உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Monday, March 30, 2015

துண்டு பேப்பர் 1: வடிவேலுக்கு போட்டியாக களம் இறங்கிய ஸ்டாலின்
நான் பதிவு எழுதுவதை சிறிது காலம் நிறுத்தி வைக்கலாம் என்று முடிவு செய்தாலும் நம்ம தலைவர்கள் ஏதாவது சொல்லி என்னை எழுத வைத்துவிடுகிறார்கள்.

தமிழகத்தில் இருந்தாலும் நாம் நினைப்பதை  நக்கலாக யாரிடமாவது பகிர்ந்து கொள்ளலாம் ஆனால் மேலை நாடுகளில் வசிக்கும் போது நம்மால் அப்படி செய்ய முடிவதில்லை அதற்கு வடிகாலகத்தான் இந்த வலைதளமும் பேஸ்புக் டிவிட்டர் போன்ற சமுக தளங்களும் இருக்கின்றன.


நான் நாளிதழில் சில நாட்களுக்கு முன்பு படித்த செய்தியை ஒட்டிதான் இந்த படப் பதிவு. இதற்கு நான் வைத்த பெயர துண்டு பேப்பர். சின்ன சின்ன நக்கல் நையாண்டி செய்திகளை இந்த பேப்பர் வடிவில் தருகிறேன். பிடித்தால் படித்து ரசித்து உங்களுக்கு நேரம் இருந்தால் கருத்திடுங்கள்.


சென்னை : 27 :நேற்றைய செய்தி
சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர், நேற்று துவங்கியது; காலை 10:00 மணிக்கு, 'முதல்வர் பட்ஜெட் தாக்கல் செய்வார்' என, சபாநாயகர் தனபால் அறிவித்தார். உடனடியாக முதல்வர் பன்னீர்செல்வம், பட்ஜெட் உரையை வாசிக்க துவங்கினார்; அப்போது, தி.மு.க., சட்டசபைத் தலைவர் ஸ்டாலின் பேச அனுமதிக்கும்படி கூறினார்; அதற்கு சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை. அதை கண்டித்து, ஸ்டாலின் தலைமையில், தி.மு.க.,வினர் வெளிநடப்பு செய்தனர்.
நாளைய(வருங்கால) செய்தி
சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர்,  துவங்கியது; காலை 10:00 மணிக்கு, 'முதல்வர் பன்னீர்செல்வம் தனது சீட்டில் அமர்ந்தார் . அப்போது, தி.மு.க., சட்டசபைத் தலைவர் ஸ்டாலின் தன்னை அந்த சீட்டில் உட்கார அனுமதிக்கும்படி கூறினார்; அதற்கு சபாநாயகர் அது முதல்வரின் சீட்டு அதில் முதல்வர் மட்டும்தான் உட்கார வேண்டும் என்று சொல்லி அனுமதி அளிக்கவில்லை. அதை கண்டித்து, ஸ்டாலின் தலைமையில், தி.மு.க.,வினர் வெளிநடப்பு செய்தனர்.


பரிவை சே.குமார்
எஸ்.பி. செந்தில் குமார்
வை.கோபாலகிருஷணன்
ஜோதிஜி
விசுAwsome
துளசிதரன்
விமல் ராஜ்
உஷா அன்பரசு
முத்துநிலவன்
ஏஞ்சலின்
புலவர் இராமாநுசம்
பகவான் ஜீ
திண்டுக்கல் தனபாலன்
சசிகலா
டாக்டர் ஜம்புலிங்கம்
சுரேஷ்
எழில்
வே.நடனசபாபதி
மதுரைக்காரன்

மற்றும் இமெயில் முலம் கருத்து சொல்லி விசாரித்த அனைத்து நல் இதயங்களுக்க்கும் என் நன்றி

நான் இந்த வலைத்தளம் நடத்துவதே எனது பொழுது போக்கிற்காகத்தான் ஆனால் எனது பொழுதில் பெரும் பகுதியை அது எடுத்து கொள்வதால்தான் நான் சிறிது விலகி இருக்கிறேன் என்று என் முந்தைய பதிவில் சொன்னது.மற்றபடி "விஷேசம்" ஏதும் இல்லை

அன்புடன்
மதுரைத்தமிழன்

3 comments :

 1. தங்கள் பொழுது போக்கை மட்டும் கருத்தில் கொண்டு எப்படி முடிவு எடுக்க முடியும் ? எங்கள் பொழுது போக்கிற்கு தங்கள் பதிவுகள் தானே உதவும் . நாட்டாமை அவர்கள் (உண்மைகள்) தீர்ப்பை மாற்றி கொண்டு உடனே திரும்பி வந்து தொடர்ந்து எழுத வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. எழுதுகிறேன் ஆனால் அடிக்கடி காணாமல் போனால் தேட வேண்டாம். குறிப்பு அடுத்து 2 துண்டு பேப்பர் ரெடி & ஒரு வழக்கமான அரசியல் பதிவு ரெடி படிக்க தயார் ஆகுங்கள். படித்துவிட்டு ஏண்டா இவனை மீண்டும் எழுத அழைத்தோம் என்று அழுக கூடாது. ஹீஹீ

   Delete
 2. வந்துட்டார்யா...வந்துட்டாரு!
  நாங்கள் நினைத்தோம்...பூரிக்கட்டை அடி ஓவராகி பாவம் தமிழன்...என்று..அஹ்ஹஹஹ
  நீங்கள் சொல்லி இருப்பது சரிதான்....நேரம் பற்றி. ஆனாலும், எங்களை எல்லாம் மகிழ்விக்க ஒருவர் வேண்டுமே கிழக்கே நீங்கள் மேற்கே விசு. என்று நீங்கள் அவ்வப்போது ரவுண்டு கட்டி அடிங்க அப்பப்போ காணாமப் போனாலும்....(ப்ளாக்ல எல்லோரும் அவ்வப்போது காணாமப் போவதுண்டுதானே! ) நாங்களும் விசுவும் கூட பேசிக் கொண்டோம் மதுரைத்தமிழன் இப்படி ஒரு பதிவு போட்டுருக்காரேன்னு....ம்ம்...தொடருங்கள் நேரம் கிடைக்கும் போது......நன்றி!

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog