உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Wednesday, October 8, 2014

ஜெயலலிதாவை விடுதலை பண்ணுவதற்கு பதிலாக இப்படி செய்தால் என்ன?
ஜெயலலிதாவை விடுதலை பண்ணுவதற்கு பதிலாக இப்படி செய்தால் என்ன?எனது பேஸ்புக் ,டுவிட்டர் , கூகுல் ப்ளஸில்  வந்த கிறுக்கல்கள்


கர்நாடக மக்களை எல்லாம் தமிழ் நாட்டில் குடியமர்த்திவிட்டு தமிழக மக்களை கர்நாடகாவில் குடியமர்த்திவிட்டு கர்நாடக சட்டசபையை தமிழக சட்டபைக்கு மாற்றி தமிழக சட்டசபையை கர்நாடக ஜெயிலுக்கு மாற்றி அங்கு இருந்து பன்னீர் செல்வம் ஆட்சி செய்தால் அது ஜெயலலிதா ஆட்சி செய்வது போலதானே இருக்கும்.# ஹீ ஹீ என்ன நான் சொல்லுறதுஇனிமேல் தண்ணீர் விடுங்க என்று கேட்பதற்கு பதிலாக அம்மாவை விடுங்க என்ற கோரிக்கையைதான் தமிழக அரசு விடுமோ


உங்க வீட்டுல யாரவது செத்தா வெளியூரில் உள்ள ஒவ்வொருத்தருக்கும் போன் போட்டு சொல்ல வேண்டாம் அதிமுக கட்சி அலுவலகத்தில் மட்டும் கூப்பிட்டு சொல்லுங்க அவங்க உங்களுக்கு பணம் தருவதோடு எல்லா நாளிதழ்களிலும் செய்தியாக வரும்படி செய்து விடுவார்கள்


அம்மாவால் தமிழகத்திற்கு கிடைத்த நன்மை அனாதை பிணங்கள் அம்மா பிணங்களாக மாறியதுதான்இந்திய சட்டத்தால் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டுள்ளார் அதே சமயம் மோடியின் வஞ்சகத்தால் தமிழக மக்கள் தண்டிக்கப்படுவார்கள்


இந்திய சட்டத்தால் குற்றவாளி என்று சிறையில் அடைக்கப்பட்டவரை மாநிலத்தின் முதல்வர் சென்று பார்ப்பதற்கு இந்திய சட்டம் அனுமதியளிக்கிறதா?தமிழக புதிய முதல்வர் பன்னீர் செல்வம் தமிழக மீனவர்களை காப்பாற்ற பிரதமருக்கு இன்னும் கடிதம் எழுதாதது கண்டிக்க தக்கது.இலங்கை தமிழர்களுக்காக ராஜபக்சேவை எதிர்த்து இன்னும் ஒரு அறிக்கையை கூட பன்னீர் செல்வம் விடவில்லை அதனால் அவரை துரோகி என்று அழையுங்கள்


ஜெயலலிதாவிற்கு ஆதரவாக பன்னீர் செல்வம் , அனைத்து அமைச்சர்கள் எம் எல் ஏக்கள், எம்பிக்கள் மற்றும் தொண்டர்கள் தீபாவளி கொண்டாடாமல் இருப்பார்களா?


பன்னீர் செல்வத்தை முதல்வர் ஆக்கியதற்கு பதிலாக அம்மா ரஜினியை முதல்வர் ஆக்கி இருந்தால் மோடி அமைதியாக இருந்திருப்பார் தமிழிசை கொலுவிற்கு போய் இருக்க மாட்டார் #என்ன நான் சொல்லுறது


அன்புடன்
மதுரைத்தமிழன்

10 comments :

 1. அதிசயம் ஆனால் உண்மை.
  தொண்டர்கள் வேண்டுமானாலும் தீபாவளியை கொண்டாடமா இருக்கலாம். ஆனால் மந்திரிகள், எம்,எல்.எக்கள் - ?

  ReplyDelete
  Replies
  1. அம்மா உள்ளே போனதில் இருந்து அமைச்சர்களுக்கு தீபாவளிதான் ஆரம்பித்துவிட்டதே

   Delete
 2. கலக்கல் கருத்துக்கள்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

   Delete
 3. சரியான யோசனை.......கர்நாடகத்து காரங்க எல்லாம் தமிழ்நாட்டுக்கு வாங்கப்பா...... தமிழ்நாடு வந்தாரை வழ வைக்கும் நாடப்பா............

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

   Delete
 4. அனைத்தும் சூப்பர்...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

   Delete
 5. ஏன் சார் ரஜினி மேல இவ்ளோ காண்டு... றனைத்தும் சூப்பர்..

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

   Delete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog