Sunday, November 23, 2014

பதிவர் மைதிலி கஸ்தூரி ரங்கன் பதிவுகள் எழுதுவது எதற்காக?

மைதிலியின் கணவர் அவர்களின் பெற்றோர்களுடன் உணவு அருந்தி கொண்டி இருக்கும் போது, அவரது தந்தை மதுவை(கஸ்தூரிரங்கன் http://www.malartharu.org/ ) பார்த்து கேட்கிறார்.

என்னப்பா நீ பதிவு எழுதி மிகவும் புகழ் பெற்று இருக்கிறாய் அது இந்த குடும்பத்திற்கும் இந்த சமுகத்திற்கும் போதுமே அப்ப எதுக்கு மைதிலியும் பதிவுகள் http://makizhnirai.blogspot.com/ எழுதி கொண்டிருக்கிறாள்


அப்பா மைதிலி இந்த குடும்பத்திற்காகவோ அல்லது சமுகத்திற்காகவோ பதிவுகள் எழுதவில்லை. அவளுக்கு எழுதப்பிடிக்கிறது அதனால் எழுதுகிறாள் அவ்வளவுதானப்பா

என்னடா இது ஒன்றும் புரியவில்லை என்று நினைப்பவர்கள் இந்த வீடியோ க்ளிப்பை பார்க்கவும் அதன் பின் புரியும்



அன்புடன்
மதுரைத்தமிழன்
டிஸ்கி : இந்த விளம்பரத்தை பார்த்தவுடன் இந்த அருமையான (மைதிலி, கஸ்தூரி ) தம்பதிகள்தான் என் மனதில்  வந்து நின்றனர்


26 comments:

  1. அடடா அடடா... எங்க மைதிலியும் கஸ்தூரியும் பத்தி நல்லவிதமா எழுதியமைக்கு நன்றி நண்பரே
    அவுங்க ரெண்டுபேருமே ஆங்கில ஆசிரியர்கள் என்பதால் தமிழில் நல்ல சிந்தனைகளைத் தந்துவருகிறார்கள்... இந்த ஆதர்சத் தம்பதியினர் இருவருமே, இருவேறு சுவைகளுடன் வலைப்பக்கத்தில் எழுதுவதை நீங்கள் பாராட்டியது குறித்து, “புதுக்கோட்டைக் கணினித் தமிழ்ச்சங்கம்“ சார்பாக நன்றியும் வணக்கமும் தெரிவித்து மகிழ்கிறேன். (ஆமா இது ஒன்னும் தமிழ் மேட்ரிமோனியல் விளம்பரமில்லைதானே? இருந்தாலும் அதற்கும் இவர்கள் பொருத்தமானவர்கள்தான்)

    ReplyDelete
    Replies
    1. இந்த ஆதர்ச தம்பதிகள் வேண்டுமானால் உங்க ஊரைச் சார்ந்தவர்களாக இருக்கலாம் ஆனா அவங்க எங்க(பதிவர்) குடும்பத்து ஆட்களாகி நீண்ட நாட்களாகிவிட்டன.

      Delete
    2. சாரே அது என்ன எங்க மைதிலி & கஸ்தூரி. அவங்க உங்க மைதிலி & கஸ்தூரிமட்டுமல்ல எங்களுடையவர்களும்தான் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      Delete
    3. நாம் எல்லோரும் இப்போ ஒரு குடும்பத்தில் இருக்கிறோம் என்ன அண்ணா, சகா ஓகே வா:)))
      ரெண்டு பேர் அன்பிற்கும் ரொம்ப ரொம்ப நன்றி எல்லாம் சொல்லமாட்டேன் ஏன்னா அது நம்மகுள்ள தேவையா??

      Delete
  2. வாசிச்சேன் ,வீடியோவும் பார்த்தேன் ..எல்லாம் சரி ..நீங்க எதுக்கு தமிழ் matrimony ad தளத்தை இப்போ பாக்கறீங்க !!!!!

    ReplyDelete
    Replies
    1. சரி இனிமே அந்த பக்கம் போகல நல்லா பொண்ணா நீங்களே பாத்து சொல்லுங்க ஒகே வா

      Delete
    2. இதை நான் வன்மையா கண்டிக்கிறேன். mrs.லைட் எனக்கு friend ஆகி ரொம்ப நாள் ஆச்சு தெரியும்ம்ல??

      Delete
    3. சகோ, நம்ம மதுரைத் தமிழனுக்கு ஒருவரிடமிருந்து மட்டும் பூரிக்கட்டையால் அடி வாங்குவது பத்த வில்லையாம், அதனால் தான் அவர் இந்த தளத்தை எல்லாம் சென்று பார்க்கிறார்.

      Delete
    4. ஆஆ !! அப்படி வேற ஒரு நினைப்பிருக்கா !! இருங்க இன்னும் ரெண்டு செட் பூரிக்கட்டை உங்க வீட்டுக்கு பார்சல் பண்றேன் :)அமெரிக்க ஆஸ்திரேலியா இந்தியா நேரத்துக்கு முடிஞ்சு இப்போ நான் லண்டன் டைமுக்கு இப்போதான் வரேன் :)
      அதுக்குள்ளே மதுரைதமிழன் நான் அவருக்கு பொண்ணுக்கு பாக்க போயிட்டேன்னு நினைச்சிக்ககூடாதேன்னு ஓடோடி வந்தேன் :)

      Delete
  3. நீங்க சொல்வது உண்மைதான் அழகான அறிவான made for each other couple தான் இருவரும் ..

    ReplyDelete
    Replies
    1. மதுரைத்தமிழன் : ஏஞ்சலின் அழகான அறிவான என்று சொல்லிட்டீங்க. அது சரிதான் .மைதிலி அழகானவங்க அண்ணன் கஸ்தூரி அறிவானவர்தான் நான் ஒத்துக்கிறேன்.

      ஏஞ்சலின்: யோவ் மதுரை அப்ப அண்ணன் அழகானவர் இல்லையா?

      மதுரைத்தமிழன் : அண்ணன் அறிவானவர் அதுமட்டுமல்ல அஜித் மாதிரி அழகானவர்தான்.

      ஏஞ்சலின் யோவ் மதுர அப்ப அண்ணி மைதிலி அறிவானவர் இல்லையா?

      மதுரைத்தமிழன்: ஹும்ம்ம்ம்ம்ம்ம்ம் அவங்க என்னைப் போல அறிவாளிங்க.

      ஏஞ்சலின்: யோவ் மதுர அது என்ன உன்னைப் போல, அதற்கு அறிவாளி இல்லைன்னு சொல்லிப் போகலாமல

      மதுரைத்தமிழன்: ஙே.......(மைண்ட் வாய்ஸ் : இதுக்குதான் ஒருத்தர் கருத்து சொன்ன கருத்துக்கு நன்றி என்று சொல்லிட்டு போகனும் இப்படியா பதில் கருத்து சொல்லி வாங்கி கட்டிகிறது

      Delete
    2. ஹா....ஹா....ஹா...செம்ம:))
      அஞ்சலின் உங்க அன்புக்கு நன்றி!! உங்களை follow செய்த நினைத்துக்கொண்டே நேரம் இன்மை காரணமாக தள்ளி போய்விட்டது:(( இனி நட்பால் இணைவோம்:)

      Delete
  4. சகா
    இந்த வாரத்தையே இவ்வளவு அழகாக தொடங்க நண்பரிடம் இருந்து என்னவொரு அருமையான பரிசு:) இந்த கிப்ட் டுக்கு தாங்க்ஸ்.
    ------
    ஒன்று தெரியுமா கஸ்தூரி என் அத்தையின் மகன். என் அப்பா நான் ப்ளஸ் டூ முடித்த சில மாதங்களில் இறந்து போக, ஐந்து ஆண்டுகள் கழித்து கஸ்தூரிக்கு திருமணப் பேச்சை எடுத்தபோது, மைதிலி ஜாதகத்தை வாங்கி பாருங்களேன் என கஸ்தூரியின் ப்ரபோசல் எங்க எல்லோருக்கும் உண்மையாவே சர்ப்ரைஸ் தான். அவள் மாமா செல்லமா வளர்த்த பெண். தெரியாத இடத்தில் திருமணம் முடித்து கஷ்டப்படகூடாது இல்லையா என்ற விளக்கம் வேறு.

    அதற்கு பிறகான இந்த பத்து ஆண்டுகளில் வழியத் திணிக்காமலே எங்கள் இருவரது ரசனை,விருப்பங்கள் பரஸ்பரம் நிறைய மாறி இருக்கிறது. இப்போவரை ரொம்ப formal லான நேரங்களை தவிர எல்லாநேரமும் என்னை மது என கஸ்தூரி அழைப்பதை பார்த்து காதில் புகைவிடும் சில உறவினர்கள், நண்பர்களும் உண்டு:))))) இன்னும் சொல்லிகிட்டே போகலாம். பேசித்தீர்க்க இன்னும் பல ஆண்டுகள் வேண்டும்:) ஒரு matrimony பக்கத்தில் மணமகனிடம் எதிர்பார்க்கும் அத்தனை அம்சங்களும் கொண்ட ஒரு கணவர் நண்பராகவும் கிடைப்பது உண்மையிலேயே பெரிய விஷயம் தான் இல்லையா!!
    _____

    நானும் கஸ்தூரியும் நம் நண்பர்களை பற்றி அடிக்கடி பேசிக்கொள்வோம். அதில் பலரை மதுரை விழாவில் பார்த்துவிட்டோம். சிலர் உங்களை போல் கடல் கடந்து இருகிறீர்கள். சந்திக்கும் வாய்ப்புக்காக காத்திருக்கிறோம்:)

    ReplyDelete
  5. இருவரையும் மதுரை பதிவர் திருவிழாவில் சந்தித்தேன்... இருவருமே பழகுவதற்கு இனிமையானவர்கள்... சகோதரர் கஸ்தூரி ரங்கன் ஸ்கூல் பாய் ஸ்கூல் பாய் என்று என் முதுகில் அடிக்கடி தட்டிக்கொண்டிருந்தார்....

    ReplyDelete
  6. சந்தோச தம்பதிகள் என்பதில் சந்தேகமேயில்லை... அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  7. உங்களுக்கு மற்ற பதிவர்களைப் பற்றி எழுதாமல் இருந்தால் தூக்கமே வராதே. பரவாயில்லை இந்த தடவை பதிவுலக தம்பதிகளைப் பற்றி ரொம்ப நல்ல விதமாக சொன்னதுக்காக உங்களுக்கு பூரிக்கட்டையில் அடி வாங்குவதிலிருந்து இன்றைக்கு ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்க உங்கள் மனைவியிடம் சொல்லிவிடுகிறோம்.

    ReplyDelete
  8. அட மதுரைத் தமிழா மிகவும் சரியாக சொல்லி இருக்கின்றீர்கள் எங்கள் நண்பர்களைப் பற்றி....(மதுரைத்தமிழன் சொன்னா சரியா இல்லாமலா போகும்னு நீங்க சொல்றது காதுல கேக்குது....) ஸாரி...ஸாரி நம்ம வலைக் குடும்பத்து நண்பர்களைப் பற்றி....யெஸ் Made for each other couple இதை நாங்கள் அடிக்கடிச் சொல்வதுண்டு...ஆனால் வெளியில் அல்ல... எல்லாம் இந்தப் பாழா போன சென்டிமென்ட் நாலதான்...

    ReplyDelete
  9. அந்த செண்டிமென்ட இங்க சொல்லல...தமிழா...அவங்களுக்காக நாம (மைதிலி அவர்களுக்கு நம்பிக்கை இல்லை என்றாலும்) எல்லோரும் பிரார்த்திப்போம்...

    ReplyDelete
  10. எல்லாரும் மைதிலியப் பத்தியும் மதுவப் பத்தியும் சொல்லிருக்கறதப் பாத்தா, தங்கச்சிக்கு கண்ணேறு நிறைய விழுந்திருக்குமோன்னு பயமா இருக்குது. உடனே முத்துநிலவன் அண்ணாவ விட்டு உங்க ரெண்டு பேத்துக்கும் திருஷ்டிசுத்திப் போடச் சொல்லும்மா மைதிலி...

    ReplyDelete
  11. தமிழா இதே இதே பால கணேஷ் அண்ணா சொல்லியிருப்பதை வழிமொழிகின்றோம்.....முத்துநிலவன் ஐயா அண்ணா சொல்லியிருப்பது பார்த்தீர்களா.....ப்ளீஸ்....எங்கள் பிரார்த்தனைகள்...

    ReplyDelete
  12. தமிழ் மாட்ரிமோனிக்காக நீங்க கீழே கொடுத்துள்ள இந்த ஒளிவடிவ விளம்பரத்துக்கு உங்களுக்கு எம்பூட்டு ரூபாய் கொடுத்தாங்கணு சொல்லல தல! :))))

    ReplyDelete
  13. இருவரையும் மதுரை வலைப்பதிவர் விழாவில் சந்தித்தேன். இருவரும் தொடர்ந்து எழுத்தில் பல சாதனைகளைப் புரிய வாழ்த்துக்கள். இப்பதிவின் மூலமாக அறிமுகப்படுத்தியமைக்குநன்றி.

    ReplyDelete
  14. இருவரும் நல்ல ஆசிரியர்கள் . Made for Each other வகையை சேர்ந்தவர்கள். அவர்களுக்கு பொருத்தமான விளம்பரம் என்பதில் ஐயமில்லை. மதுரைத் தமிழனால் மட்டுமே இப்படி வித்தியாசமாக சிந்திக்க முடியும்.
    வாழ்த்துக்கள் அவர்களுக்கு, பாராட்டுக்கள் உங்களுக்கு

    ReplyDelete
  15. சக பதிவர் தம்பதிகளை பாராட்டிய இந்த பதிவு அருமை! நன்றி! இவ்விருவரும் நீங்களும் என்னுடைய நண்பர்கள் என்பதில் எனக்கும் பெருமை! நன்றி!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.