Thursday, July 24, 2014





அரசியல் செய்திகளும் நக்கல்களும்




செய்தி :நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற பின்னர், பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் 19 முறை அத்துமீறியுள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் அருண் ஜெட்லி பார்லிமென்டில் கூறியுள்ளார். இந்திய தரப்பும் தக்க பதிலடி கொடுத்துள்ளதாகவும் கூறினார்.


ஆமாங்கய்யா பாகிஸ்தான்காரன் அடிக்கும் போது பதிலுக்கு நாங்க கல்லைதூக்கி ஏறிந்தோம்ல அதைக்கண்டு பாகிஸ்தான் தொடை நடுங்கி விட்டதுங்க


செய்தி :10 ஆண்டுகளுக்கு பின் நீதிபதி கட்ஜு இப்போது வாய் திறப்பது ஏன்? தி.மு.க., தலைவர் கருணாநிதி கேள்வி


மோடி ஆட்சியில அவருக்கு சுதந்திரமா பேச வாய்ப்பு கிடைச்சிருக்கும் கலைஞர்ஜி



ஸ்டாலினால் தி.மு.க., அழிகிறது முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு

பாவம் ஸ்டாலினை ம்ட்டும் எவ்வளவு நாள் குறை சொல்லுவோம் ஒரு மாறுதலுக்காக திமுக அழிய கலைஞர் குடும்பத்தான் காரணம் என்று தைரியமாக சொல்லிவிடுவோமே



செய்தி ;தமிழக பொருட்களின் தரம்; ஊழியர்களின் செயல்பாடு: உலக வங்கி தலைவர் பாராட்டு
நிச்சயம் டாஸ்மாக் சரக்கின் தரத்தை பற்றி சொல்லி இருக்க மாட்டார்


செய்தி:சபாநாயகர் சர்வாதிகாரி போல செயல்படுகிறார் : மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு
இப்படி ஒரு குற்றசாட்டை சொல்வது " திமுகவின் சர்வாதிகாரியாகிய ஸ்டாலின்" இதில் என்ன வித்தியாசம்

செய்தி :இன்னும் தமிழன் அரசியலிலே விழிப்பு அடையவில்லை’ என்கிறாரே கருணாநிதி?
தமிழன் இன்னும் விழிப்படையாதது மிக நல்லதே இல்லையென்றால் நீங்கள் ஜென்மத்திற்கும் ஆட்சியை பிடிக்க முடியாதே



செய்தி :தமிழக சட்டசபையில் ஜனநாயகம் படும்பாடு' என்ற தலைப்பில், வரும் 1ம் தேதி, மதுரையில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பங்கேற்கிறார்



'கோபாலபுரத்தில் ஸ்டாலினால் கலைஞர் படும்பாடு' என்று அண்ணன் அழகிரி மதுரையில் பதிலுக்கு பொது கூட்டம் போட்டாலும் போடுவார்


செய்தி: நேற்று பார்வையற்ற மாணவர்களை பள்ளி முதல்வர் அடித்து உதைக்கும் வீடியோ வந்து பதைபதைப்பை ஏற்படுத்தியது. இன்று கொல்கத்தாவில் டியுசன் ஆசிரியை ஒருவர் மூன்று வயது சிறுவனை அடித்து உதைக்கும் வீடியோ வந்து வயிற்றில் நெருப்பை பற்ற வைக்கிறது.


இப்படி ஒரு செய்தி அமெரிக்காவில் வந்தால் இந்நேரம் அந்த ஆசிரியர் போலிஸாரின் விசாரணையில் இருப்பார் ஆனால் இது நடந்தது இந்தியாவில் என்பதால் அந்த ஆசிரியர்கள் சமுக வலைதளங்கில் ஹீரோவாக வளம் வந்து கொண்டிருக்கிறார்


ஒருவேளை சமுகத்தளங்களில் தாங்கள் பேசப்பட வேண்டும் என்பதற்காக இவர்கள் இப்படி செய்கிறார்களோ என்னவோ...


இந்த வாரம் பெரியவங்க இப்படி சொல்லிட்டு போயிருக்காங்க


நம் நாடு, சிறந்த கலாசாரத்தையும், நன்நெறிகளையும் உடைய நாடு. இவற்றை, ஒவ்வொரு குழந்தைகளுக்கும், அவர்களின் பெற்றோர் கற்றுத் தர வேண்டும். கலாசாரத்தையும், நன்நெறிகளையும் பின்பற்றாததால் தான், தற்போது பெண்களுக்கு எதிரான, பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்து உள்ளன.: உமா பாரதிமத்திய நீர்வளத் துறை அமைச்சர் - பா.ஜ.,


கடவுள் வந்தாலும் முடியாது!


உ.பி.,யில் பாலியல் பலாத்காரங்கள் அதிகரித்து விட்டதாக, பலரும்
கூறுகின்றனர். இதுபோன்ற குற்றங்களை, கடவுளால் கூட தடுக்க முடியாது. உலகம் முழுவதும் உள்ள போலீஸ் படையையும், உ.பி.,க்கு அனுப்பி வைத்தாலும், பலாத்கார சம்பவங்கள் நடந்து கொண்டு தான் இருக்கும். இதை பெரிது படுத்த வேண்டிய அவசியமில்லை.: அஜிஸ் குரேஷி
உ.பி., கவர்னர்



அன்புடன்
மதுரைத்தமிழன்




5 comments:

  1. மாணவர்களை அதுவும் சிறுவர்களை அடிப்பது என்பது மிகவும் கொடுமை! இந்தியாவில் இதெல்லாம் சகஜமப்பா...அமெரிக்கா அல்லவே! இங்க அம்மா அப்பாவே கூட டீச்சர் கிட்ட போய் சொல்லி "என் பிள்ளை படிக்கவே மாட்டேங்குது....ஒரே விளையாட்டு...கொஞ்சம் கவனிச்சுக்குங்க...நல்ல முட்டில போடுங்க" அப்படின்னு "கவனிச்சுக்குங்க" அப்படின்றதன் அர்த்தமாகிய "அடி" அப்படின்றத அவங்களே போட்டுக் கொடுத்துட்டு போவாங்க......

    கலைஞர் குடும்பத்தை செமயா நீங்க ஆட்டியிருக்கீங்க!!!!

    ReplyDelete
  2. பலாத்கார சம்பவங்கள் நடந்து கொண்டு தான் இருக்கும். இதைப் பெரிது படுத்த வேண்டிய அவசியமில்லை - அஜிஸ் குரேஜி.

    அவர் வீட்டுப் பெண்களுக்கு இப்படி நடந்தால் இதையே தான் சொல்வாரா....?

    ReplyDelete

  3. வணக்கம்!

    நாட்டின் நிலைமையை நன்றே படம்பிடித்தீா்!
    வாட்டும் மனத்தை வளைத்து!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  4. நீங்கள் சொல்லியிருக்கிற மாதிரி, அழகிரி மதுரையில் ஒரு பொதுக்கூட்டம் போடுகிறாராம்.

    ReplyDelete
  5. அரசியல் நெடி அதிகமே இருந்தாலும் உங்கள் கருத்துகளை ரசித்தேன்....

    குழந்தைகளை கொடுமைப்படுத்தும் ஆசிரியர்கள் - உண்மை தான் அமெரிக்கா போன்ற நாடாயிருந்தால் இன்னேரம் அவர்கள் சிறையில் இருப்பார்கள்.

    கடவுளே காப்பாற்ற முடியாது - என்ன கொடுமை!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.