Saturday, July 12, 2014



@avargal unmaigal



போங்கடா நீங்களும் உங்க நியாங்களும்


பொண்ணுங்க நடுத்தெருவில் தண்ணியடிச்சா தப்பு இல்லையாம் ஆனால் பாரில் இருந்து ஆண்கள் தண்ணி அடிச்சா தப்பாம். என்னடா நியாயம் இது...



@avarhal unmaigal
டாஸ்மாக் விற்பனையை மேலும் உயர்த்துவதற்கு அம்மா ஏன் இவரை விளம்பர படத்தில் நடிக்க வேண்டுகோள் விடுவிக்க கூடாது?


இவரு தண்ணியடிச்சா இவருக்கு பால் அபிஷேகமாம் ஆனா நான் தண்ணியடிச்சா பூரிக்கட்டையால் அபிஷேகமாம்.. என்னடா நியாம்.


குடி அன்பை முறிக்கும் ( குடியும் குடி சார்ந்த உறவும் )

ஒரு குடிகாரனின் இறுதிச் சடங்குக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன..எல்லாம் முடிந்து சவப்பெட்டி வீட்டை விட்டு வெளியே கொண்டுவரப்படும் போது நிலை வாசலில் இடித்து விடவே " அம்மா" என்றொரு முனகல் சப்தம் கேட்டது.

உடனே பெட்டியை இறக்கி திறந்து பார்த்தால், குடிகாரன் உயிருடன் இருப்பது தெரிந்தது

அதை கேள்விபட்ட அந்த குடிகாரனின் மனைவி தன் கணவணை தூக்கி கொண்டு சென்றவர்களை பார்த்து டேய் எருமைமாடுகளா நிலைவாசலில் இடிக்காமல் கொண்டு போக கூடத் தெரியவில்லையா நீங்கள் எல்லாம் சோறுதான் திங்கிறீங்களா இல்லை வேற எதையாவது திங்கிறிங்களா ? நீங்க எல்லாம் எங்க உருப்புட போறீங்க என்று சத்தம் போட்டாள்

அன்புடன்
மதுரைத்தமிழன்





14 comments:

  1. அந்த அம்மா அக்காடா நிம்மதியாக
    இருக்கலாம் என்பதை அந்தப் படுபாவிகள்
    கெடுத்துவிட்டார்களே

    ReplyDelete
  2. அந்த குடிகாரனின் மனைவி நிலை பாவம்...

    ReplyDelete
  3. ஹாஹாஹாஅ......இதுக்குப் பேருதாங்க "குடி குடியைக் கெடுக்கும்" னு எல்லா சாராயக் கடையிலும் எழுதி வைச்சுருப்பாங்க...ஆனா நம்ம பயலுகளுக்கு எப்படிக் கண்ணுல தெரியும்...குடிச்சு தள்ளாடும்போது....

    குடிச்சா கும்மாளம்
    நானும் சேர்ந்து..
    செத்தா என் பிணம் முன்னே
    குடிச்சவங்க கும்மாளம்

    ReplyDelete
  4. பொண்ணுங்க நடுத்தெருவில் தண்ணி அடிப்பது சோறு பொங்க, குழம்பு வைக்க, உடல் அழுக்கை போக்க..., நீங்க “பார்”க்குள்ள தண்ணி அடிப்பது நீங்களும் , உங்க குடும்பமும் சிறுக சிறுக வறுமையில் சாக......., எது தேவை!?

    ReplyDelete
  5. நடுத்தெருவிலே நீங்க தண்ணி அடிக்கிறதை தப்புன்னு சொன்னது யாருன்னு காட்டுங்க ,பின்னி பெடல் எடுத்துடுறேன் !
    த ம 4

    ReplyDelete
  6. அந்த அம்மாவின் நிம்மதி போச்சேன்ற வயித்தெரிச்சல்தான்! ஹாஹா!

    ReplyDelete
  7. ஒருவேளை அவன் வாங்கிய கடனைத்தரவில்லையோ ?

    ReplyDelete
  8. அந்தம்மா சொல்றதும் நியாயம்தானே!

    ReplyDelete
  9. வணக்கம்
    குடிகாரன் பேச்சு விடிஞ்சாப் போச்சு....குடிகாரனின் மனைவி நிலை பாவம்....

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  10. /போங்கடா நீங்களும் உங்க நியாங்களும்/

    தலைப்பைச் சொல்லிப் பார்த்தேங்க.

    ReplyDelete
  11. (படத்தில்)
    பெண்கள் தெருவில ஊற்றுத் தண்ணி
    வீட்டுத் தேவைக்குப் அடிப்பதில்
    தப்பில்லை, தவறில்லை
    பெண்கள் பாரில் இருந்து
    தண்ணி (மது) அடிப்பதில் தான்
    தப்பு, தவறு
    பெட்டியை இறக்கித் திறந்து பார்த்தால்
    குடிகாரன் உயிர்த்த கதை
    சுவையானது!

    ReplyDelete
  12. அந்த அம்மா கொடுத்துவைச்சது அவ்ளோ தான்:))
    தம 9

    ReplyDelete
  13. சனியன் ஒழிஞ்சுதுன்னு பார்த்தா, இன்னும் உயிரோடே இருக்குதேன்னு நினைச்சு நொந்து நூலாப்போயிருப்பாங்க அந்த அம்மா.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.