Tuesday, February 17, 2015



avargal unmaigal
ஹவ் மே ஐ ஹெல்ப் யூ என்பது கெட்ட வார்த்தையா?

மே ஐ ஹெல்ப் யூ ! என்று பல இடங்களில் நீங்கள் இதை கேட்டு இருப்பீர்கள். அதை கேட்டவுடன் இந்த காலத்தில் நமக்கு  கூட உதவ ஆட்கள் முன் வருகிறார்கள் என்று உங்களுக்கு மிக சந்தோஷமாக இருக்கும். அந்த வார்த்தைகளை கேட்டவுடன் உங்கள் மனதில் மஹா ராஜா என்ற உணர்வு தோன்றுவது இயற்கையே. இந்த வார்தைகள் உலகெங்கிலும் பரவலாக உபயோகப்படுத்தப் படுகிறது. 



இப்படி உலகெங்கிலும் பரவலாக உபயோகப்படுத்தப்படும் இந்த மே ஐ ஹெல்ப் யூ என்ற வார்த்தைகளை உபயோகிப்பது கெட்டவார்த்தைகளை விட மோசம் என்று எங்களது மேனேஜ்மெண்ட் துறையினர் எங்களுக்கு பல ஆண்டுகளாக போதிக்கின்றனர் ப்ரெய்ன் வாஷும் பண்ணுகின்றனர்,  தப்பி தவறி நாங்கள் அதை உபயோகப்படுத்திவிட்டால் எங்களை சிலுவையில் அடிப்பது போல அடித்து காயப்படுத்துகின்றனர்

இங்கு நான் எங்களுக்கு என்று சொல்வது விற்பனை(Sales) துறையில் ஈடுபட்டவர்களை குறிக்கும். விற்பனை துறையில் ஈடுபட்டு இருக்கும் நாங்கள் எங்கள் ரீடெய்ல் கம்பெனியில் பொருட்களை வாங்க வரும் கஸ்டமர்களை பார்த்து மே ஐ ஹெல்ப் யூ  என்று கேட்டுவிடக் கூடாது. அப்படியென்றால் வருபவர்களிடம் எப்படி அணுகுவது என்று கேட்கிறீர்களா?

நேச்சுரலாக அணுக வேண்டும் அதாகப்பட்டது கஸ்டமரை பார்த்தவுட ஹாய் ஹெவ் ஆர் யூ என்று ஆரம்பித்து மே ஐ ஹெல்ப் யூ  என்று தொடரக் கூடாது அதற்கு பதிலாக ஹாய் உன்னுடைய காலணிகள் மிக அழகாக இருக்கிறது அதை எங்கே வாங்கினாய் அல்லது உன்னுடைய ஆடை மிகவும் அழகாக இருக்கிறது எங்கே வாங்கினாய்  அல்லது  நீ மிகவும் அழகாக இருக்கிறாய்? வாவ் இது உன்னுடைய குழந்தைகளா  அவர்கள் மிகவும் க்யூட் அல்லது உன்னுடைய ஹேண்ட் பேக் அழகாக இருக்கிறது காதணிகள் அழகாக இருக்கின்றன என சொல்லி ஆரம்பித்து சந்தடி சாக்கில் நமது பெயரை அந்த பேச்சு வார்த்தைகளில் நுழைத்து அவர்கள் பெயரை கேட்டறிந்து அவ்ர்களுடன் கை குலுக்கி அந்த பெயரை பல தடவை உபயோகிக்க வேண்டும். அதைவிட்டு விட்டு மே ஐ ஹெல்ப் யூ  என்றால் அது தவறு.



விற்பனை தொடரும்

அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி : விற்பனை துறையில் நாங்கள் படும் கஷ்டங்களை அனுபவங்களை எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் பகிர்கிறேன். பிடித்தால் படிக்கவும் இல்லையென்றால் யாரையாவது படிக்க சொல்லி கேட்கவும்

13 comments:

  1. அது சரி... அப்ப பேசியே கவுத்துட்டு அப்புறமா கேட்கணுமாக்கும்...
    விற்பனைத் துறையில் பேச்சுத் திறமை இருந்தால்தானே ஜெயிக்கவே முடியும்...

    ReplyDelete
    Replies
    1. பேச்சு திறமை மட்டும் இருந்தால் மட்டும் போதாது கேட்கும் திறமை (Listening ) மிக அதிகமாக இருக்க வேண்டும்

      Delete
  2. ஹே! செம இன்ட்ரெஸ்ட்டிங்க தொடங்கிடீங்க பாஸ்!! அப்டியே தொடருங்க. ஜோதிஜி அண்ணாவின் தொழிற்சாலையின் கதை க்கு போட்டியா??(அப்பாடி ! பத்த வச்சாச்சு:))

    ReplyDelete
    Replies
    1. இமய மலையோடு(ஜோதிஜி) மடுவை(ம்துரையை) ஒப்பிட்டு ஜோதிஜியை மட்டம் தட்ட வேண்டாம். அப்பாடி நானும் பத்த வைச்சுட்டேன்.... டீச்சரம்மா யாருகிட்ட பேசுறீங்க மதுர கிட்ட அதை மட்டும் ஞாபகம் வைச்சுங்க ஹீஹீ

      Delete

    2. ஜோதிஜி ஒரு தலைப்பை எடுத்தால் அதை அக்குவேறா ஆணிவேறா ஆராய்ந்து எழுதி முடிப்பார். ஆனால் என்னால் அப்படி எல்லாம் முடியாது என்னால் ஒரு வளையம் போட்டு அதற்குள் எழுத முடியாது நான் சுதந்திரமாக கட்டுபாடு அற்று போகும், ஆற்று வெள்ளம் போல என் மனதில் என்ன தோன்றுகிறதோ அதை கிறுக்கி செல்வேன்.

      Delete
  3. வாழ்க்கை வாழ்வதற்கே, நிற்காமல் ஓடுங்கள் - அருமையான சொற்றொடர், அழகான புகைப்படத்துடன்.

    ReplyDelete
    Replies
    1. உங்களை போல பெரியவர்கள் ரசித்து பாராட்டுவது மனதிற்கு சந்தோஷம் அளிக்கிறது மிகவும் நன்றி

      Delete
  4. மதுரை தமிழனின் நகைச்ச்சுவை திறமை போதுமே கஸ்டமரை கவர்வதற்கு.

    ReplyDelete
    Replies
    1. மக்களை கவருவதற்காகவே நான் எனது நேம் டேக்கில் எனது பெயருக்கு முன்னால் எனது பெயரை சரியாக புரிந்து கொள்ள ஒரு கற்பனை பெயரை சேர்த்து இருக்கிறேன் அதை பார்ப்பவர்கள் சிரிக்காமல் செல்ல மாட்டார்கள் இந்தியர்கள் அதைப்பார்த்தால் ஒரு முழி முழித்து செல்வார்கள்

      Delete
  5. சிங்கம், மான் படத்தில் இரைக்குப் பதிலாக இறையை போட்டுள்ளீர்கள்.
    "சிங்கங்களுக்கு இறையானால் ஏன் வாழ்வை இழக்கும்"?
    இங்கிலாந்தில் இன்னும் "மே ஐ ஹெல்ப் யூ" எனத் தான் கேட்கிறார்கள்.
    பிரான்சில் இதெல்லாம் இல்லை. நாம் தான் விற்பனையாளரைத் தேடிச்
    செல்ல வேண்டும். வேண்டா வெறுப்பாகப் பேசுவார்கள். உண்மை!

    ReplyDelete
  6. தவறை சுட்டிக்காட்டியதற்கு நன்றி விரைவில் அதை திருத்துகிறேன்

    ReplyDelete
  7. இவ்வளவு பணிய வேண்டுமா.....?



    ReplyDelete
  8. ம்ம்ம் எப்படியோ நிறைய போலிப் பேச்சுக்கள் வேண்டும் இல்லையா...கஷ்டம்தான்...இங்கு அடிக்கடி சொல்லுவது...கையில பை, கழுத்துல டை, வாயில பொய் அப்படினு....மார்க்கெட்டின்ன் திறமை என்பது ஒரு ஆர்ட். வெறும் ஓட்டமில்ல....காலில் சக்கரம் கட்டிக் கொண்டுதான் ஓட வேண்டும் இந்தப் போட்டி உலகில்.....

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.