உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Thursday, December 18, 2014

பேஸ்புக்கில் இப்படியும் கிறுக்கலாம்


சின்னதாக ஒரு தகவல் :மற்றவர்களிடம் இருப்பது எல்லாம் நம்மிடமும் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. மற்றவர்களிடம் இருப்பதையே பார்த்துக் கொண்டிருந்தால், நம்மிடமிருப்பதை பார்க்கத் தவறிவிடுவோம்! திருப்தி என்பது வெளியில் இல்லை. நமக்குள்தான்! இருக்கிறது.  நாம் வாழ்வின் இறுதியில் தான், பொறாமையினால், எவ்வளவு நாட்களை வீணடித்திருக்கிறோம் என உணர வேண்டும் என்பதில்லை. அதை இப்போதே அறிந்து கொள்வோம். இறுதியில் நாம் கொண்டு போவது எதுவுமில்லைதானே 


அது எப்படிங்க நம்ம பக்கத்துவீட்டுகாரனுக்கு மட்டும் நல்ல மனைவி வாய்க்கிறாள்..(மைண்ட் வாய்ஸ் : நம்ம பக்கத்துவீட்டுகாரனும் இப்படித்தான் யோசிப்பான்ல}

நல்லவனாக இருப்பதற்கு திறமைகள் ஏதும் வேண்டாம் ஆனால் நயவஞ்சகனாக இருப்பதற்கு கெட்டிகாரத்தனம் வேண்டும்


நான் அழுவது யாருக்கும் தெரியாது காரணம் அழுவதெல்லாம்  குளிக்கும் போது அல்லது நீச்சல் அடிக்கும் போது மட்டும்தான்

கடவுளும் ஏர்போர்ட் செக்யுரிட்டியும் ஒன்றுதான் அவர்கள் இருவரும் நம்மை சோதனைக்கு உட்படுத்தவே செய்வார்கள்

கஷ்டம் வரும் போது கடவுள் நம்மை சோதிக்கிறார் என்று சொல்லுபவர்கள் வெற்றி என்று வரும் போது தம் முயற்சியால் வெற்றி பெற்றதாகவே கூறுகிறார்கள்


கோயில்களில் இருக்கும் கடவுளும் வேறுபாட்டு கண்ணோடதான் பார்க்கிறார். அதாவது பணக்காரனை தன் அருகில் வர அனுமதித்தும் ஏழைகளை சற்று தூரத்தில் வைத்தும்தான் பார்க்கிறார்


பெண்கள் ரொம்ப நல்லவங்க அவங்களை நாம மனைவியாக ஏற்றுக் கொள்ளதவரை

தப்புக்காண அளவு கோல்கள் காலத்திற்கு காலம் மாறிக் கொண்டே இருக்கிறது

லிங்கா பார்த்த அதிர்ச்சியில்தான் பாலசந்தர் ஹாஸ்பிடலில் சேர்ந்திருக்கிறார் என்று பேசிக்கிறார்களே அது உண்மையாங்க????


இயக்குநர் கே.பாலச்சந்தர் உடல் நிலை சீராக உள்ளது என டாக்டர்கள் தகவல்.. அதனால் அவரைப் பற்றி ஹோம் வொர்க் பதிவு எழுதி கொண்டி இருக்கும் பதிவர்கள் ஹோம் வொர்க்கை நிறுத்தி வைத்துவிட்டு   வேறு  பதிவுகள் எழுத செல்லாம்

தினதந்தியில் ரஜினி அபூர்வராகங்களில் நடித்தார் என்பதற்கு பதிலாக ஆபூர்வ சகோதர்கள் படத்தில் நடித்ததாக வந்த செய்தியை பார்த்த பின் போட்ட ஸ்டேடஸ் இது

கமலின் மார்க்கெட் சரிந்த நேரத்தில் ரஜினிதான் கமல் வேஷத்தில் ஆபூர்வ சகோதர் படத்தில் நடிச்சு கமலின் சரிந்த மார்க்கெட்டை சீறடையச் செய்தார். இது தெரியமா பல பேர் தினதந்தி நாளிதழை திட்டுகிறார்கள் # நாமவும் எதையாவது சொல்லி வைப்போம்.. ஹீஹீ


கலைஞர் பாணியில் மதுரைத்தமிழன் பதில் :
செய்தி :60 வயதை கடந்த என்னை டூயட் பாட வைத்தது கடவுள் எனக்கு கொடுத்த தண்டனை- லிங்கா படவிழாவில் ரஜினிகாந்த் பேச்சு///
மதுரைத்தமிழன் பதில் : தவறுகள் செய்பவர்களுக்குதான் கடவுள் தண்டனை தருவார் நல்லது செய்தவங்களுக்கு அல்ல. அப்ப ரஜினி என்ன சொல்ல வருகிறார் தான் நல்லவன் இல்லை என்று சொல்ல வருகிறாரா என்ன?

ஆந்திராவில் லிங்கா படவிழாவில் பேசும் போது புயலால் பாதிக்கப்பட்ட ஆந்திர மக்களுக்கு நிவாரண நிதி வழங்குவதாக அறிவித்த செய்தியை பார்த்த பின் போட்ட ஸ்டேடஸ்
ஒருவேளை ரஜினி அமெரிக்க வந்தால் சாண்டி புயலால் பாதிக்கப்பட்ட  எங்க மாநில(New Jersey) மக்களுக்கு நிவாரணநிதி  வழங்கினாலும் வழங்குவாரே தவிர தமிழ் நாட்டுக்கு நிதி தரமாட்டார்


ராஜபக்சேவின் அடுத்த ஆசை தமிழக சட்டசபை எப்படி நடக்கிறது என்று பார்க்க ஆசை அதையும் பாதுகாப்பாக பார்க்க இந்திய அரசாங்கம் வழி செய்யும்

பல லட்சம் மக்களை கொன்று  குவிக்க சட்டம் போட்டவனுக்கு (ராஜபக்சே) சிறப்பு வழிபாடும் சிறப்பு தரிசனமும் தரும் ஒரே கடவுள் திருப்பதி வெங்கடசலபதி மட்டுமே. # கோவிந்தா கோவிந்தா


ஜெயலலிதா முதலமைச்சராக அமர்ந்த இடத்தில்(சேரில்) உட்காராமல் ஆட்சி செய்யும் பன்னீர் செல்வம் ஜெயலலிதா சென்ற அதே சட்டமன்றத்திற்க்குள் ஆட்சி புரியாமல் வேற இடத்தில் வைத்து ஆட்சியை தொடர்வதுதானே நியாம்..  

திட்டக்கமிஷனுக்கு மாற்றாக புதிய அமைப்பு # புதிய கமிஷனுக்கு பெயர் மோ(ச)டி கமிஷனாமே... ?

ராமரை தந்தையாக ஏற்றுக் கொள்ளாத இஸ்லாமியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்றவர்கள் இந்தி மொழியை ஏற்றுக் கொள்ளாத தமிழர்கள் தங்கள் மூதையர்கள் வாழும் இடமான ஆப்பிரிக்காவுக்கு செல்லுங்கள் என்று சொல்லும் நாள் வெகு தூரத்தில் இல்லை


அன்புடன்
மதுரைத்தமிழன்
https://www.facebook.com/avargal.unmaigal/

 

10 comments :

 1. எல்லாமே நல்லா இருக்கு...:) டைட் செக்யூரிட்டி போல...:)) காப்பி பண்ணி கருத்து சொல்ல முடியலை....

  கடவுள் பற்றியதும், அதுக்கு முந்தினதும் அருமை.

  ReplyDelete
 2. சுவையான கருத்துக்கள்தான்! கிறுக்கி இருந்தாலும் கிறுக்குத்தனமா இல்லே! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 3. ஹஹஹஹஹ் எல்லா கிறுக்கல்களும் கலக்கல்கள்! ரசித்தோம்...தமிழா...

  ReplyDelete
 4. குசேலன் படத்தில் ரஜினியே "படம் ஓடுரதுகாக சொல்லுற டயலாக் எல்லாம் ஏன் நம்புறீங்கன்னு கேட்கிறாரே!! அவர் மேல என்ன தப்பு? அதுக்கப்புறம் நாம் தான் பெனாத்திக்கிட்டு இருக்கோம்:(((

  ReplyDelete
 5. பக்கத்து விட்டுக்காரன் மனைவி....... தத்துவம்.... ம்ம்ம்.... அருமை

  என் மைண்ட வாய்ஸ்...... அந்தாளு அம்மிக் குழவியால வாங்கறது இந்தாளுக்குத் தெரியவில்லையே....

  ReplyDelete
 6. எல்லாமே ரசிக்கும்படியாக இருக்கு.

  ReplyDelete
 7. மைண்ட் வாய்ஸ் ஜோக் டாப் டக்கர்

  ReplyDelete
 8. அங்கேயும் அப்ப கிறுக்குங்க படிச்சு ரசிக்கிறோம்

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog