உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Sunday, December 14, 2014

இந்திய தேசத்தின் அசிங்கங்கள், கருங்காலிகள் (ராமர் தேசத்தில் நடக்கும் லீலைகள்இந்திய தேசத்தின் அசிங்கங்கள், கருங்காலிகள் (ராமர் தேசத்தில் நடக்கும் லீலைகள் )

பெண்களுக்கு பாதுகாப்பை சிறிதும் கொடுக்காத துப்புகெட்ட ஆட்சிதான் இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது..


பொருளாதாரத்திலோ விளையாட்டிலோ தொழில் நுட்பத்திலோ இந்தியா வளர்கிறதோ இல்லையோ கற்பழிப்பில் சாதனை படைத்து கொண்டிருக்கிறது..


 பஸ்ஸில் ஒரு பெண்ணை  ஐந்து பேர் சேர்ந்து கற்பழிப்பு, கிழவியை இளைஞன் கற்பழிப்பு  ஜந்து வயது சிறுமியை முதியவர்  கற்பழிப்பு என்று செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது ஆனாலும் அதற்கு சரியான தண்டனைகள் தாராததால் என்னவோ இன்று ஒரு சிறு பெண்ணை ஒரு சிறுவன் பலாத்காரம் செய்ய முயற்சிப்பதை வீடியோவாக எடுத்து இணையத்தில் பரப்பும் அளவிற்கு தைரியம் அடைந்து இருக்கிறார்கள்


இந்த விடியோவில் உள்ள அயோக்கியர்கள் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியவில்லை நமது நாட்டில் உள்ள காவல்துறை உறங்கிக்கொண்டா இருக்கிறது .எவ்வளவு தைரியம் இருந்தால் ஒரு பெண்ணை இப்படி கடத்தி வந்து  பலாத்காரம் செய்து அதையும் இணையத்தில் பதிவேற்றம் செய்து உலவவிட்டிருப்பார்கள். இவர்களுக்கு இப்படி செய்யும் துணிச்சலை கற்று தந்து பெற்றோரா அல்லது நமது நவீன கால ஊடகங்களா அல்லது கையாலாகாத இந்திய அரசாங்கமா?

இனிமேல் இந்திய மக்கள் அரசாங்கத்தை எதிர்பார்ப்பது தவறு. யாருடைய கண்ணிலாவது இந்த நாய்கள் பட்டால் அல்லது இந்த நாய்களை யாராவது சந்திக்க நேர்ந்தால் தயவு தட்சணயம் பார்க்காமல்  நமது அரசாங்கத்துக்கு செலவுவைக்காமல் நமது காவல்துறையினரையும் சிரமப்படுத்தாமல் அறுத்து விட்டுவிடுங்கள்

இவர்கள் இந்திய தேசத்தின் அசிங்கங்கள், கருங்காலிகள் இவர்கள் வாழ்நாள் முழுவதும் தாங்கள் செய்த தவறை எண்ணிஎண்ணியே சாகவேண்டும் .


அன்புடன்
மதுரைத்தமிழன்

13 comments :

 1. வீடியோவாக எடுத்து இணையத்தில் பரப்புகிறார்களா? இந்த கொடுமையை எல்லாம் எங்கே சொல்றது?
  நீங்கள் சொல்வது மாதிரி அறுத்து விடவேண்டும் தான். இன்னும் என்னை கேட்டால், இவர்களை பார்க்க நேரிட்டால், கட்டிவைத்து கல்லால் அடித்தே கொல்ல வேண்டும்.

  ReplyDelete
 2. என்ன கொடுமைடா இது.

  ReplyDelete
 3. ஏற்கனவே எம்.எம்.எஸ் ஸ்கேண்டல்கள் இணையத்தில் பரவிக்கிடக்கிறது. எல்லோர் கையிலும் தவழும் ஸ்மார்ட் போன்களால் மாணவர்கள் சீரழியும் நிலை வந்துவிட்டது. இவ்வளவு தைரியம் நமது பாழாய் போன சட்டங்களால் வந்தது!

  ReplyDelete
 4. தானும் சீரழிந்து, நாட்டின் பெயரையும் கெடுக்கும் இவரகளைப் பிடித்து சட்டத்தின் கைகளில் ஒப்படைக்க வேண்டும்.

  ReplyDelete
 5. அறுத்து விடுவதும், கொல்வதும் தற்காலிகத் தீர்வாக இருக்கலாம். ஆனால் இப் பிரச்சனையின் ஆரம்பத்தை ஆராய்ந்தால் சரியான கல்வியின்மை, ஊடகங்களின் தாக்கம், அரசின் அலட்சியப் போக்கு, பெற்றோரின் பிள்ளைகள் வளற்கும் முறை, போன்ற பெருங்குறைகள் நம் நாட்டில் உடனடியாக கவனிக்கப்பட வேண்டும்.

  ReplyDelete
 6. ஷூட் அட் சட்! தமிழ் படத்தில் வருவது போல போலீஸ் உறங்குவதால் மக்கள் சட்டத்தைக் கையில் எடுத்தால் என்ன?! ஏனென்றால் அந்தப் பெண்ணைக் காப்பாற்ற பாழாய் போனச் சட்டமா வரப் போகுது....கருங்காலிங்க...இவனுங்கள எல்லாம் விட்டுவைக்கறதே தப்பு...பெண்களைப் பெற்றவர்கள் இனிமெல் தங்கள் மகள்களூக்குக் கராத்தே, ஜூடோ கற்றுக் கொடுக்க வேண்டும். துப்பாக்கிச் சுடும் பழக்கம் கற்றுக் கொடுத்து லைசன்ஸ் வைத்துக்கொண்டு துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி பெற வேண்டும்....தற்காப்பு மிக மிக அவசியம்...

  ReplyDelete
 7. நடக்கும் நிகழ்வுகள் மிகவும் வேதனையைத் தருவதாக உள்ளன. தொடர்ந்து இவ்வாறு நடப்பதென்பது ஈடு செய்ய முடியாத விளைவுகளை உண்டாக்கும். இவற்றைத் தடுக்க உடனடி நடவடிக்கை தேவை.

  ReplyDelete
 8. அந்தப் பெண்ணையும் ஒரு தாய் தான் பெற்றாள்.
  அந்தப் பையனையும் ஒரு தாய் தான் பெற்றாள்.

  வளர்த்த முறையில் தான் தவறு உள்ளது.

  நம் இந்தியர்கள் ஆண் பிள்ளைகளுக்குக் கொடுத்த அளவுக்கு மீறிய சுதந்திரம்.
  கட்டுப்பாடு இன்மை.
  ஆண் பிள்ளைகள் எப்படியும் இருக்கலாம் என்று வளர்க்கும் அலட்சியம்....

  இப்படியான காணொளிகள் இணையத்தைச் சுற்றுவது.....
  “பண்பாடு நிரம்பிய பாரதம்“ என்ற பெயர் உலக அளவில் அழிந்தேவிடும்.

  ReplyDelete
 9. இந்தியா எங்கே செல்கிறது ?

  ReplyDelete
 10. கொடுமையைக் கண்டு மனம் பதறுகின்றது..
  கடவுளே அந்தப் பெண்ணுக்கு எந்த துன்பமும் நேர்ந்திருக்கக் கூடாது!..

  ..... தின்னும் பன்றி கூட இதைப் போலச் செய்யாது..
  நல்ல சோறு தின்னும் இந்த நாய்களுக்கு புத்தி இல்லையே!..

  ஆண்டாண்டு காலமாக அழுது புரண்டாலும் சட்டம் இதையெல்லாம் தடுக்காதுங்க..
  பாதிக்கப்பட்டவங்கள்லாம் ஒன்னா சேர்ந்து - பதம் பார்த்து விடவேண்டும்..

  ReplyDelete
 11. நண்பரே பார்க்குபோது மனம் குமுறுகிறது..தயவு செய்து போலீஸ் இடமோ அல்லது அது தொடர்பான அதிகாரிகளிடமோ இந்த விடியோவை அனுப்பவும். இல்லையேல் இது தொடரும்...... உங்கள் கால்களில் விழுந்து கேட்கிறேன்........ நான் ஈழத்தில் இருக்கிறேன்... இல்லாவிடில் முதல் வேலையாக அதயே சாய்த்து இருப்பேன்......

  ReplyDelete
 12. Please......please god will help you... Please brother.... do this... am begging you.....
  if you send this you will do a good thing for you country.....

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog