிந்தனை வளர, நன்றி.

    ReplyDelete
  2. நன்றாகவே சொன்னீர்கள். பசியைப் பற்றியும் பட்டினியைப் பற்றியும் மேடையில் பேசிவிட்டு, கீழே வந்து ”நான் நன்றாக பேசினேனா?” என்று அபிப்பிராயம் கேட்கும் புளியேப்பக்கார ஆட்கள் நிறைந்த உலகம் இது.
    த.ம.1

    ReplyDelete
  3. நல்ல கருத்து தமிழா. பள்ளிக் கூடங்களில் முன்பெல்லாம் நல்லொழுக்க வகுப்புகள் இருந்தன இப்போதெல்லாம் அப்படிப்பட்ட வகுப்புகள் இல்லை. வீடுகளிலும் டிவி ஷோக்கள் ஆக்ரமித்துள்ளன, சாப்பாடு, பேசுதல் கூட மறக்கும்/புறம் தள்ளும் அளவிற்கு. தனித் தனி தீவாய் வாழும் நிலை...இனி வரும் எதிர்கால சந்ததியினருக்கு மிக மிக அவசியமாகின்றது நல்ல நீதிகளும், போதனைகளும் அதுவும் கருவிலிருந்தே.....

    ReplyDelete
  4. இப்போதெல்லாம் சாதாரண பேருந்தில் கூட ஒரு வயதானவர்களுக்கு இடம் எழுந்து கொடுக்க மாட்டேன்கிறாங்க....என்ன சொல்வது!!!

    மலர்

    ReplyDelete
  5. உண்மைதான் நண்பரே
    ஆனால் பள்ளிக்கூடங்களில் ஏது நீதி போதனை வகுப்பு
    அப்படியே வகுப்பிருந்தாலும் ஏது நேரம்
    தேர்வு தேர்வு
    தேர்ச்சி விழுக்காடு என அதற்கே
    நேரம் போதவில்லையே
    கல்வித் துறையில் ஓர் மறுமலர்ச்சி தேவை நண்பரே
    தம 2

    ReplyDelete
  6. சரியா சொன்னீங்க.... ஷேர் செய்துவிட்டு நம்முடைய வேலையைப் பார்க்கப் போய்விடுகிறோம்... வருந்தத்தக்க உண்மை...

    ReplyDelete
  7. டவுன் பஸ்ஸில் பெண்கள் இருக்கையில், ஆண்கள் இருக்கையில் இடம் இருந்தாலும், அதில் இட்காராமல், பெண்கள் இருக்கையில் உட்கார்ந்து கொண்டு ஒரு பார்வை பார் ப் பார்களே, அவர்களை நடத்துனர்களும் ஒன்றும் சொல்லமாட்டார்கள்!
    இவர்கள் அல்லாம்என்ன ஜன்மம்??

    ReplyDelete
  8. சரியாச் சொல்லியிருக்கீங்க...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.