உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Wednesday, January 28, 2015

இணையத்தில் மோடியை ஜோக்கராக்கிய போட்டோஇணையத்தில் மோடியை ஜோக்கராக்கிய  போட்டோ
அதிபர் ஒபாமா சந்திப்பின் போது அவருடன் மோடி எடுத்து கொண்ட இந்த படம் அதிக அளவில் எல்லோராலும் பகிரப்பட்டு நகைக்கப்பட்டது. மோடி இந்தியர்களிடம் பேசும் போது ஒரு கம்பிரமான தலைவராக காட்சி அளிக்கிறார் & கர்ச்சிக்கிறார் ஆனால் அதே மோடி அமெரிக்க தலைவரிடம் பேசும் போது  எடுக்கப்பட்ட படங்களை பார்க்கும் போது அப்படி காணத் தோன்றவில்லை.  தன் இமேஜை உயர்த்தி கொள்ள அதிக செலவு செய்யும் மோடி பாடிலாங்குவேஜ்க்கு அதிக முக்கியத்துவம் தராததால் இப்படி எல்லோராலும் நகைக்கப்படுகிறார். இதில் அவர் அதிக கவனம் செலுத்த வேண்டும்.இணையத்தில் ஜோக்காரக்கி பார்க்கபட்ட அந்த போட்டோவை பல இடங்களில் பார்த்து அவர்கள் சொல்லும் கமெண்டடை படித்ததும் வாய்விட்டு நிஜமாகவே சிரித்தேன். அதில் நான் பார்த்து ரசித்த படங்களையும் மேலும் அந்த படத்திற்கு நான் இட்ட நக்கல் கமெண்ட்களையும் இங்கே உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். நீங்களும் மகிழ்வதற்காக..

இந்த வாரத்தில் இது மோடியைப்பற்றிய மூன்றாவது பதிவு. இந்த வாரம் மோடி ஒபாமா டிரெண்டாக இருந்ததால் இப்படி ஒரு நிலமை..  சாரி


அன்புடன்
மதுரைத்தமிழன்

8 comments :

 1. ஒரு புகைப்படம் பல கதைகள் சொல்கின்றது என்பதன் பொருளை இப்பொது தெளிவாக அறிந்தேன். நன்றி.

  ReplyDelete
 2. மோடி டைம்ஸ் னு ஒரு பத்திரிக்கையே தொடங்கலாம் போலிருக்கே .
  நல்ல என்டர்டைன்மென்ட்

  ReplyDelete
 3. ஹா ஹா... செம காமெடி.... நானும் முகநூலில் பார்த்திருந்தேன்.... நம்ம ஆட்களின் கற்பனைத் திறன் அலாதியானது...

  ReplyDelete
 4. அட 4300 முறை கோட்டில் தங்கத்தில் உங்க பெயரை எழுத சொன்னீங்க, அவங்க கணக்கில் வீக் போல இருக்கு. 4298 முறை தான் எழுதி இருக்காங்க. அதுக்காக இப்படி கோச்சிக்கிரீங்களே!

  ReplyDelete
 5. ஹஹஹஹ் மோடியை ஓட்டியே....ஹ்ஹஹ சரி மோடியின் இந்த கோட் சூர் ஃபேமஸ் ஆகிடும் பாருங்க....மோடி கோட் என்று...மோடி பதவியேற்ற போது மோடியின் குர்தா மோடிக் குர்த்தா என்று அவருக்குத் தைக்கும் அந்த குஜராது தையல் காரர் (பாருங்க அந்தத் தைஅய்ல் காரரும் ஃபோடோக்கு போஸ்) பற்றி ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய்ய் ய கட்டுரையே வந்தது மட்டுமல்ல அந்தத் தையல் காரர்ருக்கு ஏகக் கிராக்கியாம் மக்கள் எல்லோரும் மோடி ஸடைல் குர்த்தா தைக்கக் கேட்டு ....அந்தக் குர்தா எப்படி மோடிக்குத் தைக்கப்படுகின்றது என்பதிலிருந்து அவர் ஜிகு ஜிகு பளிச் கலரில் தான் போடுவார் என்று...பிடித்த கலர் என்றெல்லாம் ...அதான் இந்தக் கோட் ?

  ReplyDelete
 6. modi paavam..kiran bedi paththi konjam ezhuthunga..

  ReplyDelete
 7. படங்களும் அதற்கான கருத்துக்களும் அருமை.

  ReplyDelete
 8. மோடி சார் !!! இந்த அவமானம் உங்களுக்கு தேவையா??

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog