உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Sunday, March 1, 2015

இவர்களுக்கு விருது கொடுக்க விகடனும் விஜய் டிவியும் மறுப்பதேன்?

இவர்களுக்கு விருது கொடுக்க விகடனும் விஜய் டிவியும் மறுப்பதேன்?


வருடா வருடம் திரைப்பட துறையினருக்கு விகடனும் விஜய் டிவியும் பல விருதுகளை கொடுத்து பாராட்டி வருகிறது. அப்படி இருக்கையில் இந்த  வசனகர்த்தாவிற்கும் நடிகருக்கும் மட்டும் விருதுகள் கொடுக்க மறுத்து வருகிறது. ஒருவேளை இவர்கள் சூத்திரக் காரர்கள் என்பதால் இருக்க்குமோ. அது எப்படி இருந்தாலும் இதை நாம் வன்மையாக கண்டிக்க வேண்டும். இவர்களின் நடிப்பை நான் பகிர்ந்து இருக்கும் படம் மூலமே அறிந்து கொள்ளலாம்.


இவர்களின் நடிப்பு எப்படி இருக்கிறது என்பதை நீங்களும் இங்கு பகிர்ந்து செல்லாம்.


அன்புடன்

மதுரைத்தமிழன்

13 comments :

 1. விகடன் அவார்ட் கொடுக்கலாம்னு நீங்க சொன்னபிறகு அது தப்பாகுமா?!

  ReplyDelete
  Replies

  1. உங்க மனசுக்கும் சரி என்றுதான் தோன்றுகிறது போல அதனால் நீங்க ஒரு நடை நடந்து விகடன் ஆபிஸிற்கு போய் சொல்லிவிட்டு வாங்க

   Delete
 2. ஹஹஹஹஹ்...நடிப்பு அருமையாகத்தான் இருக்கின்றது. நம்ம வலைத்தள நண்பர்கள் எடுக்கற படத்துக்கு அவங்க ரெடியானு கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்க......

  ReplyDelete
  Replies
  1. அவங்ககிட்ட கேட்டேனுங்க அவங்க சொல்லுறாங்க நீங்க எடுக்கிற படத்துல அவங்களுக்கு நடிக்க இஷ்டம் இல்லையாம் ஆனால் அவங்க நடிப்பை நீங்க எடுத்து அதை படமா வெளியிடுவதில் அவங்களுக்கு ஒன்றும் ஆட்சேபணை இல்லை என்று சொல்லச் சொன்னாங்க

   Delete
 3. நடிப்பு சூப்பர்தான். ஆஹா இப்படியெல்லாம் சிந்திக்கும் மதுரைத் தமிழனுக்கும் அவார்ட் வழங்க வலையுலகம் சார்பாக பரிந்துரைக்கிறோம்

  ReplyDelete
  Replies
  1. அவார்டு என்னங்க அவார்டு நீங்க ஒரு வார்த்தை பாராட்டினாலே வலையுலகத்தினரால் வழங்கப்பட்ட அவார்டை விட ஒருபடி மேல் அல்லவா அது

   Delete
 4. இப்போதுதான் கவனித்தேன்.2 million பக்கப் பார்வைகளை தாண்டி விட்டீர்கள் . கடந்த 2013 இன் இறுதியில் ஒரு மில்லியனை கடந்ததாக ஞாபகம். மிக விரைவாக ஒரு மில்லியனை கடந்திருக்கிறீர்கள். சிமதுரைத் தமிழனின் அட்டகாசமான சாதனை இது. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. நீங்க சொன்னதற்கு அப்புறம்தான் கவனித்தேன் நன்றிங்க ஒரு பதிவிற்கான ஐடியா தேத்திட்டேனுங்க ஹீஹீ

   Delete
 5. விகடன் அவார்ட் கிடைக்காட்டி என்ன? நீங்க கொடுக்கிற அவார்ட் தான் கிடைக்கிறதே!

  ReplyDelete
  Replies
  1. என்னுடைய அவார்டு அவங்களுக்கு வேண்டாமாம் பதிவர் விழாவில் அவங்களை கூப்பிட்டு அவார்ட் வேணுமாங்க

   Delete
 6. கலைஞர் இன்றா நடிக்கிறார். திராவிட கழக ஆரம்பம் முதல் நடிக்கிறாரே!. இந்த ஊடகங்கள் ஓரவஞ்சனை செய்கின்றன.

  ReplyDelete
  Replies
  1. ஆமாங்க இந்த விகடனும் விஜய்டிவியும் இந்த சூத்திரர்களுக்கு அவார்ட்தரமால் ஒரவஞ்சனை பண்ணுகிறதுங்க.... இதை கண்டிச்சு திமுககாரங்க பீச்சுல உண்ணாவிரதம் கண்டிப்பாக நடத்தனுமுங்க

   Delete
 7. விகடனும் விஜையும் விட்டா வேற இல்லையா? புதுசா மசா(மக்கள் சாட்சி) தொலைக்காட்சி ஆரம்பிச்சு
  முதல்வேலையா தமிழ்நாட்டு முதல்வர் ன்னு கொடுத்திடணும்! இல்லாங்காட்டி பாவம்.

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog