உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Sunday, September 21, 2014

வெள்ளிகிழமை இரவு இந்தியாவில் தயாராகும் பீரை குடிக்காதீங்க
வெள்ளிகிழமை இரவு இந்தியாவில் தயாராகும் பீரை குடிக்காதீங்க
வெள்ளிகிழமை இரவு 8 மணி விஜய் டிவியில் ஆண்டாள் அழகர் பார்த்டு கொண்டே இன்று குக் பண்ணுவோமா அல்லது வெளியில் போய் சாப்பிடுவோமா என்று நினைத்த நேரத்தில் போன் அடித்தது. ஒடிச் சென்று போனை எடுத்தாள் என் மகள் கூப்பிட்டது என் பக்கத்து வீட்டுக்காரர்(மலையாளி). க்ரில் பார்ட்டி வாருங்கள் என்றார். (க்ரிலில் குக் பண்ணுவது என்றால் அதை ஆண்கள்தான் செய்ய வேண்டும் என்பது அமெரிக்காவில் எழுததபடாத ஒரு விதி. அதன் படி கிரிலில் சமைக்க வேண்டியதை எல்லாம் பெண்கள் தாயாரித்து வைக்க அதை ஆண்கள் கிரிலில் போட்டு சமைத்து கொடுக்க வேண்டும். க்ரிலை சுற்றி விருந்துக்கு வந்த ஆண்கள் எல்லாம் சுற்றி நின்று அருகில் வைத்திருக்கும் கூலரில் இருந்து பீரை எடுத்து குடித்து அரட்டை அடித்து குக் பண்ணி அதில் எங்களுக்கு வேண்டியதை எடுத்து சூடாக சாப்பிட்டுக் கொண்டே மிச்சம் மீதியை வீட்டின் உள்ளே காசிப் பேசிக் கொண்டிருக்கும் பெண்களுக்கு அனுப்புவோம்)என் பெண் போனை முடிக் கொண்டு அப்பா நாம் கண்டிப்பாக போறோம் என்றார். நான் உடனே எனக்கு ஒகே ஆனா நம் வீட்டு பாஸை முதலில் கேட்டு விடு என்றேன். எங்க வீட்டு பாஸும் ஒகே சொல்லிவிட்டார். காரணம் அவருக்கும் சமைக்க கொஞ்சம் டையர்டாக இருந்தது போல. நாங்களும் சரி என்று சொல்லிவிட்டு அவர்கள் வீட்டிற்கு போனோம். அவர்கள் எங்கலை மட்டுமல்ல அருகில் உள்ள மேலும் 2 குடும்பத்தை கூப்பிட்டு இருந்தார்கள்,இந்தியர்கள் பார்ட்டி என்றாலே 2 விதமான சமையல் செய்யனும் ஒன்று வெஜ் மற்றொன்று நான் வெஜ். அதனால் கிரிலில் முதலில் வெஜிடேரியங்களுக்கா க்ரில் வெஜிடேபுள் வித் பன்னீர், சோளக்கதிர், பேக் பொட்டடோ, ஸ்வீட் பொட்டடோ மற்றும் அன்னாசிபழம் சுட்டு எடுத்தோம் அடுத்தாக சிக்கன், மட்டன் காபாப் பண்ணினோம்.வீட்டுக்காரர் எங்களுக்கு முதலில் பீர் கொடுத்தார்( எனக்கு பீர் மற்றும் ஒயின் அவ்வளவாக பிடிக்காது காரணம் ஒயின் சின்ன புள்ளைங்க குடிக்கிறது என்றும் பீர் பெண்களுக்கான சரக்கு என்றும் நினைப்பாதாலும் அதன் டேஸ்டும் அவ்வளவாக பிடிக்காது) ஆனால் தருவதை வேண்டாம் என்று மறுக்க மனமில்லாததால் 2 பாட்டில் மட்டும் குடித்தேன். (அமெரிக்காவில் உள்ள பீர் பாட்டில் மிக சிறியதுங்க நம்ம ஊர் பாட்டில் மாதிரி பெரியது கிடையாதுங்க..)
எல்லாம் நல்லபடியாகத்தான் சென்றதுங்க ஆனா எதிர்த்த வீட்டு குடும்பம் ஒன்று சிறிது லேட்டாக வந்தது. அந்த விட்டுக்காரர் கைவீசிட்டு சும்மா வாரமா அவரும் பீர் வாங்கிட்டு வந்தாருங்க அந்த பீர் அமெரிக்காவில் தயாரித்த பீர் இல்லைங்க இந்தியாவில் தயாரித்த பீருங்க.. விருந்து வைத்தவர் மெயின் சரக்கை எடுக்க மறந்துவிட்டார் போல நானும் கூச்ச சுபாவம் உள்ளவன் என்பதால் அதை நினைவு படுத்தாமல் எதிர்த்த வீட்டுக்காரர் கொண்டு வந்த இந்திய பீரையும் அவர் வற்புறுத்தலினால் 2 பாட்டிலை உள்ளேவிட்டேனுங்க.மணி 12 ஆகியது அடுத்தாநாள் அனைவருக்கும் லீவு ஆனால் எனக்கு சீக்கிரமாக வேலைக்கு செல்வதால் நான் எஸ்கேப் ஆகிறேன் என்றதும் எல்லோரும் அதுதான் சாக்கு என்று எஸ்கேப் ஆகிவிட்டார்கள்..நான் வீட்டிற்கு வந்ததும் கொஞ்சம் நெட்டில் மேய்ந்துவிட்டு என் ரூமில் நாயுடன் படுக்க சென்றேன்.( என் மனைவியை நாய் என்று சொல்லவில்லைங்க நான் வளர்க்கும் சன்னி என்ற நாய்குட்டியை சொன்னேன்) எனது பெட்டுக்கு அருகில் அதற்கென்று ஒரு பெட் போட்டு அதில்தான் அது தூங்கும்) என் மனைவி ஊரில் உள்ள அவள் அம்மாவிடம் பேசிவிட்டு தூங்க சென்றாள்அப்படி தூங்குகையில் எனக்கு ஒரு கனவு வந்தது. அட நீங்க நினைக்கிர மாதிரி கனவு எல்லாம் எனக்கு வரலைங்க... நான் ஒரு சேல்ஸ்மேன் அதனால் எனக்கு அது தொடர்பாகதான் கனவுகள் வரும்..அன்று இரவும் அப்படித்தான் எனக்கு ஒரு கனவும் வந்தது. அந்த கனவில் ஒரு பெண்ணிடம் நான் விற்கும் பொருளை விவரித்து கொண்டிருக்கையில் திடிரென்று நான் போட்டு இருந்த என் பேண்டை காணவில்லை. அந்த பெண் என் பேண்டை உருவவில்லை ஆனாலும் என் பேண்ட் காணாமல் போய்விட்டது உடனே அந்த பெண்ணிடம் எக்ஸ்கியூஸ்மீ என்று சொல்லிவிட்டு அருகில் இருக்கும் ரூமிற்கு போனால் அங்கு 10க்கும் மேல் புது கைலிகள் இருந்தன. அதை பார்த்தது எனக்கு ஆச்சிரியம் அது அங்கு எப்படி வந்தது என்று விசாரித்ததில் கூட வேலைப் பார்க்கும் ஆப்ப்ரிக்கன் அது அவனது என்றும் அது அவனுக்கு அவங்க நாட்டில் இருந்து அவரின் உறவினர் வாங்கியது என்றும் சொன்னார். நான் இது எங்க ஊரு அதுவும் தமிழனுடைய உடை ஆச்சே இது உங்கள் ஊரில் எப்படி கிடைக்கிறது என்று கேட்டதற்கு அவன் இது எங்க ஊரு ஆடை என்று அவன் சொல்ல கடைசியிலே எங்க 2 பேருக்கும் வாக்குவாதம் வந்தது. அப்படி வாக்குவாதம் நடக்கையில் எனக்கு தலைவலித்தது..தலைவலிக்க ஆரம்பித்ததால் உடனே எழுந்து ஒரு அட்வில் என்ற மாத்திரையை போட்டு படுத்தேன் கொஞ்ச நேரம்தான் தூங்கியது போல இருந்தது யாரோ தொடுவது போல இருந்தது ஆஹா மனைவிதான் கூப்பிடுகிறாள் என்று ஆர்வத்தோடு எழுந்தால் மனைவி நல்லா ஆழந்து தூங்கி கொண்டிருந்தாள் .தொட்டது யாரென்று பார்த்தால் அது என் செல்ல நாய்க் குட்டிதானுங்க. அவர் என் முகத்தருகில் வந்து ஹீஹீஹீ என்று வந்து நின்றார், மணியை பார்த்தால் மணி ஆறாகிவிட்டது . வழக்கமாக எந்திருக்கும் நேரமென்றாலும் இரவில் குடித்த இந்திய பீரின் காரணமாக தலை மட்டுமல்ல உடம்பும் வலித்தது அதனால் சன்னீயிடம் சொல்லி இன்னும் அரை மணி நேரம் தூங்கினேன் அதன் பின் அவனை கூப்பிட்டு காலை வாக்கிங்க் சென்று விட்டு பெரிய கப்பில் காப்பி வைத்து( எனது காப்பி கப் நம் ஊரில் உள்ள பாத்ரூம் மக்கை போல பெரியது) குடித்துவிட்டு அதன் பின் வேலைக்கு சென்றும் தலைவலி போகவில்லைங்க..
இதுக்குதானுங்க நான் பீரை குடிப்பது இல்லை அதுவும் இந்தியன் பீர் மிக தலைவலி பிடிச்ச சமாச்சரமுங்க
அன்புடன்

சுயபுராணத்துடன் சரக்கு புராணம் பாடும்
மதுரைதமிழன்

13 comments :

 1. இந்தியாவில் இரப்பவர்களே இந்தியச் சரக்கை விரும்பாமல் வெளிநாட்டு சரக்கு வாங்கிக் குடிக்கிறார்கள்.
  நீங்கள் என்னவென்றால்......(((

  ஆனாலும் அதைக் குடித்த உங்களுக்குத் தலைவலி உடம்பு வலி வந்தது என்றது பரவாயில்லை.
  ஆனால் ஏன் இந்திய ஆப்பிரிக்க கைலிகள் நினைவுக்கு வந்தது?

  என்னவோ போங்கள்...... நான் இந்திய சரக்கையெல்லாம் குடித்ததில்லை....

  ReplyDelete
 2. மன்னிக்கவும்.... இந்தச் சரக்கை எல்லாம் என்று மாற்றி படியுங்கள்.... ஹி ஹி ஹி...

  ReplyDelete
  Replies
  1. ஹீ.ஹீ.ஹீ.ஹீ சரக்கை பற்றி படித்தற்கே உங்களுக்கு இந்த அளவு தள்ளாட்டமா என்ன?

   Delete
 3. நண்பர் மதுரை தமிழன் அவர்களுக்கு ஆரம்ப காலங்களில் உங்கள் கட்டுரைகள் , பதிவுகள் படிப்பதற்கு நன்றாக இருந்தது சில காலமாகவே எழுதும் பதிவுகள் முகம் சுளிக்க கூடிய வகையிலும் , இவர் ஏன் இப்படி எழுத ஆரம்பித்து விட்டார் என்று நினைக்க தோன்றுகிறது தயவு செய்து உங்கள் வழக்கத்திற்கு மாறான பதிவுகளை களைந்து தரமான பதிவுகளை வெளியிடுவீர்கள் என நம்புகிறேன் . எனது கணிப்பு தவறாக இருப்பின் மன்னிக்கவும் .

  ReplyDelete
  Replies
  1. நண்பரே உங்கள் கருத்திற்கு நன்றி..... ஆரம்ப கால கட்டத்தில் இருந்து தற்போது உள்ள கால கட்டம் வரை எனது பதிவுகள் ஒரே மாதிரிதான் வருகின்றன.. எதையும் ஒளிவு மறைவு இல்லாமல் என் மனதில் பட்டதை எழுதி வருகிறேன். யாருக்கவும் எதற்காகவும் நான் எதையும் மாற்றிக் கொண்டதில்லை எதிர்காலத்திலும் மாற்றிக் கொள்வதாக உத்தேசம் இல்லை...... இந்த பதிவில் உங்களை முகம் சுளிக்க வைத்தது ஏது என்று சொல்ல முடியுமா? சரக்கு என்று சொல்லி அதைபற்றி எழுதியதா உங்களை முகம் சுளிக்க வைக்கிறது. அப்படியென்றால் உங்களை நினைத்து சிரிப்பதை தவிர எனக்கு வேறு ஏதும் தோன்றவில்லை நண்பரே

   இந்த பதிவு எங்களது அமெரிக்க வாழ்வில் நடக்கும் செயலை போலித்தனம் இல்லாமல் அப்படியே சொல்லி இருக்கிறேன்... அது உங்களுக்கு தவறாக இருக்கிறது போல...


   நான் எல்லாம் எனது நண்பர்கள் எழுதும் பதிவாக இருக்கட்டடும் அல்லது வேறு யாரும் எழுதும் பதிவாகட்டும் எனது படிப்பு ரசனைக்கு ஏற்ற மாதிரி இல்லையென்றால் நான் அந்த பக்கம் தலையெடுத்து வைக்க மாட்டேன். இதை உங்களுக்கு சொல்ல கடமைபட்டு இருக்கிறேன்.... நான் சொல்ல வருவது உங்களுக்கு புரிந்து இருக்குமென்று நினைக்கிறேன் நண்பரே.. நான் சொன்னதில் தவறு ஏதும் இருந்தால் மன்னிக்கவும்

   Delete
 4. நீங்க ஒவ்வொரு முறை இதுபோல் பதிவெழுதும்போதும், விமல் மாதிரி உங்களை யாராவது உங்களைத் தவறாகப் புரிஞ்சுக்கிறாங்க! நீங்களும் அதுக்கு ஒரு விளக்கம் கொடுத்துடுறீங்க- கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு. இப்போலாம் உங்க பதிவுத் தலைப்பைப் பார்த்ததுமே விமல் பின்னூட்டம்மாதிரி ஒண்ணு கட்டாயம் வரும்னு எதிர்பார்த்து நான் ஏமாறுவதில்லை.

  தல: இதெல்லாம் இங்கே உள்ளவங்களுக்காக "இம்போர்ட்" பண்ணியது. அதைப்போயி வாங்கிக் கொண்டு வந்தாரா உங்க நண்பர்? ஒண்ணு வாங்கினால் நாலு இனாம்னு "சேல்" இல்லைனா "க்ளியரன்ஸ்"ல போட்டு இருப்பானுகனு நெனைக்கிறேன். நம்மாளு எதை ரெகுலர் ப்ரைஸ்ல வாங்கினான்? 75% ஆஃப்ல கொடுத்ததும் அள்ளிட்டு வந்துட்டாருபோல உங்க நண்பர், தலைவலியைக் கொடுத்து அவரை மறக்காமல் இருக்க வைக்க!

  ஆமா, வீக் எண்ட்ல அமெரிக்கன் ஃபுட் பால், பேஸ் பால் எதுவும் போயி ஸ்டேடியத்தில் பார்ப்பதில்லையா? உங்களை ஒரு நாள் வந்து அழச்சுட்டுப் போறேன். It will be lot of fun when you are watching a ball-game in the stadium! என்ன தல நீங்க? இன்னும் இப்படி வீணாப் போன தேசியாவே இருக்கீங்க! :(

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் பாஸ் ஸ்டேடியத்தில் போய் விளையாட்டை பார்ப்பது மிக சந்தோஷம் தரக் கூடியதுதான் ஆனால் அதை நண்பரகளோட தான் போய்பார்க்கணும் குடும்பத்தோட பார்க்க போனால் பிரச்சனைதான் என்ன பிரச்சனை என்கீறீர்களா? ஸ்டேடியத்தில் போய் உட்கார்ந்த உடனே குழந்தை சொல்வா பாத்ரூமிற்கு போகணும் என்று.. சரி என்று கூப்பிட்டு போய் திரும்ப உட்கார்ந்த பிறகு மனைவி சொல்லுவாள் தலைவலிக்கிற மாதிரி இருக்குது காரில் போய் மாத்திரை எடுத்து வான்னு... சரி என்று அதை செய்த பின் குழந்தை கேட்பா டாடி என் லிப் பாமை மறந்து வைச்சிட்டேன் காரில் போய் எடுத்து வா என்று அதை செய்த பின் மனைவி சொல்லுவா பசிக்கிற மாதிரி இருக்குது ஏதாவது வாங்கி வான்னு... இப்படி எல்லாம் செய்து முடித்த பின் அக்கடா என்று உட்கார்ந்தால் அப்பதான் நாம் பார்க்க வந்த நிகழ்ச்சி முடியற நிலையில் இருக்கும். உடனே மனைவியும் பிள்ளையும் சொல்லுவாங்க டாடி நிகழ்ச்சி முடியப் போகுது அதனால நீங்க காருக்கு போயி ஏர்கண்டிசன் அல்லது ஹீட்டை ஆன் பண்ணி காரை வாசலுக்கு கொண்டு வந்து நில்லுங்க என்பார்கள்.....

   இப்படி எல்லாம் செய்து நிகழ்ச்சியை பார்ப்பதற்கு பதிலா கையில் ஒரு பாட்டிலை எடுத்துகிட்டு பேக்யார்டுல வீளையாடுவது ரொம்ப சந்தோசமுங்க...


   ஆமாம் ஸ்டேடியத்திற்கு நீங்க கூட்டிப் போகும் போது சரக்கு வாங்கி தந்துதானே என்னைக் கூட்டி போவீங்க

   Delete
  2. தல: உங்களுக்கு பேஸ் பால், அமெரிக்கன் ஃபுட் பால் ரூல்ஸ் எல்லாம் தெரியுமா? இல்லை எல்லாமே, க்ரிக்கட், சாக்கர் (கால்பந்து) மாதிரி ஒரே ரூல்ஸ்தான்னு நெனச்சுக்கிட்டு இருக்கீங்களா? எப்போவாவது டிவில, சூப்பர் பவ்ல் அல்லது வேல்ட் சீரீஸ் எதுவும் பார்ப்பீங்களா? இல்லைனா எல்லாவற்றையும் நாந்தான் அ-னா, ஆ-வன்னா ல இருந்து அதையும் சொல்லிக்கொடுக்கணுமா? ஸ்டேடியத்திக்க்கு சும்மா பியர் குடிக்கவும் (தட்ஸ் ஆண் மி, டோண்ட் வொர்ரி) ச்சியர் லீடர்களையும் வேடிக்கை பார்க்க மட்டும் போகணும்னா வீட்டில் ஏதாவது பொய்யைச் சொல்லிட்டு "நண்பர்களுடன்" போறதுதான் சரி. உண்மையிலேயே ஸ்போர்ட்ஸ் பார்க்கணும்னா குடும்ப சகிதமாப் போகலாம்! :)

   Delete
 5. வணக்கம்

  நான் ரவிச்சந்திரன் சென்னயில் இருந்து. நான் உங்களுடைய பதிவுகள் பல படித்து இருக்கிறேன். மிகவும் எதார்த்தமாகவும் நல்ல விதமாகவும் இருக்கிறது. பாராட்டுக்கள்

  ReplyDelete
  Replies
  1. Ravisai , உங்களது கருத்துக்கும் பாராட்டிற்கும் மிக நன்றி

   Delete
 6. தல... நீங்க சரக்க மிக்ஸ் பண்ணி அடிச்சதாலதான் இந்த தொல்லையே (அமெரிக்கன் பீர் + இந்தியன் பீர்). மத்தபடி இந்தியன் பீரும் நல்ல பீர் தான் .......க்கும்

  ReplyDelete
 7. //க்ரில்லில் சமைப்பது எழுதபடாதவிதி // எப்பவுமே நாங்க பொண்ணுங்க தானே சமைக்கிறோம் அதனால் க்ரில் சமையல் நீங்கதான் செய்யணும் !! தலை வலி இருக்கும்போது காபி குடிச்சா இன்னும் வலி அதிகரிக்கும்.. ஜிஞ்சர் டீ குடிச்சி பாருங்க நெக்ஸ்ட் டைம் .
  பரவாயில்லை நீங்க கொடுத்து வைச்சவர் :) சன்னி முகத்துகிட்ட வந்து ஹிஸ்ச்ஸ் செஞ்சு எழுப்புவதை சொன்னேன் .
  எங்க வீட்டு பூனை தயவு தாட்சண்யம் பாக்காம முகத்து மேலே நடந்து போகும் !! இல்லைன்னா சரியா கால் கட்டை விரலை டார்கிட் வச்சி கடிக்கும் .நாய் வளத்தா நீங்க அதுக்கு எசமான் பூனை வளர்த்தா அது உங்களுக்கு எசமான் :)
  அமெரிக்காவும் இங்கிலாந்து போல ஆகிடுச்சா!!( நம்மூர் பொருள் இம்போர்ட்ஸ் )

  ReplyDelete
 8. கிரில் பார்டி அனுபவம் ரொம்பவே கூல்..
  கொஞ்சம் கண்ணக்கட்டுது...
  எனவே...

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog