உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Sunday, July 6, 2014

நாட்டு நடப்பும் செய்திகளும் : இப்படி நடந்தால் நீயும் இந்து முண்ணணி தலைவனேநாட்டு நடப்பும் செய்திகளும் : இப்படி நடந்தால் நீயும் இந்து முண்ணணி தலைவனே

பாராளுமன்றத்தில் பாலான படம் பார்த்தால்
கட்டிய மனைவியால் வெட்டுபட்டு செத்தால்
கந்துவட்டி வாங்கியதால் படுகொலை செய்யப்பட்டால்
நீயும் இந்து முண்ணணி அல்லது பிஜேபி தலைவனேசெய்தி : 7 பேர் விடுதலையில் பா... அரசு பழைய காங்கிரசின் கொள்கையையே கடை பிடிக்கும் என்றும், 7 பேர் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வாதாடும் என்றும் கூறப்படுகிறது.

பாடகர் வைகோவின் புதிய பாட்டு எங்கே போகுவேன் நான் இனிமேல் எங்கே போகுவேன் பாடல்

மோடி ஆட்சியில் தவறு நடந்தால் தட்டி கேட்போம் - வைகோ
தலைவரே பொதுக் கூட்ட மேடையில் உள்ள மைக்கை அல்ல மோடியை தட்டிக் கேளுங்க

செய்தி : சூப்பர் ஸ்டார்' என்பது மிகப் பெரிய அங்கீகாரம் என்றும், அதற்காக தாம் ஆசைப்படவில்லை என்றும் நடிகர் விஜய் கூறினார்.
விஜய் அண்ணா படத்துல நடிக்கிறதை விட வெளிய நல்லா நடிக்கிறீங்க அண்ணா

செய்தி :தலைவா படத்திற்கு விருது கொடுத்தது விஜய் டிவி
ஜெயலலிதாவிற்கு எதிராக விஜய் டிவி செயல்பட தொடங்கிவிட்டதா? இனிமே விஜய் டிவிக்கு ஆப்புதான்

செய்தி :காங்கிரஸ் கட்சிக்குக் எதிர் கட்சி அளிக்க மோடி அரசு மறுப்பு
பேசாம அத்வானிக்கு எதிர் கட்சி தலைவர் பதவியை கொடுத்துடுங்க


செய்தி :முதலமைச்சர் பிரதமருக்குக் கடிதம் எழுதுவதும் தான் தொடர்ந்து நடக்கிறதே தவிர, இந்திய மீனவர்கள் சிறை பிடிக்கப்படுவது நின்றபாடில்லை. எனவே இந்திய மீனவர்களைக் காப்பாற்றவும் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள் விடுதலையாகி தமிழகம் திரும்பவும் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சரிங்க ஒரு படகில் உங்களையும் ஸ்டாலினையும் இலங்கைக்கு அனுப்புகிறோம் போய் பேசி தீர்த்துட்டு வாங்க

செய்தி :முல்லைப்பெரியார் அணை விவாகாரத்தில் தமிழக அரசு என்ன செய்யப்போகிறது - கருணாநிதி....
உங்க ஆட்சி மீண்டும் வந்தா அப்ப நீங்க என்ன செய்யப் போகிறீர்கள் என்பதை பாரக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது இப்ப திருப்தியா தலைவரே

பேஸ்புக்கில் விஜய் ரசிகர்கள் சொல்வது :அஜித்தை விட விஜய்க்கு தான் ரசிகர் கூட்டம் அதிகம் அதனால்தான் விஜய்டிவியில் விஜய்க்கு அவார்டு கொடுக்கப்பட்டது
ஆமாங்க அண்ணே நாட்டில் சந்தனத்தைவிட சாக்கடை மிக அதிகம்தான்


குமுதம் சூப்பர் ஸ்டார் பட்டமும் விஜய் டிவி அவார்டும் காசு கொடுத்து வாங்கியதல்ல உண்மையை சொன்ன நம்புங்கப்பா ஹீ.ஹீஅன்புடன்
மதுரைத்தமிழன்

9 comments :

 1. வை.கோ..... Rocks! :)

  மற்றவையும் ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாங்க வெங்கட் வைகோ ராக்ஸ்தானுங்க அதனாலதான் எல்லாத்தையும் தாங்கி நிற்கிறார்

   Delete
 2. செம குத்துக்கள் ...வீட்டில் குத்து வாங்கிய அனுபவமோ ?
  த ம 2

  ReplyDelete
  Replies
  1. பகவான் ஜீ வீட்டில் எப்படி குத்து வாங்குவது என்பதை நான் கற்றுக் கொண்டிருக்கிறேன். அப்படி நான் கற்றுக் கொண்டதன் விளைவுதான் இந்த குத்துக்கள் ஹீ.ஹீ

   Delete
 3. சிறந்த பகிர்வு

  ReplyDelete
  Replies
  1. ரசிப்பிற்கு நன்றி ஜிவலிங்கம்

   Delete
 4. பாட்டுக்கு எசப்பாட்டுப் போல அரசியல் குத்துக்கள் அத்தனையும் கலக்கல்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. வீட்டில் பாட அதிகாரம் இல்லாததால் இப்படி வலைதளத்தில் எசப் பாட்டு பாடும் நிலமை சுரேஷ்

   Delete
 5. நான் நடித்ததால் தான் தலைவா படத்துக்கு விருது கிடைத்திருக்கு. அதை முதல்ல புரிஞ்சுக்குங்க...

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog