உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Tuesday, August 26, 2014

கலைஞரின் வேண்டுகோளை விஜய் டிவி ஏற்குமா அல்லது நிராகரிக்குமா?கலைஞரின் வேண்டுகோளை விஜய் டிவி ஏற்குமா அல்லது நிராகரிக்குமா?

avargal unmaigal

________________________________________________________________________________________________________________________
________________________________________________________________________________________________________________________

மாப்பிள்ளை, என் பிள்ளையை மிக செல்லமாக வளர்த்துட்டேன் அதை கண் கலங்காமல் பார்த்துங்க!

மாமா, நீங்க கவலைப்படாதிங்க நான் வூட்டுக்கு போன உடனே முதலில் விஜய் டிவி கனெக்சனை முதலில் கட் பண்ணிடுறேன்
________________________________________________________________________________________________________________________
________________________________________________________________________________________________________________________
ஏம்மா அந்த ஆள் தலை தெரிக்க ஒடுகிறார்?
அங்க பாருங்க அந்த வேன்ல விஜய் டிவிகாரங்க அவார்ட்ஸ் கொடுக்க ஆளை தேடி வலை வீசுராங்க
________________________________________________________________________________________________________________________
________________________________________________________________________________________________________________________
விஜய் டிவியில் அவார்ட்ஸ் வாங்கும் நபர்களே நீங்கள் அவார்ட்ஸ் வாங்கும் போது மிக சிறப்பாக அழுவதற்கு இங்கு மிக குறைந்த கட்டணத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
________________________________________________________________________________________________________________________
________________________________________________________________________________________________________________________
ஏன் அந்த நடிகர் நல்லா நடிச்சு இருந்தும், இந்த வருஷம் அவரை விஜய் டிவி தேர்ந்தெடுத்து அவார்ட்ஸ் கொடுக்கல?
அதுவா விஜய் அவார்ட்ஸ் டீம் அவர் வீட்டுக்கு போய் அவருக்கு அழுகை டெஸ்ட் பண்ணினாங்களாம் அதில் அவர் தேறவில்லை என்பதால் இந்த வருஷம் அவருக்கு அவார்டு இல்லை என்று சொல்லிட்டாங்களாம்
________________________________________________________________________________________________________________________
________________________________________________________________________________________________________________________
என்னங்க அந்த பிரபல நடிகர் இறந்த தன் அம்மா உடல் அருகில் இருந்தும் ஒரு சொட்டு கண்ணீர் கூட விடலையாம்
அப்படியா?
ஆமாங்க அப்பறம் ஊர் தப்பா பேசுமே என்று அவர் மனைவி வீஜய் டிவிகாரங்களுக்கு ஒரு போன் போட்டாங்களாம். அதை கேட்ட அவங்க உடனே ஒரு அவார்டை எடுத்து கொண்டு போய் அந்த நடிகர்கிட்டே கொடுத்தாங்களாம். அதை வாங்கிய உடனே அந்த நடிகர் தேம்பி தேம்பி அழுதாராம்
________________________________________________________________________________________________________________________
________________________________________________________________________________________________________________________
என்னங்க அந்த ஆடிடோரியத்தில் இருந்து ரொம்ப பேர் சேர்ந்து அழுகிற மாதிரி சத்தம் வருது அரசியல் தலைங்க யாராவது இறந்து போயிட்டாங்களா என்ன?
அடி போடி பைத்தியக்காரி அது வந்து விஜய் டிவில அவார்ட்ஸ் வாங்கியவெங்க எல்லாம் சேர்ந்து ஒரு சிறப்பு கூட்டம் போட்டு இருக்காங்கடி அதனாலதான் அந்த சத்தம்
________________________________________________________________________________________________________________________
________________________________________________________________________________________________________________________
"விஜய் டிவி அவார்ட்ஸ்" வாங்கிய விஜய் நடிக்கும் கத்தி படம் வெகு விரைவில் ரீலீஸ் என்று இனிமேல் வீளம்பரம் செய்வாங்க
________________________________________________________________________________________________________________________
________________________________________________________________________________________________________________________

உலகத்தில் வசிக்கும் எல்லோருக்கும் விஜய் டிவிகாராங்க அவார்ட் கொடுப்பாங்க ஆனா ரெண்டே ரெண்டு பேருக்கும் மட்டும் கண்டிப்பாக தரமாட்டாங்க அது யாரு தெரியுமா?
ஒன்று சண்டிவி காரங்களுக்கு அடுத்தது மதுரைத்தமிழனுக்கு

நீங்கள் விரும்பினால் இங்கும் தொடரலாம்
பேஸ்புக் முகவரி https://www.facebook.com/avargal.unmaigal
டுவிட்டர் முகவரி https://twitter.com/maduraitamilguy

அன்புடன்
மதுரைத்தமிழன்

6 comments :

 1. மற்ற டீவீ channelகளை விட விஜய் tv எவ்வளவோ மேல். உங்களுக்கு பிடிக்காவிட்டால் பார்க்காமல் இருக்கலாமே. நீங்கள் அமெரிக்காவில் இருப்பவர். உங்கள்(hollywood) தரத்திற்கு இணையாக ஒரு தொலைக்காட்சி தமிழில் இருக்க முடியாது என்பது நிதர்சானமான உண்மை. ஆனால் தமிழில் பார்க்க கூடிய தொலைக்காட்சி விஜய் மட்டுமே. உங்களுக்கும் மற்றவர்களுக்கும் ரசனை வேறுபடுவது என்பது இயல்பானது. நான் நினைக்கிறேன் விஜய் டீவீ இந்தியாவில் இருக்கும் தமிழ் மக்களுக்கான டீவீ. வெளிநாட்டில் வாசிப்பவர்களுக்கான டீவீகள் பல அங்கு இருக்கும் என்று நினைக்கிறேன். அதை பற்றி நன்கு விமர்சிக்கலாமே. உங்களுக்கு பிடிக்கவில்லை எனில் பார்க்காது விடுவதே உசிதமானது.

  ReplyDelete
  Replies
  1. சார் நான் எங்காவது விஜய் டிவி பிடிக்கலைன்னு சொல்லி இருக்கேனா? நல்லா கவனிச்சு படியுங்க.......நான் விஜய் டிவியை கலாய்க்கிறேன் அவ்வளவுதாங்க....

   Delete
 2. அற்புதம்.அருமை.உண்மையை சொன்னால் சிலருக்கு கடிக்கும்.நல்ல நடை.மிகவும் ரசித்தேன்

  ReplyDelete
 3. ஹாஹாஹா...தலைப்பை பார்த்த உடனேயே டவுட் ...விஜய் டிவி அவார்ட்சுக்கும் கலைஞரின் வேண்டு கோளுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்குன்னு....கரீக்ட்டு......ஏன்னா இப்ப விஜய் டிவி அவார்ட்ஸ்தான் ரொம்பவே ஃபேமஸ்....அவங்களும் அத திருப்பி திருப்பி போட்டுத் தேய்க்கறாங்க......

  விஜய் டிவிக்காரங்க அவங்களையே அவங்க கலாய்ச்சுக்கறதுனால....அவங்கள் கலாய்க்கற உங்களுக்கும் கண்டிப்பா அவார்ட் கொடுக்க டிஸ்கஷன் ஓடுதாம்.....தகவல் கசிஞ்சுருக்கு....இப்படியெல்லாம் கலாய்த்து எங்களுக்கு விளம்பரம் தந்து டிஅர்பி யை உயர்த்த உதவும் மதுரைத் தமிழனுக்குன்னு...உங்களுக்கு செய்தி வரலையா!!!!

  ReplyDelete
 4. விஜய் டிவி ஸ்பெஷலா..... ரசித்துச் சிரித்தேன்.

  ReplyDelete
 5. நல்லாத்தான் விஜய் டிவிக்குப் பப்ளிசிட்டி பண்ணுறீங்க.....(

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog