Tuesday, September 30, 2014


லூசு பசங்களா இந்த தமிழ் திரைப்பட துறையினர்? தமிழ்நாட்டை பார்த்து இந்தியவே சிரிக்கிறது


தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து எங்களது தமிழ்த் திரையுலகின் வருத்தத்தையும், உணர்வுகளையும் தெரிவிக்கும் வகையில், அறவழியில் ஒரு மாபெரும் மவுன உண்ணாவிரதப் போராட்டத்தை அனைத்து தமிழ்த் திரையுலகின் சார்பாக, சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையின் முன்பு நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடத்தவுள்ளோம்.

இந்த செய்தியை படித்ததும் இந்த லூசு பசங்களை நினைத்து சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. நீதிமன்றத் தீர்ப்பைக் கண்டித்து மவுன உண்ணாவிரதம் இருப்பது எவ்வளவு மடமை. தீர்ப்பு தவறு என்று கருதினால், சட்டப்படி மேல்முறையீடு செய்வதைத் தவிர வேறு நியாயமான வழியே இல்லை. இது கூட அறியாத லூசுங்களா இந்த திரைப்பட துறையினர்.



நான் ஜெயலலிதாவின் தீவிர தொண்டனும் அல்ல அதிமுக மற்றும் எந்த கட்சிகளின் தொண்டனும் அல்ல. ஆனாலும் சில காரணங்களால் எனக்கு ஜெயலலிதாவின் மீது ஒரு மதிப்பு உண்டு. இப்படி நான் இருந்த போதிலும் ஜெயலலிதா மற்றும் பல தலைவர்களை பாராட்ட வேண்டிய சமயத்தில் பாராட்டியும் தவறு செய்யும் போது அதை கிண்டலடித்தும் கலாயத்தும் நகைச்சுவையாக சுட்டிக் காட்டி பதிவு எழுதுவது உண்டு ஆனால் எந்த ஒரு தருணத்திலும் யாருக்கும் ஜால்ரா போடுவது கிடையாது.

அப்படி இருக்கும் எனக்குமே ஜெயலலிதாவின் சிறை வாசம் என் மனதை பாதித்தது. அதன் விளைவாகவே  தண்டனை தலைவர்களுக்கு அல்ல அவர்களை தலைவானக நினைக்கும் தொண்டர்களுக்கே என்று பதிவை வெளியிட்டு எனது கருத்தை சொன்னேன். அதுதான் முறை


ஆனால் இந்த திரைப்பட துறையினரோ இந்திய சட்டத்தை, நீதியை அவமதிப்பு செய்வதாகவே எனக்கு தோண்றுகிறது. ஒரு வேளை தவறான நீதி கொடுக்கப்பட்டு இருந்தால் எல்லோரும் ஒன்று திரண்டு ஜனாதிபதியிடம் முறையிட்டு சட்ட பூர்வமாக மறுபரிசிலனை செய்ய சொல்லாம். ஆனால் அதை விட்டுவிட்டு நீதியை எதிர்ப்பது மிக தவறான செயலாகும். மிக பெரிய தவறை செய்கிறார்கள் சினிமாகாரர்கள் இவர்கள் செய்வதை பார்த்தால் இனி இந்தியாவிற்கு சட்டம் தேவை இல்லை போலும் .


இந்த கொடுமை வேற எந்த நாட்லேயும் நடக்காது அவங்க என்ன தியாகம் செஞ்சிட்டா சிறை சென்று இருக்காங்க? இல்ல பொய் வழக்குல கைது செஞ்சிருக்காங்களா? அடப் பாவிகளா!தப்பு செய்தால் தண்டனை கிடைக்கும் ஆனா சினிமாவுல மட்டும் நல்லவங்களா நடிக்கிறீங்க உங்கள நம்பி ஓட்டு போட்ட மக்கள் பணத்தை கொள்ளை அடிக்கிரீங்க அப்படி கொள்ளை அடிச்சு மாட்டினால் நீங்க உண்ணாவிரதம் இருக்கேறீங்க எந்த ஊரு நியாயமய்யா இது

தனி தனியாக கருத்து சொல்லாத பேடிகளான இந்த திரை உலக பிரபலங்கள் ஒன்று கூடி கோஷ்டி கானம்பாடுகிறார்கள். வழக்கமாக அவர்களை பாதிக்கும் விஷயங்களுக்கு மட்டும் உண்ணாவிரத போராட்டம் இருந்து தங்களது கருத்துக்களை சொல்லும் ஹீரோக்கள் இந்த முறை நாம் சட்டப் பிடியில் ஒரு வேளை சிக்கி கொள்வோம் என்று பயந்து மவுன உண்ணாவிரதப் போராட்டத்தை மேற் கொள்கின்றனர்

இந்த திரைபட துறையினர் பசி கொடுமையால் ஏதையாவது திருடி தின்றுவிட்டு அதனால் காவல்துறையில் சிக்கி நீதிமன்றத்தால் தண்டிக்கப்படும் போது ஒரு ஏழைக்கு ஆதரவாக யாராவது குரல் கொடுத்ததுண்டா என்ன?

அந்த ஏழையினால் திரைப்பட துறையினருக்கு ஆதாயம் ஏதுமில்லை அதனால் அவனை அவர்கள் கண்டு கொள்ளவே மாட்டார்கள்.திரைப்பட துறையினரின் நீதீ இப்படிதான் நம்மை சிரிக்க வைக்கிறது


அரசியல்வாதிகள் போராடுகிறார்கள்.... திரைப்பட துறையினர் ஜால்ரா நாடகம் போடுகிறார்கள் ஆனால்
மக்கள் அமைதியாக வேடிக்கை பார்க்கிறார்கள்... ஆனா; முடிவோ காலத்தின் கையில்............


அன்புடன்
மதுரைத்தமிழன்
லூசு பசங்களா இந்த தமிழ் திரைப்பட துறையினர்? தமிழ்நாட்டை பார்த்து இந்தியவே சிரிக்கிறது

12 comments:

  1. தமிழ் திரைப்பட நடிகர்களை இந்த விஷயத்தில் மிஞ்சவே முடியாது! ஆட்சி மாற்றத்திற்கேற்ப காட்சிகளை மாற்றி காரியம் சாதித்து கொள்ளும் ஜால்ராக்கள் இவர்கள்! சரியாக சொன்னீர்கள்! (இரண்டுமுறை சொன்ன கருத்துக்களே வந்துள்ளன. பதிவை கொஞ்சம் சரிபார்க்கவும்!) நன்றி!

    ReplyDelete
  2. உண்மை சரியான லூசு கோமாளி பசங்க. சட்டம் தன் கடமையை செய்து நமக்கு இந்திய நீதித்துறையின் மேல் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.

    ReplyDelete
  3. அற்புதமான விரிவுரை நண்பா, எனக்கு ஒன்றுமே புரியலை இந்த சினிமா உலகத்துல ஒருத்தன் கூட இல்லையா ? இவங்களை உண்மையை பேசவைக்க ஒரு வழி இருக்கு ஆனால் ? கண்டிப்பாக நடக்காதுதான் அது மக்கள் அனைவரும் ஆறு மாதத்துக்கு சினிமா பார்க்க மாட்டோம்னு சொன்னால் ? ? ? மறுநிமிடமே மௌனத்தை கலைச்சிட்டு பேசிடுவாங்கே இந்தக்கூட்டத்துல எத்தனை ''பெரிய மனிதர்கள்'' பெரிய மனிதர்கள்தானா ?

    ReplyDelete
  4. ஆமாம் தமிழா இன்று மதியம் மெட்ரோ ரயிலில் சென்ற போது, சேப்பாக்கத்துல ஒரே கூட்டம். போலீஸ், மைக்குல வீர உரைகள்.....பார்த்தேன். அப்போதான் புரிந்தது திரையுலக முட்டாள்களின் கூட்டம் என்று! செம காமெடியா இருந்துச்சு! நீங்க இங்க சொல்லியிருக்கறதத்தான் நினைச்சுகிட்டே போனேன் அந்த சமயத்துல....ஆ ஊன்னா உண்ணாவிரதம் மட்டும்தான் தெரியும்.....இவங்களுக்கு....ஒருத்தருக்கு கூட புத்தி இல்லையானுதான் நினைச்சேன்...

    நான் ஜெஜெ அன்று கைதானவுடன் ஒரு பதிவு எழுதி வைச்சுருக்கேன்....ஆனா இன்னும் போடல.....அதுல கொஞ்சம் காட்டம் இருக்கோனு .....திராவிடக் கட்சிகளை ...விமர்சித்தல்....என்று......-- கீதா.

    ReplyDelete
  5. யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களை காக்காப் பிடிப்பது தானே, இந்த திரைப்ப்டத்துறையினரின் செயலாகும்.

    ReplyDelete
  6. தமிழ்நாட்டைப் பார்த்து சிரிக்கும் இந்தியா எங்க இருக்கு? யார் அந்த இந்தியர்கள்? எந்தத் தகுதியில் அவர்கள் சிரித்தார்கள்? சிரிக்கும் தகுதிபடைத்த ஒரு இந்தியனைக் காட்டுங்கள்.

    ReplyDelete
  7. என்ன சொல்றானுக? சத்யராஜ், கார்த்தி, பிரபு எல்லாம்? சட்டம் ஒழுங்கே வேணாம், நாங்க என்ன செஞ்சாலும் சட்டம் பொத்திக்கிட்டு இருக்கணும்னா? அடி முட்டாள்கள்!

    சோ ராமசாமிங்கிற ஈனப்பார்ப்பான் என்ன சொன்னான் பார்த்தீங்களா? ஈனப்பார்ப்பான் நான்னு காட்டிட்டான்! அவனும் அவன் ஸ்டேட்மெண்ட்டும்! இந்த மாதிரித்தான் காலங்காலமா பார்ப்பான்கள் இந்த திராவிட நாய்களை வச்சு பொழைப்பு நடத்துறானுக! This guy studied law! He does not say that JUSTICE is SERVED and NOBODY is above law even "PAAAPPAAN" included here

    This is the time to WATCH the venomous brahmins and their "cheap minds"!

    They dont remember, NOBODY is ABOVE LAW???

    பார்ப்பான் ஆண்டால்த்தான் இந்த திராவிட நாய்களுக்கு இனிக்கிது! திராவிடர்கள் மாதிரி கூமுட்டைகள் உலகிலேயே இல்லை!

    1996 ரஜினி சொன்னது ஞாபகம் இருக்கட்டும். Toda the justice is served! Joining these idiots,( if ) ரஜினி ஏதாவது வாயைத் திறந்தால் என் பதிவுதான் முதல்ப் பதிவு ரஜினியை கிழி கிழினு கிழிக்க! சொல்லிப்புட்டேன்! Let me warn Rajnikanth!

    ReplyDelete
  8. இதில் எல்லோரையும் குற்றம் சொல்லுறோம். ஆனால் உண்மையான "லூசு பசங்கள்" மக்களாகிய நாம்தான். குற்றவாளிகளான அரசியல்வாதிகளை நிராகரிக்காமல் என்று மக்களும் கொள்ளையில் பங்கு கேட்க ஆரம்பித்தார்களோ அன்று துவங்கியது நமது சரிவு.

    18 ஆண்டுகள் வழக்கு இழுத்தடித்தது என நாட்டின் சட்டம் நீதித்துறை பற்றிய குற்றச்சாட்டு. ஆனால் அதற்கு காரணம் மறுபடியும் ஜெவை நாம் தேர்ந்தெடுத்து சிஎம் ஆக்கியது, அவர் தன்மீதான வழக்கை முடிந்தவரை இழுத்தார்.

    ஜெ பெரும் ஊழல்கள் செய்த பிறகு அடுத்த 1996-ல் வந்த கருணாநிதி ஆட்சியை ஊழல் இன்றி முடிந்த அளவு நேர்மையாக நடத்தினார்- ஊழலை மக்கள் எதிர்க்கிறார்கள் என்பது நினைத்தார். ஆனால் அடுத்த எலெக்சனில் அவர் தோல்வியுற்றார். பெறவு நேர்மையாக ஆட்சி நடத்த அவருக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது? இதே போல்தான் எம்ஜிஆருக்கும்- 1980 நாடளுமன்ற தேர்தலில் தோல்விக்கு பின்னர் பணமில்லாமல் கட்சி வெற்றி பெறுவது கடினம் என உணர்ந்தார் - ஊழலை அனுமதித்தார்.

    நாம், நாட்டையும் அரசியல்களையும் சினிமாகாரனுவளையும் குறை சொல்லி சபித்தே காலத்தை ஓட்டுகிறோம். இன்னமும் மக்கள் காலனி ஆதிக்க மனோநிலையில் உங்க அரசு, உங்க போலிஸ், உங்க ஆட்சி என்ற பாவத்தில் இருப்பதுதான் சாபக்கேடு.முதலில் நாடு, அரசு, அரசியல்வாதிகள், சினிமாக்காரனுக, அதிகாரிகள், வக்கற்ற ஏழைகள், எல்லாமும் நாம்தான் என்பதை உணரவேண்டும், தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டும். அன்றுதான் நமக்கு விடிவுகாலம்.

    ReplyDelete
  9. ஒரு ஈனப்பய என்னை பார்ப்பான் என்று கூறுகின்றான். என்னப்பத்தி அவனுக்கு என்ன தெரியும்?

    ReplyDelete
  10. மதுரைத் தமிழா நான் எதாவது தவறாக்கூறியிருந்தால் மன்னிக்கவும். என்னை ஒரு ஈனப்பாப்பான் என்று ஒருவர் கூறியதை ஏற்கிறீர்களா?

    ReplyDelete
  11. வருண் என்றால் அனானி இல்லை ராவணன் என்றால் அனானியா? அதுசரி ஒன்னோட அட்ரஸ் சொல்லு.... ஒன்னோட பாஸ்போர்ட் காப்பியை இங்கே போடு... இல்லாவிட்டால் நீயும் அனானிதாண்டா...

    ReplyDelete
  12. அவர்கள் நடிகர்கள்.... ஆட்சி பீடத்தில் ஏறுவோரின் பின்னால் ஓடுபவர்கள்....

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.