Sunday, January 18, 2015



 
செல்போன்முன் செல்லாக் காசாகி போகிவிட்டாரா கோபிநாத்


இருபது வருஷங்களுக்கு முன்பு செல்போன் உலகையே ஆட்டிப்படைக்கப் போகிறது என்று யாராவது விளையாட்டுக்காகக் சொல்லி இருந்தால் கிறுக்கன் ஏதோ உளருகிறான் என்று சொல்லி சென்று இருப்பார்கள்.  ஆனால் உண்மையில்  என்ன நடக்கிறது என்று பார்த்தால் செல்போன்  மக்களை அடிமைப்படுத்திவிட்டது. அதை யாரும் மறுக்க இயலாது. இதைப் பயன்படுத்துவதில் மக்களிடையே சுய கட்டுப்பாடு இல்லாமல் போய்விட்டது.


ஒவ்வொருவோரின் வாழ்க்கையில் கல்யாணம் என்பது இனிய தருணம் ஆனால் அந்த இனிய தருணத்தில் கூட செல்போனின் செல்வாக்கு அதிகரித்துவிட்டது.வாழ்க்கையில் துணையில்லாமல் கூட இருந்துவிடலாம் போல ஆனால் செல்போன் இல்லாமல் இருப்பது இனி இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்,

சமுகத்திற்காக ஆவேசப்பட்டு அறிவுறைகளை நீயா நானாவில் அள்ளித் தெளிக்கும் இந்த கோபிநாத்   மணமேடையில்   அப்பாவியாக வாயைமுடி கிடக்கச் செய்துவிட்டது இந்த செல்போன்


இதுதான் நேரம் என்பதோ?

கொசுறு :மனதில்பட்டதை இங்கே பதிந்து இருக்கிறேன். இதற்கும் இந்த பதிவிற்கும் சம்பந்தமில்லை
அன்புடன்
மதுரைத்தமிழன்







8 comments:

  1. செல்போன் நம்மை வேறொரு உலகிற்கு அழைத்துச்சென்றுவிட்டது என்பதே உண்மை. அதனால் பெற்றததைவிட நாம் இழந்துகொண்டிருப்பது அதிகம். நல்ல பகிர்வு.

    ReplyDelete
  2. திருமணத்திற்கு வர முடியாத
    நாம் எதிர்பார்க்கிற சிலர் இதுபோல்
    வாழ்த்துச் சொல்வதுண்டு
    அது செல்போனினால் கிடைத்த நன்மையே
    என்பது என் கருத்து

    ReplyDelete
  3. டெக்னாலஜியினால், நன்மைகள் என்று சொல்லிக் கொண்டாலும், நன்மைகளை விட தீமைகள் விஞ்சி னிற்கின்றன. குறிப்பாக மனித உறவுகள் தொலகின்றன. சமூக உறவுகள் மட்டுமல்ல, குடும்ப உறவுகளும்....நீங்கள் சொல்லி இருப்பது மிக மிக உண்மையே! உண்மை சுடத்தானே செய்யும்.

    (சமூக வலைத்தளங்கள் பற்றி ஒரு பதிவு எழுதி கொஞ்சம் நகைச்சுவையாக....கணவன் மனைவி உறவு உட்பட....வெகு நாட்கள்...இல்லை மாதங்கள் ஆகிவிட்டன......அதை எழுதி முடிக்கும் முன் ஹிந்துவில் கிட்டத்தட்ட அதைப் போன்று ஒரு கட்டுரை வெளியானதால் அதை முடிக்காமல் அப்படியே கிடப்பில் போட்டுவிட்டோம். - கீதா)

    உங்களின் இந்தப் பதிவு மிகவும் அருமையான கருத்தைச் சொல்லும் ஒரு பதிவு...

    ReplyDelete
    Replies
    1. முகூர்த்த நேரத்தில் மணமக்களை செல்போனில் அழைப்பது தவறு!! வேண்டுமானால்மெஸேஜ் கொடுக்கலாம்! சிறிது நேரம் கழித்து பார்த்துக் கொள்வார்கள்!

      Delete
  4. போனில் வாழ்த்து சொல்லியிருப்பார்களோ என்னவோ? ஆனால் இந்த அலைபேசிகள் எல்லா இடத்திலும் தொந்தரவு செய்யவே செய்கின்றன!

    ReplyDelete
  5. செல்போன் வளர்ச்சியால் நாம் பெற்றதைவிட இழந்ததே அதிகம்...

    ReplyDelete
  6. பல் துலக்க மறப்போர்
    சிலரே ஆயினும்
    செல் துலக்கா விடுபவர்
    இல்லை இவ்வுலகில்

    நன்றியுடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  7. யார் கண்டது கோபிகூட தனக்கு வந்த அழைப்புக்கு நன்றியை தெரிவித்துவிட்டு மணமகளிடம் கைபேசியை தந்து பேசச்சொல்லி இருக்கலாம். இனி கல்யாண வீடுகளில் மணமக்களின் பண கவர்கள் cover) கவனிக்க ஆள் இருப்பதுபோல் அவர்கள் செல்போன் செய்திகளை கவனிக்கவும் ஆள் போடவேண்டியது தான்:) கோபி மனைவி திருத்தமான, அழகா இருக்காங்க பாஸ்:))

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.