Tuesday, December 23, 2014





பாலசந்தரின் மறைவு ஒன்றும் மற்றவர்கள் சொல்வதுபடி பெரும் இழப்பு அல்ல


இயக்குனர் கே.பாலசந்தர், 84, உடல் நலக்குறைவால், நேற்று காலமானார். அவர் இறப்பு செய்தி அறிந்ததும் ஓ....அவர் இறந்துவிட்டாரா  அப்படியா ஒரு காலத்தில் நல்ல படங்களை பார்த்து மகிழ தந்தவர் என்ற  மனதில் நினைத்து வேலைக்கு சென்றேன். வேலையில் இருந்து திரும்பி வந்ததும் செய்திதாள்களையும் சமுக தளங்களையும் பார்வையிட்ட போது இந்தியத் திரைத்துறைக்கு ஒரு மாபெரும் இழப்பு... ஒரு அற்புதமான படைப்பாளியை இழந்து தவிக்கிறது பாலசந்தர் மறைவு தமிழ் சினிமா உலகிற்கு பேரிழப்பு திரையுலகம் இன்னுமொரு ஈடுசெய்யமுடியாத இழப்பை சந்தித்திருக்கிறது. இது போன்ற போலியான அனுதாப செய்திகளாகவே இருந்தன.


பாலசந்தரின் மறைவு அவர்கள் குடும்பத்தினரான  மனைவி ராஜம், மகள் புஷ்பா கந்தசாமி, மகன் பிரசன்னா ஆகியோருக்கும் மிக நெருங்கிய உறவினர், மற்றும் நண்பர்களுக்கு மட்டுமே பெரும் இழப்பு. அவர்களை தவிர மற்றவர்கள் சொல்வது எல்லாம் போலி நடிப்பே தவிர பெரும் இழப்பு அல்ல அது ஒரு அதுதான் உண்மை.


இந்த வயதில் பாலசந்தர் என்று உடல்நிலை சரியில்லை என்று ஹாஸ்பிட்டலில் அனுமதிக் பெற்றரோ அன்றே அவரது நாட்கள் எண்ணபட ஆரம்பித்துவிட்டன என்பதுதான் உண்மை. நிலமை அப்படி இருக்கையில் இப்பொழுது போலிவருத்ததுடன் வேஷம் போட்டு அவர் மறைவு பெரும் இழப்பு என்று சொல்லும் மக்களில் எத்தனை பேர் அதுவும் அவரால் வளர்த்துவிட்டவர்கள் நேரில் சென்று நலம் விசாரித்தார்கள் என்றால் அது மிக சொற்பமே.

இப்போது அவர் இழப்பிற்கு பின் வரிந்து கட்டி அவர் இழப்பு பெரும் இழப்பு என்று சமுக தளங்களில் ஸ்டேடஸ் போடும் மக்கள் அவர் உடல்நிலை சரியில்லை என்று அறிந்த போது அவர் உடல் நலம் பெற பிரார்த்தித்து எத்தனை ஸ்டேடஸ் போட்டு இருப்பார்கள் என்று பார்த்தால் ஒன்று கூட இல்லை என்று சொல்லாம்.

மீண்டும் சொல்லுகிறேன் பாலசந்தரின் மறைவு அவர்கள் குடும்பத்தினர்களுக்கும் மிக நெருங்கிய உறவினர், மற்றும் நண்பர்களுக்கு மட்டுமே பெரும் இழப்பு மற்றவர்களுக்கு அல்ல அதனால் அவரின் குடும்பத்தார் இந்த இழப்பில் இருந்து மீண்டும் வரவும் அவரின் ஆத்மா சாந்தியடையவும் பிரார்த்திப்போம். வயது மூப்பு காரணமான ஏற்படும் இறப்பு என்பது இயல்பான ஒரு நிகழ்வு என்பதால் அவரது ஆன்மா இறைவனிடத்தில் இளைப்பாறட்டும்


பாலசந்தர் பற்றிய மேலும் சில செய்திகள்:

பாலசந்தர் திறமைசாலி.
ஆமாம் பாலசந்தர் மிக திறமையான ஆள்தான் அதில் சந்தேகமே இல்லை,
அவரின் படங்கள் சமுக சிந்தனை கொண்டவைகள்.
ஆனால் அவர் ஒன்றும் சமுகத்தை மாற்றவேண்டும் என்ற எண்ணத்தில் எடுக்கவில்லை எதை சொன்னால் படம் வெற்றி பெறும் என்ற நோக்கித்தில் எடுத்து அதில் வெற்றி பெற்றார்
அவர் அறிமுகப்படுத்திய நடிகர்கள் அனைவரும் புகழ் பெற்ற நடிகர்கள் ஆனார்கள்.
அவர் அறிமுகப்படுத்தவில்லை என்றாலும் அந்த நடிகர்கள் புகழ் பெற்று  இருப்பார்கள்.காரணம் இந்த நடிகர்கள் தங்களுக்கு நடிக்கும் திறமை இருப்பதால் மட்டுமே நடித்து புகழ் பெற்றார்கள். இந்த நடிகர்களை அறிமுகப்படுத்தி அவர்களின் திறமையை  பயன்படுத்தி கொண்டதால் மட்டுமே அவரின் படம் வெற்றிகளை தழுவியது என்று சொல்லாம் உதாரணமாக ரஜினியை அவர் அறிமுகப்படுத்தாமல் வேறுயாராவது ரஜினியை அறிமுகப்படுத்தி இருந்தாலும் ரஜினி வெற்றி பெற்று இருப்பார் என்பது உண்மை. காரணம் ரஜினிக்கு தான் சிறந்த நடிகராகி வெற்றி பெற வேண்டும் என் மன உறுதி கொண்டதால் மட்டுமே இது சாத்தியம் ஆனது.

அதனால் சொல்லுகிறேன் யாரையும் அளவிற்கு அதிகமாக தலையில் தூக்கி வைத்து ஆடவும் வேண்டாம்  அல்லது தெருவில் தூக்கி ஏறியவும்  வேண்டாம்.

வாழ்க்கை குறிப்பு:
1930 ஜூலை 9ம் தேதி திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள நல்லமாங்குடி கிராமத்தில்,  பிறந்தார். தந்தை கைலாசம், தாயார் காமாட்சியம்மள். நன்னிலத்தில் பள்ளியில் படிக்கும் போதே நாடகம் மற்றும் சினிமா மீது விருப்பம் கொண்டார். நண்பர்களை வைத்து திண்ணை நாடகங்களை நடத்தினார்.  திஅவர் மனதில் சினிமா ஆசை வளரத் தொடங்கியது.பின் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி., (விலங்கியல்) படிப்பில் சேர்ந்தார். கல்லூரியில் படிக்கும் போதும் கதை எழுதுவது, நாடகங்களில் நடிப்பது போன்ற திறமைகளை வளர்த்துக் கொண்டு கல்லூரிகளில் விழாக்களில் நாடகங்களை அரங்கேற்றினார். 1949ல் பட்டப்படிப்பை முடித்ததும், முத்துப்பேட்டையில் உள்ள பள்ளியில் ஓராண்டு ஆசிரியராக பணியாற்றினார். அங்கும் மாணவர்களை வைத்து நாடகம் நடத்துதினார்.

1950ல் சென்னை வந்தார். அங்கு மத்திய அரசின் அக்கவுண்டண்ட் ஜென்ரல் அலுவலகத்தில் கிளார்க் பணியில் சேர்ந்தார். அங்கு இருக்கும்போதும் கிடைக்கும் நேரத்தில் நாடக கம்பெனியில் சேர்ந்து நாடகம் இயக்கும் திறமையை வளர்த்துக்கொண்டார். அதன் பின் ஆங்கிலத்தில் வெளியான "மேஜர் சந்திரகாந்த்' என்ற நாடகத்தை தமிழில் மொழி பெயர்த்து இயக்கினார். இந்நாடகம் பெரும் வரவேற்பை பெற்றது. இதன் பின் நீர்க்குமிழி, சர்வர் சுந்தரம், மெழுகுவர்த்தி, நாணல், நவக்கிரகம் உள்ளிட்ட நாடகங்களையும் இயக்கினார்.

1965ல் எம்.ஜி.ஆர்., நடிக்கும் தெய்வத்தாய் என்ற படத்துக்கு வசனம் எழுத வாய்ப்பு வந்தது.  இதன்பின் சர்வர் சுந்தரம் படத்துக்கு வசனம் எழுதினார்.அதே ஆண்டு 1965ல் நீர்க்குமிழி என்ற திரைப்படத்தில் முதன்முதலாக இயக்குனராக அறிமுகமானார். நடிகர் நாகேஷ் கதாநாயகனாக நடித்தார். . இதன் பின் பல படங்களை இயக்கினார்.
1981ல் "கவிதாலயா" என்னும் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அதன் மூலமாக பிற இயக்குனர்களின் மூலம் பல திரைப்படங்களை அளித்தார்.

இயக்கிய திரைப்படங்கள்:

1.நீர்க்குமிழி,
2.நாணல்,
3.மேஜர் சந்திரகாந்த்,
4.பாமா விஜயம்,
5.அனுபவி ராஜா அனுபவி,
6.எதிர் நீச்சல்,
7.தாமரை நெஞ்சம்,
8.பலே கொடலு (தெலுங்கு),
9.பூவா தலையா,
10.சட்டெகலப்பு சடேயா (தெலுங்கு),
11.இரு கோடுகள்,
12.பத்தாம்பசலி,
13.எதிரொலி,
14.நவகிரகம்,
15.காவிய தலைவி,
16.நான்கு சுவர்கள்,
17.நூற்றுக்கு நூறு,
18.பொம்மா பொருசு (தெலுங்கு),
19.புன்னகை,
20.கண்ணா நலமா,
21.வெள்ளி விழா,
22.அரங்கேற்றம்,
23.சொல்லத்தான் நினைக்கிறேன்,
24.அவள் ஒரு தொடர்கதை,
25.நான் அவனில்லை,
26.அபூர்வ ராகங்கள்,
27.மன்மதலீலை,
28.அந்துலாணி கதா (தெலுங்கு),
29.மூன்று முடிச்சு,
30.அவர்கள்,
31.பட்டின பரவசம்,
32.அயினா (இந்தி),
33.நிழல்நிஜமாகிறது,
34.மாரோ சரித்ரா (தெலுங்கு),
35.தப்பு தாளங்கள்,
36.தப்பிடா தலா (தெலுங்கு),
37.நினைத்தாலே இனிக்கும்,
38.அந்தமானிய அனுபவம் (தெலுங்கு),
39.நூல் வேலி,
40.குப்பெடு மனசு (தெலுங்கு),
41.இடி கதா காடு (மலையாளம்),
42.கழகன் (தெலுங்கு),
43.வறுமையின் நிறம் சிவப்பு,
44.அகாலி ராஜ்யம் (தெலுங்கு),
45.அடவாலு மீகு ஜோகர்லு (தெலுங்கு),
46.எங்க ஊர் கண்ணகி,
47.தொலிகோடி கூடிண்டி (தெலுங்கு),
48.தில்லு முல்லு,
49.தண்ணீர் தண்ணீர்,
50.எத் துஜே கே லியே (இந்தி),
51.47 நாட்கள்,
52.47 ரோஜூலு (தெலுங்கு),
53.அக்னி சாட்சி,
54.பெங்கியாழி அரலிடா ஹூவு (கன்னடம்),
55.பொய்கால் குதிரை,
56.ஜாரா சி ஜிங்காடி (இந்தி),
57.கோகிலம்மா (தெலுங்கு),
58.எக் நய் பகலி (இந்தி),
59.அச்சமில்லை அச்சமில்லை,
60.ஈரடு ரேகேகலு (கன்னடம்),
61.கல்யாண அகதிகள்,
62.சிந்து பைரவி,
63.முகிலே மலிகே (கன்னடம்),
64.சுந்தர ஸ்வாப்நகலு (கன்னடம்),
65.புன்னகை மன்னன்,
66.மனதில் உறுதி வேண்டும்,
67.ருத்ரவேணா (தெலுங்கு),
68.உன்னால் முடியும் தம்பி,
69.புது புது அர்த்தங்கள்,
70.ஒரு வீடு இரு வாசல்,
71.அழகன்,
72.வானமே இல்லை,
73.திலோன் கா ரிஷ்தா (இந்தி),
74ஜாதி மல்லி,
75.டூயட்,
76.கல்கி,
77.பார்த்தாலே பரவசம்,
78.பொய்.
'டிவி' சீரியல்கள்
1. ரயில் சிநேகம்,
2. மர்மதேசம்
3. காசளவு நேசம்,
4. பிரேமி
5. காதல் பகடை,
6. கையளவு மனசு
7. சஹானா,
8. சாந்தி நிலையம்
9. அண்ணி
10. ரமணி வெர்சஸ் ரமணி
11. எங்கிருந்தோ வந்தாள்
12. நிலவை பிடிப்போம்
13. ஜன்னல் 1
14. ஜன்னல் 2, உள்ளிட்ட பல சீரியல்கள்.

இவர் பெற்ற விருதுகள்:

1968,- 1993ல் - தமிழக அரசு விருது
1973ல் - கலைமாமணி விருது
1974 முதல் 1994 வரை, - 12 முறை பிலிம்பேர் விருது (சவுத்)
1976, - 1982 - நந்தி விருது
1981ல் - பிலிம்பேர் விருது
1987ல் - மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது
1992ல் - அறிஞர் அண்ணா விருது
2008ல், - 39வது சர்வதேச திரைப்பட விழாவில், 'வாழ்நாள் சாதனையாளர் விருது'
2011ல் - தாதா சாகிப் பால்கே விருது.கவுரவ டாக்டர் பட்டங்களை, மூன்று பல்கலைகளிடமிருந்து பெற்றுள்ளார்.

டிஸ்கி : இறந்தவர்களுக்காக யாரும் அழுவதில்லை அவர்களால் நாம் பெற்ற இன்பங்களை அனுபவங்களை  நாம் மீண்டும் பெற முடியாமல் போகிறதே என்ற நமது இழப்பிற்காகத்தான் நாம் அழுகிறோம்
அன்புடன்
மதுரைத்தமிழன்















32 comments:

  1. டிஸ்கி சரியா சொல்லியிருக்கீங்க..( பாஸ் ரொம்பவே தெளிவா இருக்கீங்க.. ப்பா என்னா தத்துவம்..இல்ல இல்ல உண்மை..!).

    எல்லாமே எதிர்ப்பார்ப்பின் அடிப்படையில்தான்... அரிதாக யாரிடமோ எதிர்பார்ப்பு இல்லாத நேசம் இருக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. இது கனவா அல்லது நிஜமா என்று உங்கள் கமெண்டை பார்த்தவுடன் ஆச்சிரியப்பட்டேன் ,வரவிற்கும் கமெண்டிற்கும் நன்றி

      இங்கு 'தண்ணி' மிகவும் நல்லதண்ணியாக இருப்பதால் நானும் தெளிவாகத்தான் இருக்கிறேண் ஹீஹீ

      Delete
  2. நாகரீகம் கருதி, மரியாதை கருதிதான் இறப்புச் செய்திகளில் பேரிழப்பு என்றும் கண்ணீர் விடுவதாகவும் எழுதுவார்கள். நீங்கள் வலிக்க வலிக்க நிஜம் பேசுகிறீர்கள். சில சமயம் இனிப்பான பொய்களும் தேவைப்படத்தான் செய்கின்றன நண்பா.

    ReplyDelete
    Replies
    1. லாபத்திற்காக விற்கும் பத்திரிக்கைகள் நாகரீகம் கருதி அப்படி வெளியிடலாம் ஆனால் சமுகத்தளங்களில் பதியும் நாம் அப்படி அல்ல


      இனிப்பான பொய்களும் தேவைப்படுவது உண்மைதான் நான் மறுக்கவில்லை ஆனால் அது நட்புக்குள்ளும் உறவுக்குள்ளும் மட்டும்தான்

      Delete
  3. அவர் ஆத்மா சாந்தியுறட்டும்.
    எனக்கு மென்டலின் சிறீநிவாஸ் அவர்கள் மறைவு போல் இவர் மறைவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இத்தனைக்கும் சிறீநிவாஸ் போல் இவரையும் நான் ரசித்தவன், மதித்தவன்.
    ஒரு சாமானியனான எனக்கும், திரைப்படங்களில் வேறுபாடைப் புரியவைத்ததில் இவர் பங்கு அலாதி.
    நீர்க்குமிழி வெளிவந்த போது நான் 15 ஐயும் தொடவில்லை. ஆனால் அப்படத்தை சிரித்து, அழுது, ஆச்சரியப்பட்டு ரசிக்க வைத்தவர் இவர்.
    இவர் படங்களில் வசனம் மிகக் கூர்மையாக இருக்கும், பாடல்கள், இசைச் சங்கதிகள் தூக்கலாக இருக்கும்.
    அன்றைய, என்றைய சமுதாய, குடும்பச் சிக்கல்களே இவர் கதை. "பாமா விஜயம்" திரை மோகத்தைப்
    புட்டுவைத்தது.என்னை வெகுவாகக் கவர்ந்தது.
    உங்கள் பதிவு உண்மையைக் கூறுகிறது. ஆனாலும் இந்தப் "பேரிழப்பு" பாரம்பரியக் கடமைபோல்
    பத்திரிகைகள் தொடங்கியதைப் ,பதிவுலகு பின்பற்றுகிறது.
    இது சடங்கு!

    ReplyDelete
    Replies
    1. ///பாரம்பரிய கடமை போல பத்திரிக்கைகள் தொடங்கியதை பதிவுலகம் தொடர்கிறது. //

      மிக சரியாக சொன்னீர்கள். பத்திரிக்கை உலகம் வேறு பதிவுலகம் வேறு .பத்திரிக்கைகள் பல காரணங்களால் உண்மைகளை நேரடியாக சொல்லாமல் தங்களுக்கு ஏற்றவாறு வெளியிடுவார்கள் அதற்கு முக்கிய காரணன் விற்பனை.. ஆனால் நமக்கு அப்படி அல்ல

      பதிவை புரிந்து உங்கள் கருத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி

      Delete
  4. பிறிதொரு நோக்கில் தாங்கள் அணுகியதை ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. பதிவை புரிந்து ரசித்து உங்கள் கருத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி

      Delete
  5. வலைப் பூ நண்பருக்கு,
    வணக்கம்!
    அனைவருக்கும் இனிய கிறிஸ்மஸ் நல்வாழ்துக்கள்
    நட்புடன்,
    புதுவை வேலு,
    www.kuzhalinnisai.blogspot.fr
    முற்றிலும் மறுக்கமுடியாத மாபெரும் உண்மை நண்பா!
    உண்மை பதிவுதான் என்றாலும் சற்று மிகையும்கூட!

    புதுவை வேலு,


    ReplyDelete
    Replies

    1. எல்லோருக்கும் தெரிந்ததை மற்றவர்கள் சொல்ல தயங்கிய போது நான் சொல்லி இருக்கிறேன் அவ்வளவுதான் நண்பரே

      Delete
  6. பதிவில் சொன்ன கருத்துக்கள் ஓகே .....but டிஸ்கி:(( இல்ல, எனக்கு அப்படி தோணல.... அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாள்??? அது கண்ணீராய் வெளிப்பட்டுவிடும் .....திருவள்ளுவர் காலத்தில் இருந்து அப்படிதான்....கண்ணீர் அன்பின் வெளிப்பாடு ...நான் எல்லா கண்ணீரையும் சொல்லவில்லை...ஆமா என் கே.s.ரவிக்குமார் டி.ஆர்.பி.கண்ணீர் பதிவு படிச்சீங்களா சகா??

    ReplyDelete
    Replies
    1. டிஸ்கியை ஒழுங்கா படிக்கவும் இல்லையென்றால் இந்தியா வரும் பொழுது தலையில் கொட்டு கிடைக்கும்


      . நீங்கள் சொன்ன பதிவு என் கண்ணில் படவில்லை எப்படி மிஸ் ஆகியது என்று தெரியவில்லை அதை சென்று பார்க்கிறேன்

      Delete
  7. பாலசந்தர் தமிழ் சினிமா இயக்குனர் என்பதை தவிர எனக்கு பெரிதாக எதுவும் அவரை தெரியாது. ஆனா நீங்க சொன்ன பாலசந்தரின் மறைவு அவர்கள் குடும்பத்தினரான மனைவி மகள்,மகன், உறவினர், நண்பர்களுக்கு மட்டுமே பெரும் இழப்பு அவர்களை தவிர மற்றவர்கள் சொல்வது எல்லாம் போலி நடிப்பே தவிர பெரும் இழப்பு அல்ல என்று நீங்க வெளிப்படையாக சொன்ன உண்மை என்னை கவர்ந்தது.
    இதே மாதிரி நீங்க துணிச்சலாக சொன்ன உண்மையை வேறு பதிவிலும் இன்று பார்த்தேன். அகதிகளாக இந்தியாவிற்கு வந்தால்தான் நிலமை மோசம். மேலை நாடுகளில் அகதிகளிடம் பாரபட்சம் யாரும் பார்ப்பதில்லை. கஷ்டம் இல்லாமல் இருப்பவன் என்று ஒருத்தரையாவது காட்ட முடியாது என்று நீங்க வெளிப்படையாக சொன்னது மிகவும் உண்மை.
    உண்மையில்வெளிநாடு படிக்க வேலைபார்க்க போகும் இந்தியர்கள் தான் பாவிங்க.அவங்களுக்கு உதவி யாரும் செய்வதில்லை தாங்களாக கஷ்டபட்டு தான் முன்னுக்கு வர வேண்டும். இலங்கை அகதிகள் மேலை நாடுகளின் அதி உச்ச உதவிகளை பெற்று சிறப்பான வாழ்கை பெற்று இன்புறுகின்றனர். இந்தியாவில் வாழ்ந்து துன்பபட்டு கொண்டிருக்கும் இலங்கை அகதிகளின் துயர நிலைக்காக மனம் வருந்தினால் நியாயம். அது தான் உண்மை.

    ReplyDelete
    Replies
    1. எனது பதிவுகளை தொடர்ந்து படித்து வருவதற்கும் உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது கருத்துக்களை தெரிவிப்பதற்கும் நன்றி எனது உறவுகளோ அல்லது நட்புகளையோ நான் இழந்தால் அதற்கு மற்றவர்கள் வருத்தப்படுகிறேன் என்று சொல்வது பொய்யாக இருக்குமே தவிர உண்மையாக இருக்காது என்பதுதான் உண்மை . நண்பர் பால கணேஷ் சொல்வது போல அது இனிக்கும் பொய்கள்தான்

      Delete
  8. மூப்பின் காரணமாக இறந்தவர்கள் - சிவாஜி கணேசன், டி எம் எஸ், பி பி ஸ்ரீநிவாஸ் உட்பட - எல்லோருக்குமே இது பொருந்தும். அவர்கள் செயலாக இருந்த காலத்தில் அவர்கள் பெரும் சாதனை படைத்தவர்கள் என்பதில் ஐயமில்லை. மறையுமுன் பெரிதாக மக்கள் மனத்தைக் கவரும்படி என்ன செய்திருந்தார்கள் என்ற கேள்வியும் வருகிறது. அவர்களின் பழைய சாதனை நிச்சயம் பாராட்டப்பட வேண்டியதே.

    யோகன் பாரிஸ் சொல்லியிருப்பதுவும் இதேதான், மாண்டலின் ஸ்ரீநிவாஸ் மறைவு இந்த வகையில்தான் - அவர் தொடர்ந்து தனது படைப்புகளைத் தந்துக் கொண்டிருந்த நிலையில் மறைந்தது - நிச்சயம் பாதிப்பைத் தந்தது.

    ReplyDelete
    Replies
    1. யார் சாதனைகள் செய்தாலும் பாரட்டலாம் அதில் தவறு இல்லை பாலசந்தர் அவர்காலத்தில் சாதனைகள் செய்து இருக்கிறார் ஆனால் அவர் இறுதிகாலத்தில் சாதனைகள் ஏதும் புரியவில்லை அவரது இறுதிகாலத்தில் பல புதிய இயக்குனர்கள் வந்து அவரை விட பல சாதனைகளை புரிந்து கொண்டிருக்கிறார்கள் அதனால் பாலசந்தரின் இழப்பு திரை துறைக்கு பெரிய இழப்பு ஒன்றுமல்ல. அவர்கள் குடும்பத்தினருக்கு மட்டுமே இழப்பு

      Delete
  9. நண்பரே இந்த பதிவை மிகவும் அருமையாக உண்மையை எழுதி இருக்கிறீர்கள் உண்மையிலேயே மனதார பாராட்டுகிறேன் நானும் தங்களைப் போல்தான் இதே மாதிரி ஒரு பதிவு எழுதலாம் என நினைத்தேன் பிறகு இதனால் மக்களுக்கு என்ன ? பிரயோசனம் என நினைத்து விட்டு விட்டேன் ஆம் தாங்கள் சொல்வது போல இரக்கப்படுவதுபோல் பாசாங்கு காட்டு பவர்களிடம் ஒரேயொரு கேள்வி

    84 வயது முடிந்த பிறகும் இவர் இறக்கவே கூடாது எனச்சொல்கிறீர்களா ? இவர் மட்டுமல்ல சினிமாக்காரர்கள், அரசியல்வாதிகள் யாராக இருந்தாலும் இதே நிலைப்பாடுதான் என்னுடையது

    தங்களது பதிவுகளிலேயே (நான் படித்ததில்) இதைத்தான் மிகச்சிறந்த பதிவாக நான் நினைக்கிறேன்

    மனிதநேயத்துடன் திரு. கே. பாலசந்தர் அவர்களின் குடும்பத்திற்க்கு எனது குரல் கேட்காது எனத்தெரிந்தும் எனது இரங்கலை தெரிவிக்கிறேன்.

    //வந்தவரெல்லாம் தங்கி விட்டால் இந்த மண்ணில் நமக்கே இடமேது//
    இதை எழுதியவருக்கு மட்டுமல்ல எனக்கும்தான்..

    ReplyDelete
    Replies
    1. எழுதுவது என்று நினைத்துவிட்டால் தயங்க வேண்டாம் எழுதிவிடுங்கள் என்ன பிரயோசனம் என்று எல்லாம் யோசிக்க வேண்டாம் காரணம் நல்லது எழுதினாலும் கெட்டது எழுதினாலும் ஒன்றுதான் படிப்பவர்கள் பலர் அதை படித்துவிட்டு அப்படியே கடந்து செல்லுவார்கள்

      Delete
  10. உங்கள் கூற்றில் உண்மை இருக்கிறது.பாரதி,ராமனுஜம் போன்றவர்கள் இளம் வயதில் மரணம் அடைந்தவர்கள் உண்மையில் அவர்களுடைய இழப்பு உண்மையில் பேரிழப்பு.
    . பாலச்சந்தர் சாதனைகள் பல செயது முடித்தவர் . அவருக்கு சாதிக்க ஒன்றும் இல்லை. திரை உலகுக்கு அவரால் இப்போது பயனில்லை அவரது பிரிவால் இழப்பேதும் இல்லை என்றாலும் ஒரு சிறந்த படைப்பாளிக்கு செய்யும் மரியாதையாக அவரை பெருமைப் படுத்துவதற்காக மிகைப்படுத்திக் கூறுபவையே பேரிழப்பு போன்ற வார்த்தைகள்.
    யாரை இழந்தாலும் இந்த உலகம் சுற்றுவது ஒன்றும் நிற்கப் போவதில்லை என்றாலும் பாலகணேஷ் சொல்வது போல எப்போதும் உண்மையை பட்டவர்த்தனமாக கூறுவது நாகரீகமாகக் கருதபடுவதில்லை.
    ஆனாலும் உண்மையை உள்ளபடி சொல்வதற்கு தைரியம் வேண்டும். அது மதுரைத் தமிழனுக்கு இருக்கிறது. பாராட்டுக்கள்

    டிஸ்கியில் உளவியல் உண்மை ஒளிந்து கிடக்கிறது

    ReplyDelete
    Replies
    1. யாரிடமிருந்தும் எதிர்ப்பார்ப்புகள் எனக்கு இல்லையாதலால் மனதில்பட்டதை சொல்லி செல்லுகிறேன்.நமக்கு மற்றவர்களிடம் இருந்து எதிர்பார்ப்புக்கள் தோன்ற ஆரம்பிக்கும் போது நாம் உண்மைகளை குழி தோண்டி புதைக்க ஆரம்பிக்கிறோம் என்பதுதான் உண்மை

      Delete
  11. பொதுவெளியில் ஒரு உணர்வலை பாய்கிற பொழுது அதை விமர்சிக்கும் தில் சிலருக்கு மட்டுமே இருக்கிறது...
    நேக்கு இல்லைப்பா ...

    ReplyDelete
    Replies
    1. கூட்டதோட கோவிந்தா போடாமல் சற்று விலகி என் மனதில் பட்டதை சொல்லி இருக்கிறேன் அப்படி சொல்ல தில் எல்லாம் வேண்டாம் நண்பரே

      என்ன உங்களுக்கு தில் இல்லையா நல்லா ஜோக் அடிக்கிறிங்களே

      Delete
  12. மதுரை தமிழா!
    இயக்குனர் பாலச்சந்தர் இறந்தார் என்ற செய்தி வந்தவுடன் தமிழில் வந்த முதல் அஞ்சலி பதிவாக தான் இருக்கும் என்று நினைக்கின்றேன். பிறகு தங்களின் பதிவை படித்ததும் தம் சொல்ல வரும் கருத்தை உணர்ந்தேன். இயக்குனர் பாலச்சந்தர் ஒரு முழுமையான வாழ்க்கையை வாழ்ந்து முடித்து மரணம் அடைந்தார். அவர் இனிமேலும் சினிமா உலகிற்கும் சமூகத்திற்க்கும் ஏதாவது செய்து இருக்க முடியுமா என்று நினைத்தால் அதற்கு பொதுவான பதில் " இல்லை".
    உங்கள் பதிவை படித்த பின் நான் என் பதிவை மீண்டும் ஒரு முறை படித்தேன். நல்ல வேளை, நீங்கள் சொல்லியது போல் நான் அங்கே, இது ஓர் மாபெரும் இழப்பு என்று போய் ஸ்துதியோ பாடவில்லை. நான் கூறியதெல்லாம், "நான் கொடுத்த ரெண்டு ரூபாய்க்கு என்னை சிரிக்க வைத்தவர், ரசிக்க வைத்தவர்" மற்றும், அவர் வளரும் நாட்க்களில் முன்னணி நடிகர் யாரையும் நம்பி ஒதுங்காமல் நகைக்சுவை நடிகராகிய அவரால் செல்லமாக அழைக்கப்படும் "ராவ்ஜி" என்ற நாகேஷ் அவர்களை வைத்து வெற்றி படம் தரும் தைரியம்.
    நீங்கள் சொல்வது ஒருவிதத்தில் உண்மை தான். சென்ற வருடம் எனக்கு நான்கு அறிமுகமான ஒருவர் KB அவர்களை அவர் இல்லத்தில் சந்திக்க சென்று இருந்தார். அவரை சந்தித்து வந்த இவரிடம் நான் தொலைபேசியில் KB எப்படி உள்ளார் என்று கேட்ட போது, KB யின் வாழ்க்கை மிகவும் பரிதாபமாக இருக்கின்றது என்றும், அவரிடம் பேச கூட யாரும் இல்லை என்பதையும் கூரினார்.
    தம் பதிவை ரசித்தேன். நன்றி

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு அறிந்தவர் சொன்னது மிக உண்மையே அப்படிதான் இருக்கிறது பல பிரபலங்களின் நிலமை சாதனைகள் தொடரவில்லை என்றால் திரைதுறையினர் நிலமை இப்படிதான்

      Delete
  13. பிறந்த அனைவரும் ஒருநாள் இறக்கத்தான் வேண்டும்! இறப்பு அவர்களின் குடும்பத்தையும் நண்பர்களையும் பாதிக்குமே தவிர அனைவரையும் அல்லத்தான்! நன்றாக சொன்னீர்கள்! நல்ல வேளை நான் இரண்டு நாளாய் இணையம் வரவில்லை!

    ReplyDelete
    Replies
    1. பதிவை புரிந்து உங்கள் கருத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி

      Delete
  14. பிறக்கும் போதே இறப்பும் எழுதப்பட்டு விடுகிறது....
    சாதித்த மனிதர்கள் சாகும் போது இவ்வளவு தூரம் இழப்பைப் பேசும் நாம் சாதாரண மனிதன் சாகும் போது பேசுவதில்லை... காரணம் புகழுக்கு மட்டுமே மரியாதை...

    ஒருவரின் இழப்பு அவரின் குடும்பத்துக்கு பேரிழப்பு என்பதை தெளிவாகச் சொல்லியிருக்கிறீர்கள்...

    நல்ல பகிர்வு. கேபி சாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

    ReplyDelete
    Replies
    1. பதிவை புரிந்து உங்கள் கருத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி நம்மால் செய்யமுடிவது அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதுதான்

      Delete
  15. திரையுலகில் சாதனை படைத்தவர் கே.பாலசந்தர். அவரது இழப்பு பேரிழப்பு என்று திரையுலகினர் சொல்வதில் தவறில்லை. பேரிழப்பு இல்லை என்பதை அவரது படைப்புகள் வாயிலாக நீங்கள் நிறுவவில்லை.

    ReplyDelete
    Replies
    1. அவர் சாதனைகள் ஏதும் செய்யவில்லை என்று நான் சொல்லவில்லை. அவர்சாதனைகள் செய்தார் தான் ஆனால் அவர் மறைவு ஒன்றும் பேரிழப்பு இல்லை. பேரிழப்பு என்று சொல்லும் சுனாமியால் ஏற்பட்ட இழப்புகளைததான் பேரிழப்பு என்று சொல்லாம் மற்றவைகள் எல்லாம் மிக சாதாரண இழப்புதான் மேலும் பேரிழப்பு என்று சொல்லும் போது அதில் இருந்து மீண்டு வருவதற்கு சிறிதுகாலம் ஆகும் ஆனால் பாலசந்தரின் இறுதிசடங்குகள் முடித்த அடுத்த கணமே திரையுலகம் வழக்கம்போல செயல்பட ஆரம்பித்துவிட்டதே நண்பரே

      Delete
  16. கிள்ளர்ஜி சொல்வதையே நானும் சொல்கிறேன். நானும் இதே போல் எழுத வேண்டும் என்று நினைத்தேன்.எதற்கு என்று விட்டு விட்டேன். நீங்கள் சொல்வது முற்றும் உண்மை. நாட்டிற்காக என்ன செய்தனர்? அதுவும் 84 வயது.இந்த ஆர்பாட்டம் மிக மிக அதிகம். நடிப்பு.தனிப்பட்ட வாழ்க்கையிலும் சிறந்து விளங்கும் ஒருவரை பாராட்டலாம். தாஜ் ஹோட்டலில் பல உயிரை காப்பாற்றி தன்னுயிர் தந்த அந்த தலை மகனுக்கும், உத்தரகாண்ட் வெள்ளத்தில் பல உயிர் காத்து தன்னுயிர் தந்த முகுந்த் அவர்கள் இறுதி சடங்கை இருந்த இடம் விட்டு நகராமல் அமர்ந்து பார்த்து என் அஞ்சலியை செலுத்தினேன். இந்த தொலை காட்சிகளின் நேரலையை ஒரு நிமிடம் கூட பார்க்க மனம் ஒப்பவில்லை..KARTHIK AMMA

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.