உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Monday, October 27, 2014

தமிழக முதல்வர் பன்னீர் செல்வத்திற்கு நன்றி (பால் விலையேற்றமும் நாட்டு நடப்பும் மதுரைத்தமிழனின் நகைப்பும்)

தமிழக முதல்வர் பன்னீர் செல்வத்திற்கு நன்றி (பால் விலையேற்றமும் நாட்டு நடப்பும் மதுரைத்தமிழனின் நகைப்பும்)

ஆவின் பால் கொள்முதல் விலை மற்றும் விற்பனை விலையை, தமிழக அரசு அதிரடியாக உயர்த்தி உள்ளது. நவ., 1ம் தேதி முதல், பசும் பாலுக்கு கொள்முதல் விலையாக லிட்டருக்கு, 5 ரூபாய்; எருமை பால் லிட்டருக்கு, 4 ரூபாய் உயர்த்தி வழங்கப்படும் என, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். அதேபோல், சமன்படுத்திய பாலின் விற்பனை விலையை, லிட்டருக்கு, 10 ரூபாய் உயர்த்த, அரசு முடிவு செய்துள்ளது.
பாலுக்கு விலையேற்றாமல் தண்ணியை மற்றும் பாலில் ஏற்றி விற்றோம் அதை தப்பு என்றீர்கள்
சரி தப்புதான் என்று பாலில் தண்ணி கலக்காமல் விலையை மற்றும் ஏற்றினோம் அதையும் தப்புன்னு சொல்லுறீங்க..


இப்படி நாங்க செய்யும் எல்லாவற்றையும் தப்பு சொல்லினால் பால் விற்பதையே தப்பு என்று சொல்லி தடை போட்டு விடுமோம் ஆமாம் சொல்லிப் புட்டோம்பால் விலையேற்றத்தை எதிர்த்து கலைஞர் போராட்டம் . ஆமாம் இந்த விலையேற்றத்தில் இவர் புள்ளைங்க பேரன் பேத்திகள் பால் குடிக்க முடியாமல் கஷ்டப்படுறாங்களாம் பாதிக்கபடுகிறார்களாம் கலைஞர் சொன்ன உண்மையாகத்தான் இருக்கும்

பால்விலையேற்றத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்களாம். அட ஒக்கா மக்கா முதலில் 50 ஆயிரம் ஆறுபதாயிரம் பணம் கொடுத்து செல் போன் வாங்கி அதற்கு மாசம மாசம் 1000 2000 செலவு பண்ணி பண்ணி ஊர் வம்பு பேசுறீங்களே அதனால் ஏதாவது உருப்படியானா மாற்றம் ஏதும் உண்டா பலன் உண்டா? அதுக்கு செலவு செய்யும் காசை பாலுக்கு செலவிடுங்க அது உங்க புள்ளைகளின் உடன் நலத்திற்கு உதவும்டாநாட்டுல சில லூசுங்க பால் விலையை ஏற்றுவதற்கு பதிலாக டாஸ்மாக் சரக்கை விலையை உயர்த்த வேண்டும் என்று சொல்லுறாங்க. டேய் லூசுங்களா பால் விலையை உயர்த்துவது அதை உற்பத்தி பண்ணுபவனுக்கு பயன் அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தானடா?


இப்பவே அவனவன் பொண்டிடாட்டி தாலியை, வீட்டை சொத்தை அடகு வைச்சு குடிக்கிறான் அப்படி குடிக்கும் சரக்கின் விலையை இன்னும் ஏற்றினால் அவனவன் அவன் பொண்டாட்டியை விற்றுதான் குடிப்பான் அப்படி குடிப்பவனின் மனைவி உங்கள் சகோதரிகள் என்பதை மறக்க வேண்டாம்
பால் கலக்காத டீ காபி 10 ரூ பால கலந்த டீ காப்பி 20 ரூ

சாமிக்கும் கட் அவுட்டுக்கும் பால் அபிஷேகம் செய்பவர்களே அந்த பாலை ஏழைகளுக்கு கொடுத்தாலே உங்களுக்கு புண்ணியம் பெருகும்

இன்னைக்கு செத்தா இனி நாளைக்கு பால் இல்லை. அம்மா வாட்டர் தான் மக்கா

பால் விலையேற்றி, பேசாத கலைஞரை பேச வைத்த பெருமை பன்னீர் செல்வத்திற்கு மட்டுமே உண்டு


அன்புடன்
மதுரைத்தமிழன்

9 comments :

 1. என்னாது.. .நியூ ஜெர்சி தி மு க கிளையா? மொத்தம் எத்தனை உருப்படிகள் (மன்னிக்கவும்..) உறுப்பினர்கள் உள்ளனர்?

  ReplyDelete
  Replies
  1. திமுக அதிமுக தேமுதிக மதிமுக மற்றும் அனைத்ஹு கட்சிகளுக்கும் நீயூஜெர்ஸி கிளை நிர்வாகி நாந்தான். நேரத்திற்கு ஏற்ப நமஹு தலைவர்கள் கொள்கையை மாற்றிக் கொள்பது போல நான் கொடியை மாற்றிக் கொள்வேன் அம்புட்டுதேன்....ஹீஹீ

   Delete
  2. ஐயோ.. இந்த விளையாட்டு எனக்கு தெரியாம போச்சே.. சொக்கா... சொம்மனாதா... ஏன் தமிழா... எங்க ஊரில் ஒரு துணை கிளை, இல்ல வட்டம், சதுரம்ன்னு ஏதாவது ஆரம்பித்து வையுங்களேன், நானும் புளைச்சின்னு போறேன்.
   பின் குறிப்பு: நியூ யார்க் நகர கிளைக்கு எங்கள் சிம்ம குரலோன், தன்மான தமிழன், பரதேசியை தலைவராக நியமிக்க வேண்டும் என்று ஆணை இடுகின்றோம்.

   Delete
  3. pachai thamilanukku (America-vil irrukum) paal vilaiyetram enna sudava poguthu. Porattam nadathuratha kurai solla arugathai illai.....

   Delete
 2. ஹாஹாஹா! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 3. மதுரக்காரங்க குசும்பு

  ReplyDelete
 4. சிறந்த திறனாய்வுப் பார்வை
  தொடருங்கள்

  ReplyDelete
 5. இந்த பதிவும் தங்களின் நக்கலிலுருந்து தப்பவில்லை.

  ஸ்டாலின் அறிக்கையை பார்த்தீர்களா? "ஓ.பி.எஸ். நல்லவர் தான் வல்லவரா என்று கேட்டிருக்கிறார்? " உங்களின் பார்வையில் அவர் நல்லவரா?வல்லவரா?

  ReplyDelete
 6. நல்லவரா வல்லவரா? - சொக்கனின் கேள்விக்கு பதில் சொல்லுங்க மதுரைத் தமிழா!

  உங்கள் நக்கலை ரசித்தேன்.

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog