உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Wednesday, July 23, 2014

அழுக வைக்க இது விஜய் டிவியல்ல இது உங்களை சிரிக்க வைக்கும் விஜய் பற்றிய ஜோக்ஸ்


அழுக வைக்க இது விஜய் டிவியல்ல இது உங்களை சிரிக்க வைக்கும் விஜய் பற்றிய ஜோக்ஸ்

மனைவி : என்னங்க பக்கத்து வீட்டுல அழுகை சத்தம் கேட்குது அந்த வீட்டுல உள்ள பெரியவர் போய் சேர்ந்துட்டார் போல இருக்கு போய் பார்த்துட்டு வந்துடலாமுங்க
கணவன் : அடியே பெரிசுங்க யாரும் போகலடி... அவங்க வீட்டுல எல்லோரும் விஜய் டிவி நேயர்கள்டி அவங்க இப்ப விஜய்டிவி பார்த்துகிட்டு இருக்காங்க்டி
.
.
.
மாமனார் : மாப்பிள்ளை நாங்க எங்க பொண்ண கண்கலங்காம பார்த்து வளர்த்து இருக்கிறோம் அவளை கண்கலங்கமால் பார்த்து கொள்ளுங்க மாப்பிள்ளை.
மாப்பிள்ளை ; கவலைப்படாதீங்க மாமா அவளை விஜய் டிவி பார்க்காம வைப்பது என் கடமை மாமா

மகப்பேறு மருத்துவ மனையில் : என்ன டாக்டர் பிறந்த குழந்தை அழுகாமல் இருக்குது அதை கிள்ளி பார்க்கலாமா?

டாக்டர் : அதெல்லாம் பழைய கால முறை இப்பவெல்லாம் நாங்க விஜய் டிவியை ஆன் பண்ணிதான் பார்ப்போம்.

.மந்திரி : மன்னா எதிரி நாட்டு அரசன் படை எடுத்து வருகிறான் நாம் படையை போருக்கு ரெடி பண்ணுவோம்மா
மன்னர் : மதிகெட்ட அமைச்சரே போய் மிகப் பெரிய டிவிகளை நம் எல்லை புறத்தில் வைத்து விஜய் டிவி புரோகிராமை அதில் வரும் படி செய்யுங்கள் அதன் பின் எதிரி நாட்டு அரசன் புறமுதுகிட்டு ஒடுவதை பார்த்து ரசியுங்கள
.

பாட்டி : என்னாச்சு
குழந்தை அழுகுது.

அப்படியா உடனே விஜய் டிவியை ஆப் பண்ணு அந்த காலத்தில் நாங்கெல்லாம் விஜய்டிவியை ஆப் பண்ணுவோம்
தாத்தா: என்னாச்சு
குழந்தை அழுகுது.

அப்படியா உடனே விஜய் டிவியை ஆப் பண்ணு அந்த காலத்தில் நாங்கெல்லாம் விஜய்டிவியை ஆப் பண்ணுவோம்
நண்பர் : என்னாச்சு
குழந்தை அழுகுது.

அப்படியா உடனே விஜய் டிவியை ஆப் பண்ணு அந்த காலத்தில் நாங்கெல்லாம் விஜய்டிவியை ஆப் பண்ணுவோம்
.2015ல் விஜய் அவார்ட்ஸில் கோபிநாத்; 2014க்கான "அழுமுஞ்சிக்கான அவார்ட்டை" பெற்றுக் கொள்ள சிவகார்த்திகேயனை மேடைக்கு வர மிக அன்போடு அழைக்கிறோம்.

ஜெயலலிதா அறிக்கை தமிழக தண்ணிர் பிரச்சனையை தவிர்க்க கர்நாடக அரசு உதவி எங்களுக்கு தேவையில்லை. நாங்கள் விஜய் டிவி உதவியை நாடி உள்ளோம். கண்ணிரால் எங்கள் தண்ணிர் பிரச்சனையை தீர்ப்போம்.ஹாஸ்பிடலில் டாக்டர் நோயாளியின் உறவினர்களிடம்: எங்களால் முடிஞ்சதை செய்து பார்த்திட்டோம் நோயாளி பிழைக்க வாய்ப்பில்லை இன்னும் 2 மணி நேரம்தான் உயிர் இருக்கும். அதனால விஜய் டிவிகாரர்களிடம் தகவல் சொல்லி வையுங்க (உறவினர்களிடமல்ல)விஜய் டிவி அறிவுப்பு : உங்கள் வீட்டில் நடக்கும் சாவு நிகழ்ச்சிக்கு வந்து மிக அருமையாக எல்லோரையும் அழ வைத்து அதை மிக குறைந்த விலையில் பதிவு செய்து தருகிறோம். விபரங்களுக்கு விஜய்டிவி சூப்பர் சிங்கர் குழுவை அணுகவும்.
அன்புடன்
மதுரைத்தமிழன்

24 comments :

 1. ஹாஹாஹாஹாஹஹஹஹஹாஹஹ்ஹ்ஹஹ்.....ஐயோ! மதுரைத் தமிழா....தாங்கலப்பா.....விஜய் டி.வி காரங்க இத வாசிச்சாங்கன்னா...நொந்து நூடுல்ஸ் ஆகியிருப்பாங்க....இப்படி எங்கள கலாக்கிறாங்கன்னு ஒரு அழுகாச்சி எபிசோட் போட்டுற போறாங்கப்பா......இல்லன்னா கடைசி ஜோக்க வாசிச்சு...இது கூட நல்ல ஐடியாவா இருக்கேன்னு ஆரம்பிச்சுடப் போறாங்கப்பா......

  ReplyDelete
  Replies
  1. அதைத்தான் இந்த வாரம் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அழுக்காச்சி வாரமாகதானே கொண்டாடுறாங்க

   Delete
 2. மதுரைத் தமிழன் காமெடி கிங்க் போல , ரசித்து சிரித்தேன், படம் உட்பட‌

  ReplyDelete
  Replies
  1. ஜெயசீலன் நான் காமெடி கிங்க் அல்ல காமெடி பீஸ்ங்க

   Delete
 3. விஜய் டீவி யை அதகளம் பண்ணிவிட்டீர்கள்! ஹாஹாஹா! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. இந்த வாரம் விஜய் டிவி வாரமாக போய்விட்டது.. உங்களுக்கு நேரம் இருந்தால் டிவி பாருங்க பல பதிவுகள் தேத்தலாம்

   Delete
 4. செமையா இருக்கு..... பாராட்டுகள்.

  விஜய் டீவிக்காரங்க...பூரிக்கட்டை மாதிரி எதையாவது எடுத்திட்டு வரப்போறாங்க.....:)))

  ReplyDelete
  Replies
  1. மதுரைத் தமிழன் ரொம்பபப நல்லவரு, அதனால யாரு பூரிக்கட்டையால அடிச்சாலும் வாங்கிப்பாரு

   Delete
  2. வழக்கமாக சார் வந்து பாராட்டுவாங்க இன்று நீங்கள் வந்து பாராட்டி இருக்கிங்க நடிகர்கள் ஆஸ்கர் அவார்ட் வாங்கும் போது உள்ள சந்தோஷம் உங்களை போல உள்ளவர்கள் பாராட்டும் போது கிடைக்கிறதுங்க , நன்றி

   Delete
  3. யோவ் சொக்கா நான் உனக்கு என்னய்யா கெடுதல் செய்தேன் என்னை அடிகிறதுக்காவே படை திரட்டுறீங்க போல இருக்கே

   Delete
 5. ஹா ஹா.. எல்லாமே சூப்பர்... அதிலும் என்னாச்சு குழந்தை அழுகுது....

  ReplyDelete
  Replies
  1. எல்லா துணுக்குகளிலும் எனக்கு மிகவும் பிடித்து இதுதானுங்க

   Delete
 6. சுவையான பகிர்வு
  தொடருங்கள்

  ReplyDelete
 7. ஹா ஹா ஹா உஹிம்...... இது சிரிப்பு இல்லை. அழுகை!

  ReplyDelete
  Replies
  1. நிச்சயம் நீங்க விஜய் டிவி நேயராகத்தான் இருக்கனும் அவங்கதான் ஜோக்கை கேட்டாலும் அழுவுறவங்க

   Delete
 8. நான் இப்போ ரொம்ப விஜய் டி வி பார்க்கிறதில்லை. அதனால அவர்கள் மேல் ரொம்ப வெறுப்பில்லை! சன் டி வி தான் பார்க்கிறேன். எந்த டி வி நீங்க அதிகமாப் பார்க்குறீங்களோ அந்த டி வி மேல தான் கொலை வெறி வரும் போல இருக்கு! :)

  ReplyDelete
  Replies
  1. எனக்கு யாரு மீதும் கோபம் துவேஷம் கிடையாது இங்கு நான் எழுதுதெல்லாம் எனது பொழுது போக்குக்கும் வந்தவர்கள் படித்து ரசிப்பதற்கும் மட்டுமே. ஊரில் இருந்தால் நன்பர்களிடம் பார்த்ததை கேட்டதை கிண்டல் பண்ணி பேசி மகிழ்வதைதான் நான் இங்கு இந்த தளம் மூலம் செய்கிறேன்... அவ்வளவுதாங்க   எல்லா தமிழ் சேனல்கள் இருந்தாலும் இரவு 8 லிருந்து 10 மணி வரை விஜய் டிவி எங்கள் வீட்டில் ஒடிக்கொண்டிருக்கும் அந்த நேரம்தான் சமைச்சு சாப்பிடும் நேரம் விஜய் டிவியை பார்க்கிறோம் என்று சொல்வதைவிட நாங்கள் அதிகம் கேட்கிறோம் என்பதுதான் மிக சரி..

   எனது பல பதிவுகளில் மீண்டும் மீண்டும் சொன்னதை இங்கு மீண்டும் சொல்லுகிறேன் நான் தமிழை வளர்க்கவோ அல்லது சமுதாயத்தை திருத்தவோ இங்கு பதிவு எழுதவில்லை பொழுது போக்கிற்காக மட்டும் எழுதுகிறேன்...இதன் மூலம் நல்ல நண்பர்கள் கிடைத்தால் மகிழ்ச்சியே அவ்வள்வுதாங்க பாஸ்

   Delete
 9. ஆமா, நீங்க என்ன நம்ம பகவான்ஜீக்குப் போட்டியா துணுக்குகள் எல்லாம் எழுத ஆரம்பிச்சுட்டீங்க!!!!

  ReplyDelete
  Replies
  1. சொக்கன் நான் யாருடனும் போட்டி போடுவதில்லை....எப்பொழுதும் நான் "நானாகவே" இருக்க விரும்புகிறேன் யாரும் "என்னை' மாற்ற முடியாது அதே நேரத்தில் யாரையும் நான் மாற்ற முயல்வதில்லை


   எனக்கு அந்தெந்த நேரத்தில் என்ன தோணுதோ அதை பதிவிடுகிறேன்...

   Delete
 10. ஹா... ஹா... அதுவும் நம் எல்லை புறத்தில் வைத்து... ஹா.... ஹா....

  ReplyDelete
  Replies
  1. புன்னகை மன்னன் கூட இங்கு சிரிக்கிறார் ( எல்லோரும் உங்களை வலைசித்தர் என்று அழைக்கிறார்கள் ஆனால் எனக்கு நீங்கள் புன்னகை மன்னன் தான்

   Delete
 11. நமக்கு சோகம் பிடிப்பதில்லை மதுரைத் தமிழன். அந்த சோகத்தினால் வந்த உங்கள் சிரிப்பு பதிவு பிடித்தது! :)))

  வாழ்த்துகள்.

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog