உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Tuesday, August 26, 2014

வாட்ஸ்ஆப்பை தூக்கி சாப்பிட்டு கொண்டிருக்கும் டெலிகிராம்avargal unmaigal


வாட்ஸ்ஆப்பை தூக்கி சாப்பிட்டு கொண்டிருக்கும் டெலிகிராம்இந்திய மக்கள் இப்போது மிக அதிக அளவு பயன்படுத்தி கொண்டிருப்பது வாட்ஸ்ஆப்( WhatsUp ) ஆனால் மற்ற நாடுகளில் இந்த வாட்ஸ்ஆப்பை தூக்கி சாப்பிட்டு கொண்டிருக்கிறது டெலிகிராம் (Telegram apps )என்ற புதிய ஆப்ஸ் . இந்த டெலிகிராம் இன்னும் இந்தியாவில் அதிக அளவில் புழக்கத்தில் வரவில்லை. எல்லா நாடுகளிலும் மூடுவிழா கொண்டாடும் நேரத்தில்தான் இந்தியாவில் அதுதான் அதிக புழக்கத்தில் இருக்கும். இது மருந்தில் இருந்து நீயூடெக்னால்ஜி வரை சொல்லிக் கொண்டு போகலாம். அதனால்தான் வாட்ஸ்ஆப் இன்னும் இந்தியாவில் அதிக புழக்கத்தில் இருக்கிறது.இந்திய மக்கள் எப்படி வேணுமானால் இருந்துவிட்டு போகட்டும் ஆனால் நம்ம தமிழ் மக்கள் அப்படி இருக்க கூடாது என்பதால் இந்த பதிவு.
பேஸ்புக்கிற்கு அடுத்தபடியாக மக்களை அதிகம் கவர்ந்தது வாட்ஸ்ஆப் என்னும் மென்பொருள். இதன் வளர்ச்சியைக் கண்டு மிரண்ட பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்ஆப்-பையே விலைக்கு வாங்கியது. சமூக வலைதளங்களில் மிக அதிகமாக அதிகாரம் செய்து வந்த வாட்ஸ்ஆப்-பை வீழ்த்த வந்து விட்டது இன்னொரு சமூக வலைதளம். அதுதான் டெலிகிராம் மென்பொருள் ( Telegram Messenger).ஐரோப்பாவில் பேஸ்புக்கிற்கு அடுத்து அதிகம் உபயோகிக்கும் 'VK விகே' எனும் சமூக வலைதளத்தை உருவாக்கிய ரஷ்யாவின் நிகோலாய் மற்றும் பவல் டுரவ் சகோதரர்கள் தான் இதை உருவாக்கியுள்ளனர். இதன் தலைமையகம் ஜெர்மனில் உள்ளது.
டெலிகிராம் ஆப்ஸ் என்னும் மென்பொருள் 2013 அக்டோபரில் வெளியிடப்பட்டது. அப்போது ஒரு நாளைக்கு 1 லட்சம் பயனாளர்கள் மட்டுமே பயன்படுத்தினர். பின் அபார வளர்ச்சி பெற்று இந்த ஆண்டு மார்ச்சில் 1.5 கோடி பேரைத் தொட்டு மேலும் மிக அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறது
வாட்ஸ்ஆப்- பை விட இதில் அதிக வசதிகள் உள்ளன. பாதுகாப்பு வசதிகளும் அதிகம். வாட்ஸ்ஆப் மென்பொருள் முதல் ஆண்டு மட்டுமே இலவசம். அதன் பின் இதைப் பயன்படுத்த கட்டணம் வசூலிக்கின்றனர். ஆனால் டெலிகிராம் மென்பொருள் எப்போதும் இலவசம்.வாட்ஸ்ஆப்-ல், ஒரு குரூப்பில் 50 நபர்களுக்கு மட்டுமே செய்தி அனுப்ப முடியும். அது மட்டுமல்லாமல் வாட்ஸ் ஆப்-ல் வீடியோ, ஆடியோ, போட்டோஸ் ஆகியவற்றை மட்டும்தான் அனுப்பமுடியும்.ஆனால் டெலிகிராமில் 200 பேருக்கு குரூப் மூலம் செய்திகள் அனுப்பிக்கொள்ளலாம். டெலிகிராமில் எல்லா விதமான பைல்களையும் அனுப்பலாம்.(files of any type doc, zip, mp3, etc )வாட்ஸ்ஆப் மென்பொருளை மொபைல் போன்களை தவிர கம்ப்யூட்டரில் பயன்படுத்த முடியாது. டெலிகிராம் மென்பொருளை மொபைல், டேப்லெட்கள் மற்றும் கம்ப்யூட்டரில் விண்டோஸ் இயங்குதளங்களில் நேரடியாக பயன்படுத்தலாம்.வாட்ஸ்ஆப்-ல் பாதுகாப்புக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. டெலிகிராம் மென்பொருளில் போட்டோக்களை உங்கள் சம்மதம் இல்லாமல் யாரும் பார்க்கமுடியாது. மேலும் பல பாதுகாப்பு அம்சங்களை (advanced new security measures)அளித்துள்ளனர்."Telegram is the fastest and most secure mass market messaging system in the world," the company claims, which it attributes in part to Nikolai Durov’s open-sourced MTProto protocol. Telegram was in fact built as a testing bed for MTProto, Reuters reported when the app launched back in August. The company is so confident in the security of MTProto that it’s offering $200,000 to anyone who can crack it. It’s not unusual for companies to offer bug bounties, but bounties of this size are generally only reserved for critical bugs in widely used apps like Windows.யாரவது (ஹேக்கர்ஸ்) இந்த ஆப்ஸின் பாதுகாப்பை உடைத்து காட்டினால் அவர்களுக்கு 200000 US Dollar (equals 12105000.00 Indian Rupee )அளிக்கப்படும் என்று உறுதியளித்துள்ளனர்.


avargal unmaigal


வாட்ஸ்ஆப் மென்பொருள் ஆங்கில மொழியில் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது. டெலிகிராம் மென்பொருளில் ஆங்கிலம், ஸ்பானிஸ், அரபிக், ஜெர்மன், இத்தாலியன், டச்சு, போர்ச்சுகீசு ஆகிய மொழிகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
ஆப்பிள் ஸ்டோர் சார்ட்டில்ல் ஸ்கைராக்கெட் போல மேலே போய் கொண்டிருக்கும் இந்த டெலிகிராம் ஆப்ஸ் ஜெர்மனிலிருந்து ஈக்வெடார் வரை 42 நாடுகளில் டாப் ஆப்ஸாக இருக்கிறது அமெரிக்காவில் இந்த இலவச ஆப்ஸ் டாப் # 1 ஆக இருக்கிறதுWe have been the no. 1 app in Spanish, Arabic, and several Latin American app stores for several weeks before the Facebook deal happened," says Telegram's Markus Ra. "The growth was there - so the WhatsApp acquisition and problems merely multiplied the effect across all affected countries." According to app analytics site App Annie, Telegram started truly gaining steam on February 17th, days before the WhatsApp news even hit.இந்த டெலிகிராம் லாப நோக்கத்தை எதிர்பார்த்து ஆரம்பிக்கப்பட்டது அல்ல. அதனால் இங்கு விளம்பரங்களுக்கு இடமில்லை. வெளியில் இருந்து வரும் இன்வெஸ்ட்மெண்டை அனுமதிப்பதும் இல்லை. இதற்கு தேவையான பணத்தை பவல் டுரவ் சகோதர்கள் மட்டுமே அளித்து வருகின்றனர்
இந்த டெலிகிராமை டவுன்லோட் செய்வதற்கு கீழ் உள்ள இணையதளத்திற்கு செல்லுங்கள்:மறந்துவீடாதிங்க இதை நீங்கள் டெஸ்க்டாப், லேப்டாப், மூலம் இணைய தளத்தில் உபயோகப்படுத்திக்கொள்ளலாம்இந்த டெலிகிராம் பற்றி உங்களுக்கு எழும் சந்தேகங்களை Frequently Asked Questions  முலம் தீர்த்து கொள்ள இங்கே செல்லுங்கள்டிஸ்கி :இது அரபிக் மொழியிலும் பயன்படுத்தலாம் என்பதால் இதை தீவிரவாதிகள் மிக அதிகம் பயன்படுத்த கூடிய வாய்ப்புகள் அதிகம். அதனால் இந்திய மற்றும் அமெரிக்க அரசாங்கம் இதில் தனிக் கவனம் செலுத்துவது மிக அவசியம். இந்த விஷயத்தில் ஒபாமா மற்றும் மோடி அரசாங்கம் கோட்டை விட்டுவிடக் கூடாது என்பது எனது தனிப்பட்ட கருத்து

நீங்கள் விரும்பினால் இங்கும் தொடரலாம்
பேஸ்புக் முகவரி https://www.facebook.com/avargal.unmaigal
டுவிட்டர் முகவரி https://twitter.com/maduraitamilguy


அன்புடன்
மதுரைத்தமிழன்

4 comments :

 1. நல்ல தகவல். இதைப் பற்றிக் கேள்விப் பட்டோம். நீங்கள் முழுவதையும் அழகாகச் சொல்லிவிட்டீர்கள்.

  வாட்ஸப் வந்த போது.......அட போங்கப்பா...முதல்ல ஆர்குட் ந்னாங்க....அது இப்ப காணாமப் போச்சு...அப்புறம் நிறைய சமூக வளைத்தளங்கள்.....ட்விட்டர், ஃபேஸ்புக் வந்துடுச்சு, இப்ப வாட்ஸப் ஃபேமஸ்....நாளை என்னவோ அப்படின்னுதான் பேசிக்கிட்டோம்.....அப்பதான் இந்த டெலிக்ராம் பத்திக் கேள்விப்பட்டோம்...இப்ப நீங்க முழுசா.....இந்த டெலிக்ராம் எத்தனை நாளைக்குப்பா....எத்தனை அப்ஸ் வருமோ....மனிதனின் தேவைகள் ஹைடெக் ஆகிக் கொண்டிருக்கின்றது.....என்பது மட்டும் உறுதியாகின்றது.....

  ReplyDelete
 2. புதிய தகவல்களுக்கு நன்றி!!!! அதே மாதிரி.... யூ.எஸ் -ல என்னென்ன புது டெக்னாலெஜி எல்லாம் இருக்குனு சொல்லுங்களேன்... தெரிஞ்சிக்குவோம் !

  ReplyDelete
 3. தகவலுக்கு நன்றி.

  ReplyDelete
 4. எல்லோருக்கும் பயனளிக்கும் ஒரு நல்ல தகவலை சொல்லிவிட்டு கடைசியில் ஒரு டிஸ்கி வச்சீங்களே, அது சூப்பருங்கோ......

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog