உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Sunday, December 7, 2014

புத்தன் vs உத்தமன் - ஒரு கிறுக்கனின் கிறுக்கல்கள்புத்தன் vs உத்தமன் - ஒரு கிறுக்கனின் கிறுக்கல்கள்

புத்தனை போற்றும் இந்த உலகம்

இந்த உத்தமன் மதுரைத்தமிழனை போற்றுவதில்லை

புத்தனுக்கு ஞானம் வந்தது போதி மரத்தடியில்
ஆனால் இந்த மதுரைத்தமிழனுக்கு ஞானம் வந்ததோ பேஸ்புக் தளத்தில்தான்

ஆசையை துற என  சொல்லி வாழ்ந்தான் புத்தன்
ஆனால் ஆசையெல்லாம் புதைத்து விட்டு வாழ்கிறான் இந்த மதுரைத்தமிழன்

புத்தன் சொல்லி சென்றதோ வாழ்க்கை தத்துவங்களை
ஆனால் இந்த மதுரைத்தமிழன் பதிவிட்டு செல்வதோ நகைச்சுவை தத்துவங்களை

புத்தனுக்கோ உலகம் முழுவது பல லட்சம் பாலோவர்கள்
ஆனால் இந்த மதுரைத்தமிழனுக்கோ நூற்றிக்கணக்கில் மட்டுமே

அதனால் மக்களே இந்த நவீனகால புத்தனை அவரது https://www.facebook.com/avargal.unmaigal பேஸ்புக் தளத்தின் வழியாக பாலோவர்களாக இணைத்து ஆதரவு தர வேண்டுகிறேன். அப்படி இல்லைன்னா இந்த மாதிரியான மொக்கைகள் தொடரும்


டிஸ்கி: குழந்தையை தமிழ் கற்க அனுப்பி வைத்துவிட்டு அவள் வரும் வரைக்கும் காரில் அமர்ந்து மழையை ரசித்து பார்த்த போது மண்டையில் உதித்தவைகள் தான் இந்த கிறுக்கல்கள்

அன்புடன்
மதுரைத்தமிழன்


8 comments :

 1. தொடர்ந்துட்டா போச்சு! ஆனா உங்க மொக்கைகள்தானே?!! எங்களுக்கு பிடிச்சுருக்கு!

  ReplyDelete
 2. அடுத்த முறை பாப்பாவை கிளாஸ் ல விட போகும்போது தயவு செய்து லேப்டாப் போ, அல்லது டேபிலட்டோ எடுத்துட்டு போங்க பாஸ்:((( ஆனா ஒரு விஷயத்தை பாராட்டனும் இப்போ யோசிக்கவெல்லாம் தொடங்கி இருக்கிங்களே!!!!!!

  ReplyDelete
 3. நீங்க இப்படி தொடர்ந்து மொக்கையா போட்டு சாவடிசாலும் நான் அந்த பக்கம் வரமாட்டேன் பாஸ். ஏன் என்றால் அங்க வந்த இன்னும் பல மொக்கைகளை சந்திக்கவேண்டிவருமே:)))

  ReplyDelete
 4. அவர்கள் உண்மைகள வலைதளத்தில் மதுரைத்தமிழனை போற்றினால்..... உலகம் போற்றியது என்றுதானே அர்த்தம்....மொக்கைகள் தொடர்ந்தால் உலகம் எப்படி போற்றும்....................

  ReplyDelete
 5. எப்போதே தொடர்ந்து விட்டேனே...!

  ReplyDelete
 6. பேஸ்புக்கிலும் நீங்க போடுற மொக்கைகளை படிக்கசொல்றீங்களே, புத்தரே, எங்களை இந்த மதுரைத் தமிழனிடமிருந்து காப்பாற்று.

  ReplyDelete
 7. அதான் இணைச்சுருக்கோம்ல....ஆதரவு தர்ரோம்ல....

  ReplyDelete
 8. ரசித்தேன் மதுரைத் தமிழரே..... :)

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog