உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Tuesday, July 15, 2014

கல்யாணம் ஆன பெண்கள் ஜாக்கிரதை.. பெண்கள் அவசியம் படிக்க வேண்டிய பதிவுகல்யாணம் ஆன பெண்கள் ஜாக்கிரதை.. பெண்கள் அவசியம் படிக்க வேண்டிய பதிவு

எச்சரிக்கை : இதைபடித்துவிட்டு யாரும் இது மாதிரி முயற்சித்து பார்க்க வேண்டாம்,கணவன் : 'நீ இப்படியே தினமும் நடந்தீன்னா உன்னைய பழிவாங்காம விடமாட்டேன்'

'மனைவி :'ஓஹோ அப்படியா அதையும் பார்ப்போம் உன்னாலே(மரியாதை) என்ன பண்ணமுடியும்னு'

கணவன் :'ஏன் முடியாதா? நம்ம வீட்டுக்கு பின்னாடி குளம் இருக்குதில...'

'மனைவி :'ஓஹோ அதுல என்னைய தள்ளிவிடுவீங்களா?'

கணவன் :'இல்ல நானே விழுந்திடுவேன்'

'மனைவி :'சொல்லாதீங்க... அத செய்யுங்க மொதல்ல'

கணவன் :'எனக்கு நீச்சல் தெரியும் நீந்தி வெளியே வந்திட்டா... அதனால கைய கட்டி விழுந்திடறேன்'

சரின்னு கணவனோட கைய மனைவி கயிற்றில் கட்டிவிடுகிறாள் குளத்துகிட்ட போன பின்னாடி


'மனைவி : 'சரி குதிங்க சீக்கிரம் எனக்கு நிறைய வேலை இருக்கு'

கணவன் : 'கையத்தான் கட்டிவிட்டுட்ட நீயே தள்ளிவிடு' என்றான்

மனைவி அருகில் வர

கணவன் : 'இருஇரு நீதான் நல்ல ஓடுவியே அதனால தூரத்தில இருந்து ஓடிவந்து ஒரு ஒதை விடு' என்றான்.

மனைவியும் தலைய ஆட்டிட்டு போய் ஓடி வந்தாள் வேகமாய் அப்போ கணவன் விலகிக் கொள்ள மனைவி குளத்துக்குள்ள விழுந்தாள் அப்போ மனைவி

'மனைவி :அய்யோ அய்யோ காப்பாத்துங்க காப்பாத்துங்கனு' கதறினாள்.

கணவன் :அதுதான் நீதான் என் கைய கட்டிட்டியே உன்னைய எப்படி காப்பாத்த முடியும்?' பார்ப்போம் அடு்த்த ஜென்மத்தில'

படித்ததில் பிடித்தது
இதை எழுதியவர் கவிமணி மாயூரம் வேதநாயகம்.

ஹீ.ஹீ.ஹீ
நம்மை போலவும் அந்த காலத்தில் எவனோ எழுதி கொண்டு இருந்திருக்கிறான்.

அன்புடன்
மதுரைத்தமிழன்

16 comments :

 1. ரொம்ப தான் யோசிக்கிறாங்க போல,,,,,,,

  ReplyDelete
 2. நல்லது கொலைப்பழியிலிருந்து தப்பிக்க...

  ReplyDelete
 3. நாங்கலாம் இப்படிலாம் ஜூஜூபி தனமா ஐடியா பண்ண மாட்டோம். எப்பைட் நடந்துச்சுனே கண்டுப்பிடிக்காத மாதிரி ஸ்லோ பாய்சனை சமையல்ன்ற பேர்ல தினமும் கொடுத்துக்கிட்டு இருக்கோம்.

  ReplyDelete
  Replies
  1. ஆஹா சகோதரி இது நியாயமா?!!!!!!

   Delete
 4. நன்றாகச் சிந்திக்க வைக்கிறியள்

  ReplyDelete
 5. பாதி படிக்கும்போதே, இப்படித்தான் முடியப்போகுதுன்னு தெரிஞ்சுது.
  அப்படி தெரிஞ்சாலும், நான் ரெண்டு தடவை ரசிச்சு படிச்சேன்.

  ReplyDelete
 6. வணக்கம்

  உரையாடல் நன்றாக உள்ளது... பகிர்வுக்கு நன்றி
  ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: பேனாமுனைப்போராளி:


  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 7. ஒ! கவிமணி எல்லாம் கூட படிக்கிறதுண்டா??!!
  அதுலயும் உங்க கண்ணுல சிக்குன மாட்டரை பார்த்தீங்களா:)))

  ReplyDelete
 8. முன்பே உங்களுக்கு தோழர் உண்டு...!

  ReplyDelete
 9. அந்தக் காலத்துல....இப்படியா இருந்துச்சு...இந்தக் காலத்துல பாருங்க....ஆம்பிளைங்க எல்லாம் எப்படி இருக்கானுங்க ....அப்படின்னு இனி யாரும் வாயத் தொறக்க முடியாதுன்னு சொல்லுங்க.....அப்ப எல்ல காலத்திலும் நண்பர்கள் இருக்காங்கனு சொல்லுங்க...நன்றி கவிமணி வேதநாயகம் பிள்ளை!!!

  முடிவு தெரிந்திருந்து விட்டது....ஆனாலும் மிகவும் ரசித்தோம்!!

  ReplyDelete
 10. அட அப்பவே இப்படி இருந்தாங்களா? நம்ப முடியலையே! உங்க ஸ்டைல்ல மாத்தி எழுதி இருக்கீங்களா?

  ReplyDelete
 11. என்னமா யோசிச்சு இருக்காரு மனுஷன்! :))))

  ReplyDelete
 12. அந்த காலத்துப் பெண்களுக்கெல்லாம் இவ்வளவு தான் அறிவு.....((((

  ReplyDelete
 13. அந்த காலத்திலயும் ஒரு மதுரைத் தமிழனா. மாயுரம் வேதநாயகம் பிள்ளை புகழ் பெற்றவர் ஆயிற்றே
  நீங்களும் எதிர் காலத்தில புகழடையப் போறீங்க!

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog