உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Tuesday, August 19, 2014

நண்பர்களே என்னை தேடவேண்டாம் பதிவுலகத்தில் இருந்து சிறிது நாள் விலகி கொள்கிறேன்..நண்பர்களே என்னை தேடவேண்டாம் பதிவுலகத்தில் இருந்து சிறிது நாள் விலகி கொள்கிறேன்..நண்பர்களே என்னை தேடவேண்டாம் பதிவுலகத்தில் இருந்து சிறிது நாள் விலகி கொள்கிறேன். இது நானாக எடுதத முடிவு அல்ல. என் குடும்பத்தினரின் வற்புறுத்தலால் இதில் இருந்து விலகியது மட்டுமல்லாமல் நான் வசிக்கும் நீயூஜெர்ஸியில் இருந்தும் வெளியேறுகிறேன்...இந்த முடிவை எடுக்ககாரணம் 

பூரிக்கட்டை அடியில் இருந்து தப்பித்து கொள்ளலாம் என்பதால் தான்.அது மட்டுமல்லாமல் உள்ளூர் பிகர்களை மட்டுமே பார்த்து கண்கள் பூத்து போனதால் வெளியூர் பீச்சுக்கு சென்று கண்ணுக்கு குளிர்ச்சியாக பார்த்து வந்தால் மனதுக்கு இதமாக இருக்கும் என்பதால் இங்கு செல்லுகிறேன்

 அழகை ரசிக்க இறைவன் அழகான கண்களை கொடுத்தது மட்டுமல்லாமல் அழகான பெண்களை பீச்சில் அரைகுறை ஆடையுடன் நடமாடச் செய்வதால் பார்க்க செல்கிறேன். இறைவன் என்ன நமக்கு தருகிறானோ அதை மறுக்காமல் ஏற்று கொள்ள வேண்டும் இல்லையென்றால் அவனது கோபத்திற்கு நாம் ஆளாக நேரிடும்.நான் இப்படி பெண்களை பார்ப்பது தவறு என்றால் என் கண்களில் இப்படிபட்ட பெண்கள் படாமல் இருக்கட்டும் என்று கடவுளை வேண்டிக் கொண்டுதான் பீச்சுக்கு செல்லுகிறேன்..ஆனால் கடவுள் தப்பு இல்லை என்றுதான் நினைக்கிறார் போல அதனால்தான் இப்படிபட்ட அழகான பெண்கள் மட்டும் என் கண் வலையில் வந்து மாட்டுகிறார்கள்

அதனால் நான் நீயூஜெர்ஸியில் இருந்து வெர்ஜினியா பீச்சுக்கு குடும்பத்துடன் சென்றுள்ளேன். அங்கு  வெள்ளிக்கிழமை வரை இருந்து விட்டு அங்கிருந்து பிட்ஸ்பர்க் சென்றுவிட்டு அதன் பின் பென்சில்வேனியா சென்று அதன் பின் நீயூஜெர்ஸிக்கு வரலாம் என்று நினைத்து பயணம் மேற்கொண்டுள்ளேன். அதனால்தான் நான் இந்த சிறிய இடைவெளி. ஒரு வேளை மீண்டும் வந்து பொழுது போகவில்லையென்றால் பதிவுகள் தொடரும்

வெர்ஜினியா பீச்சுக்கு வரும் தமிழர்களே பீச்சில் 2 பெண்களுக்கு ( மனைவி மற்றும் என் குழந்தைக்கு) இடையில் உட்கார்ந்து அங்கு வந்து போகும் பெண்களை நாக்கு தொங்க போட்டு பார்த்து கொண்டிருக்கும் தமிழனை பார்த்தால் அது மதுரைத்தமிழனாகத்தான் இருக்கும் முடிந்தால் ஹாய் சொல்லுங்கள் ( தமிழ் பெண்கள் மட்டும்)


அது வரை உங்களிடம் இருந்து விடை பெறுவது உங்கள் மதுரைத்தமிழன்..


இப்ப நிம்மதியா மக்களே!!!!!!!!!!!!!!!!!!!!!


அன்புடன்
மதுரைத்தமிழன்

23 comments :

 1. வெர்ஜீனியாவில் செய்யும் பாவங்களுக்கு பிட்ஸ்பர்க் கோவிலில் பாவ மன்னிப்பு
  கேட்டுவிட்டு வரப்போகிறேன் என்று சொல்லுங்கள் .

  ReplyDelete
  Replies
  1. பிட்ஸ்பர்க் போவது கோயிலுக்கு அல்ல எனது மனைவியின் உறவினரை பார்க்க மட்டுமே.... இப்பொழுது கோவிலுக்கு எல்லாம் செல்லுவதில்லை அப்படி சென்றாலும் சாப்பிடுவதற்கு மட்டுமே .2 வாரங்களுக்கு முன்பு Flushing temple லில்தான் சாப்பாடு

   Delete
 2. அய்யய்யோ பூரிக் கட்டையை வீச சொன்னது தப்பாப் போச்சு அது பத்திரப் படுத்தி வைக்க வேண்டியது எவ்வளவு அவசியம் என்று இப்போ புரிகிறது. வீசிவிட்டீர்களா என்ன ?

  ReplyDelete
 3. உங்கள் மகனும் அதான் சன்னி பையனும் உங்களோடு வெகேஷன் ட்ரிப் செல்கிறானா !
  சந்தோஷமா உங்கள் குடும்பத்துடன் விடுமுறையை என்ஜாய் செய்யுங்க .

  ReplyDelete
  Replies
  1. sunny யை கூட்டி செல்லவில்லை அதை நீயூஜெர்ஸியில் உள்ள நாய்களுக்கான ரிசார்ட்சில் (ஹோட்டலில்) வீட்டு வந்து இருக்கிறேன். உண்மையாக சொல்லுவதென்றால் என் மனம்மெல்லாம் sunny மீதுதான் இருக்கிறது எதற்க்கும் அழுகாதா நான் sunny யை வீடியோ கேமரா மூலம் நெட்டில் பார்த்த போது மனம் இருப்பு கொள்ளவில்லை இந்த ட்ரிப் முழுவதையும் முடிக்க போகிறோமா அல்லது பாதியிலேயே திரும்பிவிடுவோமா என்ற நிலமையில்தான் இருக்கின்றேன்

   Delete
  2. /இந்த ட்ரிப் முழுவதையும் முடிக்க போகிறோமா அல்லது பாதியிலேயே திரும்பிவிடுவோமா என்ற நிலமையில்தான் இருக்கின்றேன் //
   நோ !! ஒன்றுக்கும் கவலை வேண்டாம் .
   ஒன்று சொல்கிறேன் ..நீங்க கவலைபடாம இருங்க ..சன்னி சந்தோஷமா இருப்பான் ..
   இரண்டு வாரம்தானே . இங்கே வெளிநாட்டில் நாலுகால் ஜீவன்களை நல்லா பிள்ளைபோலவே கவனிப்பாங்க ரிசார்ட்ஸில் .யூ என்ஜாய் யுவர் ட்ரிப் .

   Delete

 4. ஆடை குறைத்தே அடித்த படங்களைக்
  கூடைக் கனியெனக் கொண்டுவந்தாய்! - மேடையில்
  பெண்ணின் பெருமையைப் பேசினால் போதாது
  மண்ணில் உழைப்பதே மாண்பு!

  ReplyDelete
 5. நல்லா சந்தோசமா இருங்க தல....

  ReplyDelete
 6. dont play with friend's emotions dear friend:( ஆனாலும் உங்க தலைப்பை பார்த்து இன்னும் அதற்கும் பதிவுக்கும் தொடர்பிருக்கும்னு நினைக்கிறன் பார்த்தீங்களா? ச்சே இன்னும் கைபிள்ளையாவே இருக்கியே மைதிலி:)
  bon voyage!!

  ReplyDelete
 7. புதுப்பார்வையுடன் மீண்டு(ம்) வர வேண்டும்.

  ReplyDelete
 8. அநியாயத்துக்கு நீங்க அப்பாவின் ஒப்புக் கொள்கின்றோம்.(பேய் தொலையும்.)

  ReplyDelete
 9. ஃபிரண்டே... பூரிக்கட்ட மேட்டரு........ஃபீலாயிட்டப்ல........ஒரு வாரம் லீவு குடுத்தீங்கன்னா கூலாயிடுவாப்ல….... சூப்பர்ஜி….சூப்பர்ஜி……. என்ஜாய் பண்ணுங்கஜி

  ReplyDelete
 10. Point Pleasant Bore adichchiduchchaa? Enjoy Boss..!
  Thanks for reminding my NewBrunswick days!

  Fall Start aayirukkume.. May, June la plan panniyirukkalaame boss!

  ReplyDelete
 11. பதிவைப் பார்த்த உடனேயே மதுரைத் தமிழனாவது எங்கள் (பதிவர்கள் எல்லோரும்) வலையிலிருந்து விலகி இருப்பதாவது?!!!! அதெல்லாம் உங்களால முடியாது சாமியோவ். வெர்ஜீனியா பீச்சுல விட்ட ஜொள்ள இங்க வலைல நீங்க பகிர்ந்து, விட்டு, நிறைய பேர ஜொள்ளு விட வைக்கலனா உங்களுக்கு தூக்கமே வராதுங்க......அதுக்காகவாவது, அந்த அலம்பல் பண்ணுவதற்காகவாவது, பிட்ஸ்பெர்க் கோவிலுக்கு நீங்க போகலைனா என்ன....நீங்கள் ஜொள்ள அந்த சாட்சாட் பிட்ஸ்பெர்க் பெருமாள் அருள் கடாட்சம் செய்யட்டும்! உங்கள் பயணம் இனிதாக அமைய வாழ்த்துக்கள்!

  பூரிக்கட்டையலருந்து எஸ்கேப்பா?!! நோ சான்ஸ்! திரும்ப வந்து உங்க பயணத்தப் பத்தி எழுதலனு வையுங்க....இங்கருந்தும் பூரிக்கட்டைகள் பறக்கும்.....

  ReplyDelete
 12. சன்னிச் செல்லம் பாவம்க....அவன அங்கல்லாம் நல்லாதான் பாத்துக்குவாங்க...ஆனாலும்....பாருங்க நீங்க திரும்பி வந்ததும் அவன் உங்க எல்லாரையும் நக்கித் தள்ளிடுவான்...உங்க பின்னாடியே சுத்தி சுத்தி வருவான்...எங்க திரும்பவும் நீங்க விட்டுட்டுப் போயிடுவீங்களோன்னு.......

  ReplyDelete
 13. சன்னி பத்தி எழுதினது எங்கள் செல்லங்களிடமிருந்து பெற்ற அனுபவத்தினால்....

  ReplyDelete
 14. டூர் இனிக்க வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 15. இனிக்கும் சுற்றுலா முடிய
  சிறந்த பதிவுகளைப் பகிரலாம் வருக

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog