Wednesday, December 3, 2014

இந்தியாவில் நடப்பதோ இப்படி ஆனால் அவர்களின் கனவுகளோ இப்படி!!!


இன்று நான் பேஸ்புக்கில் பார்த்த வீடியோ காட்சிகளை இங்கே பகிருகிறேன். அதை பார்த்துவிட்டு உங்கள் மனதில் பட்டதை எழுதுங்கள்.

இந்தியாவில் நடப்பதோ இப்படி





ஆனால் அவர்களின் கனவுகளோ இப்படி




வீடியோ 1:
இரண்டு பேரை மூன்று பேர் தாக்குகிறார்கள் அதை நூற்றுக்கும் அதிகமான பேர் பார்க்கிறார்கள். அவர்கள் அனைவரும் திரண்டு தங்கள் கையில் கிடைத்ததை வைத்து தாக்கி இருந்தாலே இப்படி நடக்காமல் அந்த  இருவரையும் காப்பாற்றி இருக்கலாம். ஆனால் அதற்கு தைரியமில்லாத பேடிகள் இலங்கை சீனா பாகிஸ்தான் தாக்கினால் நாங்கள் தக்க பதிலடி கொடுப்போம் என்று வாய்சவடால் விடுகிறார்கள்

வீடியோ 2 : 
மோடி ஆரம்பித்தது க்ளீன் இண்டியா மூவ்மென்ட். அவர் சொல்லுவது இந்த படத்தில் உள்ளது போல க்ளீன் இண்டியா ஆனால் செய்வது என்னவோ இந்தியாவை மொத்தமாக அந்திய நாடுகளுக்கு கூறு போட்டு விற்பதுதான். அதை புரியாமல் மக்கள் என்னவோ தங்கள் கற்பனை குதிரையை ஒடவிட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.


கற்பனைக்கும் ஒரு அளவில்லையா என்ன? இவ்வளவு அப்பாவியாவா இந்தியர்கள் இன்னும் இருக்கிறார்கள்


அன்புடன்
மதுரைத்தமிழன்


டிஸ்கி: நண்பர்களே இந்தியா முன்னேறக் கூடாது முன்னேற முடியாது என்று நான் சொல்லவரவில்லை இப்படியெல்லாம் நடந்தால் எப்படி இந்தியா முன்னேறும் என்பதுதான் என்னுடைய கேள்வி

10 comments:

  1. சுதந்திரத்த வாங்கி புட்டோம், அதை வாங்கி சுக்கு நூற உடைச்சி புட்டோம் . அம்புட்டுதேன்..

    ReplyDelete
  2. மக்களிலிருந்து மன்னர் வரை இங்கு எல்லோருமே சுய நலமிகளாய் அல்லவா செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம்.

    இது போன்றதொரு கற்பனை செய்ய எந்த ஒரு முன்னேற்பாடும் செய்யாமல் எதுக்கு இப்படியெல்லாம் படமெடுக்கறாங்க.... மக்களுக்கு சினிமா காட்டியே ஏமாத்திடலாம்னு நினைக்கிறாங்களோ

    ReplyDelete
  3. உண்மை கசக்கிறது.
    கனவு இனிக்கிறது...

    கனவு கண்டு கொண்டே இருக்க வேண்டியது தான்.

    ReplyDelete
  4. அருமையான பதிவு மதுரைத் தமிழன்.

    நம் மக்களில் மிகப் பெரும்பாலோர் வாய்ச் சொல் வீரர்கள்தான்;சுயநலமிகளும்கூட.

    இது என் அனுபவம். சேலத்தில், இரவு 09.00 மணி அளவில் சொந்த ஊர் செல்லப் பேருந்துக்காகக் காத்திருந்த போது[நிறுத்தத்தில் ஒரு ஓரமாக], பைக்கில் வந்த இரண்டு குடிகார ரவுடிகள்[இளம் வயது] என் மீது மோதினார்கள்.

    காலில் சிராய்ப்பு.

    “கண்ணில்லையா, இப்படி வந்து இடிக்கிறீர்களே?” என்று கேட்ட என்னை, “நீ ஒதுங்கி நிற்க வேண்டியதுதானே?” என்றதோடு ஆபாசமான வார்த்தைகளால் ஏசினார்கள்.

    ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் வேடிக்கை பார்க்க, நானும் அந்தக் குடிகாரர்களைக் கொஞ்சம் திட்டினேன்.

    என் பக்கம் நியாயம் இருப்பது தெரிந்தும் யாருமே வாய் திறக்கவில்லை.

    குடியர்கள் வாய் வலிக்கத் திட்டிவிட்டுப் போய்விட்டார்கள்.

    அவர்கள் போன பிறகு எனக்காக அனுதாபப் பட்டார்கள் சிலர்.

    “அடப் போங்கய்யா. உங்க அனுதாபம் யாருக்கு வேணும்?” என்று சீறிவிட்டு எனக்கான பேருந்து வர அதில் ஏறி ஊர் போய்ச் சேர்ந்தேன்.

    ரவுடிகளிடம் அடி உதை வாங்காததில் ஒரு வகை ஆறுதல்.

    நம் மக்களில் மிகப் பெரும்பாலோர் வாய்ச் சொல் வீரர்கள்தான்; சுயநலமிகள்தான்.

    ReplyDelete
  5. கற்பனையே மட்டமாக இருக்கிறது. நாம் நன்றாக இருப்பது போல் காட்டினால் பரவாயில்லை. வெளிநாட்டினர் நமக்கு சேவகம் செய்வது போல காட்டுவது கொடுமை! அதுவும் தலைப்பாகை எல்லாம் பார்த்தால் மன்னராட்ச்சிக்கு வழி வகுப்பது போல் உள்ளது!

    ReplyDelete
  6. வணக்கம் சகோதரர்
    எங்கோ நடக்கும் அவலங்களுக்கு வருந்தும் தங்கள் நல்ல உள்ளத்திற்கு முதலில் நன்றிகள். முதல் வீடியோவில் வேடிக்கைப் பார்க்கும் அவர்களைப் பார்க்கும் போது காரி உமிழத் தோன்றுகிறது அவர்கள் மேல். படம் பிடிக்கிறார்களே தவிர எவரும் தடுத்து நிறுத்தும் திராணி இல்லாதவர்களாக இருப்பது வேதனை.
    படம் 2:
    நல்ல கற்பனை. நடந்தால் மகிழ்ச்சி. நடக்குமா என்பது மில்லியன் டாலர் கேள்வி. இருந்தாலும் நேர்மறைச் சிந்தனையோடு சொல்லி வைப்போம் நம்ம பேரக் குழந்தைகள் காலத்திலாவது நடக்கும்..

    ReplyDelete
  7. நல்ல இடுகை.
    https://www.youtube.com/watch?v=VLUvslI6Qt8 (எச்சரிக்கை: மிகக்கோரமானது) காவலர் ஒருவர் சாலையில் உயிருக்குப் போராடுவதையே கண்டுகொள்ளாதவர்கள் பொதுமக்களுக்கு உதவுவார்களா?

    இரண்டாம் வீடியோவில், இந்த அற்ப புத்திகளுக்கு ரொம்பத்தான் ஆசை. பொருளாதாரம் வளர்ந்தால் போதுமா? மட்டமான வேலை செய்ய அடிமைகளும், பிச்சைக்காரர்களும் இருக்கும் இடம் நாகரீகமான மனிதர்களுக்கு ஏற்புடையதா?

    ReplyDelete
  8. வீடியோ 1 மிகவும் கேவலமான நிகழ்வு. இந்தியா ஹஹஹ முன்னேறும்? நெவர்! சுதந்திரம் கிடைச்சுருக்குன்னு சொல்லிக்கறோம்...கிடைச்சுருக்கு? கிடைச்சிருந்தா இப்படி நடக்க வாய்ப்பே இல்லையே! ஓ! ஒருவேளை இப்படி எல்லாம் செய்ய சுதந்திரம் இருக்குனு சொல்லிக்கறோமோ?!!

    கனவு கண்டுகொண்டே இருப்போம்....அதுதானே நம் வேலை!

    ReplyDelete
  9. idhu nee america irundhukinu solra... hmmm... india la irundhu unnoda pangalipa koduka vaendiyadhu thaana?? anga poetu india va pathi ippadi paysura...

    ReplyDelete
    Replies
    1. நண்பரே அமெரிக்க வந்த பின்தான் அதை ஒப்பிட்டு பார்க்கும் போது எது தவறு எது சரி என்று தெரிகிறது.. இங்கு கருத்து சொன்னவர்கள் எல்லாம் இந்தியாவில் இருப்பவர்களே அவர்களும் தவறை தவறு என்றும் சரியானதை சரி என்று கூறுகிறார்கள்.

      எனது பதிவுகள் எல்லாம் யாரையும் எந்த நாட்டையும் மட்டம் தட்ட வேண்டும் என்று நோக்கில் எழுதபடுவதில்லை.

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.