Monday, March 16, 2015




avargal unmaigal
போட்டோடூன் & ஸ்டேடஸ் பார்க்க ரசிக்க  சிந்திக்க சிரிக்க 



மலேசியன் விமானமும் ராகுல் காந்தியும் ஒன்றுதான் போல இருக்கிறது. இரண்டும் எங்கே போனதென்றே தெரியவில்லை.



மோடி மற்றவர்களுடன் நட்பு(உதவி) பாரட்டுவது அவர்களின் வளர்ச்சிக்கு அல்ல அழிவுக்குதான். உதாரணம் அத்வானி,ஜெயலலிதா,ரஜினி


avargal unmaigal

மசூதிகள் ஒன்றும் மதம் சார்ந்த இடம் இல்லை மாறாக எந்நேரத்திலும் இடித்து தள்ளக்கூடிய வெறும் கட்டிடங்கள்தான் என்றால் தாலியும் புனிதமானது அல்ல அது எந்நேரத்திலும் அறுத்து எறியக்கூடிய வெறும் கயிறுகள்தானே? (இது எந்த மதத்தினரையும் காயப்படுத்த எழுதப்பட்டது அல்ல .மசூதி பற்றி தலைவர் சொன்ன கருத்துக்கு பதில்தான் இது.)

avargal unmaigal

தினசரி ஒரு ஆப்பிளை தின்று வந்தால்  டாக்டரின்  உதவி நமக்கு தேவையில்லை.ஆனால் அந்த டாக்டர் அழகாக இருந்துவிட்டால் நமக்கு ஆப்பிளே  தேவையில்லை

பேஸ்புக் பெண் பேராளிகளும் மோடியும் ஒன்றுதான் நிறைய பேசுவாங்க ஆனால்  செயலில் ஒன்றும் செய்யமாட்டாங்க
avargal unmaigal


வாழ்க்கையில் நாம்  ஒருவரை புதிதாக சந்திகிறோம் என்றால்  அதற்கு ஒரு காரணம் உண்டு . அது ள் அவர்கள் நமது வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தவோ அல்லது நாம் அவர்கள் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தவோ கடவுள் செய்த ஏற்படாக இருக்கும்

avargal unmaigal


மோடி அரசு கொண்டு வந்த நிலம் கையகப்படுத்தும் சட்டத்திற்கு அதிமுக அரசு கொடுத்த ஆதரவுக்கு எழுந்த எதிர்ப்பை மழுங்க அடிக்க செய்யவே அவாக்கள் போடும் நாடகம் இது...டிராபிக் ராமசாமி கைது

புதிய தலைமுறை டிவி நிலையத்தில் மீது பட்டாசு வெடித்தாக செய்தி வெளியிடும் நாளிதழ் மீது அதே பட்டாசை யாரவது வெடிக்கச் செய்ய மாட்டார்களா?


அன்புடன்
மதுரைத்தமிழன்

8 comments:

  1. தினமும் ஒரு அப்பிள்...!!?? ஆப்பிள் விலை கிலோ 240, 250 ரூபாய்! அதுவும் மெழுகு பூசப்பட்ட ஆப்பிள்...பூச்சி மருந்து அடிக்கப்பட்ட ஆப்பிள்....இப்பல்லாம் ஆப்பிள் சாப்டா தினமும் டாக்டரத்தான் பாக்கணும் போல....அப்படி இருக்கு இங்க
    எல்லாமே நல்லா இருக்குது...

    ReplyDelete
    Replies

    1. நீங்க சொல்லுறதை பார்த்தா ஆப்பிள் சாப்பிடவே நாம் டாக்டரைதான் கல்யாணம் பண்ணிக்கிடணும் போல இருக்கே

      Delete
  2. face book ஆண் போராளிகள் மட்டும் பெரிய செயல்வீரர்கள் mr.லைட்! #/

    ReplyDelete
    Replies
    1. பேஸ்புக் ஆண் பேராளிகள் பேஸ்புக்கில் மட்டும் போராடவில்லை வீட்டிலும்தான் தினசரி போராடுகிறார்கள்

      Delete
  3. ஆப்பிள்-மதுரைத் தமிழனின் அஃமார்க் குறும்பு

    ReplyDelete
    Replies
    1. நெட்டில் படித்ததை கொஞ்சம் டிங்கரின் வொர்க் பண்ணி என் தளத்திற்கு ஏற்ப போட்டு இருக்கிறேன்

      Delete
  4. சிந்திக்க வைத்த போட்டூன்கள்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.