Sunday, July 27, 2014

 


கடந்த 2 நாட்களாக அமெரிக்காவில் உள்ள நீயூஜெர்ஸியில் நடந்தது என்ன??

இரண்டு நாளா பதிவுலகம் எட்டி பார்க்க நேரமில்லை என்னை பார்க்காததால் இந்த வலையுலகமே தவிச்சு போயிருச்சாம்... அப்படி தவிச்சங்களூக்கா கடந்த 2 நாளாக என் வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகளை இங்கு பதிகிறேன்



ஆமாம் இவரு பெரிய சூப்பர் ஸ்டாரு இவர் வாழ்க்கையில் நடந்ததை நாங்க படிக்கிறதுக்கு என்று நினைக்கும் மக்களே அப்படியே ஒரு ஏபோட்டெர்ன் பண்ணி சொல்லிக் கொள்ளாலாம ஒடிப் போங்கள்


மற்றவங்க அப்ப்டியே தொடருங்க...இணையத்தில் இருக்கும் ஒரு சிலரைத்தவிர மற்றவர்களுக்கு நான் என்ன வேலை செய்கிறேன் என்று தெரியாது... நான் நம்ம பரதேசி, வருண், விசு மாதிரி பெரிய ஆள் கிடையாது அவங்க உட்கார்ந்து வேலை பார்க்கும் இடத்தில் கடவுள் கூரையை பிச்சுகிட்டு டாலராக கொட்டுவார்... ஆனா நம்ம பொழைப்பு அப்படியெல்லாம் இல்லைங்க...

இந்த பரதேசி, வருண், விசு இவங்க எல்லாம் சம்பாதித்து திறமையாக சேமித்து வைக்கும் டாலரை எப்படியாவது பேசியே கொள்ளையடிக்கும் பொழைப்பை செய்கிறவனுங்க... அதுக்காக என்னை திருடன் என்று சொல்லிவிடாதீங்க மக்காஸ் என் வேலை சேல்ஸ்மேன் வேலைதானுங்க ...உடனே ஆஹா அமெரிக்காவில் இருப்பவர்களுக்கு சம்பளம் மிக அதிகமாக இருக்கும் அவர்கள் பணத்தை கன்னாபின்னா என்று செலவழிப்பவர்கள் அதனால் இந்த மதுரைத்தமிழன் மிக அதிகமாக விற்று பணத்தை லாரியில்தான் அள்ளிக் கொண்டுபோவான் என்று நினைத்து விட வேண்டாம்.

சேல்ஸ்மேன் பொழப்பு உலகெங்கும் ஒரே மாதிரி பொழப்புதான் அதுதாங்க நாய் பொழப்பு.. மற்ற நாட்டிலாவது அல்லது மற்ற கம்பெனிகளாலாவது மாத சம்பளமும் உடன் விற்பனை செய்தற்கு ஏற்றவாறு கமிஷன் தருவாங்க. ஆனா எங்க கம்பெனியில் இந்திய பைசாவின் ஒரு பைசா மதிப்பிற்கு கூட சும்மா சம்பளமாக தரமாட்டாங்க.. பொருட்களை விற்க விற்க தான் அந்த பொருட்களுக்கு ஏற்ப கமிஷன் தருவாங்க...... ஆனா அந்த பொருட்களை வாங்கினவங்க ஒரு வருடத்தில் எந்த நேரத்தில் ரிடர்ன் பண்ணினாலும் கொடுத்த கமிஷனை திருப்பி புடுங்கிடுவாங்க அதனால் தொடர்ந்து விற்று கொண்டே இருக்க வேண்டும் இல்லைன்னா நாம் பரதேசி போகும் பாதையில் துண்டை விரிச்சு உட்கார்ந்துதான் இருக்க வேண்டும். இங்கு பலநாட்டு மக்கள் வசிக்கிறார்கள் அவங்க தமிழ் நாட்டு மக்கள் போல இளீச்சவாயங்க கிடையாதுங்க் அவங்க தலையில ஏமாற்றி மிளகாய் அரைப்பதற்கு....

சரிஎன் தொழில் பற்றி பிறகு இன்னும் விரிவாக பேசுவோம்... இப்போது கடந்த 2 நாளில் என்ன நடந்தது என்னவென்று பார்ப்போம்

வெள்ளிக்கிழமை காலையில் வழக்கம்போல எலும்பு துண்டுக்கு ஏங்கி கிடக்கும் நாய் போல நானும் என் கூட வேலை பார்க்கும் நான்கு பேரும் நின்று கொண்டிருந்தோம் காலை வேலை என்பதால் 4 பேர் நேரம் ஆக ஆக நாய் துண்டுக்கு ஏங்கி கிடக்கும் நாய்களும் அதிகமாகிவிடும்...எலும்பு துண்டுகள் வந்தால் அதை முதலில் அணுகும் நாய்க்குதான் அந்த எலும்பு துண்டு அதன் பின் மற்ற நாய்கள் வேற எலும்பு துண்டை எதிர் நோக்கி இருக்க வேண்டும் சில தினங்களில் யாருக்கும் எலும்பு துண்டு கிடைக்காமலே போகும்...

வெள்ளிகிழமை காலையில் எனக்குதான் முதல் எலும்பு துண்டு கிடைத்தது அந்த துண்டு இஸ்ரேல் நாட்டை சேர்ந்த பெண்.... சுமாரன அழகு கொண்ட பெண்தான்....வழக்கம் போல அந்த பெண்னிடம் பொருட்களை பற்றி விபரித்து கொண்டு வரும் போது இப்போது வரும் பொருட்கள் எல்லாம் அந்த காலத்தில் தயாரிக்கப்படும் பொருட்களை போல மிக தரமானதாக இல்லை முன்பு எல்லாம் தயாரிக்கப்படும் பொருட்களின் லைப்15 முதல் 20 வருடங்கள் வரை ஆனால் இப்போது தாயாரிக்கப்படும் பொருட்களின் லைப் மேக்ஸிமம் 8 வருடங்கள்தான் தாக்கு பிடிக்கின்றன என்று நான் சொல்லிய போது அந்த பெண் என்னை இடைமறித்து நீங்க சொல்வது சரிதான் இந்த கால கல்யாண வாழ்க்கை கூட 5 லிருந்து 10 வருடம் வரைதான் இந்த கால கணவர்கள் சுத்த மோசம் என்று சொன்னார். உடனே நான் மிக நல்ல கணவன் என்னை கல்யானம் பண்னி இருந்தால் நீங்கள் இப்படி சொல்லி இருக்க மாட்டீர்கள் என்று சிரித்து கொண்டே சொன்னேன் அதன் பின் எங்கள் பேச்சு திசை மாறி சென்றது அதுவும் சிறிது நேரம் சென்ற பின்தான் என் மண்டையில் உதித்தது.... மனதுக்குள் பல ஆசைகள் மூட்டி மோதிய பின்பு என் மனதுக்கு நானே ஒரு கடிவாளத்தை போட்டுக் கொண்டு திரும்பவும் பொருட்களை பற்றி விபரித்து சொன்னேன்

அவள் அந்த பொருட்களை வேறு மாநிலத்தில் இருக்கும் தன் பெற்றோர்களுக்காக வாங்க வந்திருக்கிறாள் அவரின் பெற்றோர்களை அவர் தொடர்பு கொள்ள முயற்சித்து அவரால் முடியாததால் மீண்டும் வருகிறேன் என்று சொல்லி சென்றாள்...பர்ஸை திறக்காமல் அந்த பெண் மனசை திருடி சென்றாள்


அதன் பின் பல மணிநேரம் கழித்து ஒரு இனிமையான குரலில் எக்ஸ்கியூஸ்மி என்ற சத்தம் திரும்பி பார்த்தால் ஒரு தேவதை என்னை கூப்பிட்டு இருக்கிறது. அந்த தேவதை பாகிஸ்தானை சேர்ந்த முஸ்லீம் பெண் மிக அழகாக இருந்தாள் அதுமட்டுமல்லாமல் அவள் மிக மாடர்னாக தொடைகள் முழுவதும் வெளியே தெரியுமாறு டிரெஸ் பண்ணி இருந்தாள். இங்கு நான் தொடைகளை பற்றிக் குறிப்பிட்டது ஒரு முஸ்லிம் பெண் இப்படி ஆடையை அணிந்து வந்ததை நான் முதன்முதலாக பார்த்தால்தான்.. தொடைகளை பார்க்காமல் அவளை பார்த்தாலும் அவ மிக மிக அழகாகவே இருந்தாள்.. அவளைப் பார்த்த பின் என் இதயம் பட பட வென்று வேகமாக துடித்து உலக சாதனையை புரிந்தது
 

அதன் பின் வீடு திரும்பியதும் என் செல்லக் குட்டியை தூக்கி கொண்டு பாத்ருமிற்கு போய் கதவை சாத்தினேன். நீண்ட நேரம் என் செல்லக் குட்டியை குளிக்கவைத்து அதனோடு வாக்கிங்க போய்விட்டு படுத்து தூங்கினேன். அந்த செல்லக்குட்டி வேறும் யாருமல்ல என் நாய்க்குட்டிதான் அன்று இரவு நான் பார்த்த பெண்களோட கனவில் லூட்டி அடித்த கொண்டிருந்ததேன் அந்த கனவுகள் அதிகாலை வரை தொடர்ந்தது அப்படி தொடர்ந்து கொண்ட போது என்னை யாரோ டஸ் பண்னுவது போல இருந்தது ஆகா நம்ம பொண்டாடிதான் நம்மை டஸ் பண்ணுகிறாள் என்று நினைத்து கண்ணை திறந்த போது என் நாய்க்குட்டிதான் என்னை தொட்டு இருக்கிறது என்று தெரிந்தது. அவர் அதிகாலையில் வாக்கிங்க் போக என்னை எழுப்பி விட்டு இருக்கிறார், அதனோடு போய்விட்டு அன்று வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பினேன். எனது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் அவரது குழந்தைக்கு பிறந்த நாள் வைத்திருந்தார் எங்களையும் அருகில் இருந்த 12 இந்திய வீட்டை சேர்ந்தவர்களையும் அழைத்து இருந்தார். அது எங்க வீட்டின் பேக்யார்டில் நடந்தது.அங்கு வந்தவர்களை வரவேற்று எங்களுக்கு பீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன. நம் ஊரில் இருந்து வந்த பெரியவர்களும் கொடுக்கும் பீரை குடிக்கவிட்டால் கெளரவ குறைச்சாலக இருக்கும் என்று கருதியோ அவர்களும் ஒன்றை எடுத்துக் கொண்டனர் அப்படி பீர் குடிக்காதவர்களுக்காக எங்க வீட்டு மாமி பண்ணிய கரைத்த மோர் கொடுக்கப்பட்டது.

எனக்கு பீர் அவ்வளவாக பிடிக்காது அதனால் 2 பாட்டில்கள் மட்டும் அருந்திவிட்டு அருகில் இருந்தவரை பார்த்தேன் அவரும் என்னை பார்த்தார் எங்களது பார்வையே என்னடா இப்படி பீர் கொடுத்து நம்பளை ஏமாற்றிவிடுவான் போலிருக்கிறது என்பது போல இருந்ததால் நான் என் வீட்டிற்கு சென்று ரம்மை எடுத்து அமர்ந்தோம் அப்போது புதிதாக எங்கள் வீட்டிற்கு அருகில் வசிக்க வந்தவர்களும் அந்த பார்ர்டிக்கு வந்து இருந்தனர். அந்த விட்டில் வசிக்கும் பெண்மணியும் அவர் தங்கையும் குழந்தைகளோடு வந்து இருந்தனர் அவர்களுக்கும் சரக்கு வேண்டுமா என்ற கேட்ட போது அவர் இன்னும் கொஞ்ச நேரம் ஆகட்டும் எங்களின் கணவர்கள் வந்த பிறகு நாங்கள் எடுத்து கொள்கிறோம் என்று சொல்லினர். சரி அவர்கள் பெண்களாக இருப்பதால் வீட்டிற்கு சென்று ஒரு ஒயின் பாட்டிலை எடுத்து வைத்து இருந்தேன். இறுதியாக அவர்கள் கணவர் வந்த பின்னால் சரி இந்தாருங்கள் ஒயின் என்று கொடுத்த போது ஹீ,ஹீ என்று சிரித்தவாறு இப்படி சின்ன புள்ளைங்க குடிக்கும் சரக்கு வேண்டாம் என்று சொல்லி ரம்மை எடுத்து பல ரவுண்டுகள் அடிக்க ஆரம்பித்னர் இறுதியாக 12:30 ஆன பிறகு அந்த பெண்கள் இப்படி மிக்ஸிங்க் பண்னியெல்லாம் அடிக்க வேண்டாம் என்று சொல்லி இறுதி ரவுண்டை ராவா அடிக்காலம் என்று சொல்லி எல்லோருக்கும் அவர்களே ஊற்றி தந்தனர். அப்போதுதான புரிந்தது மதுரைத்தமிழனையும் பீட் அடித்துவிடும் விதத்தில் பெண்களும் இருக்கிறார்கள் என்று. இப்படி ஒரு பக்கம் கூத்து நடந்தது இன்னொரு பக்கம் குழந்தைகளும் கரைச்சுவிட்ட மோரை குடித்தவர்களும் பிறந்நாளை கொண்டாடிக் கொண்டிருந்தனர்.. நாங்கள் ராவாக சரக்கு அடிக்கும் போது எங்களுக்கு போட்டியாக அவர்கள் காபி டீயை போட்டு குடித்து கொண்டிருந்தனர். எனக்கு என்ன சாப்பிட்டாலும் என்ன நேரமானாலும் படுக்க போது காபி குடித்துவிட்டுதான் படுக்கும் பழக்கம் இருப்பதால் அந்த சைடும் போய் காபியை வாங்கி குடித்து விட்டு படுக்க சென்றேன்..

இந்த காரணங்களால்தான் வலையுலகம் வர முடியாது போயிற்று மக்கழே,,


டிஸ்கி: முன்பு நான் குடிப்பது பற்றிய ஒரு பதிவு போட்ட பின் என்னை தொடரும் ஒரு மதத்தை சார்ந்த சகோதர சகோதரிகள் என் தளப்பக்கம் வரமாட்டோம் என்று சபதம் எடுத்து சென்றுவிட்டார்கள்,. இப்ப இதைப்படிக்கும் பல யோக்கியவான்களும் அதே போல செல்வார்கள் என நினைக்கிறேன்... நடப்பதை வேடிக்கை பார்ப்பதே என் பொழப்பு அப்ப வரேனுங்க

அன்புடன்
மதுரைத்தமிழன்

22 comments:

  1. அப்ப நல்ல வீக் என்ட் "வீக்கென்ட்" நு சொல்லுங்க.......! பூரிக்கட்டை பறந்திருக்க்குமோன்னுதான்....ஹாஹாஹா.....

    ReplyDelete
    Replies
    1. சரக்கு அடிக்கும் நாட்களில் பூரிக்கட்டை பறக்காது. காரணம் அப்படி பறந்தால் அந்தகட்டை ஏய்தவன் மேலேயே திரும்பிவிடும் வாய்ப்புகள் மிக அதிகம். பூரிக்கட்டை பறப்பது என்னவோ சந்தோஷமான நாட்களில் மட்டும்தான்

      Delete
  2. ஆமாம் என்னடா மதுரைத் தமிழன் பதிவு போடலியேனு தோணிச்சு.....அப்ப இதுதான் விஷயமா...பூரிக்கட்டை அடி பலமோன்னு நினைச்சோம்....

    ReplyDelete
  3. நண்பா, உன்னுடைய ஆட்டததிற்கு என்னை ஸ்கோர் போர்ட் ஆக்கிவிட்டாயே. உன் தொழில் பரவாயில்லை. கழுத்தில் டை, கையில் பை, வாயில் பொய். கூட்டல், பெருக்கல் எவ்வளவு கஸ்டம் தெரியுமா உனக்கு. எலும்பு துண்டூக்கு ஏங்குவதாய் ஆரம்பித்தாய், பிறகு தொடையிலே போய் நின்று கொண்டாய். பெரிய ஆள் ஐயா நீர்.

    ReplyDelete
    Replies
    1. வேகாத வெயிலில் கழுத்தில் டை கையில் பை வாயில் பொய் என்று அழைந்தது இந்தியாவில் மட்டும்தான் நண்பரே... இங்கே பூரிக்கட்டையால் வாங்கிய அடியால் நாள் முழுவதும் வலியால் துடித்தாலும் முகத்தில் சிரிப்போடதான் வளைய வளைய வர வேண்டும்....

      நண்பரே நீங்கள் கூட்டிபெருக்குவது டாலர்களை ஆனால் நான் கூட்டி பெருக்குவது வீட்டில் உள்ள குப்பை கூழங்களை இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் உண்டு

      Delete
  4. பதிவு காமெடியாக இருந்தாலும் உங்க "டிஸ்க்ளைமெர்"ல ஒரு சீரியஸ் மெசேஜ் கொடுத்து இருக்கீங்க, தல. "இல்ல வருண், நீங்க என்னை எப்போவுமே தவறாப் புரிந்து கொள்றீங்க, இதுவும் காமெடிதான்" னு விளக்கம் சொன்னாலும் சொல்லுவீங்க! என்னவோ போங்க!

    ஆனா ஒண்ணு தல, பகவானும் பாட்டிலும் உங்க பக்கம் இருக்கும்போது யாரும் உங்களை அசைக்க முடியாது!



    ReplyDelete
    Replies

    1. பாஸ் நான் உங்களை எப்பாவது தவறாக புரிந்து கொண்டீர்கள் என்று குற்றம் சாட்டி இருக்கிறேனா? இல்லைதானே அது போல என்றும் குற்றம் சாட்ட மாட்டேன். காரணம் நீங்க என் பாஸ்...

      பாஸ் அளவோட குடிப்பது தவறு இல்லை என்ற குருப்பை சார்ந்தவன் நான். அதே நேரத்தில் குடித்துவிட்டு தன்னையும் தன் குடும்பங்களையும் அறிவில்லாமல் அழிப்பவர்களை நான் கண்டிக்கிறேன் ஆனால் குடிக்காத அதே நேரத்தில் பல அயோக்கிய தனங்களை தன்னுள் கொண்டு நல்லவர்கள் போல வேஷமிட்டு குடிப்பவர்களை மிக மோசமாக சித்தரிப்பவர்களைதான் நான் எதிர்க்கிறேன்.

      பகவானின் அருளால்தானே எனக்கு பாட்டில் கிடைக்கிறது அது தவறு என்றால் அந்த சரக்கு என்ற படைப்பை பகவான் படைதிருக்கமாட்டார்தானே. என்னவோ போங்க நான் நம்பும் பகவானே என்னை குழப்பத்தில் ஆழ்த்துகிறான் அதனால் நான் போய் இன்னொரு பெக் அருந்த வேண்டிய நிலமை வந்துடுச்சு

      Delete
  5. ரசிப்பிற்கு நன்றி

    ReplyDelete
  6. உங்க சரக்கு உங்க உரிமை! அதுல தலையிட எங்களுக்கு இல்லை உரிமை! இருந்தாலும் ஒரு சின்ன ரெக்வெஸ்ட் அளவு மீறாம பாத்துக்கங்க!

    ReplyDelete
    Replies
    1. நான் அளவு மீறுவது அடுத்தவர்களின் மீது செலுத்தும் அன்பில்தான் அவர்களின் மீது வைக்கும் அளவில்லாத நம்பிக்கையில்தான்..சில சமயங்களில் அதுதான் என்னை காயப்படுத்துகின்றன..

      Delete
  7. பேஸ்புக்கில் பெண்மணி(D Latha Prabhu) இட்ட கருத்து அது இங்கு பொருத்தமாக இருக்கும் என்பதால் அதை இங்கே பதிகிறேன்

    D Latha Prabhu
    ஒருவர் குடிக்கிறார் ,புகை பிடிக்கிறார் என்பதாலேயே அவர் கெட்டவர் அல்ல! அதேப்போல குடிக்க வில்லை, புகைக்க வில்லை என்று ஒருவர் இருப்பதாலேயே அவர் நல்லவரும் அல்ல !
    நல்லவர்களாக இருக்க வேண்டிய தகுதி பழக்கத்தில் மட்டுமே அடங்கி விட வில்லை. அது அதனையும் தாண்டி ....

    ReplyDelete
    Replies
    1. Ms Latha பிரபுவிடம் நான் சொன்னதாக சொல்லுங்கள்!

      இந்த உலகில் நல்லவர்கள் நீண்ட நாட்கள் வாழணும் என்பது எங்களுடைய அவா. குடிக்கும், புகை பிடிக்கும் நல்லவர்களுக்கு லிவெர் டேமேஜ், நுரையீறல் புற்று நோயெல்லாம் வர வாய்ப்புகள் அதிகம் என்று இன்றைய அறிவியல் சொல்லுகிறது. குடிக்கும், புகைபிடிக்கும் நல்லவங்க எல்லாம் சீக்கிரம் எங்களை விட்டுப் போயிட்டா நாங்கல்லாம் விசத்தை குடித்துவிட்டு சாக வேண்டியதுதான்!

      நல்லவங்க நீண்ட நாள் வாழணும்னு நாங்க ஆசைப்படுவது எங்க பேராசையா? என்னனு கேட்டு சொல்லவும்!

      BTW, I am curious.. Does Ms Latha smoke or drink? If not, WHY NOT? Is she a bad person? :)

      Delete
    2. பாஸ் நான் லதா அவர்களின் பேஸ்புக்கை ப்லோ செய்பவன் ஆனால் அவர்களின் பெர்ஷனல் விஷயங்கள் பற்றி ஏதும் எனக்கு தெரியாது மேலும் தெரிந்து கொள்ளும் ஆர்வமும் கிடையாது குடிப்பதும் புகைபியிப்பதும் உடல் நலத்திற்கு கேடுதான் அதை நான் மறுக்கவில்லை ஆனால் அது அவனுக்கு பிடிக்கிறது & அது அவனின் சொந்த விஷயம்தானே அதில் நாம் ஏன் தலையிட வேண்டும். குடிப்பதற்கு இணையாகத்தான் இப்போ ரைஸ் சாப்பிடுவதும் இருக்கிறது அதனால் ரைஸ் சாப்பிடுவது உடம்புக்கு கெடுதல் என்று சொல்லிப் பாருங்கள் எத்தனை பேர் கேட்க போகிறார்கள் அது போல புரோட்டாவை சாப்பிடாதீர்கள் என்று சொல்லிப் பாருங்கள் அதையும் எத்தனை பேர் கேட்க போகிறார்கள் . அவர்களிடம் சொன்னால் அவர்களின் பதில் எதையும் அளவோட சாப்பிட்டால் பிரச்சனை இல்லை என்றுதான் சொல்லுவார்கள் அது போலததான் குடிகார்களும் அளவோட குடித்தால் பாதகம் இல்லை என்றுதான் சொல்லுகிறார்கள், இதை கூட ஹார்வோர்டு பல்கலைகழகமும் ஆராய்ச்சி முடிவில் சொல்லி இருக்கிறது என்று நான் படித்தேன் .

      உலகிலேயே அதிக நிரிழிவு நோய் கொண்டவர்கள் இந்தியர்கள் அதிலும் தமிழர்கள் முதலிடம் என்று செய்தி வருகின்றது. எனவே தமிழர்களிடம் சரக்கு போலதான் நாம் சாப்பிடும் சோறும் புரோட்டாவும் இருக்கிறது அதை சாப்பிடாதீர்கள் என்று சொல்ல வேண்டும்

      Delete
    3. Have not we had this debate a number of times before? Are we not arriving to the "same conclusion" we arrived before, one more time?

      I knew, we are going to reach the same point we reached before when I started this debate. I knew that you would be defending "drinking" is OK if one drinks wisely!


      I am not telling the "smart people" like you or this Latha. I am telling the people who might not be as smart as you are- who might get addicted if they start drinking.

      Why do I have to tell?

      I always believe it is none of my business to tell someone what is right or wrong.

      You are advertising that Drinking is not bad at all as long as one can control themselves not getting addicted. There are some non-drinkers today might get "tempted" because of your advertisement. Once they start drinking they might not be able to control like you do. I am only concerned about them, certainly NOT YOU! :)

      ------------------

      தல: என்னை யோக்கியன், நலல்வன் என்றெல்லாம் இங்கே சொல்ல முயலவில்லை..ஏன்னா நான் உங்களைவிட படுமட்டமான கதைகள் எல்லாம் குடிக்கு சப்போர்ட் செய்வதுபோல் எழுதி இருக்கேன்.

      for example..

      ****ஏன்டி சுபத்ரா! உன் ஆத்துக்காரர் எப்படி? (அடட்ஸ் ஒன்லி)

      http://timeforsomelove.blogspot.com/2014/04/blog-post_407.html***

      ஆனால் இது ஃபிக்ஷன் தான். லதா போலோ உங்களைப் போலவோ, குடிச்சா தப்பு இல்லைனு கட்டுரைவடிவில் அடித்துச் சொல்ல தயங்குவேன். :)

      Delete
  8. நல்லாத்தான் சேல்ஸ் பண்ணுறீங்க.....

    ReplyDelete
    Replies
    1. நான் பொழப்புக்காக சேல்ஸ் தொழில் இருக்கிறேன்... அதுல பாருங்க இப்படிபட்ட பொண்ணுங்க வந்து இந்த அப்பாவி மதுரைத்தமிழன் இதயத்தை படபடவென அடிக்க வைத்து டேமேஜ் பண்ணுகிறார்கள் அதுவும் இந்த வயசான காலத்தில் படபடவென அடிக்கும் ஹார்ட் பட்டுன்னு நின்னு போயிடுமோ என்று பயமா இருக்குங்க. இப்ப பாத்தீங்களா நாடு விட்டு நாடு வந்து இப்படி டேஞ்சரான வேலையை மிகவும் ரிஸ்க் எடுத்து பண்ண வேண்டியிருக்கு..... இப்ப சொல்லுங்க இந்த தமிழன் பாவம்தானே

      Delete
  9. நீங்களும் என்னைப் போலவே இரவு பன்னிரண்டு மணிக்கு காப்பி குடிப்பவர் என்பது ஆறுதல் அளிக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. நீங்களும் என்னைப் போல சரக்கு அடிப்பவர் இல்லைதானே.... அடிப்பவர் என்றால் இங்கே ஆமாம் என்று சொல்லிவீடாதீர்கள். அப்புறம் உங்களை வில்லனாக சித்தரித்து விடுவார்கள்

      Delete
  10. அது யாரு எனக்குத்தெரியாமல் இன்னொரு பரதேசி ? அதுவும் பணக்காரன் ?

    ReplyDelete
    Replies
    1. ஸாரி ஸாரி பொத்தாம் போதுவாக பணக்காரன் என்ற லிஸ்டில் உங்களை சேர்த்துவிட்டேன் மன்னிச்சிங்குக பாஸ்.. நீங்கள் எல்லாம் மல்டி மில்லியனர் லிஸ்டில் வரக் கூடியவங்க

      Delete
    2. ஆஹா கேட்கவே எவ்வளவு ஆனந்தமா இருக்கு உண்மையிலேயே அப்படி ஆயிட்டா எப்படி இருக்கும் ?
      யாராவது சொல்லுங்க "Who wants to be the Millionaire" ஷோவில் எப்படி சேர்றது?

      Delete
  11. அப்ப அமெரிக்கா வந்தா அழகான பொண்ணுங்களை எல்லாம் பார்க்கலாம்னு சொல்றீங்க..

    பாஸ், பாஸ், எனக்கும் உங்க கம்பெனியில ஒரு வேலைக்கு ஏற்பாடு பண்ணுங்களேன், பிளீஸ்....

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.