உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Tuesday, March 17, 2015

எப்படி இருந்த இந்தியா இப்படி ஆகிவிட்டதுஎப்படி இருந்த இந்தியா இப்படி ஆகிவிட்டது..

நான் இந்தியாவில் பிறந்து வளர்ந்த வந்த வரை இந்தியா மத சார்பற்ற நாடாகத்தான் இருந்து வந்ததது. ஆனால் அது இப்போது இந்துக்கள் நாடாகிவிட்டதாமே? எப்ப எப்படி அது யாரால் ஆகியதுங்க
20,25 வருடங்களுக்கு முன்பு, நான் சிறுவனாக இருந்தபொழுது, கிறிஸ்தவ இஸ்லாமிய  குடும்பங்களை யாரும் அந்நியர்களாக பார்த்தது கிடையாது, எல்லோரும் ஒரு தாயின் மக்களாகத்தான் பண்டிகைகளை கொண்டாடி வாழ்த்துகளை பறிமாறி பழகி வந்தனர்.அது மட்டும்மல்லாமல் ஹரே... பாய்  அல்லது அய்யாரே  என்று ஒருவரை ஒருவர் விளித்து நம்ம வீட்டில் விஷேம் அதில் கண்டிப்பாக கலந்து கொள்ளனும் என்று உரிமையோடு அழைப்பார்கள். அதையெல்லாம்  மாற்றி விரோதிகளாக ஒருவரை பார்த்து  ஒருவர் சந்தேகிக்கும் நிலையை மாற்றிய பெருமை யாரைச் சாரும்?  சிந்தியுங்கள் மக்களே... இந்த கால இளையவர்களின் மனதில் மதம் என்ற விஷத்தை தூவி வேற்றுமையை அதிகரித்தது யாரு?


இப்படி பாட்டு எழுதி படமாக எடுத்து மக்கள் மனதில் நல்லவிதைகளை விதைத்தது அந்தகாலம் ஆனால் இப்போது விஸ்பரும் படம் போல எடுத்து மக்கள் மனதில் நச்சு விதைப்பதுதான் நடக்கிறது.

திரைப்படம் : பாரத விலாஸ்
பாடலாசிரியர் :கவிஞர் வாலி
குரல் : T.M.சௌந்தராஜன், M.S.விஸ்வநாதன், P.சுசீலா, L.R.ஈஸ்வரி
இசை :M.S.விஸ்வநாதன்


இந்திய நாடு என் வீடு இந்தியன் என்பது என் பேரு
இந்திய நாடு என் வீடு இந்தியன் என்பது என் பேரு
எல்லா மக்களும் என் உறவு
எல்லோர் மொழியும் என் பேச்சு..
திசைதொழும் துலுக்கர் என் தோழர்…
திசைதொழும் துலுக்கர் என் தோழர்
தேவன் இயேசுவும் என் கடவுள்
எல்லா மதமும் என் மதமே ..
எதுவும் எனக்கு சம்மதமே
ரகுபதி ராகவ ராஜா ராம்
பதித்த பாவன சீத்தராம்
ரகுபதி ராகவ ராஜா ராம்
பதித்த பாவன சீத்தராம்
கங்கை பாயும் வங்கம் தென்னில் கதிர்கள் சாயும் தமிழகம்
தங்கம் விளையும் கன்னடம்
நல் தென்னை வளரும் கேரளம்
ஆந்திரம் அஸ்ஸாம் மராட்டி
ராஜஸ்தான் பாஞ்சாலமும்
சேர்ந்து அமைந்த தேசம்
எங்கள் அன்னை பூமி பாரதம்
இந்திய நாடு என் வீடு இந்தியன் என்பது என் பேரு
ரகுபதி ராகவ ராஜா ராம்
பதித்த பாவன சீத்தராம்
இதிகோ இதிகோ இக்கட பாருங்கோ
இதிகோ இதிகோ இக்கட பாருங்கோ
சுந்தர தெலுங்கினில் பாடுங்கோ
குச்சுப்பிடி நடனங்கள் ஆடுங்கோ
கல் மோகன ரங்கா பாடுங்கோ
கல் மோகன ரங்கா பாடுங்கோ
ஷிரீசைலம் திருப்பதி கேந்திரம் உண்டு
தரிசனம் பண்ண வாருங்கோ
கப்பல் கட்டுற விசாகபட்டினம் கடற்கரை உண்டு பாருங்கோ
கல் மோகன ரங்கா பாடுங்கோ
கல் மோகன ரங்கா பாடுங்கோ…..
ஏனு சுவாமி இல்லினோடு எங்க ஊரு மைசூரு
காவிரி பிறந்த கன்னட நாட்டை யாவரும் போற்றி சொல்வாரு
ஏனு சுவாமி இல்லினோடு எங்க ஊரு மைசூரு
ப்ரிந்தாவனமும் சாமுண்டி கோவிலும் நோடு சுவாமி நீ நோடு..
நீ நோடு மைசூரு…
எல்லா மொழியும் எல்லா இனமும்
ஒண்ணு கலந்தது பெங்களூரு
ஏனு சுவாமி… ஏனு சுவாமி இல்லினோடு எங்க ஊரு மைசூரு
படைச்சோன் படைச்சோன் எங்களை படைச்சோன்
அல்லாஹ்..எங்கள் அல்லாஹ்…
ஞானும் இவளும் ஜனனம் எடுத்தது
கேரளம் திரிசூர் ஜில்லா
தேக்கு தென்னை பாக்கு மரங்கள்
இவிடே நோக்கணும் நீங்க..
தேயிலை மிளகு விளைவதை பார்த்து
வெள்ளையன் வந்தான் வாங்க..
படைச்சோன் படைச்சோன் எங்களை படைச்சோன்
அல்லாஹ்..எங்கள் அல்லாஹ்…
அல்லாஹ் ஒ.. அல்லாஹ்
அல்லாஹ் ஒ.. அல்லாஹ்
அல்லாஹ் ஒ.. அல்லாஹ்
சுனோ சுனோ பாய் சுனோ சுனோ மே
பஞ்சாப் வாலா கீத் சுனோ
பஞ்சாப் வாலா கீத் சுனோ
தங்க கலசம் பொற்கோவில்
எங்கள் ஊரில் தேக்கோ தேக்கோ
ஆஹா தேக்கோ தேக்கோ…
ம்ம்..ஆஹா தேக்கோ தேக்கோ…
ஜீலம் சட்லெஜ் நதிகள் பாயும்
கோலம் காண ஆவோ…ஆவோ..
ஆவோ ஆவோ…ம்..ஹா ஆவோ ஆவோ
ஆவோ..ம்ம்..ஹா…ஹா… ஆவோ…
ஆவோ ஆவோ…………….
பஞ்சாப் சிங்கம் லால லஜபதி
பகத்சிங் பிறந்த பொன்நாடு
பகத்சிங் பிறந்த பொன்நாடு
யாஹூ.. யாஹூ.. ம்ம்..ஆஹா யாஹூ யாஹூ…
யாஹூ.. யாஹோ…
எங்கு பிறந்து எங்கு வளர்ந்தும் எல்லாம் ஒரு தாய் பிள்ளைகள்
(எல்லாம் ஒரு தாய் கிள்ளைகள்)
பாரத விலாசில் ஒன்றாய் வாழ்ந்து
பேசி பழகும் கிள்ளைகள்
(பேசி பழகும் கிள்ளைகள்)
சத்தியம் எங்கள் வேதம்
சமத்துவம் எங்கள் கீதம்
வருவதை பகிர்ந்து உண்போம்
வந்தே மாதரம் என்போம்…
வந்தே மாதரம்….வந்தே மாதரம்..
வந்தே மாதரம்….வந்தே மாதரம்..
வந்தே மாதரம்….வந்தே மாதரம்
வந்தே மாதரம்………….


அன்புடன்
மதுரைத்தமிழன்

23 comments :

 1. நண்பரே.. இந்த பதிவை நீங்கள் மிகவும் அவசரப்பட்டு போட்டுவிட்டீர்கள். இன்னும் சில வருடங்கள் பொறும் .. அடுத்த மதத்தினரிடம் ஒவ்வொருவரும் பேச பழக கூடாது என்ற சட்டம் வந்தாலும் வரும்.. அப்போது போட்டு இருக்கலாம் ...

  ReplyDelete
  Replies
  1. அப்படி ஒரு சட்டம் வந்தால் என் கூட யாரும் பேசமாட்டார்களே காரணம் அனைத்து மதமும் சம்மதமே எனக்கு.. அப்படி ஒரு சட்டம் வருவதற்குள் நான் போய் சேர்ந்து விடுவேன்

   Delete
 2. உண்மையில் சிந்திக்க வேண்டிய விஷயம் தான்!
  பாரதவிலாஸின் இந்தப் பாடலைச் சென்ற மாதம் ஆண்டுவிழாவில் ஆசிரியர்கள் மாணவர்கள் இணைந்து அரங்கேற்றினர்.
  அப்போது எழுந்த கரகோஷத்திற்கு அளவே இல்லை.
  இணக்கமான வாழ்வையே எல்லோரும் விரும்புகின்றனர்.
  இடையில் புகும் பிழைப்புவாதத்தால்தான் பிரச்சினை!

  தொடர்கிறேன்.

  நன்றி

  ReplyDelete
  Replies
  1. தமிழகத்தை பொறுத்தவரை எல்லோரும் இணக்கமாகவே வாழ விரும்புகிறார்கள் என்பது மிக உண்மையே ஆனால் இதை உடைக்க தலைவர்கள் முயல்கிறார்கள் அதிலும் மோடிதலைமையிலான பாஜக முயல்கிறது . முந்தைய பாஜக இப்படி இல்லை....

   Delete
 3. உண்மை தான்...

  மலர்
  https://play.google.com/store/apps/details?id=com.ezdrivingtest.me.bdl.app.android

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி..

   Delete
 4. உண்மைதான்! காவி உடை தரித்தவர்கள் ஆளவரும்போதெல்லாம் இதுபோன்ற குரல் எழும்! ஆனால் இதுவும் கடந்து போகும்!

  ReplyDelete
  Replies
  1. முந்தைய ஆட்சியிலும் இப்படித்தான் ஆனால் இந்த ஆட்சியில் அதற்கு உரம் போட்டு மேலும் வளர்க்க முயற்சிக்கிறார்கள் என்பதுதான் உண்மை

   Delete
 5. எல்லாம் இந்த அரசியல் வியாதிகள்தான் காரணம் :(

  ReplyDelete
  Replies
  1. அந்த வியாதி மக்களையும் தொற்றிக் கொள்கிறது ஆனால் தடுக்க வேண்டிய மக்கள் அதன் விபரிதம் தெரியாமல் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறார்கள்

   Delete
 6. ஒரு சிறு சம்பவம் சொல்றேன் ..நான் அட்மினா இருக்கும் fb பக்கத்தில் கிரிஸ்த்மஸ் வாழ்த்து சொல்லி quilled கார்ட் போட்டேன் ..ஒருவர் வந்து கமெண்ட் போட்டிருக்கார் //இந்தியாக்கு கிறிஸ்த்மஸும் கிறிஸ்மஸ் வாழ்த்துக்களும் கிறிஸ்தவர்களும் தேவை இல்லை // நான் diwalikkum ரம்சானுக்கும் கூட வாழ்த்து போட்டிருக்கேன் ...நான் பதில் கொடுக்குமுன் ம்மற்றொரு அட்மின் டிலீட் பண்ணிட்டார் இன்னோருவர் அவர் என் நட்பில்லை அவர் ஸ்டேடஸ் .யாரோ லைக் பண்ண எனக்கு தெரிஞ்சது .//கிறிஸ்தவ வந்தேரி களால் குடிபழக்கம் இந்தியாக்கு வந்தது .//நான் கேக்கிறேன் .அப்போ சோம பானம் சுரா பானம்லாம் என்னவாம் ?ராஜாங்க குடிக்கவேயில்லையா ...கோபம் வந்ந்தது அப்புறம் யோசித்தேன் இப்படி நாமும் உணர்ச்சி வசப்பட்டா அது மிக தவறு ..

  ம்ம்ம் :( மனசு வலிக்குது எங்க இந்தியா இப்படி தவறான பாதையில் செல்து ..இந்த மாதிரி சில பார்த்தீனியங்களை ஒழிச்சா போதும்

  ReplyDelete
  Replies
  1. மிக அருமை! சரியாச் சொன்னீங்க சகோதரி!

   Delete
  2. உங்கள் வாழ்த்திற்கு பதில் சொன்னவரின் மூளை வளர்ச்சி அடையாமல் இருந்திருக்கும் இதற்கு எல்லாம் கவலைப்படாதீங்க

   Delete
 7. தமிழா! நல்ல பதிவு வித் அருமையான ஒரு பாடலுடன்! மக்கள் எல்லோரும் சிந்திக்க வேண்டிய ஒன்று. விவேக்கின் வசனம் தான் நினைவுக்கு வந்தது...உங்கள் தலைப்பைப் பார்த்ததும்....

  ReplyDelete
  Replies
  1. பாராட்டிற்கு மிகவும் நன்றி

   Delete
 8. மதம் மட்டுமில்லை, இங்கு எல்லா விஷயங்களுமே தலைகீழாக மாறிக்கொண்டுதான் இருக்கின்றன. முன்பெல்லாம் பெற்றோர்கள் பிள்ளைகளிடம் நீ சம்பாதிக்கா விட்டாலும் பரவாயில்லை. நல்லவனாக இரு! என்று போதித்தார்கள். இன்று நீ எப்படினாலும் இரு! ஆனா பணக்காரண இரு! என்றுதான் சொல்கிறார்கள். அந்த மாரல் மறைந்து போனதுதான் சமூகம் மோசமடைந்தற்கு காரணம். அரசியலெல்லாம் இரண்டாவது காரணம்தான்.

  ReplyDelete
  Replies

  1. பெற்றோர்களும் இதற்கு உடந்தையே என்பது மிகவும் சரி .பெற்றோர்களுக்கும் இந்த விஷயத்தில் முழு அறிவு இல்லைதான்

   Delete
 9. இக் காலத்திற்குத் தேவையான பதிவு. அந்த நாள்கள் இனிமையான நாள்கள் என நினைக்குமளவு நம்மை ஆக்கிவிடுவார்கள் போலிருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் கருத்து மிகவும் சரியாக இருக்கிறது சார்

   Delete
 10. I still remember those days in which our Christian neighbor families give us cakes during christmas. Those days were gone I believe. Good post.

  ReplyDelete
  Replies
  1. அமெரிக்காவில் வசிக்கும் நமக்கு அந்த பழைய நாட்கள் போலத்தானே இன்றும் இருக்கிறது. இங்கு வசிக்கும் நாம் இந்தியாவில் உள்ள அளவிற்கு மத வேற்றுமை பார்ப்பதில்லை என்பது மறுக்க முடியாத உண்மைதானே

   Delete
 11. தங்கள் அருமையான பதிவுகளை TamilBM( http://tamilbm.com/ ) திரட்டியிலும் இணையுங்கள்.

  ReplyDelete
 12. பதவி வெறி பிடித்த அரசியல் கட்சிகளும் , மதவெறி பிடித்த சில மனிதர்களும் , நாட்டை நாசமாக்கி விட்டனர்!

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog