உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Thursday, December 4, 2014

டீன் ஏஜ் பருவத்தினர் செய்யும் விபரீதங்களும் அதை பரவவிடாமல் தடுத்த பேஸ்புக் சமுகதளமும்


டீன் ஏஜ் பருவத்தினர் செய்யும் விபரீதங்களும் அதை பரவவிடாமல் தடுத்த பேஸ்புக் 


ஜஸ்பக்கெட் சேலஞ் பற்றி எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கும் அது ஆரம்பித்தது என்னவோ ஒரு நல்ல காரியத்திற்குதான். ஆனால் எத்தனை பேர் அதன் நோக்கத்தை புரிந்து கொண்டு கலந்தார்கள் என்று பார்த்தால் அதன் முடிவுகளும் ஆச்சிரியத்தைவே அளிக்கும். காரணம் அதன் நோக்கம் தெரியாமலும் நண்பர்கள் அழைப்பிற்காகவும் தனது படம் சமுகதளங்களில் வலம் வருவதற்காகவும் அதில் கலந்து கொண்டனர் பலர். அது மற்றவர்களும் தங்களை கவனிக்க வேண்டுமே என்ற நோக்கில் செய்யப்பட்டதாகவே இருக்கும்.

இந்த ஜஸ்பக்கெட் சேலஞ்சை போலவே பல சேலஞ்சுகள் தோன்றி மறைந்தன. ஆனால் அமெரிக்க டீன் ஏஜ் பருவத்தினரிடம் ஒரு விபரிதமான சேலஞ் தோன்றியது அதுதான் நெருப்பு சேலஞ் என்பது. அந்த சேல்ஞ்சில் தன் மீது நெருப்பை பற்ற வைத்து கொள்வது. அந்த சேலஞ்சும் நெருப்பை போலவே அமெரிக்க டீன் ஏஜ் பருவத்தினரிடம் பரவ ஆரம்பித்தது அதன் வீபரிதத்தை புரிந்து கொண்ட உள்ளுர் சமுக அமைப்புகள் தீயனைப்பு அமைப்புகள் அதற்கு எதிராக செயல்பட்டு அதை தடுத்து நிறுத்த முயற்சித்தது மேலும் பேஸ்புக் டுவிட்டர் நிறுவனத்தினரிடம்  வேண்டுகோள் விடுவித்து அதை ஹேஷ்டாஸ் # முலம் பிரபலம் அடைவதை தடுத்து நிறுத்த முயன்று அதில் வெற்றி பெற்றது

அந்த இரு நிறுவனங்களும் செய்த முயற்சிகளால் அது மேலும் பரவாமல் தடை செய்யப்பட்டது. இந்த மாதிரி சேலஞ்சுக்கள் மக்களிடம் பிரபல அடையவும் அதே நேரத்தில் சமுகத்தில் தாங்களும் கவனிக்கப்பட வேண்டும் என்ற நோக்கில்தான் செய்யப்பட்டது அந்த முயற்சி சமுகவலைத்தளங்களால் ஆதரிக்கபடாததால் வெற்றி பெறாமல் போய்விட்டது.

The latest in internet stupidity centers around teenagers who are lighting themselves on fire for what appears to be no reason other than to become internet famous. Many people have been injured or even sent to the emergency room.
Fire Challenge Compilation Video (Teens Are Setting Themselves on Fire)

இப்படி நடத்தப்பட்ட சேலஞ்சுகளின் வீடியோ தொகுப்பு உங்கள் பார்வைக்காக இங்கு பகிரப்படுகிறது.


நண்பர்களே முடிந்தால் இதை பார்த்துவிட்டு இதில் பங்கு ஏற்க செய்யுமாறு நம் அரசியல் தலைவர்களுக்கும் நடிகர் நடிகைகளுக்கு மட்டும் அழைப்பு அனுப்பி கலந்துக்க செய்யலாம்.


என்ன நான் சொல்வது சரிதானே?

அன்புடன்

மதுரைத்தமிழன்

11 comments :

 1. பொது மக்களுக்கு இது நல்லது அல்ல என்றாலும், அசையல்வாதிகளுக்கு நல்லது என்று நினைக்கின்றேன்.

  இதற்கு நான் 5 பேரை நாமினேட் பண்ணலாமா?

  ReplyDelete
 2. நன்றி..... டெல்லியில் ஒரு 500 சொச்சம் .. மற்றும் எல்லா மாநிலத்திலேயும் ஒரு 5000 சொச்சம்.. இதில .. எந்த ஐந்து... கண்புயுசன்..

  ReplyDelete
 3. ச்சே. இதெல்லாம் ஒரு விளையாட்டு...

  இந்த மாதிரி விபரீத விளையாட்டை
  என் எதிரிகள் செய்தால் கூட அதை அனுமதிக்க மாட்டேன்.

  ReplyDelete
 4. சில இந்திய அரசியல் தலைவர்கள் திடீர் புகழ் வெறியை பார்த்தால் இந்த முடிவுக்கு வந்திருப்பார்களோ ..

  ReplyDelete
 5. கடைசி வரி செம்ம!!

  ReplyDelete
 6. கிறுக்குப் பய புள்ளைகளா இருக்குதுங்களே!

  ReplyDelete
 7. இதையெல்லாம் அங்கீகரிக்கவே கூடாது

  ReplyDelete
 8. இதென்ன கிறுக்குத்தனமான விளையாட்டு...
  சின்னப்பிள்ளைத் தனமாவுல இருக்கு...

  ReplyDelete
 9. இது என்ன பைத்தியக் காரத்தனமான விளையாட்டு? அங்கு பெற்றோர் தரும் அளவுக்கு மீறிய சுதந்திரம் இதுபோன்ற செயல்களை செய்யத் தூண்டுகிறது. இங்கு பெற்றோரின் அளவுக்கதிகமான கட்டுப்பாடு வேறு சில செயல்களை செய்யத் தூண்டி விடுகிறது.

  ReplyDelete
 10. பரவாயில்லையே சமூக வலைத்தளம் ஒரு நல்லதை செய்திருக்கின்றதே! இறுதி வரியை பரிந்துரைக்கின்றோம்!

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog