Thursday, July 3, 2014



அட போங்கப்பா இந்திய மக்களை பற்றி புரிஞ்சுக்கவே முடியலை.....

என்னாச்சு இந்தியாவில் உள்ள ஆண்கள் எல்லாம் திருந்திட்டாங்களா பரபரப்பான பாலியல் பலாத்காரம் பற்றிய செய்திகளை காணோமே அல்லது சென்னையில் கட்டிடம் இடிந்துவிட்டதால் அந்த செய்தி பரபரப்பாக இருப்பதால் பலாத்காரம் செய்தால் அது பரபரப்பாகாது என்பதால் அமைதியாக இருக்கிறார்களா அல்லது அதில் இறந்தவர்களுக்காக மெளன அஞ்சலி செய்து கொண்டிருக்கிறார்களா?அட போங்கப்ப இந்திய மக்களை பற்றி புரிஞ்சுக்கவே முடியலை


என்னாச்சு தமிழக தலைவர்கள் கலைஞர் ,வைகோ, ராமதாஸ், மற்றும் சின்ன சின்ன அடிபொடிகள் எல்லாம் தேர்தலுக்கு அப்புறம் சைலண்டாக இருக்காங்களே ஒரு வேளை இலங்ககையில் தமிழர்களுக்கு தனி நாடு கொடுத்துவிட்டாங்களா அல்லது எல்லா தமிழர்களையும் அழித்து விட்டார்களா என்ன? இந்திய தலைவர்களை பற்றி புரிஞ்சுக்கவே முடியலை.....

என்னாச்சு விலைவாசி எல்லாம் ஏறிக்கிட்டே இருக்கு ஆனா ஒரு பயபுள்ளைங்களும் அதற்கு எதிராக போராட்டம் கூட பண்ணவில்லை. ஒரு வேளை எல்லாம் மக்களிடமும் பணம் அதிக அளவு புளங்குகிறதா என்ன? அல்லது எல்லாம் தலைவர்களை போல கொள்ளை அடிக்க ஆரம்பித்துவிட்டார்களா என்ன இந்திய மக்களை பற்றி புரிஞ்சுக்கவே முடியலை.....


இதிகாச காலங்களில் திரெளபதி மானம் காக்க கதறி அலறிய போது அவள் மானம் காக்க கடவுள் அவள் சேலையை உறிய உறிய சேலையை தொடர்ந்து கொடுத்து காப்பாற்றினார். அதே கடவுளை கற்பழிக்கபடும் பெண் தன் மானம் காக்க வேண்டினாள் மானம் காக்காமல் மேலும் மேலும் கயவர்களையே அனுப்பி கொண்டிருக்காரே கடவுள் ஒரு வேளை கடவுளும் காலத்திற்கேற்ப மாறிக் கொண்டே இருக்கிறா எனக்கு ஒன்றுமே புரியவில்லையே


மேலை நாட்டை பார்த்து பேண்ட் சர்ட் கோட்டு சூட்டு போட்டு காரில் போவதைமட்டும் காப்பி அடிக்கும் இந்தியரகள் மேலை நாட்டுக்காரனுக்கு மூச்சா வந்த பாத்ரூம் தேடி மூச்சா போகிறானே அதை மட்டும் காப்பி அடிக்காமல் காரில் போனாலும் மூச்சா வந்தால் அப்படியே தெருவில் மூச்சா போகிறானே அது மட்டும் எப்படிங்க எனக்கு புரியவில்லையே

உலகத்திலே தனக்கு பிடித்த நடிகனின் படம் வெளி வரும் போது எந்த நாட்டுக்காரனும் பாலபிஷேகம் செய்வதில்லை அந்த் நடிகனின் கட் அவுட்டுக்கு ஆனால் இந்தியன் மட்டும் செய்கிறேனே அது எதனால் அவன் லூசுங்கிறதுனாலவா அல்லது அந்த நடிகர்கள் லூசு என்பதாலா?


சரி சரி நான் வரட்டா இதுக்கு மேலே யோச்சிசா மண்டை வீங்கிடும்...


அன்புடன்
மதுரைத்தமிழன்







33 comments:

  1. சூப்பர் கேள்விகள்! ஆனால் பதில்தான் இல்லை! அதுவும் கேட்டீங்க பாருங்க.....மூச்சா போறது பத்தி.....அமெரிக்கா வந்தாக் கூட....இயற்கை உபாதையைக் கழிக்க இயற்கைதான் வேண்டும்னு அடம்பிடிக்கறவங்க....என்னங்க நீங்க.....மற்ற கேள்விகளுக்கு எல்லாம் ...இங்க போராட்டம் எல்லாம் ஒரு நொடிதான்...அதுக்கு அப்புறம் எல்லாம் இருகோடுகள் தத்துவம்தான்....காந்திகளா என்ன? இங்க இருக்கறவங்க...தீர்வு கிடைக்கும் வரை போராட....

    மண்டை மெய்யாலுமே வெடிச்சுடும்......

    ReplyDelete
    Replies
    1. துளசிதரன் ஜீ என் பதிவை படிக்கும் போது ஹெல்மேட் போட்டு படிங்க இல்லைன்னா வெடிச்சுடும்

      Delete
  2. நீங்கள் சொர்க்கத்தில் இருக்கும்போது (அமெரிக்காவில) எப்படி புரிஞ்சுக்க முடியும் தலீவரே.........!!!

    ReplyDelete
    Replies
    1. வலிப்போக்கன் அமெரிக்கா சொர்க்கம் என்பது இங்கு கடினமாக உழைக்கும் மக்களுக்கு மட்டுமே மற்றவர்களுக்கு இது நரகம் தான் ஆனால் இந்தியாவில் ஊரை ஏய்ப்பவனுக்கு மட்டும் இந்தியா சொர்க்கம் மற்றவர்களுக்கு அது நரகம்தானுங்க

      Delete
  3. மக்களைப் புரிஞ்சுக்கவே முடியலே ,தலைவர்களைப் புரிஞ்சுக்கவே முடியலே,நடிகரைப் புரிஞ்சுக்கவே முடியலே,ரசிகனைப் புரிஞ்சுக்கவே முடியலே,சரி ,பூரிக்கட்டை அடியில் இருந்து தப்பிக்கலாம்னா மனைவியையும் புரிஞ்சுக்கவே முடியலங்கிறதை ஏன் விட்டுட்டீங்க ?
    த ம 3

    ReplyDelete
    Replies
    1. பகவான் ஜீ பூரிக்க்கட்டை பற்றி உலகுக்கே தெரியும் என்பதால் அதை சொல்லவில்லை ஹீ.ஹீ/ ஆமாம் என் மனைவி மறந்து இருந்தாலும் நீங்க மறக்க மாட்டீங்க போலிருக்குதே

      Delete
  4. பூரிக்கட்டையால் அடி வாங்கினாத்தான் மண்டை வீங்கும், யோசிச்சா கூட மண்டை வீங்குமா என்ன??/

    ReplyDelete
    Replies
    1. சொக்கன் என்னை போல உள்ள உங்களுக்கு நான் சொல்லிதான் தெரிய வேண்டுமா என்ன

      Delete
  5. இந்தியாவில் வாழ்ந்து வரும் ஆண்களின் கொஞ்சநஞ்ச சுதந்திரத்தையும் பறிச்சிடுவீங்க போல... (இந்த கமெண்ட் எதுக்கு போட்டேன்னு உங்களுக்கு புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்)

    ReplyDelete
    Replies
    1. சொக்கன் நன்னாவே புரிஞ்ச்சிடுச்சுங்க

      Delete
  6. எனக்கும் மண்டை வீங்கிடுச்சி!!! இன்னம் மக்களை புரிஞ்சிக்கவே முடியலை

    எதுக்கு போராட்டம் கொடி பிடிகிறாங்கன்னே சில நேரம் புரிவதில்லை ..ஆனா ஒன்னு மட்டும் நிச்சயம் இப்பத்திய தலையாய பிரச்சினை .hot topic of the week :)...மரியா ஷரபோவா சச்சினை தெரியாதின்னு சொன்னதுதான் :)

    ReplyDelete
    Replies
    1. ஏஞ்சலின் மக்களை என்னாலும் புரிந்து கொள்ளமுடியதால்தான் நான் இந்த பதிவை போட்டேன்

      Delete
  7. //உலகத்திலே தனக்கு பிடித்த நடிகனின் படம் வெளி வரும் போது எந்த நாட்டுக்காரனும் பாலபிஷேகம் செய்வதில்லை அந்த் நடிகனின் கட் அவுட்டுக்கு ஆனால் இந்தியன் மட்டும் செய்கிறேனே அது எதனால் அவன் லூசுங்கிறதுனாலவா அல்லது அந்த நடிகர்கள் லூசு என்பதாலா?//

    எமக்கு பிடிக்கவில்லை என்றால் அவன் லூசா? மற்றவருக்கு இடைஞ்சல் இல்லாமல் சட்டபூர்வமாக பாலாபிஷேகம் செய்தால் என்ன தப்பு?? வெளிநாட்டுக்காரன் செய்வது மட்டும் தான் நாம் செய்ய வேண்டுமா? அப்படியென்றால் publicல் kiss அடிக்க வேண்டுமா?

    ReplyDelete
    Replies
    1. மற்றவர்களுக்கு இடைஞ்சலில்லாமல் சட்டபூர்வமாக , நீங்க பஞ்சாமிர்தம், இளநீராலும் தாராளமாக
      அபிஷேகம் செய்யுங்கள்! அப்படியே பொங்கல் வையுங்கள், சிலநடிகர்களுக்கு ஆடு வெட்டி, போத்தில் உடையுங்கள். அலகு குத்துங்கள்,காவடி எடுங்கள். நடிகர்களின் சிலையை அம்மா, மனைவி தாலிப் பவுணில் (அப்பதானுங்க உங்க ரசிப்பின் வலுவை உலகறியும்) செய்து தேரில் வைத்து இழுங்கள்.உங்கள் விருப்பம் போல் எதையும் செய்யுங்கள்.
      என்னங்க,பாலாபிஷேகம் சட்டபூர்வமாக்கியாச்சா? நாடு உருப்பட்டுவிடும்.
      "அப்படியென்றால் Public ல் kissஅடிக்க வேண்டுமா"- Beach, park, museum,temple,library இவை யாவும் நீங்கள் சொல்லும் Public இடம் தானுங்க, இங்கெல்லாம் kiss அடிக்கத் தொடங்கி பல்லாண்டுகளாகி விட்டன. உங்களுக்குத் தெரியாதா?

      Delete
    2. வெளிநாட்டுக்காரன் பொதுஇடத்தில் கிஸ் அடிப்பது அவனது கலாச்சாரம் இந்தியாவில் பொது இடத்தில் மூச்சா போவதுதான் இந்தியன் கலாச்சாரம் என்றால் அதை யாரும் தடுக்க கூடாதுங்க இப்ப ஒகேவாங்க

      Delete
    3. மதுரை தமிழா, எனது கருத்தை தவறாக புரிந்துகொண்டுவிட்டீர்கள் என்று நினைக்கிறேன். பாலாபிசேகம் செய்தால் தவறு இல்லை என்றுதான் கூறினேன். மூச்சா போவதை தடுக்க வேண்டாம் என்று நான் கூறவில்லையே.

      Delete
    4. எல்லாம் சரி என்று நான் சொல்லவில்லையே. publicல் மூச்சா போவதை நானும் அதரிக்கவில்லை.
      ஒரு விடயத்தை நான் தெளிவு படுத்த விரும்புகிறேன். வெள்ளைக்காரன் ஆங்கில படம் பார்க்கும் போது தியேட்டர் அமைதியாக இருக்கும். தமிழ் படம் பார்க்கும் போது விசில் சப்தம் பறக்கும். இது கலாசார வேறுபாடு. ஆங்கில படத்தில் hero introduction தமிழ் படம் போல இருக்காது. அங்கு விசில் அடிக்கும் தேவையும் இருக்காது. இதற்காக தமிழ் ரசிகர்களை தப்பு என்று கூற முடியுமா? இன்னும் ஒரு வித்தியாசமாக பாடல்களை கூறலாம். அதுபோல் ஒரு நடிகனின் ரசிகன் அவனை ரசிப்பதும் வித்தியாசமா இருக்கும்.

      ஒருவனுடைய ரசிப்பு அவனுடைய பொருளாதாரத்தை சார்ந்தும் இருக்கும். 5 ஸ்டார் ஹோட்டலில் நடிககனின் நட்சத்திர கலை நிகழ்ச்சி பார்ப்பவன் பாலாபிசேகம் செய்ய போவது இல்லை. நேரில் பார்க்க வசதி அற்றவன் cut-outஇற்கு பாலாபிசேகம் பண்ணுகிறான்.

      to Johan Paris,
      தயவுசெய்து எனக்கு கருத்தை திரிபு படுத்த வேண்டாம். நான் அம்மா மனைவி நகையில் இதை செய்ய சொல்லவில்லை. அது தவறுதான்.

      Delete
  8. நாம எப்பவுமே வித்தியாசமானவங்க... நம்மள யாரும் புரிஞ்சுக்கூடாதுன்னுதான்.... அப்புறம் 10 கேள்விகள் பகுதியில் உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் போகக் காரணம் என் அழகியைக் காணோம் தேடிக் கண்டுபிடிச்சி போடறதுக்குள்ள இந்த அழகி (அட நாந்தாங்க) ஊரச் சுத்தப் போயிட்டேன்...என் தோழிக்கு முக நூல் மூலமா அழைப்பு விட்டிருக்கேன் ...கொஞ்சம் பிஸி அவங்க... பார்க்கலாம் என்ன செய்றாங்கன்னு...

    ReplyDelete
    Replies
    1. எழில் உங்களை பேஸ்புக்கில் தொடர்வதால் நீங்க பிஸின்னு என்று நானும் ப்ரிந்து கொண்டேன் .. நன்றிங்க

      Delete

  9. நன்றாக மக்கள் உள்ளங்களைக் கிளறிப் பார்ப்பது போலத் தெரிகிறதே!

    ReplyDelete
    Replies
    1. மக்களை அல்ல என் மனதை கிளறிப்பார்க்கிறேன் அவ்வளவுதாங்க ஜிவலிங்கம்

      Delete
  10. அனைவருக்கும் தற்போது ஓய்வு தேவை!

    ReplyDelete
    Replies
    1. வாங்க் ஐயா ஒய்வு எடுத்து வந்தா இவங்க சுறு சுறுப்பா போராடுவங்க என்றா நினைக்கிறீங்க?

      Delete
  11. இந்தியாவிற்குப் போனால் நீங்களும் இந்தியரே.....

    போயி இரண்டு மாதம் இருந்து பாருங்கள்....

    ReplyDelete
    Replies
    1. அருணா செல்வம் இந்தியாவிற்கு போக வேண்டும் இருக்க வேண்டும் என்ற ஆசை என்னிடம் இல்லைங்க....ஆனா பதிவு எழுது பதிவர்களை மட்டும் பார்க்க ஆசையாக இருக்கிறது என்பது மட்டும் உண்மைங்க

      Delete
  12. சிந்திக்க வைத்த கேள்விகள்! சிலது சிரிக்கவும் வைத்தன! குறிப்பாக மூச்சா மேட்டர்! இந்தவிஷயத்தில் நம்மாளுங்களை மிஞ்சவே முடியாது!

    ReplyDelete
    Replies
    1. சிந்தித்து சிரித்து கருதிட்டதற்கு நன்றி சுரேஷ்

      Delete
  13. மூச்சா விசயத்தில் இந்தியாவில் படித்தவர்கள் படிக்காதவர்கள் என்ற பாரபட்சமே இல்லை. எல்லோருமே ஒரே குட்டையில் ஊறின மட்டைங்க தான்.

    ReplyDelete
    Replies
    1. மூச்சா போவதை சரி தவறு என்று நான் சொல்ல வரவில்லை. மேலை நாட்டை பார்த்து எல்லாவிஷயத்தையும் அப்படியே காப்பி அடிக்கும் நாம் ஏன் இந்த விஷயத்தையும் நாம் காப்பி அடிக்க கூடாது என்பதுதான் என் கேள்வி..

      இங்கு சிறு வயதில் இருந்து பழக்கப்பாடுத்தப்பட்டதாலும் அப்படியே போனால் மிக அதிக அளவு அபராதமும் ஜெயில் தண்டனையும் தருவதால் வரும் மூச்சா வராமல் ப்ய்விடுகிறது என்பது உண்மைங்க

      Delete
  14. இதத்தான் பெரியார்கூட சொல்லிட்டுப்போனாரு,,,, இவங்களை புரிஞ்சுக்கவே முடியாது நண்பா.

    ReplyDelete
    Replies
    1. கில்லர் ஜீ எனக்கு நம்ம மக்ளை பற்றி நல்லா புரிஞ்சு போச்சி அதனாலதான் இந்த பதிவே

      Delete
  15. நமது மக்களை புரிந்து கொள்வது ரொம்பவே கஷ்டம் மதுரைத் தமிழா....

    ReplyDelete
    Replies
    1. வெங்கட் ஜீ நம்ம மக்களை புரிந்து கொள்ளலாம் ஆனால் நம்ம தலைவர்களைதான் புரிந்து கொள்ள முடியாதுங்க

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.