Monday, March 2, 2015



avargal unmaigal
பட்ஜெட் பற்றி தலைவர்களின் கருத்து ( பட்ஜெட் கருத்து கலாட்டா  )

விஜயகாந்த் : இந்த பட்ஜெட் மக்களுக்கு நல்லதா அல்லது கெட்டதா என்று எனக்கு தெரியவில்லை. ஆனா எனக்கு தெரிய வேண்டியது  எல்லாம் "ஒல்டு மாங்க்' சரக்குக்கு விலை ஏறிச்சா இல்லையா என்பதுதான்

ஜெயலலிதா : சிறைக் கைதிகளுக்கும் சிறைத்துறையினருக்கும் எந்த வசதியும் செய்துதாராத, எந்த திட்டமும் இல்லாத இந்த பட்ஜெட் மக்களுக்கு எதிரான பட்ஜெட்தான்


கலைஞர்: ஊழல் செய்த பணத்திற்கு  ஸ்பெஷல் வரி விதிக்காத இந்த அரசின் பட்ஜெட்டை வரவேற்கிறேன்.

வைகோ ; இந்த பட்ஜெட்டில் ஈழதமிழனுக்காக எந்த திட்டமும் இல்லை எனவே இதை என்னால் பட்ஜெட் என்று கருதவே முடியாது.அதற்காக மோடி அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.


தமிழிசை : இது ஜெட்லி போட்ட பட்ஜெட் இதற்கும் பாஜாவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை..

ராஜா : இந்த் பட்ஜெட்டை குறை சொல்லு யாரும் வெளியில் நடமாட முடியாது அவர்களை எப்படி கவனிப்பது என்பது பாஜ தொண்டனுக்கு தெரியும்.


இளங்கோவன் : இந்த பட்ஜெட்டால் ஏழை எளிய மக்களுக்கு எந்த பயனும் இல்லை, வெளிநாட்டவர்களுக்கு உதவுவதற்காக போட்ட பட்ஜெட். அதுமட்டுமல்ல இது எங்க காங்கிரஸ் முந்தைய ஆட்சியில் போட்ட பட்ஜெட்டை அப்பட்டமாக காப்பி அடித்து போட்டப்பட்டது என்பதை இங்கே பதிய விரும்புகிறேன்

ராமதாஸ் : இந்த பட்ஜெட்டில் என் மகனுக்கு பதவி அளிக்கும்படியான எந்த திட்டமும் இல்லாததால் இந்த பட்ஜெட்டை ஒவ்வொரு வன்னியனும் எதிர்க்கவே செய்வான் 

நடிகர்கள் கருத்து :
ரஜினி: இந்த பட்ஜெட் லிங்கா படத்தை போல ஒரு வெற்றிகரமான பட்ஜெட் அதாவது போட்டவருக்கு நல்ல பலன் மற்றவர்களுக்கு அது எப்படி என்று சொல்ல விரும்பவில்லை

கமலஹாசன் : இந்த பட்ஜெட் பற்றி சொல்லும் போது அதில் இருக்கும் நல்லது கெட்டது பற்றி நாம் பார்க்க வேண்டும் இதில் மக்களுக்கான நல்ல திட்டம் என்று ஏதும் இருக்கும் என்று பார்த்தால் அதில் ஒன்றும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும் ஆனால் இது மோடி அரசு போட்ட பட்ஜெட் என்று பார்க்கும் போது அதில்  மக்களுக்கான நல்ல திட்டங்கள் இருக்கு என்று சொல்லதான் வேண்டி இருக்கிறது.


மதுரைத்தமிழன். இந்த பட்ஜெட்டி பற்றி சொல்ல வேண்டுமானால் மிக பயனுள்ள பட்ஜெட் என்றுதான் சொல்ல வேண்டும் காரணம் இந்த பட்ஜெட்டால்தான் என்னால் இரண்டு பதிவு தேற்ற முடிந்தது


அன்புடன்
மதுரைத்தமிழன்

10 comments:

  1. பட்ஜெட் கொஞ்சம் பழசு, புசு அப்புறம் வரும்.

    ReplyDelete
    Replies
    1. மோடி அரசாங்கம் அறிவித்தது ஒரு டிரயல் பட்ஜெட் முழுமையான பட்ஜெட் இனிமேல்தான் வரும்.....

      Delete
  2. இரண்டு பதிவுகளை தேற்றி விட்டீர்களா! முதல் பதிவையும் மற்ற பதிவுகளையும் சீக்கிரம் படிக்கிறேன். அப்புறம் ந்த விஜய்காந்த் கருத்து உங்களோட தனிப்பட்ட கருத்து தானே. எப்படி கரெக்ட்டா கண்டுப்பிடிச்சேன் பார்த்தீங்களா!!

    ReplyDelete
    Replies
    1. விஜயகாந்த் எங்கள் அண்ணன் அதுமட்டுமல்ல இரண்டு பேரும் ஒரே ஊர்க்காரங்க அதனால எண்ணம் எல்லாம் ஒன்று போல இருப்பதில் அதிசயம் இல்லையே ( அட சொக்கா ரகசியத்தை கண்டுபிடிச்சு இப்படியா பப்ளிக்காகவா சொல்லுவது....இருங்க உங்க ஊருக்கும் ஒரு வண்டி லோடு பூரிக்கட்டை அனுப்ப செய்யுறேன்

      Delete
  3. நான் இந்த பதிவை படிக்கிறதுக்கு முன்னால என்ன நினைச்சேனோ அதை தான் பதிவின் இறுதியில் நீங்களும் சொல்லிருகீங்க:))) பின்ச்:)

    ReplyDelete
    Replies
    1. நாம எல்லாம் ஒரே குடும்பமாச்சே அதனாலதான் நினைக்கிறதும் ஒரே மாதிரியாக இருக்கு சகோ

      Delete
  4. எப்படியோ உங்களுக்கு இரண்டு பதிவு கிடைத்தது....ஆனாலும் கமல்ஹாசன் பட்ஜெட் கருத்து ரொம்ப ரொம்ப நல்லா இருந்து....ஆனால் இல்ல!!!!

    மலர்

    ReplyDelete
    Replies
    1. பல சமயங்களில் கமலஹாசன் பேச்சை கேட்கும் போது என்ன சொல்ல வருகிறார் என்பதே குழப்பமாக இருக்கும். அதனாலதான் அவர் பேசுவதைப் போலவே நினைத்து அதை எழுதினேன். இந்த பதிவை எழுதி முடித்தது எனக்க்கே கமலஹாசன் சொல்லும் கருத்தே அதிகம் பிடித்துப் போனது

      Delete
  5. Replies
    1. ரசிப்பிற்கு நன்றி தலைவரே

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.