உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Monday, October 6, 2014

பிஜேபியின் அரசியல் நாடகத்தில் நடிக்க போகிறாரா ரஜினி?பிஜேபியின் அரசியல் நாடகத்தில் நடிக்க போகிறாரா ரஜினி?
நடத்துனராக இருந்து சூப்பர் ஸ்டார் நடிகராக ஆன ரஜினிகாந்தை டீகடைகாராக இருந்து பிரதமாரக ஆன மோடி பிஜேபியின் அரசியல் நாடகத்தில் நடிக்க தொடர்ந்து மறைமுகமாக அழைப்பு விடுவித்து கொண்டிருக்கிறார்.
அதன் விளைவாக , அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் தங்கள் கட்சிக்கு சாதகமான சூழல் எழுந்துள்ளதாக கணித்துள்ள பாஜக, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை தங்கள் கட்சியில் இணைக்க கடும் பிரயத்தனம் செய்து வருகிறது.
இப்போது தமிழகத்தில் தேர்தல் என்ற மேக மூட்டங்கள் இல்லை. இருக்கும் மேக மூட்டங்களோ அம்மாவின் சிறைவாசம் பற்றிதான். இப்படி தேர்தல் என்ற சூழ்நிலை வராத நேரத்தில் நவராத்திரி விழாவின்போது நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்குச் சென்ற தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்திடம் சூப்பர்ஸ்டார் பாஜகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என எடுத்துரைத்ததாக அந்த கட்சி வட்டாரங்களும் ஊடகங்களும் தெரிவிக்கின்றன.பாராளுமன்ற தேர்தலுக்கு பின் தமிழகத்தில் பிஜேபி திமுகாவை பின் தள்ளி இரண்டாவது இடம் நோக்கி வருவதாக பலரும் நினைத்த நேரத்தில், நாம் தமிழகத்தில் உடனே காலம் தாழ்த்தாமல் வேரூன்ற வேண்டும் என்ற அவசரத்தில் பிஜேபி துடிக்க ஆரம்பித்து இருக்கிறது. அது அப்படி அவசரப்பட வேண்டிய காரணம் என்னவென்று நோக்கி பார்த்தால் காலம் கடக்க கடக்க மோடியின் மத்திய அரசின் மீதுள்ள பிடிப்பு மற்றும் செல்வாக்கு மக்கள் மத்தியில் கண்டிப்பாக குறைய ஆரம்பிக்கும் காரணம் மோடியின் மாயஜால திட்டங்களால் அவருக்கும் இந்தியாவின் மிகப் பெரிய தொழில் அதிபர்களுக்கு மட்டுமே சாதகமாக இருக்கும் மக்களுக்கோ அது மிகவும் பாதாகமாக இருக்கும் அதன் காரணமாக தமிழகத்தில் கால் ஊன்றுவது என்பது கனவில் கூட அவர்களால் நினைத்து பார்க்க முடியாது
அதற்காக அவர்கள் இப்போது தேர்தலுக்கு அவர்கள் வழி வகுத்தாலும் அது அவர்களுக்கு பாதகமாகவே முடியும். காரணம் தமிழக மக்களுக்கு ஜெயலலிதா அவர்கள் தவறு செய்து இருக்கிறார் என்ற உண்மை புரிந்த போதிலும் அவருக்கு கொடுத்திருக்கும் தண்டனை மிகவும் அதிகம் என நினைக்கின்றனர். இந்த அதிகப்படியான தண்டனைக்கு பிஜேபிதான் காரணம் என மக்கள் நினைக்கின்றனர்.மேலும் மக்கள் ஜெயலலிதா செய்த இந்த தவறைதவிர வேறு ஏதும் தவறு செய்யாமல் மிக நல்லாட்சியைதான் தந்து கொண்டிருக்கார் என்று மிகவும் நம்புகின்றனர் அதன் விளைவே பாராளு மன்ற தேர்தலில் அவருக்கு வெற்றிக் கனியை பரிசாக தந்தனர். இப்படி இருக்கும் நல்ல நேரத்தில் பிஜேபி எடுக்கும் எந்த முடிவுகளும் அவர்களுக்கு பாதகமாகவே இருக்கும்ஆனால் இதனை உணராமல் மோடி அரசு ஜெயலலிதா மற்றும் ரஜினியை பகடைகாயாக வைத்து புதிய நாடகத்தை ஆரம்பிக்கிறது இதில் ரஜினி நடிக்க ஆரம்பித்தால் அவருக்கு எதிர்காலத்தில் அத்வானிக்கு ஏற்பட்ட நிலைமையே ஏற்படும்கோபுர கலசமாக உச்சத்தை தொட்டு இருக்கும் ரஜினி அப்படியே இருக்க வேண்டும் அதைவிட்டு அவர் எந்த பக்கம் போனாலும் உச்சத்தில் இருந்து கிழேதான் இறங்க நேரிடும்.ரஜினி கோபுர உச்சத்தில் இருப்பாரா அல்லது முச்சந்தியில் நிற்பாரா என்பது இன்னும் சிறிதுகாலத்தில் தெரிந்துவிடும்.டிஸ்கி: ரஜினியின் குடும்பத்திற்கு ஆசை காட்டி இழுக்க தமிழக பிஜேபி முயற்சிக்கிறது ஒரு வேளை அந்த முயற்சி பலிக்கவில்லை என்றால் பிஜேபியின் தலமை ரஜினியின் மீது வழக்கு போட்டு சந்தியில் நிற்க வைத்துவிடுவதாக மிரட்டும் என்றும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாவம் கடைசிகாலத்தில் ரஜினி கலைஞரை போலதான் அவதிப்பட போகிறார் போலிருக்கிறது


பேஸ்புக்கில் கௌரி சங்கர்  பதிர்ந்தது

முப்பது வருஷ செல்வாக்கு
மூனே நாள்ல போகனுமா !!
இவங்க சார்பா நிக்கரன்னு
அறிக்கை விடுங்க !!
விட்டு பாருங்க !!

@உங்களை ஆண்டவனாலயும் காப்பாத்த முடியாது !!


அன்புடன்
மதுரைத்தமிழன்
Tamilisai Soundararajan|tamil nadu|Rajinikanth|Prime Minister | AIDMK


10 comments :

 1. பிஜேபியின் அவசரத்துக்கான காரணத்தையும், தமிழக மக்களின் மனநிலையையும் மிகச்சரியாக படம்பிடித்த பதிவு !

  அரசியல் நாடகத்தில் ரஜினி கதாநாயகனாக ஜொலிக்க (?) வந்த முதல் வாய்ப்பை விரும்பியோ விரும்பாமலோ தவறவிட்டுவிட்டார் ரஜினி ! அந்த சந்தில் குதிரை ஓட்டிகொண்டிருக்கிறார் விஜயகாந்த் ! ( அந்த குதிரையின் நிலையை நான் குறிப்பிட விரும்பவில்லை ! ) இனி அரசியலில் இறங்கினால் ரஜினிக்கு காமெடி பாத்திரமே மிஞ்சும் என்பது என் கருத்து !

  நன்றி
  சாமானியன்
  saamaaniyan.blogspot.fr

  எனது புதிய பதிவு : தமிழர் என்றோர் இனமுண்டு...

  http://saamaaniyan.blogspot.fr/2014/10/blog-post.html

  தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு எண்ணங்களை பதியுங்கள். நன்றி

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தங்கள் தளம் சென்று பார்த்தேன் பதிவு அருமை..இவ்வளவு நாளாக என் கண்ணில் படாமல் சென்று இருக்கிறீர்கள். உங்கள் தளத்தை தொடர ஆரம்பித்து இருக்கிறேன்

   Delete
 2. நல்ல தொரு பதிவு. தொடர வாழ்த்துக்கள் ...!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

   Delete
 3. மிகச்சிறப்பான அலசல்! இப்போதுள்ள நிலையில் ரஜினி அரசியல் தவிர்ப்பதே அவருக்கு அழகு! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

   Delete
 4. ரஜினியும் எவ்ளோ நாள் தான் நல்லவராவே படிப்பார் பாவம்.
  அப்பப்போ படம் ஓட்டனும்னு அரசியல் ஸ்டான்ட் பண்ணுவார் பாவம். இப்போ அவர் வாயல அவர் நிம்மதி போகிறது:)) நல்ல அலசல் தான் சகா!

  ReplyDelete
  Replies
  1. கருத்திற்கு நன்றி மைதிலி என்ன இவ்வளவு நாளா ரஜினி நல்லவர் என்று அல்லவா நினைத்து இருந்தேன் அதெல்லாம் நடிப்பா அடக்கடவுளே இனிமே யாரைத்தான் நம்புவது

   Delete
 5. ரஜினி: "கண்ணா நான் எப்போ வருவேன் எப்படி (எப்டி - ரஜினி வாய்சில்) வருவேன்னு யாருக்கும் தெரியாது. ஆனா வரவேண்டிய நேரத்துல கண்டிப்பா வருவேன்."

  நான்: "சரி நீங்க இப்ப வருவீங்களா...?"

  ரஜினி: "சொல்லமாட்டேனே"

  ReplyDelete
  Replies
  1. பாருங்க இப்படி அவர் சொல்லி சொல்லியே கடைசியில அரை லூசாத்தான் வருவார்

   Delete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog