Wednesday, July 2, 2014



அப்பாவிகளை ஏமாற்ற நினைக்கும் டாக்டர்

வலையுலகில் பதிவர் ராஜிம்மான்னா யாருக்கும் சொல்லித்தான் தெரிய வேண்டுமென்பதில்லை ஆனா.. அவங்க பண்னுற அட்டுழியம் யாருக்கு தெரிந்து இருக்கிற வாய்ப்பு இல்லை. அவங்க நேற்று பண்ண அட்டுழியத்தை சொல்லுறேன் நல்லா கேட்டுகுங்க...


நேற்று அவங்க வீட்டில் உள்ள கடைகுட்டி புள்ளையை டாக்டரிடம் கூட்டிட்டு போனாங்க. டாக்டரிடம் அவங்க சொன்னாங்க என் புள்ளை சாப்பிடவே மாட்டேங்கிறான் என்று

அதைக் கேட்ட டாக்டர் எப்போதிலிருந்து என்று கேட்டார்.

ராஜிம்மா, நேற்றிலிருந்துதான் என்றதும், டாக்டர் உடனே அது எப்படி உங்களுக்கு தெரிஞ்சது என்று கேட்டார்.

அதற்கு ராஜி டாக்டர் நேற்று அவனுக்கு இட்லி கொடுத்தேன் அதை சாப்பிட மாட்டேன் என்று சொல்லி அலறுகிறான் என்றார்

அதற்கு டாக்டர் சொன்னார் ஒரு வேளை உங்கள் பையனுக்கு இட்லி என்றால் பிடிக்காது போலிருக்கும் போல என்று........

உடனே ராஜியம்ம பொங்கி விட்டார். என்ன டாக்டர் நீங்க என்னத்தை படிச்சு என்னத்தை கிழிச்சீங்களோ தெரியலை..... நல்லா கேட்டுகுங்க, என் பையனுக்கு கடந்த திங்க கிழமை காலையிலும் இரவிலும் இட்லி கொடுத்தேன். செவ்வாய் காலையிலும் மத்தியானமும், புதன் கிழமை 3 வேளையும் வியாழன் 2 வேளையும் வெள்ளி சனி ஞாயிறு 3 வேளையும் கொடுத்தேன். அதையெல்லாம் நல்லாத்தானே தின்னான், இன்று காலையில் கொடுத்த போதுதான் சாப்பிடமாட்டேன் என்று அலறுகிறான். அவனுக்கு இட்லி பிடிக்க வில்லையென்றால் கடந்த வாரம் முழுவது எப்படி சாப்பிட்டு இருப்பான். அதனால சொல்லுறேன் உங்களுக்கு வைத்தியம் பார்க்கதெரியலைன்னா சொல்லிடுங்க நான் வேற டாக்டரை பார்த்துகிறேன் ஆனா அவனுக்கு இட்லி பிடிக்காமல் இருக்காலாம் என்று மட்டும் சொல்லாதீர்கள் என்றார்

அவ்வளவுதான், அதை கேட்ட டாக்டர் தன் தொழிலையே விட்டு ஒடிட்டாராமுங்க..

இவங்கதான் இப்படி என்றால் அவங்க சகோதரன் அதுதானுங்க மதுரைத்தமிழன் அதுக்கும் ஒரு படி மேலேங்க.

அவன் பண்ணுனது என்ன தெரியுமா?

வழக்கம் போல அவன் பொண்டாடிக்கிட்ட பூரிக்கட்டையால் அடிவாங்கிட்டு ( இந்த தடவை கொஞ்சம் பலமாக அடிப்பட்டதால்)அதற்காக டாக்டரிடம் சிகிச்சை பெற சென்றான் அந்த டாக்டரோ அமெரிக்க டாக்டர் என்பதால் சிகிச்சை அளிக்கும் போது சிரிக்க சிரிக்க ஜோக் சொல்லிகிட்டே இருந்தார் ஆனால் அவர் அடித்த ஒரு ஜோக்குக்கும் மதுரைத்தமிழன் சிரிக்கவில்லை... டாக்டர் நினைத்தார் அடி பலமாக பட்டதால் வலியால் அவன் சிரிக்கவில்லை போல என நினைத்து சிகிச்சை அளித்துவிட்டு அதற்கான பில்லை கொடுத்த போது மதுரைத்தமிழன் பலமாக சிரிக்க ஆரம்பித்தான். அதை பார்த்த டாக்டர் பயந்து போய் என்ன தமிழா என்ன ஆச்சு என்றார். அதற்கு அவன் நீங்கள் சொன்ன ஜோக்கு அனைத்தும் மிக அருமை அதனால் தான் அடக்க முடியாமல் சிரித்து விட்டேன் என்றான்..

அதற்கு அவர் நான் ஜோக்ஸ் சொல்லி முடிந்து ரொம்ப நேரமாகிவிட்டதே அதற்கு இப்பொது சிரிக்கிறாய் என்று கேட்டார் அதற்கு தமிழன் சொன்னான். நான் ரொம்ப ஸ்மார்ட் டாக்டர். நான் அப்போது சிரித்து இருந்தால் நீங்கள் இன்னும் அதிகமாக பீஸ் வாங்கி இருப்பிங்க அல்லவா, அதனால் தான் சிரிக்கவில்லை என்றான்.

டாக்டர் குழம்பி போய் எனக்கு ஒன்றும் புரியவில்லையே என்றார். சார் நீங்க ஒன்றும் தெரியாத மாதிரி ரொம்ப ஆக்டிங்க் பண்ணுறீங்க. அங்கே இருக்கிற போர்டை அப்படியே திரும்பி பாருங்க என்ன எழுதி இருக்குன்னு. laughing is the best medicine என்று எழுதி இருக்கிறதா இல்லையா . நீங்க சொல்லுற ஜோக்கு எல்லாம் நான் சிரித்து இருந்தா மெடிசன் கொடுத்தாக இந்நேரம் பெரிய பில்லை அல்லவா என் தலையில கட்டி இருப்பீங்க என்றேன்

அவ்வளவுதான் அதை கேட்ட அந்த டாக்டர் மயக்கம் போட்டு விழுந்துட்டார்..

எவன் கிட்ட ஏமாத்த முயற்சி பண்ணுறாங்க நாங்கெல்லாம் மதுரக்கார பய புள்ளைங்க....நம்பளை ஏமாத்த முடியுமா என்ன?

அன்புடன்
மதுரைத்தமிழன்

19 comments:

  1. உங்களைப் போலவே நானும் ஒரு முறை சிரிக்காமல் இருந்தேன் ,டாக்டர் பில்லை நீட்டியவுடன் சிரித்தேன் ஏன் சிரிக்கிறீங்கன்னு டாக்டர் கேட்டார் ...துன்பம் வரும் வேளையிலே சிரிங்கன்னு வள்ளுவர் சொல்லி இருக்காரே என்றேன் .டாக்டர் அழுதேவிட்டார் !
    தம1

    ReplyDelete
    Replies
    1. டாக்டரையே அழ வச்சுட்டீங்களே பகவான்ஜீ.

      Delete
  2. மருத்துவர்கள் எல்லோரும்
    வருவாயில் குறியாய் இருக்காங்கோ...
    நோயாளிகள் எல்லோரும்
    மருத்துவரில் குறியாய் இருக்காங்கோ...
    "காசு+நோய்=காசுநோயா?"

    ReplyDelete
  3. பூரிக்கட்டை புதுசு ,அதான் மதுரைத்தமிழனை எமாற்ற முடியாமல் டாக்டர் மயக்கம் போட்டுட்டார்.

    ReplyDelete
  4. எத்தனை அடி வாங்கினாலும் இந்தப் பயபுள்ளைக்கு இருக்கிற லொள்ளு
    அடங்க மாட்டேங்குதே டாக்கடர் இதுக்கு ஏதேனும் மருந்து இருந்தாக்
    கொடுங்களேன் ?..விசர் நாய்க் கடிக்குக் கூட மருந்து குடுத்திடலாம் இதுக்கு
    மருந்து வேணும் என்றால் அம்பாளடியாள் எழுதுகிற பாடலையும் கவிதைகளையும்
    படிச்சால் போதும் .அப்படியா டாக்டர் அதைப் படித்தால் விசர் முத்தீருமா என்ன ?:..
    :))))))))))))))))))))))

    ReplyDelete
  5. இன்றைக்கு ராஜி அக்கா மாட்டிக்கொண்டார்களா....?
    அவர்களிடமிருந்து அந்த மீந்து போன இட்லி எல்லாம்
    உங்களுக்கே பார்சல் வரும்.

    அடுத்து ஜோக்.....

    புரியலைன்னாலும் புரி்ந்தமாதிரி நடிப்பதில் நீங்கள் வல்லவர் தான்.

    உண்மையிலேயே புரிந்து கொள்பவராக இருந்தால்
    நான் சொன்ன ஜோக்கை விளக்கி ஒரு பதிவு போடுங்கள் பார்ப்போம்....
    (அப்போவாவது மற்றவர்களுக்குப் புரியுமா என்ற நட்பாசை தான் சகோ.)

    ReplyDelete
  6. நன்று!கொஞ்சம் லேட்டா தான் சிரிப்பு வந்திச்சு,சாரி!

    ReplyDelete
  7. பரவாயில்லையே இதையே நம்மலும் தொடரலாம் போலயே ?

    ReplyDelete
  8. ராஜி சகோ, நியூ ஜெர்ஸிக்கு வராங்களாம்!!!!!!!!!!!!!!!!!!!!!!!! (எதுக்குன்னு நான் சொல்லாம உங்களுக்கே புரிஞ்சிருக்கும்)

    ReplyDelete
  9. அடா..அடே..அடடி.. அற்புதம் :)

    ReplyDelete
  10. ஐ ஆம் பாவம் @ டாக்டர்:(((
    ஒய் ப்ளட் :( சேம் பிளட் @ ராஜி அக்கா:(((
    த.ம 5

    ReplyDelete
  11. நானும் மதுரைக்காரன் எனப் பெருமைப்
    பட்டுக் கொள்வதற்கு பல காரணங்கள் உண்டு
    அதில் நீங்களும் எங்களூர்காரராய் இருந்து
    இப்படி ஊரின் பெருமையை உசத்துவதும் ஒன்று
    இரண்டையும் ரசித்தேன்.குறிப்பாக ராஜி அவர்களின்
    நியாயமான கோபத்தை,,,,
    மனம் ரசித்த பதிவு
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. அதானே.. டாக்டர் பப்பு நம்மகிட்ட வேகுமா...? மதுரையா கொக்கான்னானாம்...

    ReplyDelete
  13. ஹஹஹாஅ...தமிழா டாக்டர்கிட்ட போனா எப்படி பில்லைக் குறைக்கலாம்னு நல்ல ஐடியா...ஆன நம்ம டாக்டர் ஜோக்கு சொல்லணுமே!!! முகத்தை சீரியஸா இல்ல வைச்சுக்கிட்டு.....a4 சைசுல பேப்பர் வைச்சுக்கிட்டு மருந்து எழுதுவாங்க.......மூக்கை சிந்திட்டு வர வேண்டியதுதான்....LAUGHING IS THE BEST MEDICINE டாக்டருக்குங்க.......நம்ம அங்க போய் நிக்கிறோம்ல.....

    சகோதரி ராஜி.....என்ன சைலன்டா இருக்கீங்க...ஓ! சரி சரி...சகோதரனுக்கு.... இட்லி பாக்கிங்க் நடக்குதா.....

    ReplyDelete
  14. மதுரை!! நீங்கள் விஜய் fanஆ? நான் எழுதிய commentஐ காணவில்லை!!!!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.