உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Saturday, January 10, 2015

மோடியின் வாய் என்ன வாயோ..?.மோடியின் வாய் என்ன வாயோ..?..


மோடி வாழ்த்தினால் அது நடக்காது என்று உணரப்படுகிறது ...அதுமட்டுமல்ல மோடி யாரிடம் நட்பு கொள்கிறாறோ அவர்களுக்கு அழிவு காலம் தொடங்கிவிட்டது என்றே கருதலாம். அது மோடியின் ராசி


அத்வானியிடம் மிகவும் நட்பு பாராட்டி அவருக்காக உழைத்தார். ஆனால் அத்வானியின் இப்போதைய நிலையை நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன


வைகோ அன்புமணி விஜயகாந்திடம் நட்பு பாராட்டினார் ஆனால் அவர்களின் நிலமை மிகவும் மோசமாகிவிட்டதால் இந்த ஆள் கூட சேர்ந்தால் நிலமை இன்னும் மோசமாகும் என்று கருதி அவரிடம் இருந்து ஓடத் தொடங்கினர்


ஜெயலலிதாவிடம் நட்பு பாராட்டி தன்னை சந்திக்க வரும் போது உட்கார சொந்த சேரை கொண்டு வரு அனுமதி அளித்து மிகுந்த நட்பு பாராட்டியதால் தனி சேர் கொண்டு வந்த ஜெயலலிதாவுக்கு தனி ரூம் கிடைக்கும் அதிர்ஷம் ஏற்பட்டது.

ரஜினியிடம் நட்பு பாராட்டியதால் கோச்சடையான் லிங்கா படங்கள் தோல்வியைத் தழுவியது மட்டுமல்லாமல் அவர்து துணைவியாரின் சொத்துகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது

விஜய் கூட டீ தான் குடித்தார் அந்த அதிர்ஷட வாய்ப்புகளுக்கு அப்புறம் விஜயக்கு இறங்கு முகமாகவே இருக்கிறது

இறுதியாக இலங்கை அதிபருடன் மிகுந்த நட்பு பாராட்டி அவரை வாழ்த்தினர் அவ்வளவுதாங்க அவர் பதவி இழந்துவிட்டடு  அதிபர் மாளிகையை விட்டு வெளியேறும்சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது.

இதையெல்லாம் பார்த்த கலைஞர் எங்க மோடி தான் மீண்டும் கட்சிக்கு தலைவரானதை அறிந்து வாழ்த்திவிடுவாறோ என்று பயந்து பாஜாக வை திட்ட ஆரம்பித்துவிட்டார்.

சரி மற்றவர்கள்(மதுரைத்தமிழன்) என்ன நினைக்கிறார்கள் கருதுகிறார்கள் என்று பார்ப்போமா?

இப்படி மோடியின் ராசியை அறிந்த ஒரு இந்திய பெண்மணி தன் கணவனிடம் என்னங்க நாளை உங்கம்மாவுக்கு பிறந்த நாளாம் உங்க அம்மாவை வாழ்த்த சொல்லி ஒரு கோரிக்கை வையுங்களேன் என்றார்.

மோடியிடம் உலகத்தலைவர்கள்  மோடி சாப் தீவிரவாதிகளை வாழ்த்தி ஒரு அறிக்கை இடுங்களேன்  என்று கெஞ்சுகிறார்கள்..

பாகிஸ்தான் சீனா போன்ற பகை நாடுகளை அழிக்க இந்தியாவிற்கு ராணுவம் தேவை இல்ல நம்ம மோடி சாப் இந்த இரு நாடுகளும் நன்றாக இருக்க வேண்டும் என்று வாழ்த்தினாலே போதும் அந்த நாடுகள் அழிந்து போய்விடும்

அரக்கர்களை அழிக்க அந்த காலத்தில் யாகங்கள் நடத்தினர்கள் ஆனால் இந்த காலத்தில் மோடி வாழ்த்தினாலே போதும்

 தமிழர்களுக்கு உதவவே மோடி ராஜபக்சேவை மோடி வாழ்த்தினார். மோடியின் சாணக்கியதனதிற்கு இது ஒரு உதாரணம்

 அதனால் மக்களே 2016 தேர்தலை மறக்க வேண்டாம்
அன்புடன்
மதுரைத்தமிழன்

10 comments :

 1. நகைச்சுவைக்காக எழுதப்பட்டது என்று தெரிகிறது, வெளியில் வாழ்த்தினாலும் புதிய ஆட்சியை ஏற்படுத்த இந்திய அரசு தொடர்ந்து முயற்சி எடுத்தது என்பது உண்மை, குறிப்பாக மஹிந்த சுமுகமாக வெளியேறியது. ( நாங்கள் நடக்கவே நடக்காது என்று நினைத்தது)

  ReplyDelete
  Replies
  1. அது மஹிந்த குடுமி அமெரிக்கனிடம் இருந்ததால் :p இல்லையெனில் போயிட்டு தான் அடுத்த வேலை பார்த்திருப்பான்

   Delete
 2. அதுசரி... மோடிக்கு இம்புட்டு ராசி இருக்கா?

  ReplyDelete
 3. நீங்கள் மோடியின் செயல்பாடுகள் எதையும்
  ஆதரிக்காதன் காரணம் இதுதானா ?
  இதை படித்ததும் நானும் எதிர்த்து
  எதையாவது எழுதலாம் என நினைக்கிறேன்

  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. ராசிக்கார மோடி
  தம +

  ReplyDelete
 5. ஹஹ்ஹஹ் அட இப்படியும் ஒரு கோணமா மோடிக்கு! அதுசரி தமிழா மோடியிடம் சொல்லுங்கள் உங்கள் வீட்டிலிருக்கும் பூரிக்கட்டைகள் எல்லாம் மாயமாகிவிடுமே...சகோதரி ராசியாடுவாங்க....ஹஹ்ஹ

  ReplyDelete
 6. அறம் செய்கிறாரோ இல்லையோ, அறம் பாடுவதில் வல்லவர் போலும்.

  :)))))))))

  ReplyDelete
 7. நீங்கள் சொன்னதெல்லாம் உண்மை ,ராசி என்பதும் உண்மைதானா யோசிக்க ஆரம்பித்தது விட்டேன் :)
  த ம 4

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog