Monday, July 28, 2014




உங்கள் அறிவை அப்டேட் பண்ணிக் கொள்ளுங்கள்.


உங்களுக்கு எல்லாம் தேசியப் (National) கொடி, பறவை போன்றவகள் பற்றி நல்லா தெரிந்து இருக்கும் ஆனால் 2014 நேஷனல் அப்டேட்களைப் பற்றி தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை என்பதால் அதை இங்கே உங்களுக்காக உங்கள் அறிவை வளர்த்து கொள்ள பகிர்கிறேன்



நேஷனல் அம்மா : ஜெயலலிதா


நேஷனல் ஸ்டெப் மாம் : சோனியா காந்தி


நேஷனல் புக் : பேஸ்புக்


நேஷனல் பேங்க் : சுவிஸ் பேங்க்

நேஷனல் வாரியர் : மோடி


நேஷனல் பட்டம் : சூப்பர் ஸ்டார்


நேஷனல் டைம் பாஸ் : வாட்ஸ் அப்


நேஷனல் அவார்ட் : விஜய் அவார்ட்ஸ்


நேஷனல் காமெடி நடிகர் : விஜய்


நேஷனல் குணச்சித்திர நடிகர் : சிவகார்த்திகேயன்


நேஷனல் புவர்மேன் : கலைஞர்


நேஷனல் வன பாதுகாப்பு தலைவர் : ராமதாஸ்


நேஷனல் டிரிங்க் : டாஸ்மாக்


நேஷனல் கனவுக் கன்னி : நயன் தாரா


நேஷனல் சமுக நிகழ்ச்சி : நீயா நானா


நேஷனல் இலக்கிய எழுத்தாளர் : சாரு


நேஷனல் கடவுள் : சச்சின் டெண்டுல்கர்


நேஷனல் ஜட்ஜ் : விஜய்டிவி அவார்ட்ஸ் ஜட்ஜஸ்


நேஷனல் காவியம் : விஸ்வரூபம்


நேஷனல் ஹெவி வெயிட் குத்து சண்டை சாம்பியன் : விஜயகாந்த்


நேஷனல் சிம்பல்: பூரிக்கட்டைதான்


நேஷனல் ஆபிஸியல் வலைத்தளம் : "அவர்கள்...உண்மைகள்" தான் அதில் வேறு என்ன சந்தேகம்


என்ன மக்களே உங்கள் அறிவு கண்கள் இந்த பதிவைபடிப்பதனால் திறந்து இருக்குமே?


அன்புடன்
மதுரைத்தமிழன்




11 comments:

  1. லாஸ்ட் இரண்டும் தான் செம கலக்கல் :)))))))

    ஒரே ஒரு டவுட் பூரிக்கட்டை நேஷனல் சிம்பலா இல்லை weapon ஆ ?

    ReplyDelete
    Replies
    1. ஏஞ்சலின் இந்த அறிவை அப்டேட் பண்ணும் பதிவை படித்ததும் மட்டுமில்லாமல் அதில் இருந்து கேள்வி கேட்ட உங்களை பாராட்டுகிறேன். ஹீ.ஹீ உங்கள் கேள்விக்கான பதில்
      என் மனைவிக்கு அது வெப்பன் ஆனால் எனக்கு அது சிம்பல்தான்

      இப்படிதான் நல்ல பிள்ளைகளாக அறிவை வளர்க்கும் கேள்விகளை கேட்டு நம்ம அறிவை வளர்த்து கொள்ளனும்....ஹீஹீ. படித்து ரசித்து கருத்து இட்டதற்கு நன்றி ஏஞ்சலின்

      Delete
  2. எல்லாமே அருமை நண்பரே,,, யாரையும் விட்டுவைக்கலே
    அதுசரி பூரிக்கட்டையில்லாம உங்களால வாழவே முடியாதோ ?

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் கேட்பது பொண்டாடி இல்லாமல் வாழ முடியாதா என்பது போல இருக்கிறது

      Delete
  3. ஹா ஹா... கடைசி ரெண்டும் எதிர்பார்க்கவே இல்லை...

    ReplyDelete
  4. ஹாஅஹாஹா....கடைசி இரண்டும் கண்களைத் திறந்தது உண்மைதான்.....அதை..அதைத்தான் ரசித்தோம்...பூரிக்கட்டை இல்லாத மதுரைத் தமிழனின் பதிவா..?!!!!!!! நேஷனல் ஸ்போர்ட்ஸ் (வுமன்) என்று சொல்லி இருக்கலாமோ என்று எங்களுக்குத் தோன்றியது.......அது மட்டும் இல்ல...ஒலிம்பிக்ஸ்ல இடம் பெறுமான்னும்...இந்தியாவுக்கு அப்படியாவது தங்கப் பதக்கம் கிடைக்காதானுதான்.....

    ReplyDelete
  5. சான்சே இல்லை.என்னம்மா யோசிச்சு இருக்கீங்க..

    ReplyDelete
  6. பூரிக்கட்டையை என்ன சொல்லப்போறீங்கன்னு பார்த்தா - அது நேஷனல் சிம்பலா!!!

    நல்ல காலம், நேஷனல் ஹீரோன்னு உங்க பேரை சொல்லாம விட்டீங்க, அதற்கு பதில் உங்க வலைத்தளத்தை சொல்லிட்டீங்களே.. பயங்கிரமான ஆளு தாங்க நீங்க...

    ReplyDelete
  7. எல்லாம் ஓகே. அந்த நயனந்தாராவிற்கு அப்புறம் பூரிக்கட்டை வரமாதிரி அமைச்சிருந்த இன்னும் சூப்பரா இருந்திருக்கும்:))

    ReplyDelete
  8. நேஷனல் சிம்பல் செம அருமை! சுவையான கற்பனை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. அப்டேட் செய்கிறோம்
    சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.