Wednesday, September 17, 2014


@avargal unmaigal





நாங்களும் யோசிப்போம்ல......





எனது பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் நான் பதிவிட்டவை.....



கடவுளிடம் நான் வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்க எல்லாவற்றையும் எனக்கு கொடு என்று கேட்டால் அதற்கு கடவுள் நீ எல்லாவற்றையும் அனுபவிக்க உனக்கு வாழ்க்கையையே கொடுத்துவிட்டேன் அதை வைத்து சந்தோஷமாக இரு என்று சொல்லிவிட்டார்.



பலர் உன்னை வம்புக்கு இழுக்கப் பார்ப்பார்கள் ஆனால் நீ அவர்களை அன்புக்குள் இழுத்துவிட்டு விடு அதன் பின் வம்பு காணாமல் போய்விடும்



கடவுள் நோயை குணப்படுத்திவிடுவார் என்று நம்புவர்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் வாங்குவது எதற்கு?



பிரச்சனை : அதை உங்களால் தீர்க்க முடியும் என்றால் அதற்காகக் கவலைப்படுவது ஏன்?
சரி அதைத் தீர்க்கவே முடியாது என்று நினைத்தால் அதற்காகக் கவலைப்படுவது ஏன்?




கடவுளிடம் வேண்டும் போது நாம் இரண்டு கைகளை விரித்து வானத்தை நோக்கி கூப்பிடுவது போலத்தான் நம் குழந்தைகளும் தங்கள் இரண்டு கைகளை விரித்து என்னை தூக்கிக்கொள்ளுங்கள் என்று சொல்வது போலத்தான் நாம் எப்படி நம் குழந்தைகளைத் தூக்கி கொள்கிறோமோ அது போலத்தான் கடவுளும் நம்மைத் தூக்கி கொள்வார்




அடுத்தவனை ஏமாற்றுவது என்பதை உன் விருப்படிதான் செய்கிறாய் ஆனால் அது கண்டு பிடிக்கும் போது நான் என்னை அறியாமல் தப்பு செய்துவிட்டேன் என்று சொல்லி எல்லோரையும் முட்டாள் ஆக்க வேண்டாம்



ஒரு காரணம் இல்லாமல் உங்கள் கணவர் உங்களுக்குப் பூவோ புடவையோ வாங்கி வந்தால் அதற்கு ஒரு காரணம் உண்டு



அழகான பெண்ணை அல்ல தன் வாழ்க்கையை அழகாக்கும் பெண்ணைத்தான் புத்திசாலி ஆண்கள் விரும்புவார்கள்.



நான் பெற்ற புள்ளை ஐந்து வயது வரைதான் சப்போர்ட்டுக்காக என் கையை பிடித்து வாக்கிங்க வந்துச்சு ஆனால் என் மாமனார் பெத்துவுட்ட புள்ளை சப்போர்ட்டுக்காக இன்னும் என் கையை பிடித்துக்கொண்டு வருகிறது. # என்னத்த சொல்ல



ஸ்டேடஸ் மொக்கையாக இருந்தாலும் அதை போடுற பெண் அழகாக இருப்பதால் "LIKE"



உங்கள் மனைவி உங்ககிட்ட ஒரு கேள்வி கேட்டா அதற்கு உண்மையான பதிலை சொல்லிவிடுங்கள். காரணம் அந்த கேள்விக்குப் பதில் அவங்களுக்கு தெரியும் ஆனால் நீங்கச் சரியா சொல்லுறீங்களா என்றுதான் அவங்க டெஸ்ட் பண்ணுறாங்க...


என்னை பேஸ்புக்கில் தொடர முகவரி
என்னை டுவிட்டரில் தொடர முகவரி



அன்புடன்
மதுரைத்தமிழன்

16 comments:

  1. அனுபவ மொழிகள் அருமை
    தொடர நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. மிகவும் நன்று! தருக மேலும் பருக நாளும்

    ReplyDelete
  3. அனைத்தும் அருமை.

    /// அழகான பெண்ணை அல்ல தன் வாழ்க்கையை அழகாக்கும் பெண்ணைத்தான் புத்திசாலி ஆண்கள் விரும்புவார்கள்///

    ஆனால் அழகான பெண்ணை பார்த்தவுடன் புத்தி பேதலித்து தவறான முடிவெடுத்து விடுகிறேதே

    ReplyDelete
  4. அந்த நீலக் கலரில் கொடுத்த தங்கள் கருத்துப் பதிவுகள், யோசனைகள் அருமை, பளிச், நறுக்ஸ்.....100% உண்மை.....செம...போங்க...

    அதுக்கு அப்புறம் அந்தக் கடைசி மூன்று இருக்கு பாருங்க.....அது அக்மார்க் மதுரைத் தமிழனின் நகைச்சுவைப் பதிவு..ஹஹஹ்ஹ்..

    ReplyDelete
  5. எல்லாமே நன்றாக இருக்கு. 6,8 அருமை.

    ReplyDelete
  6. நல்லாவே இருக்குங்க பேஸ்புக் டிவிட்டர் ட்விட்ஸ்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. தான் பெத்த பிள்ளை , மாமனார் பெத்த பிள்ளை:) ஓவரா இல்ல??:)))

    ReplyDelete
  8. அன்பு, வம்பு!! ஆஹா! சிம்பு அப்பாவுக்கு போட்டியா ஒருத்தர் கிளம்பிட்டார் ப்பா கிளம்பிட்டார்:))

    ReplyDelete
  9. அழகான பெண்ணை அல்ல.
    தன் வாழ்க்கையை அழகாக்கும் பெண்ணைத்தான் புத்திசாலி ஆண்கள் விரும்புவார்கள்.....

    இது உண்மையா? உண்மையா? உண்மையா....?

    அப்போ..... எந்த ஆணையும் புத்திசாலி இல்லை என்று சொல்கிறீர்களா....?

    ReplyDelete
  10. நாங்களும் யோசிப்போமில்ல.....

    ReplyDelete
  11. எல்லாமே அசத்தல் ரகம்
    முதல் ஆறும் சீரியஸ் டைப் .
    மற்றவை மதுரைத் தமிழனின் ட்ரேட் மார்க்

    ReplyDelete
  12. அனைத்தும் நல்லா இருக்கு...

    ReplyDelete
  13. சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

    ReplyDelete
  14. வம்புக்கு இழுத்தால், அன்புக்குள் இழுத்து விடு!

    ரசித்தேன். மற்ற்வையும் நன்று.

    ReplyDelete
  15. ஹ ஆஹா...
    சரி
    ஒவ்வொரு பதிவிற்கும் போட்டோஷாப் செய்வீர்களா? எப்படி ராசா முடியுது...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.