உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Monday, March 23, 2015

பேஸ்புக்கில் இனிமேல் உண்மையைத்தான் பேசியாகணுமாமே!பேஸ்புக்கில் இனிமேல் உண்மையைத்தான் பேசியாகணுமாமே!

பேஸ்புக்கில் தவறான தகவலை பரப்பினால் மூன்று ஆண்டு சிறை -செய்தி...

இனிமே தைரியமாக அரசியல் தலைவர்களை திருடர்கள் ஏமாற்றுக்காரர்கள் என்று தைரியமாக எழுதலாம் அப்படி எழுதுவதற்கு பதிலாக நல்லவர்கள் நேர்மையானவர்கள் சூதுவாது தெரியாதவர்கள் என்று எழுதினா இனிமேல் நீங்க களி திங்கதான் போகனும்...

உதாரணமாக இனிமேல் இப்படி எல்லாம் பேஸ்புக்கில் எழுதமுடியாது போல இருக்கிறது


இந்துக்கள் வணங்கிடும் கீதையைப் போல், கிறிஸ்தவர்கள் வணங்கிடும் பைபிளைப் போல், இஸ்லாமியர்கள் வணங்கிடும் குரானைப் போல் உலகத் தமிழ் மக்கள் வணங்கிடும் புனிதப் பொக்கிஷம் நீங்கள் அம்மா’ என்றும்  'பாலினைப் போன்று பண்புகளைக்கொண்டிருக்கும் எங்கள் குலமாதா’ என்றும்  'உலகமே ஒரு நூலகம், அதில் எல்லோரும் ஒரு நூல் என்பார்கள். ஆனால், அம்மா நீங்களோ ஒரு நூலகம்’ என்றும் 'மாதர் குலப் பெருமையைக் காக்கும் மதுரை மீனாட்சியே! புரட்சித் தாயே... பூமி மாதாவே... வாழும் எங்கள் வேலுநாச்சியே தமிழ் மானம் காக்க உயிரை பற்றி கவலைப்படாமல் கல்லக்குடி போராட்டத்தில் தண்ட வாளத்தில் தலைவைத்த தலைவர் கலைஞர்.. இடியாய்,மின்னலாய், மழையாய், புயலாய், தென்றலாய் கலைஞர் ஞான மழை பொழிந்த இடம் சட்டமன்றம். அவரது விவாத வெளிச்சத்தால் இருண்ட சட்டமன்றம் ஒளி பெற்றது
இந்தியாவின் நிக்சன் போல், மோடி திகழ்கிறார்' மோடி  ஜனநாயக காவலர் .என்று பொய்யாக எழுதக் கூடாதோ??!

''சகாயத்துக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் கடிதம் வந்து கொண்டே இருக்கிறது! செய்தி
கள்ள காதலி மறுத்ததால் சாகயம் தற்கொலை என்ற செய்தி கூடிய சீக்கிரம் வந்தாலும் வரும்

சிங்கப்பூரின் தந்தை என்றழைக்கப்படும் ‘லீ க்வான் யூ’ ஒரு சிறிய நகர் அளவே கொண்ட நாட்டை உலகினரே பாராட்டும் அளவில் மாற்றி அமைத்தார் செய்தி
ஆனால் நமது இந்தியாவிலோ, உலகின் பெரிய நாடு என்று அழைக்கப்படும் நமது நாட்டின் நிலங்களை வெளிநாட்டினருக்கு கையகப்படுத்தி சிறிய அடிமை நாடாக ஆக்க இந்தியாவின் பாதுகாவலர் மோடி முயற்சிக்கிறார்நிலம் கையகப்படுத்துதல் சட்ட மசோதா: அன்னா ஹசாரேவுக்கு கருணாநிதி ஆதரவு
ஹேய் அது யாரப்பா கூட்டதோடு கூட்டமா நின்னு ஹசாரே மேலே சாணியை கொண்டு அடிக்கிறது

விவசாயிகளிடம் விரோதப்போக்கை உருவாக்கி, தி.மு.க.வும், காங்கிரசும் அரசியல் ஆதாயம் தேடப்பார்க்கின்றன என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
என்ன ராதாகிருஷ்ணன் ஆதாயம் பார்க்கவே அரசியலுக்கு இவர்கள் வந்து இருக்கிறார்கள் இந்த் அடிப்படை இலக்கணம் கூட உங்களுக்கு தெரியவில்லையே...ஹும்ம் நீங்க எப்படிதான் பிழைக்க போகிறீர்களோ

இந்திய பொதுமக்கள் அயோக்கியர்களை ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்துவிட்டு அதன் பின் யோக்கியர்மாதிரி  விமர்சித்து கொண்டிருக்கிறார்கள். விதைப்பதைதான் நாம் அறுவடை செய்ய முடியும்


அன்புடன்
மதுரைத்தமிழன்

No comments :

Post a Comment

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog