உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Monday, February 2, 2015

அசூரனுடன் கேஜ்ரிவால் நடத்தும் டில்லி போராட்டம் & டில்லி வேட்பாளர்கள் விபரம்அசூரனுடன் கேஜ்ரிவால் நடத்தும் டில்லி போராட்டம் & டில்லி வேட்பாளர்கள் விபரம்

டில்லியில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. மோடி அலை அடிக்கும் போதே எளிதாக  அநேக இடங்களை பிடித்தவர்  அரவிந்த் கேஜ்ரிவால். ஆனால் அந்த மோடி இப்போது அசூர பலத்துடன் மத்தியில் அமர்ந்திருக்கும் போது வந்த இந்த தேர்தல் களத்தில் அனல் பறக்கிறது. இப்படி அனல் பறக்க காரணமானவர் அரவிந்த் கேஜ்ரிவால்தான். அவர்தான் மோடி என்ற அசுரனனை கடுமையாக எதிர்த்து நிற்கிறார்,


மோடியை தேர்ந்தெடுத்தால் இந்தியாவின் வளர்ச்சியில் மிகவும் மாற்றம் வரும் என்று எதிர்பார்த்த மக்களின் மனதில் இப்போது மாற்றத்திற்கு பதில் ஏமாற்றமே வந்து இருக்கிறது. இந்தியாவை மாற்றுவேன் என்று சொன்ன மோடி இப்போது ,பச்சோந்தி இடத்திற்கு தகுந்து தன் நிறத்தை மாற்றிக் கொள்வது போல அவர் தன் உடைகளைதான் மாற்றிக் கொண்டிருக்கிறாரே ஒழிய இந்தியாவில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை.

அதானல்  டில்லி மக்கள் அவருக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்க தாயாராகிவிட்டனர் என்று ஊடகங்களும் மத்திய புலானாய்வு துறையும் தெரிவிக்கின்றனர். டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற வாய்ப்புள்ளதாக வெளியான கருத்துக்கணிப்பு மோடியை மட்டுமல்ல பா.ஜனதாவையும்  பதறவைக்கிறது.

தலை நகரில் தோல்வி அடைந்தால் தனக்கு இழுக்கு என்று நினைத்த மோடி  அரசாங்கத்தின் முழுபலத்தையும் அங்கு இறக்கிவிட்டது மட்டுமல்லாமல் கிரண் பேடியை முதல்வர் வேட்பாளாராக களம் இறக்கி  உள்ளார். இந்த கிரண்பேடியோ கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வரை ஓடியை கடுமையாக எதிர்த்து விமர்சித்தவர். டெல்லி பிஜேபி கட்சியின் கடும் எதிர்ப்பையும் மீறி முதல்வர் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டார்.  டெல்லி பிஜேபி அலுவலகம் முன்பு இதனால் பல்வேறு ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றது. இவரை முதல்வர் வேட்பாளராக அறிவித்தை பிஜேபி கட்சியினரே விரும்பவில்ல. அதனால் திராவிட கழக கட்சிகளில் உள்குத்து வேலை செய்வது போல பிஜேபி கட்சியினரும் செய்ய ஆரம்பித்துவிட்டனர்


போலீஸ் கமிஷனராக இருந்த போது  & அண்ணா ஹசாரே அவர்களுடன் இணைந்து IAC இயக்கத்தில்  தைரிய்மாக போராடிய கிரண் பேடியால் பிஜேபியில் சேர்ந்த பின் பேசக்கூட இயலவில்லை. டைம் டிவியில் அவரிடம் கேட்கபட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் பப்ளிக்காக எழுந்து ஒடினார். இவரின் இந்த செயல் டில்லி மக்களிடம் இழிவாக பேசப்பட்டு கடுமையாக விமர்சிக்கப்படுகிறார் என்று பல தரப்பட்ட ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன

இப்படி டிவியில் வைக்கப்பட்ட கேள்விகள் இப்போது மக்கள் மன்றத்தில் வைக்கப்படுகிறது

1. 8 மாதங்கள் முன்பு வரை மோடியையும் பிஜேபி கட்சியையும் கடுமையாக விமர்சித்த நீங்கள் அதே கட்சியின் முதல்வர் வேட்பாளராக வந்தது எப்படி? இந்த முடிவு முன்பே உங்களுக்கு அறிவிக்கப்பட்டதா? (அதாவது, முதல்வர் வேட்பாளர் பதவி கொடுப்பதாக சொன்ன பிறகு தான் கட்சியில் இணைந்தீர்களா?)

2. வேட்பாளர்கள் மற்றும் கட்சி தலைவர்கள் இடையே நேரடி விவாதங்கள் அதிகம் நடைபெற வேண்டும் என்று வலியுறுத்திய நீங்கள் தற்பொழுது கேஜ்ரிவால் நேரடி விவாதத்திற்கு அழைப்பு விடுத்த பின்பு அதை ஒப்புக் கொள்ள பயப்படுவது ஏன்?

3. கட்சியில் இணையும் போது கேஜ்ரிவால் அவர்களுடன் நேரடியாக மோத தயார் என்று அறிவித்த நீங்கள் பிஜேபி 20 வருடங்களாக தொடர்ந்து வெற்றி பெற்ற தொகுதியில் போட்டியிடும் காரணம் என்ன?

4. கேஜ்ரிவால் அரசியலில் நுழையும் முடிவை எடுத்த போது அவர் அண்ணா ஹசாரே அவர்களை கலந்தாலோசிக்காமல் முடிவு எடுத்தாக குற்றம் சாட்டிய நீங்கள் தற்பொழுது அண்ணா ஹசாரேவிடம் சொல்லாமல் பிஜேபி கட்சியில் இணைந்த காரணம் என்ன? இந்த கேள்வியை கேட்கும் சமயத்தில் கிரண் பேடி கோபத்தில் எழுந்து சென்றுவிட்டார்.

இவ்வளவு குழப்பத்தில் இருக்கும் பிஜேபியின் முதல்வர் வேட்பாளரும் அவரது வருகையை விரும்பாத பிஜேபி கட்சியும் டெல்லி மக்களுக்கு என்ன செய்ய முடியும் என்று பார்த்தால் பதில் ஒன்றுமில்லை என்றுதான் வருவதால் மக்களும் தங்களின் மனத்தை மாற்றி கேஜ்ரிவாலுக்குதான் தங்களின் ஒட்டு என்று நினைக்க ஆரம்பித்துவிட்டனர்

மோடி அசுரப்பலத்துடன் மோதும் போது கேஜ்ரிவால் மக்கள் பலத்துடன் அவரை எதிர்த்து நிற்கிறார். இந்த போட்டியில் கேஜ்ரிவால் வெற்றி பெற்றால் டில்லி மக்களுக்கு அதிக பலன் கிடைக்கவில்லை என்றாலும் இந்திய மக்களுக்கு நல்ல பலன் கிடைக்கும் காரணம் இந்த தோல்வியால் மோடியின் மனதில் சிறதளவு பயமாவது வந்து மீதமுள்ள தன் ஆட்சிகாலத்தில் மக்களுக்கு  ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற ஆர்வதும் தோன்றும்

ஆம் ஆத்மி கட்சி கடந்த மூன்று மாதங்களாக டெல்லி மக்களின் தேவைகளை அவர்களோடு சேர்ந்து ஆலோசித்து அதற்கான வழிமுறைகளை முன்வைத்து இந்த தேர்தலை சந்திக்கிறது. எந்த விதமான விவாதங்களுக்கும் தயாராக உள்ளது. கடந்த ஒரு மாதமாக வேட்பாளர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முடிவை டெல்லி மக்கள் ஏற்கனவே எடுத்து விட்டனர்.


மோடியின் அலையுடன் கூடிய ஒட்டு மொத்த மத்திய அரசின் பலமும் சாதாரண இரண்டு வருட கட்சிக்கு எதிராக பயன்படுத்தப்படுகிறது. ஆனால் மோடியின் அசுரப்பலத்திற்கு முன் மக்கள் சக்திதான் இறுதியில் வெற்றி பெறும். அவர்கள் தான் ஆம் ஆத்மி கட்சியின் பலம்
 
நெட்டில் கிடைத்த தகவல்களை கொண்டு நான் உருவாக்கிய சார்ட்
அன்புடன்
மதுரைத்தமிழன்

5 comments :

 1. ஒரு அதிர்ச்சி வைத்தியம் மோடிக்குத் தேவைதான் ஆர்.எஸ் எஸின் இன மதவெறி பாஜக ஆட்சிக்கு வந்தபின் கட்டுக்கடங்காமல் போவது போல் இருக்கிறது ஒரே cacophony of noises.

  ReplyDelete
 2. கிரண் பேடி பற்றி மிகவும் ஒரு நல்ல அபிப்ராயம் எனக்கு ஒரு காலத்தில் இருந்தது. அதுவும் அவர் ஒரு பெண், ஐபிஎஸ் அதிகாரியாக, திஹார் ஜெயிலில் கைதிகளுக்கு நல் வழிகாட்டியவர் என்ற உயர் எண்ணம் இருந்தது. சொல்லப் போனால் அவர் ஹசாரேவுடன் இணைந்த போது கூட "எதற்கு இவர் இதில் எல்லாம்...இணைந்துதான் செய்ய வேண்டுமா? தனியாகவே நல்லது செய்யலாமே அமைதியாக என்று நினைக்கத் தோன்றியது...சரி ஹாசாரே தானே போனால் போகின்றது என்ற எண்ணம்...பின்னர் ஆம் ஆத்மி....அதுவும் ஏன் என்ற எண்ணம் பின்னர் அவர் பிஜேபி க்கு தாவியதும் இருந்த நல்ல எண்ணம் எல்லாம் போய் விட்டது இவரும் எல்லோரைப் போலவும்தான்...என்று..என் .மனதில் தோன்றிய உங்கள் கேள்விகள் ..ஆஹா போட வைத்தது....

  கீதா

  ReplyDelete
 3. தன்னை இவ்வாறாக ஈடுபடுத்திய வகையில் கிரண்பேடி மற்றவர்களைப் போல தன்னையும் சாதாரணமானவர் என்று நினைக்கவைத்துவிட்டார். அவர்மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கைகளையும், நல்ல எண்ணங்களையும் தூக்கி எறிந்துவிட்டார். பதவி என்பதன் மீதான மோகம் எந்த அளவிற்கும் இட்டுச்செல்லும் என்பதற்கு இவர் முன்னுதாரணமாக ஆகிவிட்டார்.

  ReplyDelete
 4. சீரியசான அரசியல் கட்டுரையா இருக்கே.
  கிரன்பேடிக்கு இது தேவைதானா? தங்கள் மதிப்புகளை அவர்களே தாழ்த்திக் கொள்கிறார்கள்.கேஜ்ரிவால் இந்த முறையாவது கோமாளித் தனங்கள் ஏதும் செய்யாமல் மக்கள் அபிமானத்தை பெற வேண்டும்

  ReplyDelete
 5. கிரேன் பேடி என்று சொல்லின் கொண்ட கிரண் பேடியின சாயம் வெளுத்துத்து தான் மிச்சம்

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog