Monday, July 7, 2014




'உண்மையான' திமுக தொண்டர்களே நீங்கள் உழைப்பது கொள்கைகளுக்காகவா அல்லது தலைவரின் குடும்பத்திற்காகவா?



நீங்கள் உங்கள் குடும்ப நேரத்தை சொத்தை அழித்து இது வரை பாடுபட்டது கொள்கைக்காகவா அல்லது தலைவரின் குடும்பத்திற்காகவா? அப்படி பாடுபட்டவர்களுக்கு கிடைத்த பலன் தான் என்ன வென்று கொஞ்சமாவது யோசித்து உண்டா? 70 80 90 களில் திமுக கழகம் உடன்பிறப்புகளின் சொத்தாக குடும்பமாக இருந்தது ஆனால் அது இன்று தலைவரின் குடும்ப சொத்தாக மாறிவிட்டது என்ற உண்மை உங்களுக்கு தெரியவில்லையா அல்லது தெரிந்தும் தெரியாத மாதிரி நடிக்க பழகி கொண்டீர்களா?

திமுகவின் கொள்கைகளுக்கு பதிலாக கலைஞரின் குடும்பத்திற்கு கழுவி விடுவதையே கொள்கையாக கொண்டவர்களே திமுக தலைமையை எதிர்த்து நிற்க எந்த ஆண்மையுள்ள தொண்டனுக்கும் அருகதை இல்லையா என்ன?

தேர்தலில் பலத்த அடிவாங்கும் போது அந்த கட்சியை வழி நடத்துபவர் அல்லது தலைமை ஏற்றுச் செயல்படுபவர்தான் தார்மீக பொறுப்பு ஏற்று அந்த பதவியை துறப்பார். அதன்படி கடந்த லோகசபா தேர்தலில் வழி நடத்தி சென்ற ஸ்டாலின் அவர்கள் தான் பதவியை துறக்க வேண்டும்

ஆனால் நடப்பதோ திமுகவிற்கு காலம் காலமாக உழைத்தவர்களில் 33 பேர் மீது களங்கம் கற்பித்து தூக்கி ஏறியப்படுகிறார்கள். திமுகவிற்கு உழைத்ததன் பலன் இதுதானோ.. இது தெரிந்தும் இன்னும் திமுக தலைமைக்கு சொம்பு தூக்குபவர்கள் நீங்கள் என்றால் உங்களுக்கு முதுகெலும்பு அல்லது ஆண்மை என்று ஒன்றில்லையோ என்றுதான் நினைக்க தோன்றுகிறது.

தி.மு.-வுக்கு மிகப்பெரிய களங்கம் 2ஜி வழக்கு அடுத்தது கழகத்தில் குடும்பத்தினர் ஆதிக்க போட்டி இந்த இரண்டும்தான் கடந்த சட்டமன்றத் தேர்தல் தோல்விக்கும், இப்போதைய நாடாளுமன்றத் தோல்விக்கும், அடுத்து எந்தத் தேர்தல் வந்தாலும் அப்போதும் தலைகுனிவை ஏற்படுத்தப்போகும் களங்கமாக இருக்கும் விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களை விலக்காமல், எங்கேயோ இருக்கிற காலம் காலமாக தன் உயிரை கொடுத்து சொத்துகளை இழந்து திமுகவை தூண் போல நின்று காக்கும் மாவட்ட மற்றும் ஒன்றியச் செயலாளர்கள் மீது பழி சுமத்தி மாற்றுவதால் என்ன ஆகிவிடப்போகிறது?

கலைஞர்தான் சிந்திப்பாரா அல்லது உண்மையான திமுக தொண்டன் தான் சிந்திப்பானா?

அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி : 'உண்மையான' திமுக தொண்டர்களே என்று நான் அழைப்பது எந்த வித பதவிகளுக்கு ஆசைபடாமல் உழைக்கும் தொண்டன்தான்... தலைவனால் அல்ல இந்த தொண்டர்கள் இன்னும் இருப்பதால்தான் திமுக என்ற கட்சி இன்னும் இருந்து கொண்டிருக்கிறது.

15 comments:

  1. இதைச் சொன்னால் தான் பலருக்கும் கோபம் பொத்துக் கொண்டு வருகின்றதே?

    ReplyDelete
    Replies
    1. உண்மை சுடும் என்பதால் கோபப்படுகிறார்கள் ஜோதிஜி அவ்வளவுதான்

      Delete
  2. “உண்மையான“ திமு க தொண்டர்கள் இதைச் சிந்திக்க மாட்டார்கள்.

    ReplyDelete
    Replies
    1. உண்மையான திமுக தொண்டன் சிந்திப்பான் ஆனால் கலைஞர் மேல் உள்ள பாசத்தால் அமைதியாகிவிடுகிறான்

      Delete
  3. நல்ல கேள்வி தான்..... பதில் தான் கிடைக்கப்போவதில்லை மதுரைத் தமிழா...

    ReplyDelete
    Replies
    1. பதில்கள் கிடைத்து கொண்டுதான் இருக்கின்றன. அதனால்தான் திமுக என்ற ஆலமரத்தின் உள்ளே கரையான் அரித்து கொண்டிருக்கிறது அதனால்தான் இன்னும் கம்பிரமாக காட்சியளிப்பது போல இருந்தாலும் முற்றிலும் அரிக்கப்பட்டு ஒரு நாள் கிழே சாயும் நாளுக்கு தூரம் அதிகம் இல்லைங்க வெங்கட்

      Delete
  4. சிந்திச்சாதான் நாம எங்கேயோ........................................... போயிடுவோமேமேமேமேமேமேமேமேமேமே......

    ReplyDelete
    Replies
    1. சிந்திச்சா நாம எங்கேயோ போவோமோ இல்லியோ தெரியாது ஆனால் தலைவர்கள் எங்கேயோ காணாமல் போய்விடுவார்கள் என்பது உண்மைதானுங்க கில்லர்ஜீ

      Delete
  5. சிந்திக்க நேரமில்லை தலைவரின் தொண்டர்களுக்கு....

    ReplyDelete
    Replies
    1. குமார் சிந்திக்க நேரமில்லை என்று சொல்வதைவிட தன்னை நம்பும் தொண்டனுக்கு துரோகம் செய்தாலும் தலைவனுக்கு துரோகம் செய்ய மனது இல்லாமல்தான் பல தொண்டர்கள் இருக்கிறார்கள்

      Delete
  6. தலைவர் தூங்க்குவது போல
    நடிக்கிறார் என்பதால் விழிக்க வாய்ப்பில்லை
    தொண்டர்கள் விழித்தால்தான் உண்டு

    ReplyDelete
  7. நீங்களும் தான் திமுகவிற்கு ஏற்பட்ட சரிவை சரி கட்ட மண்டையை போட்டு கசக்கி எழுதுறீங்க, ஆனா கலைஞர் தான் கண்டுக்கவே மாட்டேங்கிராறு. (அவரு தான் ஸ்டாலின் கையில் லட்டை தூக்கி கொடுக்கிற மாதிரி கட்சியை தூக்கி கொடுத்துட்டாரே!!!)

    ReplyDelete
  8. ஹாஹா நல்ல கேள்வி கேட்டீங்க!.....பதில் இல்லாத கேள்விங்க......அப்படியெல்லாம் சிந்திச்சுருந்தா......திமுக நு இல்ல....எல்லா கட்சிகளுமே ஆட்டம் கண்டிருக்கும்...அவங்களுக்குத் தெரியாதா என்ன தொண்டர்கள் எல்லாம் முட்டாளுங்கனு.....

    ReplyDelete
  9. 2ஜி குடும்பஆதிக்கம் தவிரவும் ஈழத்தமிழர்விசயத்திலும் இதரவிசயங்களிலும் கலைஞர் தமிழனுக்கு செய்த 20 துரோகம் என ஜே.அவர்களால் பட்டியலிடப்பட்டுள்ளது. அத்துடன் கழகத்தை காத்தவர்களின் விலக்கலும்சேர்ந்துள்ளது. கழகத்தின் முடிவின் ஆரம்பம் என கொள்வோம்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.