Friday, November 7, 2014








சென்ற மாதம் நம் பிரதமர் மோடி அவர்கள் விளக்குமாற்றை கையில் எடுத்து கொண்டு "சுத்தமான இந்தியா" என்று புன்னகையுடன் புகைப்படத்தில் போஸ் கொடுத்து ஒரு திட்டத்தை ஆரம்பித்து வைத்து அதை தொடர மேலும் பல அரசியல்வாதிகளையும், சினிமா நட்சத்திரங்களையும் வேறு சில பணக்கார முதலைகளையும் இந்த காரியத்தை செய்ய சொல்லி வேண்டுகோள் வைத்தார். அவர்கள் சுத்தப்படுத்தினார்களோ இல்லையோ நன்றாகவே போஸ் கொடுக்கிறார்கள் மேலும் இன்று வரை கொடுத்து கொண்டு இருக்கிறார்கள்



இந்த பதிவு எழுத தூண்டியது நண்பர் விசுவின் இந்த பதிவுதான் அதை படிக்க இங்கே  க்ளிக் செய்யவும்..


சரி இவர்கள் எப்படி வேண்டுமானாலும் டிராமா போடட்டும் அது பற்றி எனக்கு கவலை இல்லை. ஆனால் அவர்களிடம் நான் ஒன்றை ஒன்று கேட்க விரும்புகிறேன்.



மலத்தை கைகளால் சுத்தம் செய்கிறார்கள் பல தொழிலாளிகள். கையால் மலத்தை அள்ளி தலையில் சுமக்கும் அவலம் இன்னும் இந்தியாவில் நடந்து கொண்டுதான் இருக்கிறது .கையால் மலம் அள்ளும் இழிதொழில் பின்தங்கிய மாநிலமான பிகாரில் மட்டுமின்றி, வளர்ச்சிக்கே வழிகாட்டும் மாநிலமாகப் போற்றி புகழப்படும் மோடியின் மாநிலமான குஜராத்திலும் இன்றும் நடந்து வருகிறது.



அப்படி அவர்கள் செய்வதை நீங்கள் அனைவரும் ஒரே ஒரு நாள் அல்லது ஒரே ஒரு வேளையாவது உங்கள் கைகளால் செய்யும் துணிச்சல் உங்களுக்கு உண்டா?



செய்ய முடிந்தால் செய்துகாட்டுங்கள்



அன்புடன்
மதுரைத்தமிழன்

10 comments:

  1. நிச்சயமாக எவனும் செய்யமாட்டான் நண்பரே....

    தெருத்தெருவாய் கூட்டுவது பொதுநலத்தொண்டு
    ஊரார் தெரிந்து கொள்ள படம் பிடித்தால் சுயநலமுண்டு
    -வாலி

    ReplyDelete
  2. சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

    ReplyDelete
  3. மோடி இருக்கட்டும் .நீர் செய்வீரா அத சொல்லும் முதல்ல. சும்மா பப்ளிசிட்டி மோடி பெற வச்சி தேடிகிறீங்க

    ReplyDelete
  4. தமிழரே..... ஒரு கீழ்த்தரமான தொழிலை யாருமே செய்யக்கூடாது
    என்றே நாம் எண்ண வேண்டும்.

    ஒரு தொழில் அல்லது செய்கை கீழ்த்தரமானது என்றால் அதைச் சுட்டிக்காட்டி
    அதற்கான ஆவனங்களை எடுக்கச் சொல்வதே முறை.

    நீங்கள் ஒரு பிரபலமான பதிவர்.
    உங்கள் நல்ல கருத்தின் மூலம் அத்தொழிலை நீக்க முயற்சிப்பதே சிறப்பு.


    ReplyDelete
  5. முகத்தில் அறைகிறது உண்மை!!
    சகோதரி கீதா வின் தோட்டிச்சி பாட்டி கவிதை நினைவுக்கு வருகிறது!!! ஹ்ம்ம்ம் :((((

    ReplyDelete
  6. மலத்தை மனிதர்கள் அள்ளும் நிலை மாற வேண்டும்! யோசிக்க வைத்த பதிவு! அரசியல்வாதிகள் எல்லாவற்றிலும் விளம்பரம் தேடிகொள்பவர்கள்! ஆனால் உங்கள் கேள்விக்கு பதில் சொல்ல மாட்டார்கள்!

    ReplyDelete
  7. கொஞ்சம் கூடுதல்
    அதுபோல் நிலையில் உள்ளவர்களையும்
    கவனத்தில் கொள்ளலாம் என எழுதி இருக்கலாம்
    (பிரதமர் என்பதையாவது உணர்ந்து எழுதி இருக்கலாமோ ?)

    ReplyDelete
  8. ரயில்வே லைன்ல இருக்கும் கழிவைத்தான் இப்படி அகற்றுகிறார்கள்.

    இதை யாரு அகற்றுவது ஏழைப் பெண்களா இல்லனா மோடியா? இல்லைனா அமெரிக்கா தப்பி போனமதுரைத் தமிழனா இல்லைனா வருணா? என்பது கேள்வி!

    மேலை நாடுகளில் சாலையில் "டோல் பூத்" வைத்து காசு வசூல் செய்வதைப்பார்தவுடன் நம்மாளும் துண்டைப் போட்டு வசூல் செய்கிறான். கற்றது மேலை நாட்டில் இருந்து. It has been happening only recently. This is a way to make more income. So they immediately execute this idea from west.

    மேலை நாட்டில் ரயில்களில் எப்படி டாய்லெட் பயன்படுத்துறாங்க? "கழிவு களை" எப்படி அவர்கள் அகற்றுகிறார்கள் என்பதை கற்றுக்கொண்டு செயல் படுத்த வேண்டியதை செய்தால் என்ன?? You filthy brain-less Indians DONT DO like how westerners do this because they need to spend money here for execute the idea without using humans!!

    Nobody needs to touch it and remove it if ONE HAS A WORKING BRAIN. There are ways to collect it "untouching them". That's what westerners do! Modifying the toilet settings and collecting it in way that NOBODY needs to touch it.

    You guys get angry when someone calls India as a third-world country???

    But THIS IS WHAT suggests you look third world.

    Now you are fingering Modi. One another IDIOT called "Rajaram" (I am sure he comes in a fake id) asks you whether you can do it.

    Nobody needs to clean anyone's shit!!

    All you guys need is a WORKING BRAIN and THINK and execute the idea of what westerners do and how they do not use "humans" for doing such jobs.

    ReplyDelete
    Replies
    1. It is Varun!! this is what I exactly think Varun!! these days I feeling shame and hypocritic to teach my children this is a social country. but still I m teaching it believing those future pillars will make the country really social:)) well said yaar

      Delete
  9. இந்த மாதிரி திட்டங்களினால் வீதிகள் / தெருக்கள் சுத்தமாக போகிறதோ இல்லையோ தெரியாது. ஒன்று மட்டும் நிச்சயம். துடைப்பம் விலை அதிகமாகப் போகின்றது.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.