Sunday, July 20, 2014



கலாச்சார காவலரா ஜெயலலிதா?



     கலாச்சார காவலரா ஜெயலலிதா?

கிரிக்கெட் கிளப்பிற்கு வேட்டி கட்டி போன ஜட்ஜை அனுமதிக்க மறுத்தார்களாம் அதனால் தமிழர்களின் கலாச்சாரத்திற்கு இழிவு வந்துவிட்டது என்று தமிழக அறிஞர்களும் தலைவர்களும் ஊடகங்களும் வரிந்து கட்டிக் கொண்டு பேசி வருகின்றன.

இதனை அறிந்து கொண்ட புரட்சி தலைவி ஜெயலலிதா அவர்கள் அதை பற்றி சட்டசபையில் பேசி அந்த கிளப்பிற்கு எதிராக பேசி அப்படி அனுமதிக்க மறுத்தது ஏன் என்று கேள்விகள் கேட்டு அதற்கு விளக்கம் தரவில்லை என்றால் அந்த மாதிரி கிளப்பிறகு தமிழக மண்ணில் தடைவிதிக்கப்படும் என்று அறிவித்து இருக்கிறார், ஜெயலலிதா அவர்களின் இந்த தமிழ் கலாச்சார பற்றை பார்த்தது புல்லரிக்க ஆரம்பித்துவிட்டது..

அதற்காக அவருக்கு எனது பாராட்டுக்கள்.

சரி பதிவின் முக்கிய விஷயத்திற்கு இப்ப வருவோம்....

இப்ப நான் கேட்கப் போகும் கேள்வி இவர்களுக்காக தமிழக அறிஞர்களே தலைவர்களே ஊடகங்களே, திமுகாவின் வருங்கால தலைவராகப் போகும் ஸ்டாலின் அவர்களே இந்த வேஷ்டி விஷயத்திற்காக இவ்வளவு குரல் கொடுத்தீர்களே ஆனால் ஒரு விஷயத்திற்காக மட்டும் யாரும் குரல் கொடுக்காமல் அமைதி காக்கிறீர்களே. அது எதற்காக?

அதுதாங்க ஜெயலலிதாவின் காலில் வேட்டி கட்டிய தமிழன் காலில் விழுவது.. அது நம் கலாச்சார பழக்கதிற்கு இழிவு அல்லவா? நமது தமிழக கலாச்சாரத்தில் மட்டுமல்ல இந்திய கலாச்சாரத்தில் கூட ஒரு ஆண் பெண்ணின் காலில் விழுவது சரி என்று எங்கும் சொல்லப்படவில்லை வேண்டுமானால் தன்னைவிட வயதில் முத்த பெண்களின் காலில் விழுவது தவறில்லை காரணம் அது தன் தாயின் காலில் விழுவதற்கு சமம். ஆனால் தன்னைவிட அதிகம் வயதுள்ள வேட்டி கட்டிய ஆண்களை தன் காலில் விழ வைப்பது மிக கேவலமே இதை செய்து வரும் ஜெயலலிதாவை தட்டிக் கேட்க தமிழக தலைவர்களுக்கு தைரியம் இல்லை ஆனால் இவர்கள் எல்லாம் வேட்டி கட்டிய தமிழனை கிரிக்கெட் கிளப்பிற்கு அனுமதிக்காதது பெரும் கலாச்சர விஷயமாக நினைத்து குரல் கொடுக்கிறார்கள் என்பதை நினைக்கும் போது சிரிப்புதான் வருகிறது






அன்புடன்
மதுரைதமிழன்

மற்றவர்களின் பார்வையிலும் பட எனக்கு வந்த இமெயிலை இங்கு பதிகிறேன்


வேலூர் மாவட்ட வர்த்தக அமைப்பு நண்பர்களே,
திருச்சி மாவட்ட வர்த்தக அமைப்பு நண்பர்களே,
தூத்துக்குடி மாவட்ட வர்த்தக அமைப்பு நண்பர்களே,


இரண்டு நாள் முன் தொழில்துறை அமைச்சர் தங்கமணி செய்தியில் (பணம் கொடுத்து வரவழைத்த செய்தியில்) தமிழகத்துக்கு போட்டி போட்டு கொண்டு தொழில் தொடங்க முன் வருகிறார்கள் என்று பெருமிதம் கொண்டதாக செய்தி வந்தது. கடந்த ஜூலை 12, 2014 தேதி வாக்கில் தினமணி மற்றும் பல்வேறு செய்திகளில் கோவை மாநகரில் ஆறே மாதத்தில் 256 பேர் தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வந்துள்ளன. அதே சமயத்தில் கோவை மாநகரில் 93 பெண்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆண்கள் தற்கொலை செய்து கொண்ட விகிதாச்சாரம் மிக அதிகம் என்று நம் கோவை நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்கொலை செய்து கொண்ட ஆண்கள் பெரும்பாலானோர் சிறு மற்றும் குறு தொழில் செய்து வரும் உரிமையாளர்கள் என்று தெரிய வருகிறது. தொழில் முடக்கம், அரசின் பாராமுகம் என்று தற்கொலைகள் தொழில் நகரமான கோவையில் தொடர்ந்து வரும் வேளையில் அமைச்சர் தங்கமணி தமிழகத்துக்கு தொழில் துவங்க ஓடி வருகின்றனர் என்று சொல்வது வெட்க கேடு. கோவையில் 256 ஆண்கள் தற்கொலை என்ற செய்தி வந்தவுடன், அமைச்சரும் அவர் அடிபொடிகளும் பணம் கொடுத்து தமிழகத்தில் தொழில் துவங்க ஓடி வருகிறனர் என்று செய்தி வரவழைத்து தன் பதவியை தக்க வைக்கும் முயற்சியாகும்.

தமிழக தொழில்துறை அமைச்சர் இப்படி அப்பட்டமாக முழு பூசணியை மறைக்கும் முயற்சியில் இறங்குவார் என்று நமக்கு தெரிய வரும்போது நமக்கு சிரிப்பும் வேதனையும் கலந்து வருகிறது. ஒரு முட்டாள் தொழில் அமைச்சராக இருப்பது நமக்கு வெட்க கேடாகும்.

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் சில வாரங்கள் முன் ஆம்பூர் வருகை தந்து தொழில் உரிமையாளர்கள், முனைவோர்களை சந்தித்த பா.ஜ.க பிரமுகர் திருமதி வானதி சீனிவாசனுக்கு நம் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

K Savundar
Ranipettai, Vellore Dt

Copies:

திரு GV பிரகாஷ், BJP செயற்குழு உறுப்பினர், வேலூர் Dt.
திருமதி GKV வரலக்ஷ்மி, BJP செயற்குழு உறுப்பினர், வேலூர் Dt.
திரு தணிகாசலம், BJP செயற்குழு உறுப்பினர், வேலூர் Dt.
தமிழ்நாடு BJP Office
தமிழக முதல்வர் CM Cell
தலைமை செயலர், தமிழக அரசு
Dr நந்தகோபால் IAS, வேலூர் மாவட்ட கலெக்டர்
திரு K தனவேல் IAS, செயலர், ஊரக வளர்ச்சித்துறை
திரு ராஜேஷ் லகோனி IAS, செயலர், எரிசக்தி துறை

13 comments:

  1. வணக்கம்
    சபாஷ் சரியான கேள்விதான் கேட்டீங்கள்.... 2வது படத்தில் கூறிய கருத்துக்கள் சிறப்பாக உள்ளது பகிர்வுக்கு நன்றி.. மதுரை தமிழன்
    த.ம 1வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. காலில் விழ வைக்கிறார்களா.....?

    விடுங்க பாஸ்.
    தன்மேல் நம்பிக்கை இல்லாதவர்கள்
    அடுத்தவரின் காலில் விழத்தான் செய்வார்கள்.



    ReplyDelete
  3. எல்லாம் பதவி படுத்தும் பாடு !
    த ம 3

    ReplyDelete
  4. நல்ல கேள்விதான் மதுரைத் தமிழா.....ஒரு சின்ன சந்தேகம் இந்த வேஷ்டி கலாச்சாரம் தென்னக மாநிலங்கள் நான்கிலுமே இருப்பதாகத்தானே தெரிகின்றது....அட் லீஸ்ட் மூன்று அதுவும் கேரளாவில் எல்லா தலைவர்களும் வேஷ்டிதான்....அப்படி இருக்கும் போது ஏன் நம் தமிழ் நாட்டில் மட்டும் வேஷ்டி தமிழ் கலாச்சாரம் என்று சொல்லப்படுகின்றது?!

    காலில் விழுபவர்கள் எல்லாரும் அமைச்சராவதில்லையே.......ஒரு தடவை கூட....ஆகாமல் காலில் விழுந்தும் வெளியில் தள்ளப்பட்ட சரித்திரமும் உண்டே!

    ReplyDelete
  5. சிறந்த பகிர்வு

    ReplyDelete
  6. காலில் விழுவதில் அம்மாக்கு துளியும் இஷ்டமில்ல சகோ!

    ReplyDelete
  7. நல்ல கேள்வி, இந்த க்ளப் விவகாரம் வெறும் வேட்டியோடு சம்பந்தபட்டது அல்ல, அதற்கு மேலும் கப்பம் கட்டவேண்டியதை கட்டவில்லை என்று கேள்வி. தமிழர் கலாசாரம் எல்லாம் வெறும் கண்துடைப்பு. நீங்கள் கூறியபடி காலில் விழுவது எந்த கலாசாரத்தில் வருகிறது?

    ReplyDelete
  8. காலில் விழுந்தால் கூட பரவாயில்லையே, பத்தடி வருவதற்கு முன்னாலேயே தாம் ஒரு அமைச்சர் என்பதை மறந்து அடிமை என நினைத்து பம்முகிறார்களே !
    சரியான பதிவு

    ReplyDelete
  9. காலில் விழும் கலாசாரத்தை உருவாக்கிய பெருமை அம்மாவையே சேரும்! வெட்கக் கேடு!

    ReplyDelete
  10. //ஜெயலலிதாவைத் தட்டிக் கேட்கத் தமிழகத் தலைவர்களுக்குத் தைரியம் இல்லை....//

    மதுரைத் தமிழன் நீங்கள் அதைச் செய்திருக்கிறீர்களே. மனதுக்குக் கொஞ்சம் ஆறுதல்.

    ReplyDelete
  11. அம்மாவின் கட்சியில் வேட்டி கட்டினால் தானே, காலில் விழுவதற்கு வசதியாக இருக்கும். பாண்ட் போட்டுக்கொண்டு காலில் விழுந்து பாருங்கள் தெரியும் கஷ்டம்.

    ReplyDelete
  12. என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம் ?

    ReplyDelete
  13. எழாமல் இருக்க எத்தனை முயற்சி..... இவர்கள் ரத்தத்திலே கலந்து விட்டது அடிமை மோகம்....

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.