உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Monday, August 4, 2014

மெயில் பேக் 6: படித்ததில் பிடித்தது உங்களுக்கும் நிச்சயம் பிடிக்கும்மெயில் பேக் 6: படித்ததில் பிடித்தது உங்களுக்கும் நிச்சயம் பிடிக்கும்

என் மனதை  நெகிழச் செய்த படம். உங்களையும் நெகிழச் செய்யும்.


I'm Not Affiliated With Or Claim To Own Any Of The Picture
A Picture Is Worth A Thousand Words!. I'm Not Affiliated With Or Claim To Own Any Of The Picture.
ஜெயலலிதா...
சொன்னது: "தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொள்வது முட்டாள் தனம்!"
சொல்லாதது: "டாஸ்மாக்ல குடிச்சி சாவது புத்திசாலித்தனம்..!" (அரசுக்கு வருமானமானம் வருதே!)

பேஸ்புக்கில் டி.வி.எஸ். சோமு பகிர்ந்தது


கேள்வியும்....நானே ! பதிலும்......நானே.....!
இந்த உலகில் முதன் முதலில் எங்கு க்ரைம் தோன்றியது ?
1) ஆதாம் ஏவாள் திருட்டுத்தனமாக ஆப்பிள் சாப்பிட்ட போது....
2)விநாயகரும், முருகனும் மாம்பழத்துக்காக சண்டை போட்டுக்கொண்ட போது..
3) இஸ்லாமியத்தில் எப்போது க்ரைம் தோன்றியது என்று யாராவது சொன்னால் பரவாயில்லை,
இந்த கேள்வி பதில் பகுதி ஒரு சமத்துவ புரமாக மாறிவிடும்.

பேஸ்புக்கில் எழுத்தாளர் ராஜேஷ் குமார் பகிர்ந்தது


இப்போலாம் நாட்ல எங்க தப்பு நடந்தாலும் தட்டிக் கேட்க தோணுது...
அதிகமா ஆன்லைன் வர்றத கொறச்சுக்கிட்டா சரியாய்டும்னு தோணுது !

டுவிட்டரில் சில்லுண்டி பகிர்ந்தது


"ம் அப்பறம் அப்பறம்" இதில்தான் பிழைத்துக் கொண்டிருக்கின்றன
பல காதல் உரையாடல்கள்!

டுவிட்டரில் நித்யா பகிர்ந்ததுபோன்ல ம்ம்ம் அப்பறம் னு சொன்னா 'காதலி',
சொல்லி தொலைங்க னு சொன்னா 'மனைவி',
நீ இன்னும் உயிரோடு தான் இருக்கீயானு கேட்டா 'நண்பன்'

டுவிட்டரில் .வண்டு முருகன் பகிர்ந்தது


ஒரு நல்ல ஐடியின் வெளிக்காட்டமுடியாத கோபங்கள்
ஃபேக் ஐடியாக உருவெடுத்துவிடுகின்றது:-))))

டுவிட்டரில் .கருத்து கந்தன் பகிர்ந்ததுApple: I look like a human heart.
Mango: I look like a stomach.
Grapes: I look like eyes.
Banana: I don't like this game...

நெட்டில் படித்தது


அன்புடன்
மதுரைத்தமிழன்

9 comments :

 1. வணக்கம்
  படமும் சொல்லிய கருத்தும் மகள் செய்து தந்த உணவும் நன்று
  சொல்லப்போனால் தேடலுக்கு நன்றி..

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 2. அனைத்தும் அருமை.
  அதுவும் கடைசி ரொம்பவே அருமை.

  ReplyDelete
 3. முதல் படம் கலங்க வைத்தது! மற்றவை சூப்பர்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 4. தல: மேலே உள்ள படத்தை சில நொடிகள்கூட என்னால் பார்க்க முடியவில்லை! நிச்சயம் இந்தப் படம் எனக்கில்லை! It is disturbing to me!

  ஷகிலா அம்மா, அவள் சதையை விற்று சந்தோஷமாக வாழ முயற்சிச்சாங்கனு சமீபத்தில் படித்தேன்! அப்படி அம்மாக்களும் இவ்வுலகில் இருக்கத்தான் செய்றாங்க இல்லையா?

  நம்மளும் பொத்தாம் பொதுவா, அம்மானா இப்படித்தான், அன்பானவள், நமக்காகவே வாழ்பவள்னு பொதுப்படையா பேசிக்கிறோம்..மேற்கோள் காட்டிக்கிறோம்.

  ஷகிலா போலல்லாமல், நல்ல தாய் தந்தையர்களைப் பெற்ற நாமல்லாம் வாழ்க்கையில் எந்த ஒரு கஷ்டமும் அனுபவிக்காமல், சாதாரண தலைவலி வந்தால்க்கூட "உயிர் போகுது"னு சொல்லிக்கிட்டு அலைகிறோம்.

  ReplyDelete
 5. அந்தப் படம் ரொம்பவே பாதித்தது....என்னென்னவோ சிந்தனைகள்.....தோன்றியது.....பார்த்ததும்....கொஞ்ச நேரம் சிந்தனைகள் வாட்ட....பின்னர் கீழே வந்து வாசித்து மனது ரிலாக்ஸ் ஆன பின்னும் கூட அந்தப் படம் கண்களால் ஃப்ளாஷ் அடித்து மனதில் பதிய வைத்துவிட்டது போன்ற உணர்வு.....

  ReplyDelete
 6. சிறந்த கருத்துப் பதிவு
  தொடருங்கள்

  ReplyDelete
 7. இஸ்லாமிலும் ஆதாம் ஏவாள் தான் முதல் பெற்றோர்..........

  ReplyDelete
 8. இந்த முறை பல சுவையா இருக்கு உங்க மெயில் bag:)
  ஒரு மசாலா மாஸ் படம் போல் சூப்பர் ஹிட்.
  OAT MEAL SEEMS VERY CRUNCHY! YUMMY!
  ரெசிபியை நான் ஸ்ரேயாகிட்ட கேட்டு தெரிஞ்சுகிறேன்:))

  ReplyDelete
 9. ரசித்தேன் அனைத்தையும். குக்கி லுக்ஸ் யம்மி.தொடர வாழ்த்துக்கள் சகோ !

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog